Wednesday, May 30, 2007

ஹெல்மெட் ‍- கலைஞர் நகைச்சுவை!

தலைவர் கலைஞர் டூவீலர் ஓட்டுவாரோ என்னவோ தெரியாது. ஆனாலும் இருசக்கரவாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவேண்டியதின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார். சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கேள்வி : தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் அரசு ஆணையை தள்ளிப் போடவேண்டுமென்று சிலர் கோரிவருகிறார்களே?

கலைஞர் : தலையில் ஒன்றும் இல்லையென்றால் தள்ளி வைக்கலாம்.

அதாவது தலையில் ஒன்றும் இல்லாதவர்களின் (அதாவது மூளை இல்லாதவர்களின்) கோரிக்கை இதுவென்று உள்குத்து வைத்து கலைஞர் பதில் அளித்திருக்கிறார். தலைவர் கலைஞர் மட்டும் வலைப்பூ தொடங்கினால் இதுபோல ஏராளமான உள்குத்து வைத்து பதிவுகள் இடுவார். அ.மு.க. தோழர்கள் பட்டையைக் கிளப்ப நல்ல களம் அமைத்து கொடுப்பார்.

கலைஞரின் பிறந்தநாளான திருநாள் சூன் 3 அன்று தலைவர் "முரசொலி" என்ற பெயரிலே ஒரு வலைப்பூ தொடங்கி தமிழின் மூத்த பதிவர் என்ற பெருமையை பெற வேண்டும் என்று உடன்பிறப்புகள் எதிர்பார்க்கிறோம்.

11 comments:

Anonymous said...

திமுககாரனுக்கு வாய் மட்டும் இல்லேன்னா நாய் தூக்கிட்டு போயிடும் :-)

Anonymous said...

என் உயிரிலும் மேலான அன்பு உடன்பிறப்பே!

ஆனித் திங்கள் மூன்றாம் நாள் என் அகவை மலர்வது போல், என் அன்பின் தம்பி லக்கிலுக் கூறியவாறு ஒரு வலைப்பூ ஆரம்பித்தால் மகிழ்ச்சியடைவேன். அதில் ஆயிரம் ஆயிரம் தேனீக்கள் தினமும் சுவைத்து
மகிழலாம் என்பது தித்திப்பான செய்தி. ஆனாலும், மயங்கி உறங்க இது காலமல்ல. திராவிடப் பாசறைக் கனவுகள் விரிந்து பரந்து கிடக்கின்றது.
உன்னைக் கழகப் பணிக்கு வழி அனுப்பிவிட்டு வழிமீது விழி மலர, காத்திருக்கும் என் குலப்பெண்களுக்கு நீ சூட்டவேண்டியது வாகையும் வலைப்பூவும் தான். தாமதம் வேண்டாம். எமது வெற்றிச் செய்தியை முரசறைய வலைப்பூ வேண்டும் தம்பி.

உன் உடன்பிறப்பு

புள்ளிராஜா

said...

//தலையில் ஒன்றும் இல்லையென்றால் தள்ளி வைக்கலாம்.//
இதுக்கு பேர்தான் கும்மாங்குத்து.

said...

//திமுககாரனுக்கு வாய் மட்டும் இல்லேன்னா நாய் தூக்கிட்டு போயிடும் :-) //

எதிர்கட்சிகாரங்க தூக்கிட்டு போற அளவுக்கு இது ஒன்னும் தேர்தல் நேரமில்லையே.

said...

லக்கி உங்களை முரசொலிக்கு கூப்பிட்டுருக்கேன் ஜூன் மூனில் ஆரம்பிக்கனும் சேருங்க
கலக்குவோம்

Anonymous said...

ஆஹா ஒன்னுகூடிட்டாங்கய்யா..ஒன்னுகூடிட்டாங்கய்யா...

நீங்களே மறுபடி ஆட்சிக்கு வந்தா அ.தி.மு.கக்காரன் எப்படி சம்பாதிக்கறது ?

நீங்க 5 வருஷம்...நாங்க 5 வருஷம்...

அப்படித்தானே கணக்கு ?

" நியாயமான தேர்தல் " என்று முதல்முறையா கலைஞ்சரை பாராட்டின அம்மாவை பாராட்டி ஒரு பதிவு வருமா ?

said...

//நீங்க 5 வருஷம்...நாங்க 5 வருஷம்..//
IS IT Mr.Ravi?

said...

தலைவரின் சிலேடைகளை கேட்க கேட்க அருமை...

முரசொலி பற்றி இனிப்பான செய்தி..

உங்கள் பணி மென்மேலும் தொடர, சிறக்க வாழ்த்துக்கள் உடன்பிறப்புக்களே....!

முரசொலிக்கு எஙகள் ஆதரவு என்றும் உண்டு.

வாழ்க தலைவர் புகழ்..! வளர்க கழகம்..!

Anonymous said...

my comments are missing, please publish... thanks in advance

said...

"அன்புடன் பிறப்பு"லக்கிலுக் அவர்களே,
தலைவர், பேராசிரியர் படமெல்லாம் உங்கட வலைப்பூவில் போட்டிருக்கீங்க நம்ம தளபதி படத்த காணயில்ல அவ்ருக்கு மனசில இடம் கொடுத்துட்டீங்களா?