Saturday, May 05, 2007

திரிஷா வருகிறார் விஜயகாந்த் ஒதுங்கட்டும்

விஜயகாந்த் தான் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் என்று தங்களை நடுநிலைவாதிகளாக காட்டிக் கொள்ளும் சிலர் தங்கள் வலைப்பூக்களில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இங்கே வலைப்பதிவர்கள் மட்டும் என்று இல்லாமல் ஒரு "முற்போக்கு" மற்றும் "நடுநிலை" கூட்டமே விஜயகாந்தை தூக்கிவிட்டு வருகிறது. வெளியில் விஜயகாந்தை ஆதரிப்பது போல் படம் காட்டும் இந்த நடுநிலைவாதிகள் ஓட்டு என்று வந்துவிட்டால் மட்டும் போட வேண்டிய சின்னத்துக்கு வஞ்சனை இல்லாமல் போட்டுவிடுவார்கள. ஆனால் இவர்களின் பேச்சு திறனில் குழம்பும் சராசரி வாக்காளர் மட்டும் கடைசிவரை குழம்பியபடியே இருப்பார்

விஜயகாந்த் விருத்தாச்சலத்தை பிடித்துவிட்டார் பா.ம.க.வை வீழ்த்திவிட்டார், அடுத்து கம்யூனிஸ்டுகளை அதிர வைக்கப் போகிறார் என்று எழுதும் இவர்கள் விஜயகாந்த் அ.தி.மு.க.வுக்கு ஆப்பு வைக்க போகிறார் என்று ஒரு போதும் எழுதமாட்டார்கள். ஏன் என்று உங்களுக்கே புரியும். வேலூரில் விஜயகாந்த் மாநாடு வெற்றி திருப்பூரில் மகத்தான வெற்றி என்று கூவும் இவர்கள் திரிஷா பக்கம் திரும்பி பார்த்தால் இவர்களுக்கு அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. கடந்த வெள்ளிகிழமை நடந்த திரிஷா பிறந்த நாள் கொண்டாட்டங்கள் திராவிட கட்சியின் அமர்க்களத்துக்கு இணையாக இருந்தாக செய்திகள் சொல்லுகின்றன. சினிமாவுக்கு வந்து இத்தனை நாள் கழித்து கட்சி ஆரம்பித்து அரசியல் பண்ணி வரும் விஜயகாந்த் திரிஷாவை பார்த்து கற்றுக் கொள்ளட்டும். திரிஷா பிறந்த நாள் விழாவில் அவர் காலில் விழும் வைபவம் கூட அரங்கேறியதாம். இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது கூடிய விரைவில் திரிஷா விஜயகாந்தை ஓரங்கட்டிவிடுவார் என்றே தெரிகிறது. கூட்டம் கூடினால் விஜயகாந்துக்கு வெற்றி என்று செய்தி தரும் நடுநிலைவாதிகள் திரிஷாவுக்கு கூடிய கூட்டத்தையும் கொஞ்சம் திரும்பி பார்க்கட்டும்

5 comments:

said...

:-)))))

said...

வணக்கம் உடன் பிறப்பு....

என்ன சொல்ல வருகிறீர்கள். தமிழகத்தில் மாற்றுக் கட்சிகளே இருக்கக் கூடாது என்கிறீர்களா? இல்லை எல்லாரும் கண்ணை மூடிக்கொண்டு தி.மு.க விற்கு மட்டுமே ஆதரவு தர வேண்டும் என்கிறீர்களா?

ஏன்னா நானும் நடுனிலயாளான்தான்... அதனாலதான் தெரிஞ்சுக்கணும்னு கேக்கிறேன்....

Anonymous said...

Trisha may join AIADMK and inherit JJ's legacy. If Stalins and Marans can become ministers why not Trisha also.

said...

//ஏன்னா நானும் நடுனிலயாளான்தான்... அதனாலதான் தெரிஞ்சுக்கணும்னு கேக்கிறேன்....//

"நடுநிலை" என்று மேற்கோள் காட்டி இருக்கிறேன். அதில் நீங்கள் வரமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்த "நடுநிலை"யே வேறு

said...

Super..