Monday, April 30, 2007

கலைஞர் கண்ணீர்!!!!

பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோருடன் பழகி அரசியல் நடத்தி விட்டு, ஜெயலலிதாவைப் போன்றவர்களுடன் அரசியல் நடத்தும் அளவுக்கு வந்து விட்டதே, 84 வயதில் எனக்கு இது தேவையா என்று முதல்வர் கலைஞர் சட்டசபையில் கண் கலங்கிக் கூறியதால் சபையில் சில நிமிடம் பரபரப்பு நிலவியது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆளுநர் பர்னாலா, மத்திய அரசு, காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரை கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை விட்டது குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சி்களின் உறுப்பினர்களின் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினர். பின்னர் முதல்வர் கலைஞர் பேசுகையில், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார்.

கலைஞர் பேசுகையில், தோழமை கட்சிகளின் கருத்தோடு என் கருத்தையும் இணைத்து கூறுகிறேன். காவல்துறையில் எல்லோரும் நல்லவர்களும் அல்ல, தீயவர்களும் அல்ல. இதில் கருங்காலிகளும் உள்ளனர்.

அதற்காக காவல்துறையே வேண்டாம் என முடிவு செய்ய கூடாது. ஒரு ஆட்சி செம்மையாக இருந்தால்தான் எல்லா துறையும் சீராக செயல்படும். இதை பொறுத்து கொள்ள முடியாமல் எரிச்சலடையும் புகைச்சலாகத்தான் ஜெயலலிதாவின் அறிக்கை உள்ளது.

இதற்காகத்தான் நீங்கள் சட்டசபையில் எனக்கு பொன்விழா நடத்த வேண்டும் என்ற போது நான் வேண்டாம் என மறுத்தேன். பிடிவாதமாக சம்மதிக்க வைத்தீர்கள்.

என்றைக்காவது 50 ஆண்டு காலத்தில் எந்த விழாவாவது இந்த அவையில் நடந்ததுண்டா. நான் தம்பி என்று கருதிக் கொண்டிருந்தவரும் கூட அறிக்கை விட்டிருக்கிறார். ஏனென்றால் அவர்களால் எல்லாம் இவற்றைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இந்த அவையில் எம்ஜிஆர் படம் திறக்கப்பட்ட போது என்னை அழைக்கவில்லை. அப்போது, சபாநாயகர் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார், நாங்கள் அமர்ந்த இடத்தில் சசிகலா அமர்ந்திருந்தார். இந்த அவை ஒரு தர்பார் போல காட்சியளித்தது.

நீங்கள் எல்லாம் பார்த்து ஏதோ, ஐம்பதாண்டு காலம் இருந்தானே, எங்கேயோ பிறந்தவன், சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன், இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானே என்று என்னையும் சிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் கருதியதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்தான் இன்றைக்கு இதையெல்லாம் செய்கிறார்கள்.

இதில் டிஜிபியும், கவர்னரும் என்ன செய்வார்கள், அவர்களை பற்றி அறிக்கை வெளியிடுகிறார்கள். உலக மகா பொய்யர் கருணாநிதி என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

நடமாடும் பொம்மையாக டிஜிபி இருக்கிறார் என்கிறார். காவல்துறையைப் பற்றி உருக்குலைந்து போன, செயல் திறன் இழந்து விட்ட, சர்வ நாசமாகி விட்ட அமைப்பு என்று கூறியுள்ளார். துர்வாச முனிவரால் கூட இப்படி திட்ட முடியாது.

ஆளுநரைப் பார்த்து நபர் என்கிறார். நாம் பதிலுக்குப் பதில் பெண்களைப் பற்றிப் பேசக் கூடாது. நாம் பெண்களை பற்றி பேசக்கூடாது, பெண்களும் இப்படி பேசக்கூடாது.

நாம் புராணங்களை நம்புவதில்லை, கட்டுகதைகளையும் நம்புவதில்லை. ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது அல்லி ராணிகள் இருக்கத்தான் செய்தார்கள் என எண்ண வேண்டியுள்ளது.

முதலில் நரசிம்மராவ், வாஜ்பாய், அத்வானி, ராஜீவ் காந்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சந்திரபாபு நாயுடு எல்லோரையும் குறை கூறிவிட்டு, இப்போது உ.பி சென்று அவர் கையை பிடித்துள்ளார்.

வாஜ்பாயைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா. தமிழ் நாட்டு மக்களுக்கு இவரை யார் என்றே தெரியாது. நான்தான் பட்டி தொட்டிகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன் என்றார். அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றார்.

இரவு 10 மணிக்கு ராஜீவ் காந்திக்குப் போன் செய்தேன். அவர் தூங்கப் போய் விட்டார் என்றார்கள். ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு சீக்கிரம் தூங்கினால் நாடு உருப்படுமா என்றும் கூறினார்.

ஆளுநர் சென்னாரெட்டியை சந்திக்கச் சென்றபோது அவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றார். சந்திரபாபு நாயுடுவை மோசடிப் பேர்வழி என்றார்.

எம்.ஜி.ஆர். என்னை விட்டு, திமுகவை விட்டுப் பிரிந்து சென்றார். அப்படி இருந்தும் என் மீது மரியாதையாக இருந்தார். நட்பு பட்டுப் போய் விடவில்லை. அவருடைய காரிலே ஒரு நண்பர், இப்போதும் அவர் சென்னையிலே பெரிய புள்ளியாக உள்ளார்.

டிரைவர் என்று கூறக் கூடிய அளவுக்கு எம்.ஜி.ஆரிடத்திலே நெருக்கமாக இருந்தவர் அவர். ஒருமுறை காரில் எம்.ஜி.ஆருடன் சென்றபோது தவறிப் போய் எனது பெயரைக் குறிப்பிட்டு, கருணாநிதி என்று கூறி விட்டார்.

உடனே காரை நிறுத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்.அவரை நடந்தே வீட்டுக்கு வருமாறு உத்தரவிட்டார். ஏன் என்று அவர் கேட்டபோது, நானே கருணாநிதி என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. நீ எப்படிக் கூப்பிடலாம் என்றாராம். இதை அந்த நண்பர் பின்னர் ஒருமுறை என்னிடம் சொல்லி கண் கலங்கியிருக்கிறார்.

அப்படி, ஒரு கட்சி பிரிந்த பிறகும் கூட அந்த உணர்வுகள் அப்படியேதான் இருந்தன. நான் காமராஜரைப் பற்றிப் பேசாத பேச்சா. காமராஜர் என்னைப் பற்றியோ, கழகத்தைப் பற்றியோ பேசாத பேச்சா. பக்தவச்சலம் என்னைப் பற்றி பேசாத பேச்சா, நான் அவரைப் பற்றிப் பேசாத பேச்சா. அப்படி இருந்தாலும், என்னுடைய தாயின் பெயரில் திருக்குவளையில் தாய் சேய் நல விடுதியைத் திறக்க வேண்டும் என கேட்டபோது பக்தவச்சலம் உடனடியாக ஒத்துக் கொண்டார்.

அதேபோல நான் அவருக்கு மணிமண்டபம் கட்டியபோது அவர் இந்தியைக் கொண்டு வந்தார், உங்களை பாளையங்கோட்டை சிறையில் போட்டார். அவருக்கு மணி மண்டபா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அது வேறு, இது வேறு. மனித நாகரீகம் இது, தடுக்காதீர்கள் என்றேன்.

பெருந்தலைவர் காமராஜரை நான் எவ்வளவு தூரம் விமர்சித்திருப்பேன். எனது தாயார் இறந்தபோது நான் சவத்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தேன். எனது வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார். எனது தாயாருக்கு முதல் மரியாதை செலுத்தி விட்டு வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார்.

அரசியலில் மற்றவர்களை தாக்கி பேசும்போது அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டி வரும் என்பதை மறந்து விடக்கூடாது. ஜெயலலிதா அந்த நாகரீகத்தை கற்றவர் அல்ல, காப்பாற்றுபவரும் அல்ல. மனித இதயத்தோடு தொடர்பு இல்லாமல் அரசியல் நடத்துகிறார்.

இதையெல்லாம் தாங்கிகொண்டுதான் ஆக வேண்டும். இந்த அளவிற்கு நாகரீகமற்ற, பண்பாடற்ற அரசியல் வந்துவிட்டதே என வருத்தப்பட வேண்டியுள்ளது.

84 வயது, 84 வயது என்று சொல்கிறீர்களே, இவ்வளவு நாள் இருந்ததால் அல்லவா, தமிழ்நாட்டிலே காமராஜரைப் போன்ற, பெரியாரைப் போன்ற, பகத்வச்சலத்தைப் போன்ற, அண்ணாவைப் போன்ற பெரிய மனிதர்களுன் பழகி விட்டு, இன்றைக்கு யார் யாரோடெல்லாம் அரசியல் நடத்திய வேண்டிய நிலை வந்து விட்டது.

இப்படியெல்லாம் 84 வயது வரை வாழ வேண்டுமா என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன் என்று கூறியபோது கலைஞரின் கண்கள் பணித்தன, குரல் தழுதழுத்தது. அவையே பெரும் அமைதியில் உறைந்து போனது.

கலைஞர் கண் கலங்குவதைப் பார்த்த அமைச்சர்கள் கீதா ஜீவன், பூங்கோதை, தமிழரசி, பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் கண்கலங்கினர்.

(செய்தி உதவி : தட்ஸ் தமிழ்)

14 comments:

said...

Oru mootha arasiyal thalaivar endra mariyaathai thuliyum illaamal miga kevalaamaga thalaivarai kaithu seithapothe, Jayalalitha vin naagareegam vetta velichamaagivittathu.

Arasiyal thalaivar illai, oru munnaal mudalvar endra murayil kooda avaruku uriya mariyaathai alikapadavillai. Neethipathiye kadinthu konja pinnar thaan avaruku valanga padavendiya niyanamaana maruthuva salugai kooda valanga pattathu. Enave Naagarigam endraal enna vilai endru ketkum Jayalalitha vidam athai ethirparpathu sariyalla. Dravidanin panpaadu mariyaathai, Oru Aariya penmaniku therinthirukavum vaaipillaithaan.

Ennudaya varutham, pathirikaigal meethu thaan. Latchakanakil makkal padikum pathirikaigal kooda naagarigathai pinpatra ( kuripaaga dinamalar, Hindu, Even now a days Thinathanthi, thinamani also ) thavaruvathai ninakum pothuthaan manathirku varuthamaaga ullathu. Intha penmaniyin kevalamaana arikayai naam avasiyam veliyida thaan venduma endru pathirikaigal yosithu veliyitaal nallathu.

Illayel ithu pondra thavaraana naagarigamatra pechukaluku arikaigaluku Jayalalitha vodu serthu pathirikaigalum poruperka vendiyirukum. Pathirikaigale arasiyal naagarigathai kaapaatra uthavungal. Oru maanamulla mariyaathai therintha Dravida Thamizhanaaga ketkiren... Thayavu seithu thamizharin panpaadodu naagarigamaana eluthukalai mattume veliyidungal...

Anonymous said...

http://truetamilans.blogspot.com/2007/04/blog-post_30.html

said...

//http://truetamilans.blogspot.com/2007/04/blog-post_30.html//

என்ன கருமம்டா சாமி இது? :-(

Anonymous said...

//நாம் புராணங்களை நம்புவதில்லை, கட்டுகதைகளையும் நம்புவதில்லை. ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது அல்லி ராணிகள் இருக்கத்தான் செய்தார்கள் என எண்ண வேண்டியுள்ளது.//
இவரது வாயால் இந்த வார்த்தைகள் வரவேண்டும் என்பதற்க்காகவே, இறைவன்
இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி இருக்கிறார் போல் இருக்கிறது.
புராணங்களும் பழய வரலாறுகள் தான் என்பதை உணர்த்தியுள்ளார்.

ஆனாலும் முதல்வர் உரை மனதைக் கணக்கச் செய்து விட்டது.

Anonymous said...

தளபதி படத்தைப் போடாமல் பேராசிரியர் படத்தைப் போட்டிருப்பவர் கழக உடன்பிறப்பே அல்ல :(.

84 வயதில் இதெல்லாம் தேவையே இல்லை, பேசாமல் பொறுப்பை மாநிலத்தில் தளபதி, மத்தியில் தயாநிதி என்று பிரித்துக் கொடுத்துவிட்டு கொடுத்துவிட்டு ஒய்வு எடுக்கலாம்,நிம்மதியாக இருக்கலாம்.

Anonymous said...

ஐயோ சாமி நீங்களும் கண்ணீர் விட்டு தொலைக்க வேண்டாம். நான் ஜெயலலிதாவுடன் அரசியல் நடத்திய காலம் தான் பொற்காலம் என கலைஞர் நாளை அறிக்கைவிட்டாலும் ஆச்சரியப்பட வேண்டாம்.
இந்திராவை திட்டினார். அப்புறம் வருக அன்னையே என்றார்.
புலிகளை ஆதரித்தார். அப்புறம் சோனியாஜியின் தொண்டர்களைக் குளிர வைக்க இப்போ எதிர்க்கிறார். அவரா?

திருக்குறள் இருக்கும் வரை கலைஞர் எப்படியும் இப்படியும் பேசுவார்.


புள்ளிராஜா

said...

ஜெயலலிதா என்று தமிழக அரசியலில் கால் பதித்தாரோ அன்றே இந்த கலாச்சாரம் தொடங்கிவிட்டது

Anonymous said...

பிறப்பும்,வள்ர்ப்பும்,வாழ்க்கையும் அனுபவித்த்க் கொடூரங்களும் பெண்ணையும் பேயாக மாற்றியுள்ளது.அங்கே போய் நீதி,நியாயம்,பண்பாடு என்றெல்லாம் பேசுவது வீண்.
கூட அலையும் ஜென்மன்களுக்கு எப்போது புத்தி வருமோ தெரிய வில்லை.
பணமும் ,பதவியும் படுத்தும் பாட்டை நினைத்தால் இவர்கள்மீது அனுதாபந்தான் வருகிறது.சிலருக்கு மானம் முக்கியம்.இவர்களுக்கு அது முக்கியமில்லை என்பது தெரிகிறது.

Anonymous said...

கலைஞரை குறித்து மிகவும் நாக்கூசும் வார்த்தைகளை உபயோகித்து அறிக்கைகளை ஜெயா டிவியில் வாசிக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. கலைஞருக்கும் அவருடைய உடன்பிறப்புகளுக்கும் பொறுமை மிகவும் அதிகம்.

சந்துரு

said...

ஜெயா டி.வி. பார்க்கும் உங்களைவிட யாருக்கும் பொறுமை அதிகம் இருக்க முடியாது சந்துரு

said...

kalaignar has done politics with so many great leaders still he hasn't learned enough from them.. we have seen him hitting the opponnent many times below the belt.. and when he is cornered he'll go back to the old rheotric like this..

Anonymous said...

84 வயது முதல்வர் கண்ணீர் சிந்தினார் என்று வாசித்தபோது எனையும் மறந்து அழுது கலங்கியெதென் கண்கள்...

நல்லவன் வாழ்வான்!

சுரேஷ்

Anonymous said...

ரொம்ப ஜால்ரா சத்தமா இருக்கே கொஞ்சம் நடுநிலையாக யோசித்து ஒரு பதிவை எதிபார்க்கிறேன்.. திமுக மற்றும் அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் என்பது சிதம்பர ரகசியம். இதில் என்ன அவர்களுடன் ஒரு ஒப்பீடு..இரண்டின் தலைவர்களும் பேசுவதும் செய்வதும் எல்லாம் கட்சியின் வளர்ச்சியின் மூலம் தங்களை வளர்ப்பதற்காகத்தான் இதுவும் அனைவரும் அறிந்ததே.. தயவு செய்து தலைவரை புகழ்ந்து புகழ்ந்து அவரை கெடுக்காமல் அவரின் தவறுகளையும் சுட்டிக்காட்டலாமே.. அவரும் ஒரு சாதாரண உணர்ச்சிகள் உள்ள தவறுகள் செய்யக்கூடிய மனிதர் தான்.. எனவே அவர் செய்வதெல்லாம் சரி எனப்பேசினால்.. பிறகு, ஒரு நடிகரின் காதலி என்று குறிப்பிட்டுள்ள எம்.ஜி.ஆர் ஐ நாம் அவருடைய படங்கள்மூலம் பார்த்து ஏமாந்தது போல தலைவரையும் அவரது சொல்லாற்றலால் நாம் ஏமாந்துவிட்டோம் என்று எதிர்காலத்தில் சொல்ல வேண்டியிருக்கும் ( ஹும் விடுவோமா நமது தலைவர்கள் சரித்திரத்தையயே மாற்றும் வல்லமை படைத்தவர்கள் என்பதையும் நாமறிவோம்) .. ‍

எ.கா. இந்தப்பதிவில் உள்ள புள்ளிராஜாவின் பின்னூட்டம்



இப்படிக்கு.. இராமன்

said...

a good blog.....