Saturday, April 07, 2007

தமிழக பந்த் பற்றி பொதுநலவாதிகள்

இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் கடந்த வாரம் நடைபெற்ற முழு அடைப்பு பெரும் வெற்றி பெற்றதாக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த முழு அடைப்புக்கு பல அமைப்புக்கள் ஆதரவு தந்தாலும் வழக்கம் போல் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. முழு அடைப்பால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டன என்று பொதுநலவாதிகள் எழுதி வருகின்றனர். சிலர் தங்கள் பத்திரிக்கையில் கேலிச் சித்திரம் வெளியிட்டு தங்கள் மேதாவிதனத்தை காட்டி கொண்டுள்ளனர்

அவர்களுக்கு விளக்கு பிடிப்பவர்களும் அந்த கேலிச் சித்திரத்தை தங்கள் வலைப்பதிவில் மறுபதிப்பு செய்து தங்கள் அறியாமையை கோடி காட்டியுள்ளனர். இப்படி தங்களை பொதுநலவாதிகளாக நினைத்துக் கொள்ளும் இவர்களின் நிலை என்ன? அவர்கள் எப்போதுமே பொதுநலவாதிகள் தானா என்று பார்த்தால் அவர்களின் அக்கறை என்னவென்று புரிந்துவிடும்

இட ஒதுக்கீடு பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடனேயே பிரச்சினையின் முக்கியத்துவம் காரணமாக முழு அடைப்பு பற்றிய அறிவிப்பும் உடனேயே வந்தது. இதனால் சில சங்கடங்கள் ஏற்பட்டு இருக்கலாம். முழு அடைப்பு முழு வெற்றி என்பதைவிட அது மிகவும் அமைதியாக நடந்தது என்பதே ஒரு கழக உடன்பிறப்பு என்ற வகையில் ஆறுதல் தருகிறது. இப்படி அமைதியாக நடந்த முழு அடைப்பை பற்றி கேலிச் சித்திரம் வரைபவர்கள் மத வெறி அமைப்புகளால் ஏற்படும் கலவரம், அதனால் ஏற்படும் பொருள் மற்றும் உயிரிழப்பு, அதனால் பாதிக்கப்படும் இயல்பு வாழ்க்கை பற்றி எந்த சித்திரமும் வரைவதில்லையே. ஏன் என்று சிந்தித்தால் காரணம் உங்களுக்கு புரிந்துவிடும்

முழு அடைப்பு என்பது காந்திஜி சுதந்திர போராட்டத்தில் பயன்படுத்திய ஒரு அனுகுமுறை. தேசியவாதிகளாக காட்டிக் கொள்ளும் இந்த சித்திரம் வரைபவர்கள் காந்திஜி வழியில் நடந்த போராட்டத்தை கிண்டல் செய்யும் அதே வேளையில் கோட்சே வழியில் நடக்கும் மதக்கலவரங்களை கிண்டல் செய்வதில்லையே. இதற்கும் காரணம் உங்களுக்கு விளங்காமல் இருக்காது

இப்போது சித்திரம் வரைந்தவர்கள் சென்ற ஆண்டு இந்திய மருத்துவ கழகத்தில் இருந்து வேணுகோபால் நீக்கப்பட்டபோது மருத்துவர்கள் செய்த வேலை நிறுத்தம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்ட போது என்ன செய்து கொண்டு இருந்தார்கள். வேணுகோபால் என்ற ஒரு தனி மனிதருக்காக நடந்த வேலை நிறுத்தத்தைப் பற்றி மவுனம் சாதிக்கும் இவர்கள் மக்களுக்காக நடந்த போராட்டத்தை பற்றி குறை கூறுகிறார்கள்

இவர்க்ளுடைய பேனா எந்த சமயத்தில் எல்லாம் சித்திரம் வரையும் என்பது கூட இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும். ஆம்! இவர்கள் தாம் பொதுநலவாதிகள்

14 comments:

said...

//இப்போது சித்திரம் வரைந்தவர்கள் சென்ற ஆண்டு இந்திய மருத்துவ கழகத்தில் இருந்து வேணுகோபால் நீக்கப்பட்டபோது மருத்துவர்கள் செய்த வேலை நிறுத்தம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்ட போது என்ன செய்து கொண்டு இருந்தார்கள். //

ம் இது பஞ்ச் டயலாக் !
:)))


ம் ... அது முடிந்த கதை பழசையெல்லாம் பேசாதிங்கன்னு யாரும் சமூக அக்'கறை'யோட சொல்லுவாங்க !

said...

அருமையான பதிவு உடன்பிறப்பு!

said...

சமூகத்தின் நலன் என்று வரும்போது சில தனிப்பட்டவர்களுக்கு ஏற்படும் அசெளகர்யங்களை பொருட்படுத்த இயலாது. பந்த் என்பது நம் எதிர்ப்பின் அடையாளம். மக்களுக்காகத்தான் அரசாங்கங்களும் நீதிமன்றங்களும் தவிர குறிப்பிட்ட சிலருக்கான சொந்த உபயோகத்திற்கு அல்ல. பொதுமக்களுக்கு பாதிப்பு என்றூ புலம்பும் இவர்கள் அன்றைக்கு ''இந்து'' நாளிதழை தாண்டி வெளியே வந்திருப்பார்களா??. இவர்கள் மக்கள் பணி ஆற்றி இருக்கலாமே அன்று????

said...

//இப்போது சித்திரம் வரைந்தவர்கள் சென்ற ஆண்டு இந்திய மருத்துவ கழகத்தில் இருந்து வேணுகோபால் நீக்கப்பட்டபோது மருத்துவர்கள் செய்த வேலை நிறுத்தம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்ட போது என்ன செய்து கொண்டு இருந்தார்கள். //

உடன்பிறப்பே,

நாட்டின் இரண்டாம் சுதந்திரப் போராட்ட வீரர்களை இப்படி சொல்லலாமா?. பருப்புகளுக்காக போராடிய அவார்களின் போராட்டத்தினால்தான் இன்று 27% உத்தரவிற்கு தடை வந்துள்ளது. அதன் மூலம் கோடானுகோடி இந்தியர் பயன் அடைய போகின்றனர்.

said...

நன்றி கோவி.கண்ணன்
நன்றி லக்கிலுக்

Anonymous said...

//அவர்களுக்கு விளக்கு பிடிப்பவர்களும் அந்த கேலிச் சித்திரத்தை தங்கள் வலைப்பதிவில் மறுபதிப்பு செய்து தங்கள் அறியாமையை கோடி காட்டியுள்ளனர். //

அருமை. சட்னி சாம்பார்களுக்கு மூளை அளவே மொத்தமே அவ்வளவு தான்

said...

உடன்பிறப்பே,பதிவில் இருக்கும் நியாயம் பலருக்கு பேதியைக் கிளப்பிவிட்டுள்ளது.

Anonymous said...

//அவர்களுக்கு விளக்கு பிடிப்பவர்களும் அந்த கேலிச் சித்திரத்தை தங்கள் வலைப்பதிவில் மறுபதிப்பு செய்து தங்கள் அறியாமையை கோடி காட்டியுள்ளனர். //

விளக்கு பிடிப்பவர்கள் என்று இட்லிவடையை சொன்னதற்கு என் கண்டனங்கள்

Anonymous said...

இட்லி வடையை செருப்பால் அடிக்கவேண்டும் என்று சொல்லமாட்டேன். அது செருப்புக்கு அவமானம்!

Anonymous said...

Soon the highest court will declare your 69% reservation
as invalid.What will you do
then - call for bandh or
resign from UPA or resign
from power.

Anonymous said...

இட்லி வடைக்கு ஏதோ கொஞ்சம் சூடு சொரணை இருக்குது அவனோட இலைல ஏதோ வாந்தி எடுத்து வெச்சிருக்கான்

Anonymous said...

வரிக்கு வரி உடன்பிறப்பின் எழுத்துகளை அப்படியே காப்பி அடித்து எழுதி இருக்கிறான் இட்லி இதுவே அவனுக்கெ பெரிய தோல்வி தான்

said...

Good Post!

Anonymous said...

இவ்வளவு நாள் தன்னை ஜென்டில்மேனாக பிலிம் காட்டி வந்த இட்லி இன்ட்று பச்சை பச்சையாக எழுதி தன் தரத்தை தானே தாழ்த்தி கொண்டான்