Wednesday, April 11, 2007

விஞ்ஞான முறையில் நீதிமன்ற அவமதிப்பு

தமிழகத்தில் ஒரு முழு அடைப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தவுடனேயே தி.மு.க. நீதிமன்றத்தை அவமதித்துவிட்டது, நீதிமன்ற புண்ணியம் கேட்டுவிட்டது என்று ஒப்பாரி வைக்கிறது ஒரு கும்பல். இந்த புண்ணியவான்களுக்கு ஏற்கனவே பதில் சொல்லி ஒரு பதிவு போட்டாயிற்று. ஆனால் அதில் நண்பர் கோவி.கண்ணன் சொன்னது போல் சில சமூக அக்க'றை' உள்ளவர்கள் குறை சொல்ல கூடும். அதனால் சுடசுட ஒரு நிகழ்வை பற்றி இப்போது சொல்கிறேன். இது நேற்று தொலைக்காட்சியில் காட்டியது

புது தில்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றதற்கு முக்கிய. காரணம் அங்கு நீதிமன்ற தீர்ப்பு படி காங்கிரஸ் அரசு பல கடைகளுக்கு சீல் வைத்தது தான். ஏற்கனவே தில்லி முதல்வர் வாகனங்களால் மாசு கட்டுப்பாடு, மெட்ரோ திட்டம் போன்றவைகளில் மிக சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றவர். அது போல இந்த முறையும் நீதிமன்ற தீர்ப்பு படி பல கடைகளுக்கு சீல் வைத்துள்ளார். இந்த நடவடிக்கை மக்களின் கோபத்தை சம்பாதிக்கவே குட்டையை குழப்ப புறப்பட்டது பா.ஜ.க. கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்தது. இந்த அரசியல் ஸ்டண்ட் கைகொடுக்க அங்கே தேர்தலில் வெற்றியும் பெற்றுவிட்டது

இப்போது வெற்றி பெற்ற மமதையில் நீதிமன்ற தீர்ப்புபடி சீல் வைத்த கடைகளின் சீலகளை அகற்றும் வேலையில் இறங்கி உள்ளனர் பா.ஜ.க.வினர். இதுவும் பெரிய நீதிமன்ற அவமதிப்பு தானே. அதனால் காவல்துறை சீலை அகற்றியவர்களை கைது செய்து உள்ளனர். அப்படி கைதான ஒரு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் தான் தொலைக்காட்சியில் சொல்கிறார், தன் மீது 4 கடைகளின் சீல்களை அகற்றியதாக
காவல்துறை வழக்கு தொடர்ந்துள்ளது, அது தவறு, தான் இதுவரை 22 கடைகளின் சீலகளை அகற்றி உள்ளேன் என்று தெனாவட்டாக சொல்கிறார். இப்படிப்பட்ட நீதிமன்ற அவமதிப்பை பற்றி அந்த பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா. விஞ்ஞான முறையில் நீதின்றத்தை அவமதிப்பது எப்படி என்று இவர்கள் பாடம் எடுக்கலாம்

6 comments:

Anonymous said...

தில்லி நீதி மன்றம் வேணுகோபாலின் பதவியை பிடுங்க
சொல்லிவிட்டது. நீதியின் காவலர்கள் குதிப்பதைப்
பாருங்கள்.

http://www.rediff.com/news/2007/apr/11venu.htm

said...

அப்ப காவிரி தீர்ப்பை கர்னாடகம் மதிக்காவிட்டால் உங்களுக்கு ஏதும் பிரச்சனி இல்லைதானே ? ( சூர்யா டீவீக்கு ஏதும் பிரசனை இல்லாதவரை ஓகே , இல்லையா ?)

Anonymous said...

அப்ப காவிரி தீர்ப்பை கர்னாடகம் மதிக்காவிட்டால் உங்களுக்கு ஏதும் பிரச்சனி இல்லைதானே ? ( சூர்யா டீவீக்கு ஏதும் பிரசனை இல்லாதவரை ஓகே , இல்லையா ?)

Yes, same for Mullai-Peiyar issue.
DMK did not call for bandh in Tamil Nadu on these issues as that would affect family business in other states.What would happen
if Kannadigas and Malayalees
boycott these TV channels.

said...

அரசியல் பேசிகிட்டு இருக்கும் போது டி.வி.ய பத்தி பேசுறது இது தான் கோணல் புத்திங்கிறது

said...

காவிரி பிரச்சினையிலும், முல்லை பெரியாறு அணை விஷயத்திலும் தமிழகத்தின் கை ஓங்கியே இருக்கிறது அந்த மாநிலங்கள் தான் தங்களை தற்காத்து கொள்ளும் நிலையில் இருக்கின்றன. அதனால் தான் கர்நாடகவிலே முழு அடைப்பு நடத்தினார்கள். அதே போல் இட ஒதுக்கீடு விஷயத்தில் மக்களின் நிலையை தற்காத்து கொள்ளவே தமிழக அடைப்பு. வீணாக அரசியலையும் மற்ற விஷயங்களையும் குழப்பி கொள்ள வேண்டாம் தம்பிகளா

said...

"அந்த" பத்திரிகை என்று சிவப்பில் குறிப்பிட்டிருக்கிறீர்களே? துக்ளக் என்ன சிகப்பு பத்திரிகையா? இவ்வளவு நாட்களாக மஞ்சள் பத்திரிகை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.