கலைஞர் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டு உடம்பு எல்லாம் அரிப்பு எடுத்துவிடும். இந்த அலர்ஜி முற்றிவிட்டால் சிலர் கேலிச்சித்திரம் வரைந்து தங்கள் அரிப்பை தீர்த்துக் கொள்வர். அப்படிப்பட்டவர்களுக்கு கலைஞர் பொன்விழா என்றால் எப்படி இருக்கும். அதுவும் அந்த பொன்விழாவுக்கு நம் குடியரசு தலைவருக்கும் அழைப்புவிடுத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா
சென்ற ஆட்சியில் குடியரசுத் தலைவருக்கு செல்வி ஜெயலலிதா அவர்கள் அழைப்புவிடுத்தார். அதற்கு தி,மு.கழகம் எதிர்ப்பு தெரிவித்து அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் வைத்தது. கடைசியில் குடியரசு தலைவர் வரவில்லை என்பது வரலாறு. இப்போது கலைஞரின் பொன்விழவிற்கு குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு அழைப்புவிடுத்துள்ளது. எங்கே குடியரசு தலைவர இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுவிடுவாரோ என்று அஞ்சி நடுங்கிய கேலிசித்திர கூட்டம் மறுபடியும் சித்திரம் வரைய தொடங்கிவிட்டது. எப்படித் தான் இப்படி ஊசி முனை அளவு கூட சிந்திக்காமல் வரைய முடிகிறதோ என்று வியக்கும் அளவிற்கு இருக்கிறது அவர்களின் சித்திரம். சென்ற ஆட்சியையும் கலைஞர் ஆட்சியையும் ஒப்புமை செய்கிறார்கள் இவர்கள்
நம் குடியரசு தலைவராக திரு.அப்துல் கலாம் அவர்கள் பொறுப்பேற்ற போது பா.ஜ.க. தான் மத்தியில் ஆட்சியில் இருந்தது. குடியரசு தலைவரின் பதவியேற்பு விழாவுக்கு அப்போது தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு அழைப்பு அனுப்பாமல் அவமதித்தது பா.ஜ.க. அரசு. அப்போது கூட அந்த பிரச்சினையை அரசியலாக்க முயலாமல் தமிழக முதல்வருக்கு சேர்ந்த இழுக்கை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழுக்காக நினைத்து செல்வி ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பேசியவர் தான் டாக்டர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட தலைவருக்கு இன்று பொன்விழா என்றால் அதற்காக பெருமைப்படாமல் வெறுப்பை கக்குகிறார்கள் சித்திரம் வரைபவர்கள்
Sunday, April 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
லக்கி, அந்த கார்ட்டூன்களையும், பதிவிடுங்கள்...அப்பத்தான் தெரியும்....நீங்க எழுதியதின் நோக்கம்....
//இந்த அலர்ஜி முற்றிவிட்டால் சிலர் கேலிச்சித்திரம் வரைந்து தங்கள் அரிப்பை தீர்த்துக் கொள்வர்//
எது முடியுமோ அதைப் பண்ணுவாங்க. இல்லாட்டி மக்களை உள்ளே தள்ளி பஸ் எரிப்பாங்க. இல்லைன்னா குடிச்சுட்டு பேசுறாங்கன்னு சொல்லுவாங்க. இதையெல்லாமா சொல்லிட்டு இருக்கிறது. புதுசா ஏதாவது சொல்லுங்க. சென்னா ரெட்டியே .... ப்ண்ணினதா சொன்னவங்கதானே..
//லக்கி, அந்த கார்ட்டூன்களையும், பதிவிடுங்கள்...அப்பத்தான் தெரியும்....நீங்க எழுதியதின் நோக்கம்....//
அந்த சித்திரங்களை இங்கே பதிப்பித்து நம் தரத்தை நாமே தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை அதை மறுபதிப்பு செய்பவர்களுக்கு அவர்களின் தரத்தை உணர்த்துவதற்காக தான் இந்த பதில் பதிவுகள்
அரசியல்னு வந்தபின் தரம் என்ன தரம், எதுவும் நிரந்தரம் இல்லை.....சும்மா பதிவிடுங்க தோழரே.....முரசொலி-ல வராத கார்ட்டூன்களா?.....
ஜெ.ஜெயும் சோ இருவரும் அரசியலை விட்டு விலகுவதாக ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டால் கலாம் அவர்கள் நாட்டின் பொது நன்மை கருதி
நிச்சயம் கலந்து கொள்வார்.
புள்ளிராஜா
"சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது"
என்னும் குறளூக்கு இலக்கணமாகத்
திகழும் தலைவனின் பொன்விழா நாள் நெருங்க நெருங்க இங்க கொள்ள பயலுகளூக்கு குண்டில இருந்து ரத்தம்வரப்போகுது.
டிஞ்சர், பஞ்சு எல்லாம் எடுத்து ரெடியா வச்சுக்கங்கப்பா.
நாகரீகமான அரசியலை நடத்துகின்ற கலைஞருக்கு விழா என்றால் ஜெவுக்கு எரிகிறது சரி,
கலைஞரால் முகவரி பெற்ற வைகோ விற்கு????
இதெல்லாம் மன்னிக்க முடியாத குற்றம்.
Post a Comment