Monday, April 23, 2007

விஜயகாந்த் கட்சியின் வியத்தகு வளர்ச்சி(?)

தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்த சில மாதங்களிலேயே தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் பாராட்டத்தக்க முன்னேற்றம் என்று வாழ்த்து பெற்ற தே.மு.தி.க இபோது மேலும் ஒரு படி முன்னேறி உள்ளது. இப்போது அந்த கட்சியில் நடந்து வரும் கோஷ்டி பூசல்கள் தான் அந்த முன்னேற்றம்

இந்த தமிழ்ப் புத்தாண்டு முதல் தன் கட்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்தார் விஜயகாந்த் அந்த மாற்றங்களின் படி ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் தான் முக்கியமானவர் அவர் தான் அந்த மாவட்டத்தின் செயலாளர் என்ற அமைப்பு முறையை உருவாக்கி அதன் படி எல்லா மாவட்டங்களுக்கும் செயலாளர்களை நியமித்து வருகிறார். இந்த செயலாளர் தேர்வில் தான் குழப்பங்கள்

தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களின் தேர்வை எதிர்த்து பல மாவட்டங்களில் இருந்தும் கட்சி தலைமைக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த கோஷ்டிப் பூசல் வெடித்து வெளியே வந்து பத்திரிக்கைகளுக்கும் வந்துவிட்டது. விஜயகாந்த் மச்சான் சுதீஷுக்கு பணம் கொடுத்தால் பதவி என்று சொல்கிற அளவிற்கு போய்விட்டது இந்த பூசல்கள். முதல்வருக்கு கடிதம் அனுப்பினால் கூட பதில் வருகிறது ஆனால் கேப்டனுக்கு அனுப்பினால் பதிலே வருவதில்லை என்று தே.மு.தி.க ஒன்றிய செயலாளரே பத்திரிக்கைக்கு தெரிவித்து உள்ளார். ஆக அடி மேல் அடி வைத்து தமிழக அரசியலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது தே.மு.தி.க

1 comments:

said...

வருங்காலத்தில் காமராஜர் + எம்.ஜி.ஆர் ஆட்சி அமைக்கப் போகிறாராம் விஜயகாந்த். கட்சியின் லட்சணம் என்னவென்று ஒரே ஒரு எம்.எல்.ஏ. சீட்டுடன் இருக்கும் போதே நன்றாக தெரிகிறது.