Monday, April 30, 2007

கலைஞர் கண்ணீர்!!!!

பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோருடன் பழகி அரசியல் நடத்தி விட்டு, ஜெயலலிதாவைப் போன்றவர்களுடன் அரசியல் நடத்தும் அளவுக்கு வந்து விட்டதே, 84 வயதில் எனக்கு இது தேவையா என்று முதல்வர் கலைஞர் சட்டசபையில் கண் கலங்கிக் கூறியதால் சபையில் சில நிமிடம் பரபரப்பு நிலவியது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆளுநர் பர்னாலா, மத்திய அரசு, காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரை கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை விட்டது குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சி்களின் உறுப்பினர்களின் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினர். பின்னர் முதல்வர் கலைஞர் பேசுகையில், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார்.

கலைஞர் பேசுகையில், தோழமை கட்சிகளின் கருத்தோடு என் கருத்தையும் இணைத்து கூறுகிறேன். காவல்துறையில் எல்லோரும் நல்லவர்களும் அல்ல, தீயவர்களும் அல்ல. இதில் கருங்காலிகளும் உள்ளனர்.

அதற்காக காவல்துறையே வேண்டாம் என முடிவு செய்ய கூடாது. ஒரு ஆட்சி செம்மையாக இருந்தால்தான் எல்லா துறையும் சீராக செயல்படும். இதை பொறுத்து கொள்ள முடியாமல் எரிச்சலடையும் புகைச்சலாகத்தான் ஜெயலலிதாவின் அறிக்கை உள்ளது.

இதற்காகத்தான் நீங்கள் சட்டசபையில் எனக்கு பொன்விழா நடத்த வேண்டும் என்ற போது நான் வேண்டாம் என மறுத்தேன். பிடிவாதமாக சம்மதிக்க வைத்தீர்கள்.

என்றைக்காவது 50 ஆண்டு காலத்தில் எந்த விழாவாவது இந்த அவையில் நடந்ததுண்டா. நான் தம்பி என்று கருதிக் கொண்டிருந்தவரும் கூட அறிக்கை விட்டிருக்கிறார். ஏனென்றால் அவர்களால் எல்லாம் இவற்றைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இந்த அவையில் எம்ஜிஆர் படம் திறக்கப்பட்ட போது என்னை அழைக்கவில்லை. அப்போது, சபாநாயகர் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார், நாங்கள் அமர்ந்த இடத்தில் சசிகலா அமர்ந்திருந்தார். இந்த அவை ஒரு தர்பார் போல காட்சியளித்தது.

நீங்கள் எல்லாம் பார்த்து ஏதோ, ஐம்பதாண்டு காலம் இருந்தானே, எங்கேயோ பிறந்தவன், சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன், இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானே என்று என்னையும் சிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் கருதியதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்தான் இன்றைக்கு இதையெல்லாம் செய்கிறார்கள்.

இதில் டிஜிபியும், கவர்னரும் என்ன செய்வார்கள், அவர்களை பற்றி அறிக்கை வெளியிடுகிறார்கள். உலக மகா பொய்யர் கருணாநிதி என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

நடமாடும் பொம்மையாக டிஜிபி இருக்கிறார் என்கிறார். காவல்துறையைப் பற்றி உருக்குலைந்து போன, செயல் திறன் இழந்து விட்ட, சர்வ நாசமாகி விட்ட அமைப்பு என்று கூறியுள்ளார். துர்வாச முனிவரால் கூட இப்படி திட்ட முடியாது.

ஆளுநரைப் பார்த்து நபர் என்கிறார். நாம் பதிலுக்குப் பதில் பெண்களைப் பற்றிப் பேசக் கூடாது. நாம் பெண்களை பற்றி பேசக்கூடாது, பெண்களும் இப்படி பேசக்கூடாது.

நாம் புராணங்களை நம்புவதில்லை, கட்டுகதைகளையும் நம்புவதில்லை. ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது அல்லி ராணிகள் இருக்கத்தான் செய்தார்கள் என எண்ண வேண்டியுள்ளது.

முதலில் நரசிம்மராவ், வாஜ்பாய், அத்வானி, ராஜீவ் காந்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சந்திரபாபு நாயுடு எல்லோரையும் குறை கூறிவிட்டு, இப்போது உ.பி சென்று அவர் கையை பிடித்துள்ளார்.

வாஜ்பாயைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா. தமிழ் நாட்டு மக்களுக்கு இவரை யார் என்றே தெரியாது. நான்தான் பட்டி தொட்டிகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன் என்றார். அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றார்.

இரவு 10 மணிக்கு ராஜீவ் காந்திக்குப் போன் செய்தேன். அவர் தூங்கப் போய் விட்டார் என்றார்கள். ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு சீக்கிரம் தூங்கினால் நாடு உருப்படுமா என்றும் கூறினார்.

ஆளுநர் சென்னாரெட்டியை சந்திக்கச் சென்றபோது அவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றார். சந்திரபாபு நாயுடுவை மோசடிப் பேர்வழி என்றார்.

எம்.ஜி.ஆர். என்னை விட்டு, திமுகவை விட்டுப் பிரிந்து சென்றார். அப்படி இருந்தும் என் மீது மரியாதையாக இருந்தார். நட்பு பட்டுப் போய் விடவில்லை. அவருடைய காரிலே ஒரு நண்பர், இப்போதும் அவர் சென்னையிலே பெரிய புள்ளியாக உள்ளார்.

டிரைவர் என்று கூறக் கூடிய அளவுக்கு எம்.ஜி.ஆரிடத்திலே நெருக்கமாக இருந்தவர் அவர். ஒருமுறை காரில் எம்.ஜி.ஆருடன் சென்றபோது தவறிப் போய் எனது பெயரைக் குறிப்பிட்டு, கருணாநிதி என்று கூறி விட்டார்.

உடனே காரை நிறுத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்.அவரை நடந்தே வீட்டுக்கு வருமாறு உத்தரவிட்டார். ஏன் என்று அவர் கேட்டபோது, நானே கருணாநிதி என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. நீ எப்படிக் கூப்பிடலாம் என்றாராம். இதை அந்த நண்பர் பின்னர் ஒருமுறை என்னிடம் சொல்லி கண் கலங்கியிருக்கிறார்.

அப்படி, ஒரு கட்சி பிரிந்த பிறகும் கூட அந்த உணர்வுகள் அப்படியேதான் இருந்தன. நான் காமராஜரைப் பற்றிப் பேசாத பேச்சா. காமராஜர் என்னைப் பற்றியோ, கழகத்தைப் பற்றியோ பேசாத பேச்சா. பக்தவச்சலம் என்னைப் பற்றி பேசாத பேச்சா, நான் அவரைப் பற்றிப் பேசாத பேச்சா. அப்படி இருந்தாலும், என்னுடைய தாயின் பெயரில் திருக்குவளையில் தாய் சேய் நல விடுதியைத் திறக்க வேண்டும் என கேட்டபோது பக்தவச்சலம் உடனடியாக ஒத்துக் கொண்டார்.

அதேபோல நான் அவருக்கு மணிமண்டபம் கட்டியபோது அவர் இந்தியைக் கொண்டு வந்தார், உங்களை பாளையங்கோட்டை சிறையில் போட்டார். அவருக்கு மணி மண்டபா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அது வேறு, இது வேறு. மனித நாகரீகம் இது, தடுக்காதீர்கள் என்றேன்.

பெருந்தலைவர் காமராஜரை நான் எவ்வளவு தூரம் விமர்சித்திருப்பேன். எனது தாயார் இறந்தபோது நான் சவத்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தேன். எனது வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார். எனது தாயாருக்கு முதல் மரியாதை செலுத்தி விட்டு வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார்.

அரசியலில் மற்றவர்களை தாக்கி பேசும்போது அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டி வரும் என்பதை மறந்து விடக்கூடாது. ஜெயலலிதா அந்த நாகரீகத்தை கற்றவர் அல்ல, காப்பாற்றுபவரும் அல்ல. மனித இதயத்தோடு தொடர்பு இல்லாமல் அரசியல் நடத்துகிறார்.

இதையெல்லாம் தாங்கிகொண்டுதான் ஆக வேண்டும். இந்த அளவிற்கு நாகரீகமற்ற, பண்பாடற்ற அரசியல் வந்துவிட்டதே என வருத்தப்பட வேண்டியுள்ளது.

84 வயது, 84 வயது என்று சொல்கிறீர்களே, இவ்வளவு நாள் இருந்ததால் அல்லவா, தமிழ்நாட்டிலே காமராஜரைப் போன்ற, பெரியாரைப் போன்ற, பகத்வச்சலத்தைப் போன்ற, அண்ணாவைப் போன்ற பெரிய மனிதர்களுன் பழகி விட்டு, இன்றைக்கு யார் யாரோடெல்லாம் அரசியல் நடத்திய வேண்டிய நிலை வந்து விட்டது.

இப்படியெல்லாம் 84 வயது வரை வாழ வேண்டுமா என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன் என்று கூறியபோது கலைஞரின் கண்கள் பணித்தன, குரல் தழுதழுத்தது. அவையே பெரும் அமைதியில் உறைந்து போனது.

கலைஞர் கண் கலங்குவதைப் பார்த்த அமைச்சர்கள் கீதா ஜீவன், பூங்கோதை, தமிழரசி, பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் கண்கலங்கினர்.

(செய்தி உதவி : தட்ஸ் தமிழ்)

Monday, April 23, 2007

விஜயகாந்த் கட்சியின் வியத்தகு வளர்ச்சி(?)

தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்த சில மாதங்களிலேயே தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் பாராட்டத்தக்க முன்னேற்றம் என்று வாழ்த்து பெற்ற தே.மு.தி.க இபோது மேலும் ஒரு படி முன்னேறி உள்ளது. இப்போது அந்த கட்சியில் நடந்து வரும் கோஷ்டி பூசல்கள் தான் அந்த முன்னேற்றம்

இந்த தமிழ்ப் புத்தாண்டு முதல் தன் கட்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்தார் விஜயகாந்த் அந்த மாற்றங்களின் படி ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் தான் முக்கியமானவர் அவர் தான் அந்த மாவட்டத்தின் செயலாளர் என்ற அமைப்பு முறையை உருவாக்கி அதன் படி எல்லா மாவட்டங்களுக்கும் செயலாளர்களை நியமித்து வருகிறார். இந்த செயலாளர் தேர்வில் தான் குழப்பங்கள்

தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களின் தேர்வை எதிர்த்து பல மாவட்டங்களில் இருந்தும் கட்சி தலைமைக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த கோஷ்டிப் பூசல் வெடித்து வெளியே வந்து பத்திரிக்கைகளுக்கும் வந்துவிட்டது. விஜயகாந்த் மச்சான் சுதீஷுக்கு பணம் கொடுத்தால் பதவி என்று சொல்கிற அளவிற்கு போய்விட்டது இந்த பூசல்கள். முதல்வருக்கு கடிதம் அனுப்பினால் கூட பதில் வருகிறது ஆனால் கேப்டனுக்கு அனுப்பினால் பதிலே வருவதில்லை என்று தே.மு.தி.க ஒன்றிய செயலாளரே பத்திரிக்கைக்கு தெரிவித்து உள்ளார். ஆக அடி மேல் அடி வைத்து தமிழக அரசியலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது தே.மு.தி.க

Friday, April 20, 2007

டாக்டர் கலைஞர் - சட்டமன்ற பொன்விழா!!!

வாழ்ந்த காலத்தில் புகழின் உச்சத்தைத் தொட்டவர்கள் பூமிப்பந்தில் மிகக் குறைவு. அதிலும் வழுக்கு மரமென சறுக்கிவிழும் அரசியல் ஆடுகளத்தில் அதிகாரத்தோடு கோலோச்சியவர்களின் எண்ணிக் கையை விரல்விட்டு எண்ணி விடலாம். வர்க்கமும், சாதியுமாகப் பிரிந்து கிடக்கும் தமிழ்ச் சமூகத்தில் பெரியவர் கருணாநிதியின் அரசியல் தடத்தை எவராலும் புறக்கணிக்க முடியாது.


முதல்வர் கருணாநிதி தமிழக சட்டசபைக்குள் கால் பதித்து ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 1957&ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் தொடங்கிய வெற்றி, இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு விழா எடுக்க முடிவாகி இருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முடிவில் ஜனாதிபதி அப்துல் கலாம் தலைமையில் விழா நடக்கப் போகிறது.

பம்பரம் விளையாடும் பதினான்கு வயதில் தமிழ் மாணவர் மன்றத்தைத் தொடங்கி அரசியல் வாழ்க்கைக்கு ‘அ’ போட்டவர் கருணாநிதி. அடிப்படை உறுப்பினராக தி.மு.க&வில் தொடங்கிய கருணாநிதியின் வாழ்க்கையில் பின்னாளில் ஏற்படப் போகும் மாற்றங்களை அவரே கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார்.

தள்ளாடும் வயதிலும் நக்கலுக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத மனிதர். இவர் இருக்குமிடத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

‘‘என்னோட தொகுதியான நிலக்கோட்டைக்கு ஒரு காலேஜ் வேணும்னு ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தேன். ஒரு தடவை கேள்வி நேரத்துல நான் எழுந்து இதைக் கேட்கவும், ‘அக்காவுக்கு இல்லாத கல்லூரியா? உடனே அனுமதி கொடுத்துடறேன்’னு சொல்லிட்டாரு. அதுல இருந்தே எல்லாக் கட்சிக்காரங்களுமே என்னை அக்கான்னுதான் அன்பா கூப்பிடுவாங்க. நானும் கலைஞரை தம்பின்னுதான் கூப்பிடுவேன். ஆனா, இதுல ஒரு விசேஷம் என்ன தெரியுமா... என்னைவிட கலைஞர் மூத்தவர்! ஒரு கிண்டலுக்காக அவரு என்னை அப்படி கூப்பிடப் போய், Ôஅக்காÕன்னே இன்னைக்கு வரைக்கும் தொடர்ந்துட்டு இருக்கு...’’ &இப்படி பழைய நினைவுகளில் நெகிழ்ந்து போகிறார், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ&வான நிலக்கோட்டை பொன்னம்மாள்.

கருணாநிதிக்கும் ராஜாத்தி அம்மாவுக்கும் காதல் மலர்ந்தது. ராஜாத்தி அம்மாள் பிரசவத்துக்காக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனபோது, மருத்துவமனையில் கணவர் பெயர் கேட்கப்பட... அவரும் Ôகருணாநிதி, தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர்Õ என பதிவு செய்ய... அதன்பிறகு நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கோவை திருமகன் என்ற உறுப்பினர், ‘பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதியை தனது கணவர் என்று ஒரு பெண் பிரசவத்தின்போது குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கெனவே திருமணமாகி மனைவியோடு இருக்கும் அமைச்சரை இன்னொரு பெண் கணவர் என்று குறிப்பிட்டால் என்ன அர்த்தம்? இதற்கு அமைச்சர் என்ன சொல்கிறார்..?’ என்று கருணாநிதியின் மகள் கனிமொழி பிறந்த சமயத்தில் கேள்வி எழுப்ப, அதற்கு கருணாநிதி எழுந்து, ‘கனிமொழி என் மகள். கனிமொழியின் தாயார் ராஜாத்திஅம்மாள்...’ என்று சொல்லி விட்டு அமர்ந்துகொள்ள, அவையில் அடக்க முடியாத சிரிப்பாம். இப்படி ஒரு பெரிய பிரச்னையைக்கூட சமயோஜிதமாக யோசித்து, சிக்கலை சாதுர்யமாக தவிர்க்கும் கலை அவருக்கே உரியது. அதேபோல, டைமிங் ஜோக் அடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்..!

‘‘நான் சபாநாயகரா இருந்தப்ப எதிர்க்கட்சி வரிசையில தி.மு.க&காரங்க உட்கார்ந்திருந்தாங்க. துரைமுருகனும் இன்னும் சில தி.மு.க. உறுப்பினர் களும் எழுந்து அவையை நடத்த முடியாத அளவுக்குக் கூச்சல் போட்டாங்க. நானும் எவ்வளவோ அடக்கிப் பார்த்தேன். யாரும் அடங்கவே இல்ல. ‘எப்படியோ போங்க... இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பத்தணும்’னு சொல்லிட்டு அமைதியாயிட்டேன். அதுக்குப் பிறகு கருணாநிதி எழுந்து எல்லோரையும் அமைதிப்படுத்தி உட்கார வச்சாரு. அவுங்க எல்லோரும் அமைதியான பின்னாடி கலைஞர், ‘இவுங்களை எல்லாம் ஆண்டவன் தான் காப்பத்த முடியும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா இதுக்கு முன்னாடி ஆண்டவன் நான்தானே’னு சொல்ல, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். உட்பட எல்லோ ருமே சிரிச்சிட்டோம்’’ &இப்படி கரகரத்த குரலில் நினைவுகளை அசை போட்டார் முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமான க.ராஜாராம்.

கருணாநிதி எம்.எல்.ஏ&வாக ஆன காலத்தில்இருந்தே அவரது பேச்சை ரசிக்க ஒரு கூட்டம் திரளும். சட்டசபையில் எம்.எல்.ஏ. கருணாநிதி பேசுகிறார் என தெரிந்தாலே கேலரியில் கூட்டம் நிரம்பி வழியுமாம். கருணாநிதி பேச்சில் பொரு ளும், சுவையும் இருக்கும் என காமராஜரே வாயார பாராட்டுவாராம்.

‘‘இதேபோல்தான் அப்போதும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி... இங்கே கலைஞர் எம்.எல்.ஏ&வாக இருந்தார்! அப்போ மின்சார வாரிய நிலத்தில் நடந்த ஒரு மிகப்பெரிய மோசடியை ஆதாரத்தோடு சபையில் அம்பலப்படுத்தினார் பேராசிரியர். மறுநாள் ஏதோ காரணத்தினால் பேராசிரியர் சட்டசபைக்கு வரல. காங்கிரஸ் எம்.எல்.ஏ&வான அனந்தநாயகி எழுந்து, ‘நேத்து சபையில மோசடி அது இதுன்னு பேசிய பேராசிரியர் ஏன் இன்னைக்கு சபைக்கு வரல? அவருக்கு முதுகெலும்பு இருந்திருந்தா இன்னைக்கு வந்திருக்கணும்’னு கடுமையா பேசிட்டாங்க. உடனே எழுந்த கலைஞர், ‘பேராசிரியருக்கு முதுகெலும்பு இருக்கா இல்லையான்னு அவரோட பொண்டாட்டிக்குத்தானே தெரியும். அனந்தநாயகிக்கு எப்படி தெரியும்?’னு போட்டாரே ஒரு போடு. அவையில் சிரிப்பு சத்தம் அடங்க கிட்டத்தட்ட பத்து நிமிஷம் ஆச்சு..’’ என்று ஃப்ளாஷ்பேக்கை விவரிக்கும்போது தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு இப்போதும் சிரிப்பை அடக்க முடியவில்லை!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் பலமுறை சட்டமன்ற உறுப்பி னராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர். ‘‘1961&ல் நில சீர்திருத்த சட்டம் கொண்டு வந்தபோது அதை எதிர்த்தவர் கருணாநிதி. அதே தலைவர் 1990&ம் ஆண்டு நில சீர்திருத்த சட்டம் கொண்டு வந்தபோது, அவர் 1961&ல் பேசியதை நான் சுட்டிக்காட்டிப் பேசினேன். அதற்கு கொஞ்சமும் கோபம் கொள்ளாமல், ‘நான் பேசியதை எனக்கே ஞாபகப்படுத்திய நண்பர் பாலசுப்ரமணி யத்துக்கு நன்றி’ என்று சொல்லியதோடு எனது கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டார்.

ஆட்டோ சங்கர் சிறையிலிருந்து தப்பி ஓடியபோது, சட்ட மன்றத்தில் அது பற்றிய விவாதங்கள் நடந்தன. ஆட்டோ சங்கர் சிறையிலிருந்து எப்படி தப்பித்தான், அவனுக்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்ற ஆதாரங்கள் எனக்குக் கிடைத்தது. அதை சட்ட சபையில் பேசும்போது ஆட்டோ சங்கர் தப்பிக்க அரசு தரப்பில் யாரெல்லாம் காரணம் என்பதை ஆதாரத்தோடு முன்வைத்தேன். அரசாங்கம் மீதே குற்றம் சுமத்தினேன். அத்தனையையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட கலைஞர், ‘ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பாலசுப்ரமணியம் இலக்கணமாக இருக்கிறார். அவர் சொன்னது அத்தனைக்கும் ஆதாரம் இருக்கிறது. என் கண்ணிலேயே மண்ணைத் தூவி விட்டு இவ்வளவு வேலைகள் நடந்திருப்பது வேதனையாக இருக்கிறது. உடனே இதற்கு விசாரணை கமிஷன் அமைக்கப்படும்’ என அறிவித்தார்.

எப்படி ராமாயணத்தில் வரும் வானர அரசன் வாலிக்கு, தன்னை எதிர்ப்பவர்களின் பலத்தில் பாதி போகுமோ அது போலத்தான் கலைஞருக்கும். அதுதான் அவரது வெற்றியின் ரகசியமே’’ என்கிறார் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.


(நன்றி : ஜூனியர் விகடன்)

Wednesday, April 18, 2007

கலைஞர் பொன்விழாவுக்கு வர ஜனாதிபதி ஏன் மறுத்தார்?

துக்ளக் பாணியிலேயே நாமும் சிந்தித்துப் பார்த்தால் கலைஞர் பொன்விழாவுக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ள ஏன் மறுத்துவிட்டார் என்று மிக எளிதாக புரிந்துவிடும். அது வேறு ஒன்னுமில்லீங்கோ, 80 வயதான சென்னா ரெட்டியையே தனக்கு சாதமாக அரசியல் பண்ணவில்லை என்ற காரணத்திற்காக அவதூறு பரப்பிய செல்வி ஜெயலலிதா அவர்கள், அவர் வேண்டுகோளுக்கு எதிராக பொன்விழாவில் கலந்து கொண்டால் நாளை தன்னைப் பார்த்து என்ன சொல்வாரோ என்று எண்ணி தான் ஜனாதிபதி பொன்விழா அழைப்பை ஏற்று கொள்ள மறுத்துவிட்டார்

அரட்டை கச்சேரி

குடுமி1: வாங்கோண்ணா! நமஸ்காரம்...

குடுமி2: நமஸ்காரம்டா அம்பி.. நல்லாயிருக்கேலா?

குடுமி1: எங்கண்ணா இப்பெல்லாம் நாடு போற போக்கே சரியில்ல.. இனி கொஞ்சம் கஷ்டம் தான்..

குடுமி2: ஏண்டா அம்பி.. இப்படி பேசற

குடுமி1: இல்லண்ணா. இப்ப அரசாங்கம் அனைவரும் அர்ச்சகர் ஆகாலாம்ன்னு பெரியார் அப்ப சொன்னத இப்ப செயல்படுத்திட்டா. அதோட இப்ப அரசாங்கம் எல்லோரும் படிக்க அப்ளிகேசன் வேற வாங்கிட்டாங்க. அதான் இனி கொஞ்சம் கஷ்டம்.

குடுமி2: அதனால் என்ன?

குடுமி1: இல்ல இன்னைக்கு படிக்க வைக்கிறா. நாளைக்கு அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் எல்லாத்திலேயும் இப்படி படிச்சாவவெல்லாத்தையும் இடஒதுக்கீடு அப்படின்னு சொல்லி நம்மல தூக்கிட்டு போஸ்டிங் போட்டுட்டாங்கன்னா. என்ன பண்றது. ஏன்னா இப்ப இதுவும் ஒரு தொழில் ஆயிடிச்சு. மொதல்ல ஏமாத்திகிட்டு இருந்தோம். இப்ப மக்கள் புரிஞ்சிகிட்டு கேள்வி கேக்கிறாங்க. இன்கம்டாக்ஸ் வேற கட்டறமாதிரி நோட்டிஸ் எல்லாம் வருது. போற போக்க பார்த்த மடம் எல்லாத்தையும் அரசு கையகப்படுத்திடுச்சினா. பல ஆயிரம் கோடிகள் இருக்குது. நாம பரவாயில்லை. மடம் ஓனருங்களுக்கெல்லாம் இன்னும் கஷ்டம் தான்.

குடுமி2: இடஒதுக்கீடுன்னா கேஸ் போட்டுவோம் ஓய். நம்மவா விட்டுவாளா?

குடுமி1: அப்படி நினைக்காதண்ணா. உயர்கல்வியில் இடஒதுக்கிடு கொண்டு வந்து அடிமடியில கைய வச்சிட்டா. தா.பாண்டியன் சொன்னத கேட்டியேலா?

" இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி தொடர்பான பிரச்சனை. இது போன்ற பிரச்சனைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதைத் தடுக்க ஒரு தனி சட்டம் கொண்டு வர வேண்டும் " (இந்திய கம்யூ தலைவர் தா.பாண்டியன்)

அப்படி ஏதாவது கொண்டுவந்துட்டா அவ்வளவு தான். திக வேற நீதிமன்றத்திலேயும் இடஒதுக்கிடு கேக்கிறா. என்னவாகப்போவதோ.

குடுமி2: எனக்கு வயசாயிடிச்சி. அதான் இதுபோல செய்தியெல்லாம் படிக்கறது இல்ல. எல்லாத்துக்கும் காரணம் அந்த பெரியார் தான். அவர் ஆரம்பிச்சு வச்சார். அத பாலோ பண்ணிட்டே வந்துட்டா நம்மூர்ல. நாம அடங்கிட்டோம் இங்கே வேற வழி இல்லாமா. இதுல பொருளாதாரத்திற்கும் எதற்கும் சம்பந்தமில்லை. இப்ப வடக்கு பக்கமும் இது போல ஒரு இயக்கம் ஆரம்பிச்சிட்டா. போற போக்க பார்த்தா வடக்கிலேயும் நாம மாறாவேண்டியது தான். இனியும் பழைய குப்பைய வச்சிக்கிட்டு ஓட்டமுடியுமா? உண்மையில் பெரியார் சூப்பர்மேன் தான் அம்பி.

குடிமி1: வடக்கு பக்கம் என்ன இயக்கம்? எனக்கு தெரியாதுண்ணா?

குடுமி2: சங்பரிவாருக்கு சவால் விடும் சூத்ரா அமைப்பு அதோட கொள்கை பரப்புச் செயலாளார் இப்படி பேசியிருக்கார் : "தயாராக இருக்கச் சொல்லுங்கள் அவர்களை! ஆரிய வர்த்தத்தில் அவர்களின் கொட்டத்தை அடக்க பெரியார் பூமியாம் தமிழ்நாட்டிலிருந்து எழுச்சிச் சுடரேந்தி வருகிறேன்" என்று உணர்ச்சிபொங்கப் பேசுகிறார் ஜே.பி.பாபு உத்தரப்பிரதேசத்தில் கடந்த இரண்டாண்டு களாக இயங்கிவரும் 'வி°வ சூத்திர மகா சபா' அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர். அவரோட பேட்டிய படிக்க இங்க போடா அம்பி
http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=6369&hl=

குடுமி1: அவா நம்மவாவ ஒடுக்காம விடமாட்டா போலிருக்குது.

Sunday, April 15, 2007

கலைஞருக்கு பொன்விழா, எதிரிகளுக்கு ஆப்புவிழா

கலைஞர் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டு உடம்பு எல்லாம் அரிப்பு எடுத்துவிடும். இந்த அலர்ஜி முற்றிவிட்டால் சிலர் கேலிச்சித்திரம் வரைந்து தங்கள் அரிப்பை தீர்த்துக் கொள்வர். அப்படிப்பட்டவர்களுக்கு கலைஞர் பொன்விழா என்றால் எப்படி இருக்கும். அதுவும் அந்த பொன்விழாவுக்கு நம் குடியரசு தலைவருக்கும் அழைப்புவிடுத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா

சென்ற ஆட்சியில் குடியரசுத் தலைவருக்கு செல்வி ஜெயலலிதா அவர்கள் அழைப்புவிடுத்தார். அதற்கு தி,மு.கழகம் எதிர்ப்பு தெரிவித்து அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் வைத்தது. கடைசியில் குடியரசு தலைவர் வரவில்லை என்பது வரலாறு. இப்போது கலைஞரின் பொன்விழவிற்கு குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு அழைப்புவிடுத்துள்ளது. எங்கே குடியரசு தலைவர இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுவிடுவாரோ என்று அஞ்சி நடுங்கிய கேலிசித்திர கூட்டம் மறுபடியும் சித்திரம் வரைய தொடங்கிவிட்டது. எப்படித் தான் இப்படி ஊசி முனை அளவு கூட சிந்திக்காமல் வரைய முடிகிறதோ என்று வியக்கும் அளவிற்கு இருக்கிறது அவர்களின் சித்திரம். சென்ற ஆட்சியையும் கலைஞர் ஆட்சியையும் ஒப்புமை செய்கிறார்கள் இவர்கள்

நம் குடியரசு தலைவராக திரு.அப்துல் கலாம் அவர்கள் பொறுப்பேற்ற போது பா.ஜ.க. தான் மத்தியில் ஆட்சியில் இருந்தது. குடியரசு தலைவரின் பதவியேற்பு விழாவுக்கு அப்போது தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு அழைப்பு அனுப்பாமல் அவமதித்தது பா.ஜ.க. அரசு. அப்போது கூட அந்த பிரச்சினையை அரசியலாக்க முயலாமல் தமிழக முதல்வருக்கு சேர்ந்த இழுக்கை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழுக்காக நினைத்து செல்வி ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பேசியவர் தான் டாக்டர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட தலைவருக்கு இன்று பொன்விழா என்றால் அதற்காக பெருமைப்படாமல் வெறுப்பை கக்குகிறார்கள் சித்திரம் வரைபவர்கள்

Wednesday, April 11, 2007

விஞ்ஞான முறையில் நீதிமன்ற அவமதிப்பு

தமிழகத்தில் ஒரு முழு அடைப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தவுடனேயே தி.மு.க. நீதிமன்றத்தை அவமதித்துவிட்டது, நீதிமன்ற புண்ணியம் கேட்டுவிட்டது என்று ஒப்பாரி வைக்கிறது ஒரு கும்பல். இந்த புண்ணியவான்களுக்கு ஏற்கனவே பதில் சொல்லி ஒரு பதிவு போட்டாயிற்று. ஆனால் அதில் நண்பர் கோவி.கண்ணன் சொன்னது போல் சில சமூக அக்க'றை' உள்ளவர்கள் குறை சொல்ல கூடும். அதனால் சுடசுட ஒரு நிகழ்வை பற்றி இப்போது சொல்கிறேன். இது நேற்று தொலைக்காட்சியில் காட்டியது

புது தில்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றதற்கு முக்கிய. காரணம் அங்கு நீதிமன்ற தீர்ப்பு படி காங்கிரஸ் அரசு பல கடைகளுக்கு சீல் வைத்தது தான். ஏற்கனவே தில்லி முதல்வர் வாகனங்களால் மாசு கட்டுப்பாடு, மெட்ரோ திட்டம் போன்றவைகளில் மிக சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றவர். அது போல இந்த முறையும் நீதிமன்ற தீர்ப்பு படி பல கடைகளுக்கு சீல் வைத்துள்ளார். இந்த நடவடிக்கை மக்களின் கோபத்தை சம்பாதிக்கவே குட்டையை குழப்ப புறப்பட்டது பா.ஜ.க. கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்தது. இந்த அரசியல் ஸ்டண்ட் கைகொடுக்க அங்கே தேர்தலில் வெற்றியும் பெற்றுவிட்டது

இப்போது வெற்றி பெற்ற மமதையில் நீதிமன்ற தீர்ப்புபடி சீல் வைத்த கடைகளின் சீலகளை அகற்றும் வேலையில் இறங்கி உள்ளனர் பா.ஜ.க.வினர். இதுவும் பெரிய நீதிமன்ற அவமதிப்பு தானே. அதனால் காவல்துறை சீலை அகற்றியவர்களை கைது செய்து உள்ளனர். அப்படி கைதான ஒரு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் தான் தொலைக்காட்சியில் சொல்கிறார், தன் மீது 4 கடைகளின் சீல்களை அகற்றியதாக
காவல்துறை வழக்கு தொடர்ந்துள்ளது, அது தவறு, தான் இதுவரை 22 கடைகளின் சீலகளை அகற்றி உள்ளேன் என்று தெனாவட்டாக சொல்கிறார். இப்படிப்பட்ட நீதிமன்ற அவமதிப்பை பற்றி அந்த பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா. விஞ்ஞான முறையில் நீதின்றத்தை அவமதிப்பது எப்படி என்று இவர்கள் பாடம் எடுக்கலாம்

Tuesday, April 10, 2007

மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கிய முலாயம் சிங்

சமீபத்தில் மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்ற பழமொழி பற்றி ஒருவர் தன் வலைப்பூவில் கேட்டு வைக்க பலர் அதற்கு ஆர்வமாக விளக்கமும் உதாரணங்களும் தர சிலர் தங்களை அறியாமல் அந்த வலைக்குள் விழுந்து எழுத ஒரே டமாஸாக போய்விட்டது. திடீரென்று எனக்கு ஒரு உதாரணம் தோன்றியது. சரி நாமும் அந்த வலைப்பதிவருக்கு உதவி வைக்கலாமே என்று இந்த பதிவை போடுகிறேன்

மேலே சொன்ன பழமொழியை ஆராய்ந்தவர் முலாயம் பற்றி கொஞ்சம் சிந்தித்தால் அவருடைய ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் கூட கிடைக்கலாம். மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கிய சமீபத்திய உதாரணம் உத்திரபிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ் தான்

உ.பி.யில் சட்டமன்ற தேர்தல் ஆரம்பித்து முதல் கட்ட வாக்குப்பதிவும் முடிந்துவிட்டது. அங்கே நான்கு முனை போட்டியில் ஒவ்வொரு கட்சியும் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. மதத்தை தாண்டி சிந்திக்க முடியாத பா.ஜ.க. வழக்கம் போல் மதவெறி ஊட்டும் குறுவட்டுகளை வெளியிட்டு தேர்தல் ஆணையத்தின் கண்டனத்திற்கு உள்ளானது

முதலில் அமிதாப்பை மட்டுமே நம்பி இருந்த முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி பின்னர் வேறு வழியின்றி செல்வி ஜெயலலிதாவின் உதவியை நாடியது. எதிரியின் எதிரி நண்பன் என்று கணக்கு போட்டரோ அல்லது வேறு ஏதாவது அரசியல் கணக்கு போட்டரோ முலாயம், ஏதோ ஒரு வகையில் செல்வி ஜெயலலிதாவின் உதவியை நாடி உள்ளார். ஆனால் இங்கே அரசியல் கணக்கு எல்லாம் செல்லாது என்று அவருக்கு தெரியாமல் போய்விட்டது. இப்போது எதிர்பார்த்தபடியே அம்மா முதல் கட்ட பிரச்சாரத்திற்கு செல்லாமல் விலகி கொள்ள மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கிய கதை ஆகிவிட்டது முலாயமுக்கு

Saturday, April 07, 2007

தமிழக பந்த் பற்றி பொதுநலவாதிகள்

இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் கடந்த வாரம் நடைபெற்ற முழு அடைப்பு பெரும் வெற்றி பெற்றதாக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த முழு அடைப்புக்கு பல அமைப்புக்கள் ஆதரவு தந்தாலும் வழக்கம் போல் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. முழு அடைப்பால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டன என்று பொதுநலவாதிகள் எழுதி வருகின்றனர். சிலர் தங்கள் பத்திரிக்கையில் கேலிச் சித்திரம் வெளியிட்டு தங்கள் மேதாவிதனத்தை காட்டி கொண்டுள்ளனர்

அவர்களுக்கு விளக்கு பிடிப்பவர்களும் அந்த கேலிச் சித்திரத்தை தங்கள் வலைப்பதிவில் மறுபதிப்பு செய்து தங்கள் அறியாமையை கோடி காட்டியுள்ளனர். இப்படி தங்களை பொதுநலவாதிகளாக நினைத்துக் கொள்ளும் இவர்களின் நிலை என்ன? அவர்கள் எப்போதுமே பொதுநலவாதிகள் தானா என்று பார்த்தால் அவர்களின் அக்கறை என்னவென்று புரிந்துவிடும்

இட ஒதுக்கீடு பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடனேயே பிரச்சினையின் முக்கியத்துவம் காரணமாக முழு அடைப்பு பற்றிய அறிவிப்பும் உடனேயே வந்தது. இதனால் சில சங்கடங்கள் ஏற்பட்டு இருக்கலாம். முழு அடைப்பு முழு வெற்றி என்பதைவிட அது மிகவும் அமைதியாக நடந்தது என்பதே ஒரு கழக உடன்பிறப்பு என்ற வகையில் ஆறுதல் தருகிறது. இப்படி அமைதியாக நடந்த முழு அடைப்பை பற்றி கேலிச் சித்திரம் வரைபவர்கள் மத வெறி அமைப்புகளால் ஏற்படும் கலவரம், அதனால் ஏற்படும் பொருள் மற்றும் உயிரிழப்பு, அதனால் பாதிக்கப்படும் இயல்பு வாழ்க்கை பற்றி எந்த சித்திரமும் வரைவதில்லையே. ஏன் என்று சிந்தித்தால் காரணம் உங்களுக்கு புரிந்துவிடும்

முழு அடைப்பு என்பது காந்திஜி சுதந்திர போராட்டத்தில் பயன்படுத்திய ஒரு அனுகுமுறை. தேசியவாதிகளாக காட்டிக் கொள்ளும் இந்த சித்திரம் வரைபவர்கள் காந்திஜி வழியில் நடந்த போராட்டத்தை கிண்டல் செய்யும் அதே வேளையில் கோட்சே வழியில் நடக்கும் மதக்கலவரங்களை கிண்டல் செய்வதில்லையே. இதற்கும் காரணம் உங்களுக்கு விளங்காமல் இருக்காது

இப்போது சித்திரம் வரைந்தவர்கள் சென்ற ஆண்டு இந்திய மருத்துவ கழகத்தில் இருந்து வேணுகோபால் நீக்கப்பட்டபோது மருத்துவர்கள் செய்த வேலை நிறுத்தம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்ட போது என்ன செய்து கொண்டு இருந்தார்கள். வேணுகோபால் என்ற ஒரு தனி மனிதருக்காக நடந்த வேலை நிறுத்தத்தைப் பற்றி மவுனம் சாதிக்கும் இவர்கள் மக்களுக்காக நடந்த போராட்டத்தை பற்றி குறை கூறுகிறார்கள்

இவர்க்ளுடைய பேனா எந்த சமயத்தில் எல்லாம் சித்திரம் வரையும் என்பது கூட இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும். ஆம்! இவர்கள் தாம் பொதுநலவாதிகள்