சமீபத்தில் மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்ற பழமொழி பற்றி ஒருவர் தன் வலைப்பூவில் கேட்டு வைக்க பலர் அதற்கு ஆர்வமாக விளக்கமும் உதாரணங்களும் தர சிலர் தங்களை அறியாமல் அந்த வலைக்குள் விழுந்து எழுத ஒரே டமாஸாக போய்விட்டது. திடீரென்று எனக்கு ஒரு உதாரணம் தோன்றியது. சரி நாமும் அந்த வலைப்பதிவருக்கு உதவி வைக்கலாமே என்று இந்த பதிவை போடுகிறேன்
மேலே சொன்ன பழமொழியை ஆராய்ந்தவர் முலாயம் பற்றி கொஞ்சம் சிந்தித்தால் அவருடைய ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் கூட கிடைக்கலாம். மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கிய சமீபத்திய உதாரணம் உத்திரபிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ் தான்
உ.பி.யில் சட்டமன்ற தேர்தல் ஆரம்பித்து முதல் கட்ட வாக்குப்பதிவும் முடிந்துவிட்டது. அங்கே நான்கு முனை போட்டியில் ஒவ்வொரு கட்சியும் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. மதத்தை தாண்டி சிந்திக்க முடியாத பா.ஜ.க. வழக்கம் போல் மதவெறி ஊட்டும் குறுவட்டுகளை வெளியிட்டு தேர்தல் ஆணையத்தின் கண்டனத்திற்கு உள்ளானது
முதலில் அமிதாப்பை மட்டுமே நம்பி இருந்த முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி பின்னர் வேறு வழியின்றி செல்வி ஜெயலலிதாவின் உதவியை நாடியது. எதிரியின் எதிரி நண்பன் என்று கணக்கு போட்டரோ அல்லது வேறு ஏதாவது அரசியல் கணக்கு போட்டரோ முலாயம், ஏதோ ஒரு வகையில் செல்வி ஜெயலலிதாவின் உதவியை நாடி உள்ளார். ஆனால் இங்கே அரசியல் கணக்கு எல்லாம் செல்லாது என்று அவருக்கு தெரியாமல் போய்விட்டது. இப்போது எதிர்பார்த்தபடியே அம்மா முதல் கட்ட பிரச்சாரத்திற்கு செல்லாமல் விலகி கொள்ள மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கிய கதை ஆகிவிட்டது முலாயமுக்கு
Tuesday, April 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஆஹா சூப்பர் உதாரணம் புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி
நீங்கள் கூறுவது முற்றிலும் தவறானது. உ.பியில் ஜெயலலிதா பிரசாரம் செய்தால் அது முலயாம்சிங்கிற்கு பெரிய அளவில் எல்லாம் உதவி செய்யாது. மாறாக அவருடய தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் சிறுபான்மை ஓட்டுக்கள் அவருக்கு பலமாக உள்ளன. எப்படியோ காங்கிரஸ் மண்ணை கவ்வப்போவது உறுதி.
Post a Comment