Saturday, December 15, 2007

நெல்லை திமுக இளைஞரணி மாநாடு - நேரடி ஒளிபரப்பு!

'நெல்லை எங்கள் எல்லை' என்று ஒருமுறை சொன்னார் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். அந்த எல்லையில் எழுச்சிக்கோலம் பூண்டு வீறுநடை போடும் வேங்கைகளை நேரடி ஒளிபரப்பாக இணையத்தில் காண கழக துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் மாண்புமிகு பரிதி இளம்வழுதி ஏற்பாடுகள் செய்திருக்கிறார்.

கழக இளைஞரணி மாநாட்டினை கண்டுகளிக்க இங்கே அழுத்தி அமுக்குங்கள்.

Thursday, December 13, 2007

மருத்துவர் அய்யாவும், மருந்துக்கும் உதவாத சவடால்களும்!

முன்பெல்லாம் சவடால் பேச்சு என்றாலே வாழப்பாடி ராமமூர்த்தியும், சுப்பிரமணியசாமியும் தான் நினைவுக்கு வருவார்கள். சமீபகாலமாக மருத்துவர் அய்யா நினைவுக்கு வருகிறார். துணைநகரம் திட்டத்தை ஆரம்பித்தபோது மக்களுக்காக அத்திட்டத்தை எதிர்ப்பதாக ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தியவரின் யோக்கியதை இப்போது தான் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது.

சென்னைக்கு துணைநகரம் அமைக்கப்பட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் மக்களின் நிலங்களோடு சேர்த்து அய்யாவின் நிலங்களும் கையகப்படுத்தப் படுமாம். அது தான் அய்யா திட்டத்துக்கு ஆரம்பத்திலேயே மீட்டர் போட்டு விட்டார். அதிலிருந்தே அய்யா மக்களுக்காக போராடும் போராளி வேடம் பூண ஆரம்பித்துவிட்டார். அவருக்கு இது வசதியாகவும் இருக்கிறது போலும். இதுபோல மதில்மேல் பூனையாக அவ்வப்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை, நிர்வாகம் வேலைக்கு ஆகவில்லை, காவல்துறையின் கிட்னி அழுகிப்போனது என்றெல்லாம் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தால் அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது அம்மா கட்சியிடம் வலுவான தொகைக்கும் பேரம் பேச வசதியாக இருக்கும் அவருக்கு. நாற்பது கோடியாரின் மதிப்பு தான் இன்னும் கீழிறங்கும். அடுத்த தேர்தலுக்கு அவருக்கு வெறும் நாற்பது ரூபாய் கூட கொடுக்கமாட்டார்கள்.

கடலூரில் துணைமின்நிலையம் அமைக்கக் கூடாது என்று சமீபத்தில் போராட்டம் நடத்தியிருக்கிறார் மருத்துவர் அய்யா. அங்கே அவருக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கிறதோ தெரியவில்லை. போராட்டம் நடத்தியவர் அதோடு முடித்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம். அமைச்சர் ஆற்காட்டாருக்கு சொந்தக்காரர்கள் தான் மின்நிலையம் அமைக்கப் போகிறார்கள் என்று போகிற போக்கில் ஆதாரமில்லாமல் உளறித் தள்ளியிருக்கிறார்.

பதிலுக்கு ஆற்காட்டாரும் 'அதுபோல சொந்தநலனுக்காக திட்டங்களை பயன்படுத்துவதோ, எதிர்ப்பதோ என் வழக்கமல்ல. விளைநிலங்களை அரசுத்திட்டங்களுக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்லும் ராமதாஸ் 250 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி கல்லூரி நடத்தி வருகிறார்' என்றார்.

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் அரிச்சந்திரனான மருத்துவர் அய்யா பதிலுக்கு 'விளைநிலங்களை கையகப்படுத்தி நான் கல்லூரி கட்டியிருப்பதாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்' என்று சவால் விட்டார்.

மருத்துவர் அய்யா கட்டியிருக்கும் கல்லூரி எந்த இடத்தில் கட்டப்பட்டது என்பதை இதோ ஆற்காட்டார் ஆதாரப்பூர்வமாக பட்டியலிட்டிருக்கிறார். நெல், சவுக்கு, பூஞ்செடி, மேய்ச்சல்நிலம், அணைக்கட்டு, அரசு புறம்போக்கு என்று சகலவகை நிலங்களையும் வளைத்து கட்டி அய்யா கல்லூரி கட்டியிருக்கிறாராம்.

உடனே மருத்துவர் அய்யா அரசியலை விட்டு விலகி தன் சவாலை நிறைவேற்றுவார் என்றெல்லாம் நாம் நினைக்கவில்லை. அந்த அளவுக்கு தன் வாக்குக்கு முக்கியத்துவம் தருபவராக இருந்திருந்தால் மக்களால் நடுத்தெருவில் சட்டையை கழட்டி சாட்டையடி வாங்கியிருப்பார். பா.ம.க.வை தொடங்கும்போதே சொன்னாரே? நினைவிருக்கிறதா? "நானோ, என் குடும்பத்தாரோ அரசியல்ரீதியாக பதவிக்கு வந்தால் சாட்டையால் அடியுங்கள்" என்று. அதையே நாம் மறந்துவிட்டோம். சாதாரண 250 ஏக்கர் நில சவாலை எல்லாமா நினைவில் வைத்திருக்கப் போகிறோம்.

'பிளாக்மெயில் பொலிடிஷியன்ஸ்' என்று டெல்லி அரசியலில் ஒரு பதம் உண்டு. தமிழகத்தில் அந்த வகையில் இதுவரை ஜெயலலிதா மட்டுமே இருந்தார். ஆம்பளை ஜெயலலிதாவாக மருத்துவர் அய்யா இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறார். ஜெயலலிதாவை விட ஆபத்தான அரசியல்வாதியாக, பொய்யராக, முதுகில் குத்துபவராக, நயவஞ்சகராக இவர் மாறும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

Monday, December 03, 2007

தமிழர் பிரச்சினை மலேசியப் பிரச்சினையா?

மலேசியாவில் தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் அதை கண்டித்து உலகத் தமிழர்களின் ஒரே தலைவர் கலைஞர் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியதையும் அதை தொடர்ந்து மலேசிய அமைச்சர் முட்டாள் தனமான அறிக்கை வெளியிட்டிருப்பதும் எல்லோரும் அறிந்தது தான். இத்தகைய பக்குவம் இல்லாத அறிக்கை மூலம் மலேசியா தன் இரட்டை வேடத்தை காட்டியுள்ளது

மலேசியாவில் மலாய் இனத்தவர் அதிகம் சீனர்கள் சிறுபாண்மை அதே நேரம் சிங்கப்பூரில் சீனர்கள் பெரும்பாண்மையாகவும் மலாய் இனத்தவர் சிறுபாண்மையாக இருக்கிறார்கள். சிங்கப்பூரில் சிறுபாண்மையாக உள்ள மலாய் இனத்தவருக்கு சீனர்களுக்கு இணையான இடம் கொடுப்பது இல்லை என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க மலேசிய ஊடகங்கள் பெரும் சிரத்தை எடுத்து வருகின்றன. ஆனால் இந்த பிரச்சாரத்திற்கு மலாய் மக்கள் மலேசியாவில் இருப்பதை விட சிங்கப்பூரில் நல்ல நிலைமையிலேயே இருக்கிறார்கள் என்ற பதில் சிங்கப்பூர் தரப்பில் இருந்து கொடுக்கப்படும். இப்படி பலமுறை மூக்கு உடைபட்டாலும் தொடர்ந்து சிங்கப்பூருக்கு எதிராரன பிரச்சாரத்தை மலேசிய ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கைவிடுவதாகத் தெரியவில்லை. அவர்கள் மலேசியர்களை பற்றி கவலைப்படாமல் சிங்கப்பூரர்களை பற்றி போலியாக கவலைப்பட்டு வருகிறார்கள்

இப்போது தமிழர் பிரச்சினை பற்றி உலகத் தமிழர்களின் தலைவர் அறிக்கைவிட்டது மட்டும் அவர்களுக்கு உள்நாட்டு பிரச்சினையாகிவிட்டது. மலேசியப் பிரச்சினை பற்றி அவர்கள் பார்த்துக் கொள்வார்களாம் ஆனால் சிங்கப்பூர் பிரச்சினைகளில் தலையிடுவார்களாம். இவர்கள் உள்நாட்டுப் பிரச்சினை பற்றி அமெரிக்கா அறிக்கைவிடும் அளவிற்கு வந்துவிட்ட பிறகும் அதை உள்நாட்டுப் பிரச்சினை என்று திசை திருப்புவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. இந்த பிரச்சினையில் அனைவரும் உலகத் தமிழர்களின் தலைவர் கலைஞர் அவர்கள் பின்னால் அணிவகுத்து தமிழர் துயர் துடைக்க துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

Sunday, December 02, 2007

கலைஞரின் புதிய ஆத்திச்சூடி

நெல்லையில் நடைபெறும் கழக இளைஞர் அணி மாநில மாநாட்டினையொட்டி இளைஞர் அணியினர்க்கு கலைஞர் வழங்கும் புதிய ஆத்திச்சூடி:-

அண்ணா வழி நில்!
ஆற்றுக பொதுப்பணி!
இலக்கியம் புதுக்கிடு!
ஈனரை ஒதுக்கிடு!
உயிர் தமிழாம், உணர்ந்திடு!
ஊழலை நொறுக்கிடு!
எட்டப்பர் இகழ்ந்திடு!
ஏறு போல் வீறு கொள்!
ஐயம் களைந்து அறிவைப் பயிர்செய்!
ஒழுக்கம் போற்றிடு!
ஓம்புக மெலியோரை!
ஒளவைக் குலம் போற்று!
கழகம் வில்லாம், நின் அணியே கணையாம்!
சாதியை விடுத்து சமத்துவம் முழக்கு!
ஞாயிறு வாழ்த்தி நாளும் உழைத்திடு!
தனியுடைமை தகர்ந்திட தடந்தோள் தட்டு!
நாடு வாழ்ந்திட நலிவு தீர்த்திடு!
பகைவர்க்கு வளையேல்!
மாயைக்கு மயங்கேல்!
வாய்மையே போர்வாள்!
யானை போல் பயன்படு!
"ழ" கரமாய்ச் சிறப்புறு!
நன்றி முரசொலி