Monday, December 03, 2007

தமிழர் பிரச்சினை மலேசியப் பிரச்சினையா?

மலேசியாவில் தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் அதை கண்டித்து உலகத் தமிழர்களின் ஒரே தலைவர் கலைஞர் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியதையும் அதை தொடர்ந்து மலேசிய அமைச்சர் முட்டாள் தனமான அறிக்கை வெளியிட்டிருப்பதும் எல்லோரும் அறிந்தது தான். இத்தகைய பக்குவம் இல்லாத அறிக்கை மூலம் மலேசியா தன் இரட்டை வேடத்தை காட்டியுள்ளது

மலேசியாவில் மலாய் இனத்தவர் அதிகம் சீனர்கள் சிறுபாண்மை அதே நேரம் சிங்கப்பூரில் சீனர்கள் பெரும்பாண்மையாகவும் மலாய் இனத்தவர் சிறுபாண்மையாக இருக்கிறார்கள். சிங்கப்பூரில் சிறுபாண்மையாக உள்ள மலாய் இனத்தவருக்கு சீனர்களுக்கு இணையான இடம் கொடுப்பது இல்லை என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க மலேசிய ஊடகங்கள் பெரும் சிரத்தை எடுத்து வருகின்றன. ஆனால் இந்த பிரச்சாரத்திற்கு மலாய் மக்கள் மலேசியாவில் இருப்பதை விட சிங்கப்பூரில் நல்ல நிலைமையிலேயே இருக்கிறார்கள் என்ற பதில் சிங்கப்பூர் தரப்பில் இருந்து கொடுக்கப்படும். இப்படி பலமுறை மூக்கு உடைபட்டாலும் தொடர்ந்து சிங்கப்பூருக்கு எதிராரன பிரச்சாரத்தை மலேசிய ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கைவிடுவதாகத் தெரியவில்லை. அவர்கள் மலேசியர்களை பற்றி கவலைப்படாமல் சிங்கப்பூரர்களை பற்றி போலியாக கவலைப்பட்டு வருகிறார்கள்

இப்போது தமிழர் பிரச்சினை பற்றி உலகத் தமிழர்களின் தலைவர் அறிக்கைவிட்டது மட்டும் அவர்களுக்கு உள்நாட்டு பிரச்சினையாகிவிட்டது. மலேசியப் பிரச்சினை பற்றி அவர்கள் பார்த்துக் கொள்வார்களாம் ஆனால் சிங்கப்பூர் பிரச்சினைகளில் தலையிடுவார்களாம். இவர்கள் உள்நாட்டுப் பிரச்சினை பற்றி அமெரிக்கா அறிக்கைவிடும் அளவிற்கு வந்துவிட்ட பிறகும் அதை உள்நாட்டுப் பிரச்சினை என்று திசை திருப்புவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. இந்த பிரச்சினையில் அனைவரும் உலகத் தமிழர்களின் தலைவர் கலைஞர் அவர்கள் பின்னால் அணிவகுத்து தமிழர் துயர் துடைக்க துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

2 comments:

Anonymous said...

தமிழன் நாதியற்றவன் இல்லை என்றாலும் எங்கு சென்றாலும் அடி உதை. தமிழ் இனத்திருக்கு வலிமையான குரல் கொடுக்க யாரும் இல்லை என்பதே உண்மை. உண்மையாக குரல் கொடுபவர்களுக்கு தமிழன் இடம் ஆதரவு இல்லை. உதாரணம் திரு. பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் நன்றி

Anonymous said...

Dear Dr.Kalaignar,

please give your voice to all suffering people including tamils in asia,europe,au,na,sa,africa etc!