Friday, May 25, 2007

உடன்பிறப்புகளிடம் ஜனநாயகம் இருக்கிறது

இப்போது நடந்து கொண்டு இருப்பது தி.மு.க. ஆட்சி. மதுரை சம்பவத்திற்கு பின் தி.மு.க. மற்றும் அதன் தலைவர் அவரது குடும்பம் மீது தான் எத்தனை அவதூறுகள். கலைஞருக்கு எதிராக ஒரு கூட்டமே வரிந்து கட்டிக் கொண்டு எழுதிக் கொண்டு இருக்கிறது. முதல்வரை ஒருமையில் விளிக்கும் வாசகங்கள் எல்லாம் பல வலைப்பக்கங்களில் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த மேதாவிகள் எல்லாம் முதல்வருக்கு நன்றி கடன்பட்டுள்ளார்கள். இவர்கள் சென்ற ஆட்சியில் தங்கள் நிலை என்ன என்று கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும்

இவர்கள் தாங்கள் தெய்வமாக நினைத்து வணங்கி வந்த சங்கராச்சாரியார் கேவலமான முறையில் கைது செய்யப்பட்டு பின் அவர் பற்றி அச்சிட முடியாத செய்திகள் எல்லாம் பத்திரிக்கையில் வெளிவர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட போது இவர்கள் தங்கள் எதிர்ப்பை இப்போது காட்டும் அதே வேகத்தோடு காட்ட முடிந்ததா. அப்படி காட்டி இருந்தால் இவர்கள் நிலை என்னவாகி இருக்கும். சங்கராச்சாரியாருக்கு ஆதரவாக எழுதிய குருமூர்த்தியின் நிலை இவர்களுக்கு மறந்திருக்காது. இந்த மேதாவிகளுக்கு இப்போது உரைக்கும் பத்திரிக்கை சுதந்திரம், மனிதநேயம்(?) ஆகிய உணர்ச்சிகள் எல்லாம் சென்ற ஆட்சியில் எங்கே இருந்தது

அவர்கள் செய்ததையே தான் நீங்களும் செய்வீர்களா அவர்கள் எதை தின்றாலும் நீங்களும் தின்பீர்களா என்று கேட்கிறார்கள். அப்படி இல்லை எங்கள் ஆட்சியில் சில தவறுகள் நடந்து இருக்கலாம் ஆனால் அப்போது நாங்கள் உங்களை விமர்சிக்க கூடாது என்று சொல்லவில்லை, அப்படி விமர்சிப்பவர்கள் மீது கஞ்சா கேஸ் போடவில்லை, அராஜக ஆட்சி நடத்தவில்லை. உங்களின் விமர்சனங்களை கண்டு ஓடி ஒளியவில்லை, "அத கேட்குறதுக்கு நீ யாருய்யா?" என்று பத்திரிக்கைகாரர்களை பார்த்து விரல் நீட்டி கேட்கவில்லை. உங்களின் விமர்சனங்களை எதிர்கொள்கிறோம், உங்களுக்கு பதில் சொல்லி வருகிறோம். நாங்கள் ஜனநாயகத்தை பேணுகிறோம். உங்களையும் ஜனநாயக காற்றை சுவாசிக்க வைக்கிறோம்

உடன்பிறப்புகள் இருக்கும் வரை ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பதை கடமையாக கொள்வோம், கழகம் இருக்கும் வரை கண்ணியம் காப்போம், வீணர்களின் விமர்சனம் எழும்போது கட்டுப்பாடு காப்போம்

கலைஞர் ஒரு ஆண்டில் எத்தனை திருமண நாள் கொண்டாடுவார் என்று ஒரு அதிபுத்திசாலி கேள்வி கேட்கிறார். இதை கேட்டால் "இருப்பவனுக்கு எத்தனை வீடு என்பதை எண்ணிவிடலாம் இல்லாதவனுக்கு தான் எண்ண முடியாது" என்ற சொல்வழக்கு தான் நினைவிற்கு வருகிறது. இந்த சொல்வழக்கு சமீபத்தில் கூட நிரூபணமும் ஆகி இருக்கிறது. இதை நினைவூட்டிய அந்த அதிபுத்திசாலிக்கு எனது நன்றிகள்

34 comments:

said...

உடன்பிறப்பு,

இரு உறுப்பினர்களில் ஒருவர் மீது நடவெடிக்கை எடுத்தது எல்லோருக்கும் தெரியும்... அதாவது தயாநிதி மீது.

ஆனால் குற்றம் சுமத்தப்பட்ட அழகிரி மீது என்ன நடவெடிக்கை எடுக்கப்பட்டது ? பொதுக் குழுவில் விவாதித்தார்களா ? அழகிரியை பெயரளவிற்காகவாவது கேட்டார்களா ?

சிபிஐ விசாரனை பற்றி சொல்லாதிங்க

நான் கட்சி பொதுக்குழுவில் அழகிரி குறித்து என்ன பேசினார்கள் ?

said...

கோவி!

சம்பவத்துக்கு பின் இன்னமும் திமுக பொதுக்குழு கூடவில்லை! :)

அழகிரி மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையெனினும் போராட்டம் நடத்திய அவரது ஆதரவாளர்களான மதுரை மேயர், மேயரின் கணவர் கோபிநாத மற்றும் மதுரை திமுகவினர் நிறையபேர் ஆகியோர் செய்யப்பட்டிருக்கிறார்கள். அழகிரிக்கும், சம்பவங்களுக்கும் நேரடித் தொடர்பு ஏதாவது இருந்ததா என்பது விசாரணையில் தான் தெரியவரும். அப்படித் தெரியவரும் பட்சத்திலே திமுக நிர்வாகக் குழு நடவடிக்கை எடுப்பதில் எந்த தாமதமும் செய்யாது என நம்புகிறேன்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்குக்காக ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது உங்களது வாதமா என்பதையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

said...

//தர்மபுரி பஸ் எரிப்பு வழக்குக்காக ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது உங்களது வாதமா என்பதையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
//

அது அரசியல், இது குடும்பமும் சேர்ந்த அரசியல். தருமபுரி சரியென்று நான் சொல்லவில்லை.
கட்சித் தலைவரைப் பற்றி பேசவில்லை. கட்சி நடவடிக்கை என்ன என்று தான் கேட்டேன். நீங்களும் மற்றவர் போல ஒன்றோடு ஒன்றை தொடர்பு படுத்தி பேசுவதைப் பார்க்கும் போது அது தவறென்றால் இதுவும் தவறு என்று ஒப்புதல் கொடுப்பதாக தெரிகிறது.

பொதுக்குழு முன்பு கூட்டி தயாநிதி மேல் நடவடிக்கை எடுத்த போது ஏன் அழகிரி மீதான சந்தேகம் குறித்து அன்றே கேட்கவில்லை ?

நேரம் போதவில்லையா ?

said...

//பொதுக்குழு முன்பு கூட்டி தயாநிதி மேல் நடவடிக்கை எடுத்த போது ஏன் அழகிரி மீதான சந்தேகம் குறித்து அன்றே கேட்கவில்லை ?//

சம்பவத்துக்கு பிறகு பொதுக்குழுவே கூடவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் இன்னமும் பொதுக்குழுவில் தயாநிதி மீது நடவடிக்கை எடுத்தார்கள் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

திமுக பொதுக்குழு கூடும்போது சாதாரணத் தொண்டன் கூட தலைவரை கேள்வி கேட்கும் அளவுக்கு கழகத்தில் ஜனநாயகம் இருக்கிறது. பொதுக்குழு கூடும் நேரத்தில் இதுகுறித்து எந்த தொண்டனாவது கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் சொல்ல தலைவர் கடமைப்பட்டிருக்கிறார்.

தர்மபுரி லாஜிக் உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். ஜெ.வின் தொண்டர்கள் செய்த தவறுக்கு எப்படி ஜெ.வை கைது செய்யமுடியாதோ, அதுபோலவே அழகிரியின் தொண்டர்கள் செய்த காரியத்துக்கும் அழகிரியை கைது செய்யமுடியாது.

உதாரணத்துக்கு உங்கள் நற்பெயருக்கு களங்கம் வரும் வகையில் யாரோ சொல்லிவிட்டார்கள். உங்கள் மீது அபிமானம் கொண்ட நான் உங்களுக்கு தெரியாமலேயே தலைவர் கோவியார் வாழ்க என்று முழங்கிக் கொண்டே உங்கள் எதிரியை அடித்து துவைத்து விடுகிறேன். நடவடிக்கை என் மீது எடுக்க வேண்டுமா? அல்லது நான் உங்கள் தொண்டன் என்ற ஒரே காரணத்துக்காக உங்களை கைது செய்யவேண்டுமா?

said...

10.29க்கு வந்து கழிந்துவிட்டு போன ஹைதரபாத் அனானிக்கு!

உனக்கு கொண்டை மட்டுமல்ல வேறு ஏதாவது இருந்தாலும் அதையும் சேர்த்து அறுத்து விடுவோம் :-))))

said...

//திமுக பொதுக்குழு கூடும்போது சாதாரணத் தொண்டன் கூட தலைவரை கேள்வி கேட்கும் அளவுக்கு கழகத்தில் ஜனநாயகம் இருக்கிறது. பொதுக்குழு கூடும் நேரத்தில் இதுகுறித்து எந்த தொண்டனாவது கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் சொல்ல தலைவர் கடமைப்பட்டிருக்கிறார்.//

லக்கி,
ஓ !!! அதனால் தான் பொதுகுழு கூட தாமதம் ஆகிறதா ? புரியுது !
:)))


//தர்மபுரி லாஜிக் உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். ஜெ.வின் தொண்டர்கள் செய்த தவறுக்கு எப்படி ஜெ.வை கைது செய்யமுடியாதோ, அதுபோலவே அழகிரியின் தொண்டர்கள் செய்த காரியத்துக்கும் அழகிரியை கைது செய்யமுடியாது.//

தர்மபுரி சம்பவத்தையும் இதையும் தொடர்பு படுத்த வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம் ஜெ ஒரு கட்சியின் தலைவி, அவர் அப்போது ஜெயிலில் இருந்தார்(?).

ஆனால் அழகிரி தலைவரின் மகன் என்பதைத் தவிர உண்மை தொண்டருக்க்கு என்ன பற்று இருக்க முடியும் ? அழகிரி கட்சியில் எதாவது பொறுப்பில் தற்போதும் இரு(ந்திரு)க்காறா ?

அப்படியே இருந்தாலும் அண்ணன் - தம்பிக்குள் யார் உயர்வு என்றதில் ஏன் தொண்டர்கள் இந்த குதி குதிக்கனும் ? உண்மையான தொண்டன் குடும்பத்தில் நடக்கும் குழப்பங்களைப் பொருட்படுத்தமாட்டான். அவன் தொண்டனாக இல்லாமல் அழகிரிக்கு அடியாள் போல செயல் பட்டு இருந்தால் அழகிரி மீது பாசம் காரணமாக செய்திருக்க முடியும். இதுக்கு மேல் அழகிரி நேரிடையாக சம்பந்தப்பட்டு இருக்கிறா ? இல்லையா ? - எனக்கு சொல்லத் தெரியல

பொதுமக்களுக்கு காட்டுவதற்கு வேண்டுமானால் ஒரு நடுநிலை அரசு 'சிபிஜ விசாரணை என்று சொல்லி சட்டப்படி நடப்பதாக சொல்லலாம். கட்சிகாரர்களுக்கு தெரியுமே என்ன நடந்தது என்று. இப்போது கேள்வி கேட்பவர்கள் எல்லோருமே இறந்த அப்பாவிகளுக்காகத்தான் உண்மை வெளியில் வர வேண்டும் என்கிறார்கள். கட்சி பற்றைத் தாண்டி கொஞ்சம் இதைப்பாருங்க.

எனக்கும் ஜெ-வைவிட கலைஞரின் அரசியல் செயல்பாடுகள், தமிழ்பற்று மிகவும் பிடிக்கும். அதற்காக இதுபோன்ற விசயத்தில் கலைஞரை பிடித்தவர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்று சொன்னால் அது ஏற்புடையது அல்ல.

said...

//அது அரசியல், இது குடும்பமும் சேர்ந்த அரசியல்//

கோவி புரியலையேப்பா...! :(

அது அரசியால் என்பதால் பேசவேண்டாம் என்று சொல்ல வருகிறீர்களா? அல்லது இது குடும்ம்ப அரசியல் என்பதால் பேசலாம் என்கிறீர்களா?

ஆரசியலே பேசவேண்டாம் என்கிற போது.. குடும்ப அரசியலைப் பற்றி எப்படி பேச முடியும்.

மேலும், பத்திரிக்கைகளில் வரும் தவறான செய்திகளைக் கொண்டு, தயாநிதி மேல் நடவடிக்கையை தி.மு.க எடுத்தது என்று நீங்கள் சொல்லுவது சரியல்ல.

தி.மு.க எங்கேயும் தயாநிதியை கட்சியைஇ விட்டு நீங்கியதாகவோ, மந்திரி பதவியை ராஜினாமா செய்யச்சொல்லவோ இல்லை. குததமுள்ள செஞ்சு குறுகுறுக்க அவராகவே தான் ராஜினாமா செய்திருக்கிறார்.

ஒருவேலை.. ரத்தத்தின் ரத்தங்கள் சொல்வது போல தயாநிதியை நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டிருந்தால்... அவர் இன்னமும் நான் தி.மு.க காரன் தான் சாகுற வரைக்கும் தி.மு.க-காரனாகத்தான் இருப்பேன் என்று பேட்டி கொடுக்கமாட்டார்.

கட்சியின் பொதுக்க்குழு கூடும் நாளை உங்களைப் போலவே நாங்களும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

said...

//இப்போது கேள்வி கேட்பவர்கள் எல்லோருமே இறந்த அப்பாவிகளுக்காகத்தான் உண்மை வெளியில் வர வேண்டும் என்கிறார்கள். கட்சி பற்றைத் தாண்டி கொஞ்சம் இதைப்பாருங்க.

எனக்கும் ஜெ-வைவிட கலைஞரின் அரசியல் செயல்பாடுகள், தமிழ்பற்று மிகவும் பிடிக்கும். அதற்காக இதுபோன்ற விசயத்தில் கலைஞரை பிடித்தவர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்று சொன்னால் அது ஏற்புடையது அல்ல.//

இது மிக நியாயமான எண்ணமாகவே எனக்குத் தோன்றுகிறது. வயதின் காரணமாகவும், தமிழின் மீது கலைஞருக்கிருந்த ஆளுமையின் காரணமாகவும், எல்லாவற்றையும் விட ஜெ வைப் போல சர்வாதிகாரத்தனமாய் நடந்துக் கொள்ள மாட்டார் என்பதாலும் அவர் மீது ஒரு பெரிய்ய மரியாதை இருந்தது. ஆனால் இந்த விஷயத்தில் கலைஞர் ரொம்வ்வ்வ்வ்வ்வ்வே சறுக்கி விட்டார்.

said...

//...பொதுக்குழு கூடும் நேரத்தில் இதுகுறித்து எந்த தொண்டனாவது கேள்வி எழுப்பினால்....//

do u think in any of the current political parties it is possible to do this????

said...

கோவி தல,


//தர்மபுரி சம்பவத்தையும் இதையும் தொடர்பு படுத்த வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம் ஜெ ஒரு கட்சியின் தலைவி, அவர் அப்போது ஜெயிலில் இருந்தார்(?).//

அவர் அப்போ ஜெயிலில் எல்லாம் இருக்க வில்லை , கோர்ட்டில் தண்டனை என்று அறிவித்த போது தமிழ்நாட்டில் எங்கும் கலவரம் நடக்க வேண்டு என்கிற உத்தரவு போயஸ் தோட்டத்திலிருந்து வந்துள்ளது என்று அன்றைய தினமலர் எழுதியது அதையாவது நம்புவீர்களா ?

// ஆனால் அழகிரி தலைவரின் மகன் என்பதைத் தவிர உண்மை தொண்டருக்க்கு என்ன பற்று இருக்க முடியும் ? அழகிரி கட்சியில் எதாவது பொறுப்பில் தற்போதும் இரு(ந்திரு)க்காறா ? //

தலவரின் மகனாய் மட்டுமே இருந்த அழகிரியை அரசியலுக்கு கொண்டுவந்தது வைகோவின் பிரிவு அப்போதைய மதுரை மாவட்ட திமுக செயலாளர் பொன்.முத்துராமலிங்கம் பெரும் திரளான தொன்டர்களோடு பிரிந்து போகவும் அந்த இடத்தை நிலப்பிரபுத்துவ மனப்பான்மையில் அரசியல் செய்து கொண்டிருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராசனால் ஈடுகட்டமுடியாமல் இருந்த போது தான் தீவிர அரசியலில் குதிக்கும் நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. அதில் இறங்கி மதுரை திமுகவை காத்த பெருமையும் அவருக்கு உண்டு.

//அப்படியே இருந்தாலும் அண்ணன் - தம்பிக்குள் யார் உயர்வு என்றதில் ஏன் தொண்டர்கள் இந்த குதி குதிக்கனும் ? உண்மையான தொண்டன் குடும்பத்தில் நடக்கும் குழப்பங்களைப் பொருட்படுத்தமாட்டான். அவன் தொண்டனாக இல்லாமல் அழகிரிக்கு அடியாள் போல செயல் பட்டு இருந்தால் அழகிரி மீது பாசம் காரணமாக செய்திருக்க முடியும். இதுக்கு மேல் அழகிரி நேரிடையாக சம்பந்தப்பட்டு இருக்கிறா ? இல்லையா ? - எனக்கு சொல்லத் தெரியல //

அரசியலில் கட்சி ரீதியாய் எந்த பொறுப்பிலும் போட்டியிலும் இல்லாதவரை மக்கள் செல்வாக்கு இல்லாதவராக காட்ட முனைவதுதான் பத்திரிக்கை ஜனநாயகம் என்றால் இது போன்ற நிகழ்வுகளும் அசம்பாவிதங்களும் தவிர்க்கமுடியாதவை என்பதே வேதனையான உண்மை. பிரச்சினை கிளம்பும் என்று திமுகவின் தலைவஎ சொல்லியும் , அவர் கேட்டுக்கொண்டதையும் மீறி வெளியிட்டு கலவரத்தை தூண்டிய அந்த இதழின் உள்நோக்கம் பற்றி இங்கு யாரும் கேள்வி கேட்டதாய் தெரியவில்லை. எல்லோரும் " நடுநிலைச் சண்டி " பிடிப்பதிலேயே ஆர்வமாய் உள்ளதின் ரகசியம் " அமெரிக்க ஈராக் மீது படையெடுத்தது தவறு என்று மெக்டொனால்டில் உண்வெடுத்துக்கொண்டு" சொல்வது போல் உள்ளது. எந்த கடவுள் பெரியவர் என்று நாளை அந்த பத்திரிக்கை ஒரு கணிபெடுக்க முன்வருமா, எந்த நதன் நல்வழிகாட்டுகிறது என்று கருத்துகணிப்புக்கு முன்வருமா. இளித்தவாயன் என்று ஊரசி பார்த்து பின் அய்யோ அய்யோ என்றால் என்ன செய்வது

81ல் எம்ஜிஆரை விமர்சனம் செய்த மாலைமலரின் மதுரை அலுவலகம் தாக்கபட்டு எரிக்கபட்ட செய்தி இங்கு எத்தனை பேருக்கு தெரியும் . அன்றைக்கு அந்த செய்தி வெளியிட்ட ஒரே பத்திரிக்கை "விடுதலை" மட்டும் தான்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் நாற்பதாவது தூண் என்று இன்று குதிக்கும் ஆட்கள் அன்று பொத்திண்டு இருந்தனர் என்பதே உண்மை. ஜெயலலிதாவின் 91 - 96 ஆட்சியில் நக்கீரன் அலுவலகம் தாக்கபட்டு ஒருவர் கொலை செய்யபட்டத்ற்கு என்ன நடவடிக்கை எடுக்க பட்டதோ அதே நடவடிக்கை மதுரையில் அநியாயமாக கொலை செய்தவர்களின் மீதும் எடுக்கப்படவேண்டும் என்பதே அனைவரின் எண்ணமும்.

said...

//லக்கி,
ஓ !!! அதனால் தான் பொதுகுழு கூட தாமதம் ஆகிறதா ? புரியுது !
:)))//

கோவியாரே! உங்களை யாரோ ஒரு பூசாரி நல்லா மந்திரித்து விட்டிருக்கிறார் என்று புரிகிறது. நினைத்தபோதெல்லாம் கூட கட்சியின் பொதுக்குழு என்ன ஆட்டுமந்தை கூட்டமா? கட்சிக்கென்று சட்டவிதிகள் இருக்கிறது. பொதுக்குழு எப்போது கூட்டப்படவேண்டுமென்று முடிவு செய்ய பொதுச்செயலாளருக்கே அதிகாரமும் இருக்கிறது.


//தர்மபுரி சம்பவத்தையும் இதையும் தொடர்பு படுத்த வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம் ஜெ ஒரு கட்சியின் தலைவி, அவர் அப்போது ஜெயிலில் இருந்தார்(?).//

அப்படியா? விதண்டாவாதம் செய்வதென்று முடிவெடுத்துவிட்டால் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். ஜெயலலிதா ஜெயிலில் இருந்ததற்கு இரண்டு வருடம் கழித்தே தர்மபுரி சம்பவம் நடந்தது.

//ஆனால் அழகிரி தலைவரின் மகன் என்பதைத் தவிர உண்மை தொண்டருக்க்கு என்ன பற்று இருக்க முடியும் ? அழகிரி கட்சியில் எதாவது பொறுப்பில் தற்போதும் இரு(ந்திரு)க்காறா ?//

திமுகவில் பிராந்திய செல்வாக்கு பெற்ற தலைவர்கள் மீது தொண்டர்கள் பாசம் கொள்வதென்பது அண்ணாவின் காலத்திலிருந்தே இருக்கிறது.

அழகிரி எந்த பொறுப்பிலும் இல்லை. அதனால் தான் அவரது பெயரை கருத்துக் கணிப்பில் சேர்த்தது தவறு என்கிறோம்.

//அப்படியே இருந்தாலும் அண்ணன் - தம்பிக்குள் யார் உயர்வு என்றதில் ஏன் தொண்டர்கள் இந்த குதி குதிக்கனும் ? உண்மையான தொண்டன் குடும்பத்தில் நடக்கும் குழப்பங்களைப் பொருட்படுத்தமாட்டான். அவன் தொண்டனாக இல்லாமல் அழகிரிக்கு அடியாள் போல செயல் பட்டு இருந்தால் அழகிரி மீது பாசம் காரணமாக செய்திருக்க முடியும். இதுக்கு மேல் அழகிரி நேரிடையாக சம்பந்தப்பட்டு இருக்கிறா ? இல்லையா ? - எனக்கு சொல்லத் தெரியல//

நீங்களே சொல்லிவிட்டீர்கள். அழகிரியின் அடியாட்கள் இந்த சம்பவத்தை செய்திருக்கிறார்கள் என்பது. அழகிரி சொல்லி செய்திருந்தால் தான் அது குற்றம்.

//பொதுமக்களுக்கு காட்டுவதற்கு வேண்டுமானால் ஒரு நடுநிலை அரசு 'சிபிஜ விசாரணை என்று சொல்லி சட்டப்படி நடப்பதாக சொல்லலாம்.//

நல்லவேளையாக உங்களுக்கே தெரியாமல் நடுநிலை அரசு என்று கூறிவிட்டீர்கள் :)


//கட்சிகாரர்களுக்கு தெரியுமே என்ன நடந்தது என்று. இப்போது கேள்வி கேட்பவர்கள் எல்லோருமே இறந்த அப்பாவிகளுக்காகத்தான் உண்மை வெளியில் வர வேண்டும் என்கிறார்கள். கட்சி பற்றைத் தாண்டி கொஞ்சம் இதைப்பாருங்க//

கட்சிப்பற்றை தாண்டி சொல்கிறேன். 3 பேர் மரணத்துக்கு காரணமான திமுகவினர் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக சந்தேகப்படுபவர்களையெல்லாம் தூக்கில் போடவேண்டும் என்று சொல்வது நியாயமாகாது.


//எனக்கும் ஜெ-வைவிட கலைஞரின் அரசியல் செயல்பாடுகள், தமிழ்பற்று மிகவும் பிடிக்கும். அதற்காக இதுபோன்ற விசயத்தில் கலைஞரை பிடித்தவர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்று சொன்னால் அது ஏற்புடையது அல்ல//

இந்த தீர்மானத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு :-)

said...

அன்புக்குரிய நன்மனம் அவர்களே!

எப்போதும் போலவே கொண்டையுடன் (அதாவது உங்கள் இனிஷியல் நம்பருடன்) உங்கள் ஒரிஜினல் முகவரியிலேயே வந்திருக்கலாமே?

திமுகவைப் பற்றியும், அதன் பொதுக்குழு, செயற்குழு, நிர்வாகக்குழு இதைப்பற்றியெல்லாம் கிஞ்சித்தாவது தெரியுமா உமக்கு?

கொட்டாம்பட்டியில் இருந்து வந்த தொண்டன் கூட எழுந்து தைரியமாக தலைவர் மீது குற்றம் சொல்லக்கூடிய ஜனநாயக உரிமை இதுவரை திமுகவில் மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருகிறது.


அன்பு அண்ணன் பாலபாரதி அவர்களே!

இதுபோன்ற இடங்களில் கொண்டையுடன் வந்து வெளிப்படலாமா? மேலே பாருங்கள் மூத்த கள உறுப்பினர் நன்மனம் எவ்வளவு Safe ஆக வந்து கும்மி அடிக்கிறார் என்று! :-)))))))

said...

//அன்புக்குரிய நன்மனம் அவர்களே!

எப்போதும் போலவே கொண்டையுடன் (அதாவது உங்கள் இனிஷியல் நம்பருடன்) உங்கள் ஒரிஜினல் முகவரியிலேயே வந்திருக்கலாமே?
//

what are u trying to say LL.

//கொட்டாம்பட்டியில் இருந்து வந்த தொண்டன் கூட எழுந்து தைரியமாக தலைவர் மீது குற்றம் சொல்லக்கூடிய ஜனநாயக உரிமை இதுவரை திமுகவில் மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருகிறது.//

and how many times he has been properly answered for the questions.

I would like to assert once again that i am not a covert to come in a name different from mine as is done in this thamizmanam world.

this is the democracy you people wear to see others.:-(

p.s: my new place do not allow downloads so no e-kalappai so no tamil typing

said...

//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

கோவி புரியலையேப்பா...! :(

அது அரசியால் என்பதால் பேசவேண்டாம் என்று சொல்ல வருகிறீர்களா? அல்லது இது குடும்ம்ப அரசியல் என்பதால் பேசலாம் என்கிறீர்களா? ஆரசியலே பேசவேண்டாம் என்கிற போது.. குடும்ப அரசியலைப் பற்றி எப்படி பேச முடியும்.//

அரசியில் பேசவேண்டாம் என சொல்லவில்லை நண்பரே, இவர்கள் குடும்பத்தில் இருக்கும் குழப்பத்தை கண்டு (அரசியலாகப் பார்த்து ?) தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள் என்று சொல்வது ஏற்புடையது அல்ல என்றேன்.

அண்ணன் தம்பிக்குள் அடித்துக் கொள்ள ஆயிரம் காரணம் இருக்கலாம், மாமன் மச்சானுக்குள் சண்டை போட்டுக் கொள்ள ஆயிரம் காரணம் இருக்கலாம். அதற்காக ரோட்டில் போகிற அப்பாவியை கொன்றுவிட்டு தம்பி ஏன் அண்ணனைப்பற்றி எழுதினான் அதனால் தான் அண்ணன் தெருவில் போகிறவனை கொல்ல வேண்டியதாயிற்று, யார் கொன்றது என்பதை போலிஸ் கண்டுபிடிக்கும் என்று சொல்வது போல் இருக்கு.

நானும் கலைஞர் சிபிஜ விசாரணைக்கு உத்தரவிட்டார் என்பதற்காக மனுநீதி சோழன் என்று சொன்னவன் தான் அந்த கருத்தில் மாற்றம் இல்லை. அடிப்படை சந்தேகம் என்னைப் போல உங்களுக்கும் இல்லாதது போனது என் குற்றமா ?

முரசொலி பத்திரிக்கை செய்தி போல இருக்கிறது வாதங்கள். தலைவனுக்கு தீக்குளிக்கும் தொண்டனுக்கும் கட்சியின் மீது பற்று இருந்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் என்று நினைப்பனுக்கும் ஒரே அளவுகோலை வைத்து பார்பது சரி அல்ல. தலைவனை குறைசொல்கிறார்கள் என்று தீக்குளிப்பவன் நான் அல்ல.

:))

//மேலும், பத்திரிக்கைகளில் வரும் தவறான செய்திகளைக் கொண்டு, தயாநிதி மேல் நடவடிக்கையை தி.மு.க எடுத்தது என்று நீங்கள் சொல்லுவது சரியல்ல.//

நான் எங்கும் அவ்வாறு சொல்லவில்லை. தயாநிதிக்கு மட்டும் தான் நீதி தண்டனை ? மகனுக்கு கருணை நீதியா ? என்றுதான் கேட்டேன். எனக்கும் தயாநிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. :)

//தி.மு.க எங்கேயும் தயாநிதியை கட்சியைஇ விட்டு நீங்கியதாகவோ, மந்திரி பதவியை ராஜினாமா செய்யச்சொல்லவோ இல்லை. குததமுள்ள செஞ்சு குறுகுறுக்க அவராகவே தான் ராஜினாமா செய்திருக்கிறார்.

ஒருவேலை.. ரத்தத்தின் ரத்தங்கள் சொல்வது போல தயாநிதியை நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டிருந்தால்... அவர் இன்னமும் நான் தி.மு.க காரன் தான் சாகுற வரைக்கும் தி.மு.க-காரனாகத்தான் இருப்பேன் என்று பேட்டி கொடுக்கமாட்டார்.//

அதுக்குள் எவ்வளவு அரசியல் இருக்குமோ இதெல்லாம் உள்கட்சி விவகாரம் .. எனக்கு தொடர்பில்லாதது.

நீங்களும் அழகிரி மேட்டர் உள்கட்சி விவகாரம் என்று சொல்லிவிடலாம்.

//கட்சியின் பொதுக்க்குழு கூடும் நாளை உங்களைப் போலவே நாங்களும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.//

வாழ்த்துக்கள் !

said...

//கோவியாரே! உங்களை யாரோ ஒரு பூசாரி நல்லா மந்திரித்து விட்டிருக்கிறார் என்று புரிகிறது//

லக்கி,

ஆக கேள்வி கேட்பதெல்லாம் பிறர் தூண்டுதலால் என்று பதில் சொல்ல திணருபவர்களின் குரல் உங்களிடமும் ஒலிக்கிறது.
:))

//3 பேர் மரணத்துக்கு காரணமான திமுகவினர் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக சந்தேகப்படுபவர்களையெல்லாம் தூக்கில் போடவேண்டும் என்று சொல்வது நியாயமாகாது.//

திமுகவினர் சட்டபடி தண்டிக்க வேண்டும் என்று - இதை செய்தவர் திமுகவினர் என்று ஒப்புக் கொண்ட்டதற்கு பாராட்டுக்கள்.

சந்தேகப்பட்டவனையெல்லாம் தூக்கில் போடனும் என்று சொல்லவில்லை. விசாரனை நடந்ததா என்று தான் கேட்டேன்.

மகேந்திரன் பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இங்கே.

குற்றவாளியென உறுதி செய்யப்பட்டால் ரவுடிகளுக்கு வழக்கமாக செய்யப்படும் திமுக அரசின் என்கவுண்டர்கள் தொடரவேண்டும் !!!

(அப்பாவிகளைச் சொல்லவில்லை அப் பாவிகளைத்தான் சொல்கிறேன்)

said...

//and how many times he has been properly answered for the questions//

நன்மனம் அவர்களே! உங்களுக்கு எதுக்கு அந்த டீடெய்ஸ் எல்லாம். உங்க வயசுக்கு "சங்கரா, சங்கரா"ன்னு கெடக்க வேண்டியதுதானே? :-)))))

//I would like to assert once again that i am not a covert to come in a name different from mine as is done in this thamizmanam world//

தயவுசெய்து என்னுடைய கொண்டைய மறைக்கலியேடா பதிவினை படிக்கவும்.

//this is the democracy you people wear to see others.:-(//

இதை நகைச்சுவை பதிவு ஆக்கவேண்டாமே? நாங்கள் சீரியஸாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இது ரத்தபூமி. கைப்புள்ளைகள் கொஞ்சம் ஓரமாக ஒதுங்கி நில்லுங்கள்.

//p.s: my new place do not allow downloads so no e-kalappai so no tamil typing//

ரொம்ப நல்லது!

said...

//திமுகவினர் சட்டபடி தண்டிக்க வேண்டும் என்று - இதை செய்தவர் திமுகவினர் என்று ஒப்புக் கொண்ட்டதற்கு பாராட்டுக்கள்.//

இதுவரை நடந்த குற்றத்தை மறைக்கவோ, மறுக்கவோ எந்த திமுககாரனும் முன்வரவில்லை. முன்வரவும் மாட்டான்.

//சந்தேகப்பட்டவனையெல்லாம் தூக்கில் போடனும் என்று சொல்லவில்லை. விசாரனை நடந்ததா என்று தான் கேட்டேன்.//

சென்ற வாரம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இதுவரை 9 பேரை விசாரித்து இருக்கிறார்கள். இன்னமும் நிறைய பேரை விசாரிக்க போகிறார்கள். அட்டாக் பாண்டியன் இரு நாட்களாக சி.பி.ஐ. விசாரணையில் இருக்கிறார்.

குழந்தை பெத்துக்கணும்னா கூட பத்து மாசம் பொறுத்துக்கணும் தலை. தாலி கட்டின அடுத்த நிமிஷமே குழந்தை எங்கேன்னு கேட்டா என்னத்தைச் சொல்ல :-(((((((

said...

//அப்படியா? விதண்டாவாதம் செய்வதென்று முடிவெடுத்துவிட்டால் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். ஜெயலலிதா ஜெயிலில் இருந்ததற்கு இரண்டு வருடம் கழித்தே தர்மபுரி சம்பவம் நடந்தது.//

தமிழ்நாடு முழுவதும் பெரும் போராட்டமும் வன்முறை சம்பவங்களும் நடக்கவேண்டும் என்று போயஸ் தோட்டத்தில் இருந்தே உத்தரவு வந்ததாக அன்றைய தினமலர் எழுதியது இங்கு நினைவு கூறத்தக்கது.

//திமுகவில் பிராந்திய செல்வாக்கு பெற்ற தலைவர்கள் மீது தொண்டர்கள் பாசம் கொள்வதென்பது அண்ணாவின் காலத்திலிருந்தே இருக்கிறது. //

அண்ணாவிடமே கருணாநிதிக்கு சிலை வைக்க சைதாப்பேட்டை தொண்டர்கள் நிதியளித்தது இங்கு குறிப்பிட தகுந்தது

//அழகிரி எந்த பொறுப்பிலும் இல்லை. அதனால் தான் அவரது பெயரை கருத்துக் கணிப்பில் சேர்த்தது தவறு என்கிறோம்.//

அது போலவே கனிமொழியையும் சேர்த்தது, கலைஞர் கேட்டுக்கொண்டும் வெளியிட்டது. முதல்வரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி கலவரத்தை தூண்டியது அந்த பத்திரிக்கைதானே



//நீங்களே சொல்லிவிட்டீர்கள். அழகிரியின் அடியாட்கள் இந்த சம்பவத்தை செய்திருக்கிறார்கள் என்பது. அழகிரி சொல்லி செய்திருந்தால் தான் அது குற்றம்.//

அழகிரியின் அடியாட்கள் என்கிற பதத்தை பயன்படுத்துவதே இங்கு தவறு. அப்படியென்றால் எல்லா கட்சியிலும் எல்லா சங்கங்களிலும் இருந்தும் பட்டியல் வெளியிட முன் வர வேண்டும்.

said...

//குழந்தை பெத்துக்கணும்னா கூட பத்து மாசம் பொறுத்துக்கணும் தலை. தாலி கட்டின அடுத்த நிமிஷமே குழந்தை எங்கேன்னு கேட்டா என்னத்தைச் சொல்ல :-((((((( //


அட என்னாப்ப நீயி, "மனு" வின் நீதிப்படி உடனே தன் காரின் சக்கரங்களில் அழகிரியின் தலையை வைத்து ஏற்றி தன் "மனுநீதி சோழன்" பட்டத்தை கலைஞர் தக்கவைக்க வேண்டாமா ?

அதை விட்டு போட்டு சிபிஅய் விசாரணை அது இதுன்னுகிட்டு

said...

//ஆனால் குற்றம் சுமத்தப்பட்ட அழகிரி மீது என்ன நடவெடிக்கை எடுக்கப்பட்டது ?//

நண்பர் கோவி.கண்ணனுக்கு!

தமிழின தலைவர் கலைஞர் அவர்கள் ஏற்கனவே அழகிரி மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார் என்பதை இங்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்

said...

வரவனை, உடன்பிறப்பு என்ன வெளையாட்டு இது? ஒண்ணும் புரியலையே?

Anonymous said...

அழகிரி திமுகவில் ஒரு சாதாரண உறுப்பினர் மட்டுமே எந்த விதமான பதவியிலும் இல்லை. அவர் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

said...

//சென்ற வாரம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இதுவரை 9 பேரை விசாரித்து இருக்கிறார்கள். இன்னமும் நிறைய பேரை விசாரிக்க போகிறார்கள். அட்டாக் பாண்டியன் இரு நாட்களாக சி.பி.ஐ. விசாரணையில் இருக்கிறார்.

குழந்தை பெத்துக்கணும்னா கூட பத்து மாசம் பொறுத்துக்கணும் தலை. தாலி கட்டின அடுத்த நிமிஷமே குழந்தை எங்கேன்னு கேட்டா என்னத்தைச் சொல்ல :-(((((((//

லக்கி இதுவிசயத்தில் விவாதம் பண்ண நிறைய இருந்தாலும் நீங்கள் 'கோவியாரே! உங்களை யாரோ ஒரு பூசாரி நல்லா மந்திரித்து விட்டிருக்கிறார் என்று புரிகிறது.' - அதற்கு மேல் பேச எனக்கு ஒன்றும் இல்லை. நான் இந்துமதத்தின் குறைகளை சுட்டிக்காட்டும் போதும், உயர்சாதி மனப்பான்மையை சாடும் போது ஒரு சிலர் என்னை பார்பன எதிரி, நாத்திகன் என்று சொல்வதற்க்கும் நீங்கள் சொல்லும் 'பூசாரி மந்திரிப்பதற்கும்' பெரிய வேறுபாடு இல்லை.

குழந்தை பெற பத்துமாதம் நல்லா சொல்லி இருக்கிங்க - ஆனால் தயாநிதிக்கு மட்டும் தத்து எடுத்து கொடுத்தார்களா ? நல்ல வாதம். !!! வெல்டன் லக்கி.

திமுக அனுதாபி என்றுதான் இருப்பீர்கள் அதனால் நான் எனது சந்தேகங்களை எழுப்பினேன். ஆனால் நீங்கள் இறைநம்பிக்கை உடையவர்கள் மூடநம்பிக்கை குறித்து பேசக்கூடாது என்று சிலர் சொல்வதைப் போலவே கலைஞரை மதிப்பவர்கள் அவர் மகன் மீது சாந்தேகம் கொள்ளக்கூடாது என்பது போல் எனக்கு மறுமொழி இட்டுவறும் பிற பின்னூட்டங்களும் இருப்பதால், இனி இதுபற்றி நான் எதுவும் கேட்கப்போவதில்லை. அதற்கு மேல் இங்கு ( இந்த இடுகையில்) நான் கேள்வி கேட்டால்... இங்கு எவராவது நடுநிலைவாதி வேசம் போட 'அழகிரியும், திமுகவும்' தான் உனக்கு கிடைத்தா ? என்று கேட்கும் முன் முடித்துக் கொள்கிறேன்.

:)))))

said...

//திமுக பொதுக்குழு கூடும்போது சாதாரணத் தொண்டன் கூட தலைவரை கேள்வி கேட்கும் அளவுக்கு கழகத்தில் ஜனநாயகம் இருக்கிறது.//
அய்யோ லக்கி நீங்க காமெடி பதிவு போடுவீங்கன்னு எனக்கு தெரியும் இங்கேயுமா? தமிழ்நாட்டுல எந்த கட்சியிலும் இந்த அளவுக்கு சனநாயகம் தழைத்து ஓங்கலை.

//எந்த தொண்டனாவது கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் சொல்ல தலைவர் கடமைப்பட்டிருக்கிறார்.//
எவனும் கேட்கப்போவது இல்லை. ஆனாபட்ட மத்திய அமைச்சருக்கே இந்த கதி சாதாரண தொண்டன் கேள்வி கேட்டுவிட்டால் அம்முட்டு தான். அவன் இருந்துக்கான அறிகுறியே இல்லாம போயிடும்.

//அதுபோலவே அழகிரியின் தொண்டர்கள் செய்த காரியத்துக்கும் அழகிரியை கைது செய்யமுடியாது.//
என்ன தலைவரே இப்படி சொல்லிட்டிங்க கட்சியில அவருக்கு எந்த பதவியும் கிடையாது, அப்புறம் எப்படி ஒரு நகரத்தின் மேயரும், அவரோட கணவரும் சேர்ந்து இப்படி? அவங்களுக்கு இவங்க எந்த வகையில தொண்டன்? நீங்க உங்க தலைவர் மாதிரி முயற்சி செய்து இருக்கலாம், கலைஞர் டிவிக்கும் தி.மு.காவுக்கும் எப்படி எவ்வித சம்மந்தம் இல்லையோ அது மாதிரி அழகிரிக்கும் திமுகாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை,

//81ல் எம்ஜிஆரை விமர்சனம் செய்த மாலைமலரின் மதுரை அலுவலகம் தாக்கபட்டு எரிக்கபட்ட செய்தி இங்கு எத்தனை பேருக்கு தெரியும் . அன்றைக்கு அந்த செய்தி வெளியிட்ட ஒரே பத்திரிக்கை "விடுதலை" மட்டும் தான்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் நாற்பதாவது தூண் என்று இன்று குதிக்கும் ஆட்கள் அன்று பொத்திண்டு இருந்தனர் என்பதே உண்மை. ஜெயலலிதாவின் 91 - 96 ஆட்சியில் நக்கீரன் அலுவலகம் தாக்கபட்டு ஒருவர் கொலை செய்யபட்டத்ற்கு என்ன நடவடிக்கை எடுக்க பட்டதோ அதே நடவடிக்கை மதுரையில் அநியாயமாக கொலை செய்தவர்களின் மீதும் எடுக்கப்படவேண்டும் என்பதே அனைவரின் எண்ணமும்.//

வரவனையான்,
உங்களுக்கு ஜல்லியை மாத்தி அடிக்கவே தெரியாதா? அவர்கள் செய்ததையே தான் நீங்களும் செய்வீர்களா அவர்கள் எதை தின்றாலும் நீங்களும் தின்பீர்களா என்று கேட்கிறார்கள். இது தான் உங்களுக்கு பதில் அது எப்படி சார் எல்லா அரசியல் வாதிகளும் ஏண்டா நீ தப்பு பண்ண அப்படின்னு கேட்டா அவங்க செய்யலையா அப்படின்னு உடனே கேக்றீங்க. அவன் செய்கிறான் அப்படின்னு தானே உங்களை பதவியிலை ஒக்கார வெச்சோம்?
உங்களோட மொத்த ஜல்லி பதிலுக்கும் இது தான் பதில் நீங்க சொல்லி இருக்குற ஒவ்வொரு வரிக்கும் இது பொருந்தும்.

//அழகிரியின் அடியாட்கள் இந்த சம்பவத்தை செய்திருக்கிறார்கள் என்பது. அழகிரி சொல்லி செய்திருந்தால் தான் அது குற்றம்.//
இது ரொம்ப சுலபமான ஜல்லி எப்படியும் சி.பி.ஜ ஒண்ணையும் கிழிக்க போவது இல்ல. இது மாதிரி ஒரு கேள்வியை கேட்டுட்டா எவன் பதில் சொல்லுவான்,அப்படியே சொன்னா உனக்கு எப்படி தெரியும் நீ கூட இருந்து பாத்தியா அப்படின்னு திருப்பி கேட்கலாம் பாருங்க.

//தமிழ்நாடு முழுவதும் பெரும் போராட்டமும் வன்முறை சம்பவங்களும் நடக்கவேண்டும் என்று போயஸ் தோட்டத்தில் இருந்தே உத்தரவு வந்ததாக அன்றைய தினமலர் எழுதியது இங்கு நினைவு கூறத்தக்கது.//
அதே தினமலரில் தான் அழகிரி குற்றவாளி அப்படின்னு வந்தது. அதை மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை உங்க கூட ஒரே தமாசு தான் தினமலரில் வருவதை எல்லாம் சீரியசாக எடுத்துகிட்டு கொஞ்ச நாளைக்கு முன்னாடி Anil Kumbleவை all rounder என்று கூட தான் வந்தது அதை நினைச்சி அவரு ரூம் போட்டு சிரிச்சாராம்.

//முதல்வரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி கலவரத்தை தூண்டியது அந்த பத்திரிக்கைதானே//
கலவரம் வரும் என்று தெரிந்தும் சும்மா இருந்தது ஏன்? போலீஸ் உங்க துறை தானே?


//தமிழின தலைவர் கலைஞர் அவர்கள் ஏற்கனவே அழகிரி மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார் என்பதை இங்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்//

அப்படியா? படிச்ச மாதிரி நியாபகம் இல்லிங்களே?

கலைஞரின் லேட்டஸ்டு காமெடி என்ன தெரியுமா? இம்முட்டு நாளும் ஒரு சில ஆதிக்க சக்திகள் மீடியா துறையை ஆண்டுக்கொண்டு இருந்தனவாம் கலைஞர் டிவி மூலமாக அதை முறியடிக்கிறார்களாம். ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ன அழகா கருத்து சொல்லி இருக்குறார்யா புல்லரிக்குது. ஆதிக்க சக்திகள் "அய்யோ கொல்றாங்களே" "அய்யோ கொல்றாங்களேன்னு" டப்பிங்க வாய்ஸ் குடுத்து நாள் பூர ஓட விட்ட பொழுது இது தெரியலையோ? ஊருல இருக்குற கேபில் டிவி காரங்களை எல்லாம் அடிச்சி உதைச்சி மிரட்டி வாங்கும் பொழுது ஆதிக்க சக்திகள் கண்ணுக்கு தெரியலையோ?

என்னவோ போங்கப்பா குழலி சொல்லி இருப்பதை பாருங்க "உங்களுக்கு ஒரு தலைவரை பிடிச்சி இருக்கலாம் அதுக்காக அவரு செய்யும் எல்லாவற்றையும் ஜல்லி அடிச்சா படிக்காதவங்களுக்கும் படிச்சவங்களுக்கும் என்ன வித்தியாசம்? மனிதர்களும் மனித நேயமும் தான் ரொம்ப முக்கியம். மனசாட்சியோடும் மனித நேயத்தோட இந்த விஷயத்தை அணுகி இருந்தால் உங்க பார்வை கண்டுப்பாக வேறு படும்"

said...

லக்கி,

முதல்ல ஒன்னு சொல்லிடறேன். நான் திமுகவை எதிர்ப்பவனும் இல்லை அதிமுக அனுதாபியும் இல்லை.

உங்க உடன்பிறப்புகள் வாதப்படியே வரேன். அழகிரியோட ஆதரவாளர்கள் பண்ண ஆர்ப்பாட்டத்துக்கு அழகிரி எந்த விதத்துலயும் பொறுப்பாக முடியாது. சரி. அவர் கட்சி பொறுப்பிலயும் இல்லை(?). அதனால் தி.மு.க நிர்வாகக்குழு அவர் மேல எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதுவும் சரி. தயாநிதி மாறன் கட்சிக்கு எதிரா நடந்துக்கறார்னு அவசர அவசரமா நிர்வாகக்குழு (பொதுக்குழு அல்ல) கூடி அவர் மேல நடவடிக்கை எடுக்கனும்னு முடிவு பண்ணாங்க. சரியா? அவங்க தயாநிதி மாறன மந்திரி பதவில இருந்து தூக்கனும்னு சொல்லலை. குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்க அவரே ராஜினாம பண்ணிட்டாரு. சரியா?

பொதுமக்களுக்கு எந்த விததுலயும் சம்பந்தமேயில்லாத ஒரு ஒன்னரையனா குடும்ப சண்டைக்கு மதுரையோட மேயர் தேன்மொழி பஜாரி மாதிரி தெருவுக்கு வந்து ஆர்ப்பாட்டம் பண்ணாங்களே, அவங்க திமுக தான? கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு முழங்கற உங்க தலைவர்கள் தயாநிதி மாறன் மேல நடவடிக்கை எடுக்கனும்னு முடிவு பண்ண நிர்வாகக்குழு கூட்டத்துல, கட்சிக்கு களங்கத்தை உண்டு பண்ணாருன்னு ஏன் தேன்மொழி மேல நடவடிக்கை எடுக்கலை? ஒரு மாநகராட்சியோட மேயர் கட்சியில எந்த பொறுப்பிலயும் இல்லாதா யாரோ ஒருவருடைய தன்மானப் பிரசனைக்காக எதுக்கு ரோட்டுக்கு வந்து ஆர்ப்பாட்டம் பண்ணனும். அதுல கட்சியோட பேர் கெடலையா?அது கட்சிக்கு எதிரான நடவடிக்கை இல்லையா? அதை பத்தி ஏன் யாருமே விவாதிக்கலை? ஒழுங்கு நடவடிக்கைன்னா அது கட்சில ஒழுக்கத்தை மீறின எல்லார் மேலயும் தான? மகனுக்கு எதிரா செயல்படற ஒருத்தருக்கு ஒரு நியாயம் ஆதரவா செயல்படற ஒருத்தருக்கு ஒரு நியாயம். இதுதான் உங்க உட்கட்சி ஜனநாயகமா?

////and how many times he has been properly answered for the questions//

நன்மனம் அவர்களே! உங்களுக்கு எதுக்கு அந்த டீடெய்ஸ் எல்லாம். உங்க வயசுக்கு "சங்கரா, சங்கரா"ன்னு கெடக்க வேண்டியதுதானே? :-)))))
//
ஒருத்தர் உண்மையான பேர்ல வந்தாலும், போலியா வந்தாலும் அவங்க கேக்கற கேள்விக்கு பதில் சொல்ற கடமை உங்களுக்கு இருக்குதுல்ல? அப்படி இல்லைன்னா பதிவு போடக்கூடாது. நீங்க மேல சொல்லியிருக்கற பதில் எந்த விதத்துல நியாயம். அவர் வயசுக்கு அவர் சங்கர சங்கரானு கெடக்கனும்னா கலைஞர் வயசுக்கு? வயசுப்படி பார்த்தா இந்திய அரசியல்ல 75% பேர் சங்கரா சங்கரானோ பெரியார் பெரியார்னோ தான் கெடக்கனும்.

//கொட்டாம்பட்டியில் இருந்து வந்த தொண்டன் கூட எழுந்து தைரியமாக தலைவர் மீது குற்றம் சொல்லக்கூடிய ஜனநாயக உரிமை இதுவரை திமுகவில் மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருகிறது.
//
இது உண்மையானு உங்க மனசாட்சிய கேளுங்க. இது திமுகல மட்டுமில்ல எந்த கட்சிலயும் கிடையாது. கட்சிக்காக உண்மையா உழைக்கிற தொண்டன் எப்பவுமே தொண்டனாதான் இருக்கான். எம்.எல்.ஏக்கோ அமைச்சருக்கு ஜால்ரா அடிக்கரவங்க தான் ஒன்றியம், வட்டம்னு எல்லத்துலயும் செயலாளராகவோ பொருளாளராகவோ இருக்காங்க. இதை மறுக்க முடியுமா? 5% வேணா விதிவிலக்கா இருக்கலாம்,. அப்படி இருக்கறப்ப ஒரு தொண்டனால வட்டச் செயலாளரையே நேரடியா கேள்வி கேட்க முடியாது. மொட்டை கடுதாசி தான் போடனும். இதுல தலைவரையே கேள்வி கேடகற ஜனநாயகம் திமுகல தான் இருக்குங்கறது கொஞ்சம் அதிகம்.உண்மையா திமுகல உட்கட்சி ஜனநாயகம் இருக்குதுன்னா எந்த பதவிலயும் இல்லாத அழகிரி கையில எப்படி தென்மாவடங்களோட அதிகாரம் இருக்குது? அரசியல்னா என்னன்னு கூட தெரியாத தயாநிதி மாறன் ஓவர்நைட்ல எப்படி எம்.பி ஆகி மந்திரியும் ஆக முடிஞ்சுது?

மொத்தத்துல அரசியல்ல எந்த கட்சியும் ஒழுங்கு கிடையாதுங்க. எல்லாமே கேலிக்கூத்து தான். மக்களும் வேற வழியில்லாம அஞ்சு வருஷத்துக்கு ஒருதடவை ஒரு திருடன் கிட்டயிருந்து அதிகாரத்தை பிடுங்கி இன்னொரு திருடன் கிட்ட குடுக்கராங்க. அவ்வளவு தான். நீங்க சொல்ற மாதிரி கலைஞர் அரசாங்கம் மக்களுக்காக பாடுபடற அரசாங்கமா இருந்தா ஏன் அவரால ஒருமுறை கூட தொடர்ந்து ரெண்டு முறை ஆடசிய பிடிக்க முடியலை? அதேதான் ஜெயலலிதாவுக்கும். யாருமே மக்களுக்காக முதலமைச்சராகலை. அவங்க சுயநலத்துக்கும், அவங்க சுற்றத்தாருக்கும் தான்.

said...

//அப்படியா? படிச்ச மாதிரி நியாபகம் இல்லிங்களே?//

குறைகளை மட்டுமே பார்ப்பது மனித இயல்பு

said...

//நீங்க சொல்ற மாதிரி கலைஞர் அரசாங்கம் மக்களுக்காக பாடுபடற அரசாங்கமா இருந்தா ஏன் அவரால ஒருமுறை கூட தொடர்ந்து ரெண்டு முறை ஆடசிய பிடிக்க முடியலை?//

இரண்டு முறை தொடர்ந்து ஆட்சி செய்தால் மட்டும் தான் சிறந்த ஆட்சியா, அப்படி என்றால் கேரளத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஆட்சி மாறி மாறி வருகிறதே, பாவம் கேரளம்

said...

//குழந்தை பெற பத்துமாதம் நல்லா சொல்லி இருக்கிங்க - ஆனால் தயாநிதிக்கு மட்டும் தத்து எடுத்து கொடுத்தார்களா ? நல்ல வாதம். !!! வெல்டன் லக்கி//

தயாநிதியின் நிலை வேறு எந்த தொண்டனுக்கும் வரக் கூடாது என்பது உடன்பிறப்புக்களின் விருப்பம்

said...

//மனசாட்சியோடும் மனித நேயத்தோட இந்த விஷயத்தை அணுகி இருந்தால் உங்க பார்வை கண்டுப்பாக வேறு படும//

மனித நேயம் இருப்பதால் தான் இவ்வளவு சிரத்தை எடுத்து உங்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி வருகிறோம்

said...

//நீங்க சொல்ற மாதிரி கலைஞர் அரசாங்கம் மக்களுக்காக பாடுபடற அரசாங்கமா இருந்தா ஏன் அவரால ஒருமுறை கூட தொடர்ந்து ரெண்டு முறை ஆடசிய பிடிக்க முடியலை?//
- அதனால தான் - நாகூர் இஸ்மாயில்

said...

// "உடன்பிறப்புகளிடம் ஜனநாயகம் இருக்கிறது"//
தலைஸ்,
கனிமொழி விஷயத்துல உள்கட்சி சனநாயகம் எப்படி இருக்கு? கட்சிக்கு ரொம்ப உழைச்சிட்டாங்களோ அவங்க? வாழ்க சனநாயகம். இதுல யாரோ ஒரு பதிவர் கனிமொழி நடத்திய ஒரு விழாவை வைத்து அவரோட நிர்வாக திறமையை ஆஹா ஒஹோ அப்படின்னு புகழ்ந்து இருக்காரு ஒரே காமெடி தான் போங்க. மணி சொல்லி இருக்குற மாதிரி நான் திமுகாவும் இல்ல ஆதிமுகாவும் இல்ல பாஜாகாவும் இல்ல மக்களுக்கு யாராவது நல்லது செய்து நாட்டை காப்பாத்துவாங்களான்னு ஏங்குற பாமற சனங்களில் ஒருத்தன்.

said...

சந்தோஷ் aka Santhosh அவர்களே!

//நான் திமுகாவும் இல்ல ஆதிமுகாவும் இல்ல பாஜாகாவும் இல்ல மக்களுக்கு யாராவது நல்லது செய்து நாட்டை காப்பாத்துவாங்களான்னு ஏங்குற பாமற சனங்களில் ஒருத்தன்.//

"சென்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்கு போட்ட 60 சதவிகிதம் பேரில் அரைமனதுடன் ஓட்டு போட்டவர்கள் பல்லாயிரம் பேர். அவர்களில் எவனோ ஒருவன்" - இது மாதவனின் எவனோ ஒருவன் படத்துக்காக அண்ணாசாலையில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பலகையில் வைக்கப்பட்டிருக்கும் வாசகம். அந்த எவனோ ஒருவனில் நீங்களும் ஒருவர் என்று அறியமுடிகிறது.

அதுசரி... ஓட்டு போடும் பழக்கமெல்லாம் உண்டா? இல்லையென்றால் நிறைய பேரை போல நீங்களும் வாயால் ஓட்டு போடுபவரா? :-))))

Anonymous said...

Democracy to ask question but not to release survey. You are funny!

said...

//
அதுசரி... ஓட்டு போடும் பழக்கமெல்லாம் உண்டா? இல்லையென்றால் நிறைய பேரை போல நீங்களும் வாயால் ஓட்டு போடுபவரா? :-))))//
அது எல்லாம் சரியா பண்ணிடுவோம் அண்ணாத்தே. ஓட்டு போடும் வயது வந்து போடாதது கடந்த உள்ளாட்சி தேர்தல். அது எல்லாம் சரி கேட்ட கேள்விக்கு பதிலை காணோம். முதல் கேள்விக்கும் சரி இரண்டாவது கேள்விக்கும் சரி.