Tuesday, May 29, 2007

கலைஞரின் பிரசவ வைராக்கியம்!

கலைஞர் பத்திரிகையாளர்களை கேவலப்படுத்தி விட்டதாக பருப்பு-சாம்பார் மற்றும் சோ வகையறாக்கள் புலம்பி வருவதை காண நகைச்சுவையாக இருக்கிறது. டெல்லியில் ஜெயா டிவி பத்திரிகையாளர் ஒரு கேள்வி கேட்டாராம். அதற்கு கலைஞர் ஒருமையில் "நீதாண்டா கொலைகாரன்" என்று சொல்லிவிட்டாராம். பத்திரிகை தர்மம் காற்றில் பறக்கிறதாம். அதர்மம் டெல்லி வரை கொடிகட்டிப் பறக்கிறதாம். பத்திரிகை தர்ம காவலர்களுக்கு திடீரென்று பத்திரிகை பாசம் பொத்துக் கொண்டு வருகிறது.

தலைவர் கலைஞருக்கும் பத்திரிகையாளர்களுக்குமான நெருக்கம் பத்திரிகையில் பணிபுரிந்த அல்லது பணிபுரியும் அன்பர்களுக்கே தேரியும். கலைஞரின் பிரஸ்மீட் முழுவதும் சிரிப்பலையும், நட்புணர்வுமாக இருக்கும். ஒவ்வொரு பத்திரிகையாளரின் பெயரையும் நினைவில் வைத்து அக்கறையாக விசாரிப்பார். இதெல்லாம் நான் சொல்லவில்லை. பத்திரிகையாளராக இருந்து கலைஞரின் பிரஸ்மீட்களில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர் சொன்னது இது.

சமீபத்தில் கூட தனக்கு எதிரான செய்தி எழுதியவர்கள் என்று தெரிந்தும் கூட மக்கள்குரல், தினபூமி பத்திரிகைகளில் பணிபுரிந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்திருக்கிறார். பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய கலைஞருக்கு பத்திரிகையாளர்களின் கஷ்டம் நஷ்டம் தெரியும். நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கியவர் சொன்னது போல அவர் ப்ரூப் ரீடராக வாழ்க்கையைத் தொடங்கவில்லை. குடியரசுப் பத்திரிகையின் உதவியாசிரியராகவே வாழ்க்கையைத் தொடங்கினார். பல பத்திரிகைகளை நடத்தினார். பல பத்திரிகைகளில் எழுதினார்.

கோவையில் ஒரு முறை பத்திரிகையாளர் கூட்டத்தில் சில பத்திரிகை அன்பர்கள் ஏடாகூடமாக கேள்வி கேட்டு கலைஞரை டென்ஷன் படுத்தியபோது, இனிமேல் கோவை பத்திரிகையாளர்களை சந்திக்கமாட்டேன் என்று சூளுரைத்து பிரஸ்மீட்டில் இருந்து வெளியேறினார். ஆனாலும் சென்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதே கோவை பத்திரிகையாளர்களை சந்தித்து அளவளாவி மகிழ்ந்திருக்கிறார். அதற்காக கோவை பத்திரிகையாளர்கள் கலைஞருக்கு நன்றி சொன்னதாக தினமலரில் செய்தி கூட வந்திருக்கிறது.

கலைஞர் பத்திரிகையாளர்களின் மீது கோபப்பட்டால் அது அந்த நிமிடத்திற்கு மட்டுமே. பிரசவ வைராக்கியம் போல அந்த நொடியில் கோபப்பட்டு திட்டிவிடுவாரே தவிர தொடர்ந்து அந்த பத்திரிகையின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு புறந்தள்ளியதாக வரலாறு கிடையாது. "தளபதியின் ஒன்றரை வயது பேரனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக ஒதுக்குமா?" போன்ற கேள்விகள் எழுப்பப் பட்டால் எரிச்சலடையாமல் கொஞ்சி குலவவா முடியும்?

இன்று பத்திரிகை தர்மத்தையும், பத்திரிகையாளர்களின் உரிமையையும் கோரும் புனித பிம்பங்கள் தான் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பத்திரிகையாளர்களை சந்திக்காமலேயே கின்னஸ் சாதனை புரிந்த அம்மாவைப் பற்றி பேசுவார்களா? அப்போது மட்டும் அவர்களது வாய் பெவிகால் போட்டு ஒட்டிக் கொள்ளுமா என்ற கேள்வியை நடுநிலையாளர்கள் கேட்கிறார்கள். (இந்த பாரா மட்டும் ஜெயா டிவி பார்த்த விளைவால் அந்த ஸ்டைலிலேயே எழுதப்பட்டிருக்கிறது)

15 comments:

Anonymous said...

//இன்று பத்திரிகை தர்மத்தையும், பத்திரிகையாளர்களின் உரிமையையும் கோரும் புனித பிம்பங்கள் தான் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பத்திரிகையாளர்களை சந்திக்காமலேயே கின்னஸ் சாதனை புரிந்த அம்மாவைப் பற்றி பேசுவார்களா? அப்போது மட்டும் அவர்களது வாய் பெவிகால் போட்டு ஒட்டிக் கொள்ளுமா என்ற கேள்வியை நடுநிலையாளர்கள் கேட்கிறார்கள். (இந்த பாரா மட்டும் ஜெயா டிவி பார்த்த விளைவால் அந்த ஸ்டைலிலேயே எழுதப்பட்டிருக்கிறது)//

நான் என்றுமே உங்கள் ரசிகன்!

- பெயர் வெளியிட விரும்பாத மூத்த பதிவர்

Anonymous said...

தெரு நாய்களுக்கு அவர்கள் மொழியில் சொன்னால் தானே புரியும் அதனால் தான் தலைவர் அப்படி பேசி இருக்கிறார்

Anonymous said...

did idlyvadai published mahendran's comment?

Anonymous said...

You and your leader........
Really, really good for TN..

said...

கலைஞர் அவர்கள் தாயுள்ளம் கொண்டவர் என்பதை மிக தெளிவாக கற்று குட்டிகளுக்கு காட்டி இருக்கிறீர்கள் லக்கி

said...

கரண் தாப்பாரின் பேட்டியில், மைக்கை தூக்கி எறிந்து விட்டு,சர்வாதிகாரத்தனமான கோபத்தோடு ஜெ வெளியேறியதும், ஆட்சிக்கு வரும் போது பத்திரிக்கையாளர்களை சந்திக்காமலேயே தவிர்ப்பது என்பது எல்லாம் மிக மோசமான முன்னுதாரணங்கள்தான்.

ஆனால் அதற்காக கலைஞர் செய்தது சரியா? பத்திரிக்கையாளார்களிடம் இணக்கமாக இருப்பவர், அவர்களுக்கு உதவி செய்திருப்பவர், பத்திரிக்கையாளானாக வாழ்க்கையைத் தொடங்கியவர்.... எல்லாம் சரிதான்.

ஆனால் இன்று அவர் நடந்து கொண்டவிதம் தவறுதானே? கேள்விகள் சரியா தவறா என்பது வேறு விஷயம். அதற்கு ஏக வசனத்தில் பேசுவது ஏற்றுக் கொள்ளப் பட வேண்டிய ஒன்றா? இது பிரசவ வைராக்கியமாகவே இருந்தாலும் தவறுதான்.

பழைய விஷயங்களையோ, ஜெ செய்த தவறுகளையோ சொல்வதன் மூலம் இவர் செய்வதை நியாயப் படுத்துகிறீர்கள்.நான் சோ வகையறாவோ, ஜெ அடி வருடியோ இல்லை. என்னைப் போன்றவர்கள் வாயை மூடுவதற்கு நீங்கள் எந்த காரணத்தையும் கூறாததால் இதைக் கேட்கிறேன்.

said...

//ஆனால் இன்று அவர் நடந்து கொண்டவிதம் தவறுதானே? கேள்விகள் சரியா தவறா என்பது வேறு விஷயம்.//

ஒவ்வொரு வினைக்கும் தகுந்த எதிர்வினை இருந்தே தீரும் என்பது உலக நியதி.

தவறான கேள்வி கேட்கப்பட்டால் தவறான பதில் தானே கிடைக்கும்?

நீங்களும் என்னைப் பார்த்து நாய், பேய் என்று திட்டி கமெண்டு போட்டால் நான் என்ன செய்வேன் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

said...

//நீங்களும் என்னைப் பார்த்து நாய், பேய் என்று திட்டி கமெண்டு போட்டால் நான் என்ன செய்வேன் என்று எதிர்பார்க்கிறீர்கள்?///

நல்ல வேளை நான் அப்படி போடலை.:-))

//தவறான கேள்வி கேட்கப்பட்டால் தவறான பதில் தானே கிடைக்கும்?//

தவறான கேள்வியாகவே இருக்கட்டும். அதற்கு ஏகவசனம் சரியா என்பதே கேள்வி. அப்போ ரொம்பத் தவறான கேள்வி கேட்டா அடிச்சுடுவீங்களா?

இதற்கு கலைஞர் தனது வசீகர புன்னகையுடன் "இந்த கேள்வியை நீ கேக்கலைப்பா. உன் டீவி உன்னை கேக்க வைக்குது" என்ற ரீதியில் பதில் சொல்லி இருந்தால் அது பெரிய்ய மூக்குடைப்பாக இருந்திருக்குமே. இது போன்று எதாவது சொல்லி இருந்திருக்கலாமே..

50 வருட சட்ட மன்ற அனுபவஸ்தர் ஒற்றைக் கேள்வியைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத சகிப்புத் தன்மையற்றவரா என்ன? போன ஜெ ஆட்சியில் பத்திரிக்கையாளர் சுரேஷ் என்பவர் அடி பட்ட போது, இந்தம்மா ஆட்சியில்தான் இதெல்லாம் நடக்கும் என்று நினைத்திருந்தேன். ஒருவேளை நாங்களும் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்று நிரூபிக்க முயல்கிறாரா கலைஞர்?

said...

//தவறான கேள்வியாகவே இருக்கட்டும். அதற்கு ஏகவசனம் சரியா என்பதே கேள்வி.//

என்னைப் பொறுத்தவரைக்கும் சரி. பத்திரிகையாளன் தன் கடமையை மறந்து ஒருபக்க சார்பான கேள்வியை தன் முதலாளிகளை திருப்திபடுத்த கேட்கிறான் என்றால் அவனை எப்படி ட்ரீட் செய்யவேண்டுமோ அப்படித்தான் ட்ரீட் செய்யவேண்டும்.



//அப்போ ரொம்பத் தவறான கேள்வி கேட்டா அடிச்சுடுவீங்களா?//

நானா இருந்தா அடிச்சுடுவேன் :-)

said...

////அப்போ ரொம்பத் தவறான கேள்வி கேட்டா அடிச்சுடுவீங்களா?
நானா இருந்தா அடிச்சுடுவேன் :-) //

இனி பேசறதுக்கு ஒண்ணுமே இல்லை.

கடைசியா ஒரே கேள்வி? நான் ஏதும் தப்பான கேள்வியைக் கேட்டுடலையே. ஏன்னா அடி வாங்கறதுக்கு எல்லாம் தெம்பு இல்லை என்கிட்ட.

said...

//கடமையை மறந்து ஒருபக்க சார்பான கேள்வியை தன் முதலாளிகளை திருப்திபடுத்த கேட்கிறான் என்றால் அவனை எப்படி ட்ரீட் செய்யவேண்டுமோ அப்படித்தான் ட்ரீட் செய்யவேண்டும்.//

குழந்தை லக்கி அய்யா,
என்ன இது, இப்படி சொல்லிட்டீங்க?எப்பவுமே மஞ்ச துண்டு முதலாளியை திருப்தி படுத்த ஓ போடும் உங்களுக்கு தர்ம அடி போட வரப்போறாங்க.எதுக்கு வம்பு?

Anonymous said...

ஜெயலலிதாவிடம் 3 மாணவிகள் பேருந்தில் எரித்து கொலை செய்தது யார் என்று கேட்க‌ச் சொல்லுங்க‌ள் ?


ஒரு ஈழ‌த் த‌மிழ‌ன்

Anonymous said...

மேலே பாலா என்ற பெயரில் பின்னூட்டம் போட்ட பாப்பான் இந்த ஐபியில் இருந்து வந்தானா?

202.153.38.4

-ஐ.பி. சேகரிப்போர் கழகம்

Anonymous said...

குழந்தை லக்கி அய்யா,

நான் சல்மா அயூப் என்ற பெயரில் கூட எழுதிக்கிட்டிருந்தேனே அய்யா, அதுக்குள்ளே மறந்துட்டீங்களா அய்யா.

said...

//அப்போ ரொம்பத் தவறான கேள்வி கேட்டா அடிச்சுடுவீங்களா?//

நானா இருந்தா அடிச்சுடுவேன் :-)

லக்கிலுக்....

நாய் கடிச்சா திருப்பிக் கடிப்பீங்களா இல்லாட்டி அடிப்பீங்களா?!!