Friday, May 11, 2007

பொன்விழா காணும் கலைஞருக்கு அனுதாபம் கூடுகிறது

மதுரையில் நடந்த தினகரன் - அழகிரி மோதலால் ஏற்பட்ட வன்முறையும் அதனால் சிலர் மாண்டதும் மிகவும் வருந்தத்தக்கது. முதல்வரும் இது குறித்து சட்டப்பேரவையில் மிகவும் வருத்தம் தெரிவித்தார். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கை போல் குற்றவாளிகளை காப்பாற்ற முயலாமல் தன் கட்சியினர் என்றும் பாராமல் சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரை செய்து இருக்கிறார். கலைஞருக்கு பொன்விழா கொண்டாடும் நேரத்தில் நடந்துள்ள இந்த அசம்பாவிதம், மற்றும் அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் முடிந்த அளவுக்கு ஆதாயம் தேட முயன்ற எதிர்க்கட்சிகள் இவை எல்லாம் அவருக்கு மக்களிடையே அனுதாபத்தை கூட்டி உள்ளது

டாக்டர் கலைஞரின் ஆட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அன்று தேர்தல் அறிக்கையை நையாண்டி செய்தவர்கள் இன்று வாயடைத்து போய் இருக்கிறார்கள். அட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே சிறந்த முதல்வர்கள் பட்டியலில் இடம் பெற்றுவிட்டார் டாக்டர் கலைஞர் அவர்கள். சேது சமுத்திரம் திட்டத்தை முடக்கி கலைஞர் ஆட்சியின் சாதனைகளுக்கு முட்டுக்கட்டை போட முயன்றனர். இந்த திட்டங்கள் எல்லாம் பலன் அளிக்காமல் போகவே கலைஞர் ஆட்சியை குறை கூற வழி தெரியாது விழி பிதுங்கி நின்றார்கள்

அரசியலில் கலைஞருடன் மோதி வெல்வது முடியாது என்று அறிந்த இவர்கள் மதுரையில் நடந்த வன்முறையை பயன்படுத்திக் கொண்டு கலைஞர் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் சேற்றை வாரி இறைக்கின்றனர். மதுரை பிரச்சினைக்கு முன்பே பொன்விழா என்ற பேச்சு துவங்கிய போதே அதை வேண்டாம் என்று மறுத்தவர் கலைஞர் அவர்கள். மதுரை பிரச்சினையை மையமாக வைத்து பல கற்பனை கதைகளை புனைந்து உலவவிட்டு இருக்கிறார்கள். பொன்விழா நாயகனுக்கு வந்த சோதனையை கண்டு மக்களுக்கு அவர் மீது அனுதாபம் கூடி இருக்கிறது. பொன்விழா காணும் முதல்வரை நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்

2 comments:

said...

மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள் மீது எனக்கு பல விமர்சனங்கள் இருப்பினும், என் இதயத்தில் மட்டுமல்ல, பல ஈழத்து தமிழர்கள் இதயத்திலும் அவருக்கு என்றும் மென்மையான இடம் உண்டு.

ஜெயலலிதா ஆட்சியில் அவர் இரவோடு இரவாக படுக்கையில் இருந்து இழுத்துச் செல்லப்பட்ட போது இதயம் குமுறிய உலகத் தமிழர்களில் நானும் ஒருவன்.

அவர் இப்போது எதிர்நோக்கும் சிக்கல்கள் விரைவில் அகலும் என நம்புகின்றேன். கலைஞருக்கு என் ஆதரவையும் இப் பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

எத்தனையோ தமிழக மீனவர்கள் சிங்களப் படைகளால் கொல்லப்பட்ட போதெல்லாம் வாய்மூடி இருந்தவர்களுக்கு இப்போது மட்டும் இறந்த தமிழர்கள் மேல் பரிதாபம் வருவது மிகவும் விந்தையாக இருக்கிறது!!! இவர்களுக்கு உண்மையாக இறந்தவர்கள் மேல் அக்கறை இல்லை. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கலைஞரை எப்படியாவது எதிர்க்கவேண்டும் என்பதிலேயே குறியாக உள்ளனர் போல் தெரிகிறது.

Anonymous said...

சட்டமன்றத்தில் 50 ஆண்டுகள் பணியாற்றி அபார சாதனை புரிந்த கலைஞருக்கு பாராட்டு விழாவா என்று ஜெயலலிதாவும், விஜயகாந்தும் வயிறெரிகிறார்கள். இந்த ஜல்லிக்கு பதில் பிணங்க்ளை தெருவில் போட்டு வியாபாரம் செய்ய போய் விடலாம் அவர்கள்..

இதுவே ஜெயலலிதா தற்செயலாக 50 ஆண்டுகளை சட்டமன்றத்தில் கடந்திருந்தால்... 200 கோடியில் விழா கொண்டாடியிருப்பார்கள்.

காரித் துப்ப வேண்டும் த்தூ என்று!