Tuesday, May 08, 2007

ப்ரூப் ரீடர் கலைஞர்

சில நாட்களுக்கு முன்பு உளறிக்கொட்டுவதில் உலக சாதனை படைத்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கலைஞர் ப்ரூப்ரீடராக வாழ்க்கையைத் தொடங்கியவர் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். கலைஞர் ப்ரூப் ரீடராக வாழ்க்கையைத் தொடங்கினால் அதில் என்ன அவமானம்? நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கியவருக்கு அதில் என்ன பிரச்சினையோ?

எப்படியிருப்பினும் கலைஞர் ஜெயலலிதாவுக்கு வழக்கம்போல காட்டமான பதிலடி கொடுத்திருக்கிறார். கவிஞர் பா. விஜய்யின் நூல் வெளியீட்டு விழாவில் இதுகுறித்து கலைஞர் பேசியதாவது :

"நான் ப்ரூப் ரீடராக வாழ்க்கையைத் தொடங்கினேன் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். ஆமாம் நான் ப்ரூப் ரீடர் தான். தம்பி விஜய் எழுதிய ஒரு நூலில் கூட 1335 திருக்குறள் என்று அச்சாகியிருக்கிறது. அதை கூட நான் ப்ரூப் பார்த்து 1330 குறள்கள் தான் உண்டு என்று சொல்கிறேன். யார் பிழை செய்தாலும் அதற்கு ப்ரூப் பார்க்க நான் என்றுமே தயங்கியது கிடையாது. அம்மையாரின் ப்ரூப்பை கூட பலமுறை பார்த்திருக்கிறேன்"

இவ்வாறாக கலைஞர் உள்குத்து வைத்து பேசினார். ஜெயலலிதாவுக்கு வாயைக் கொடுத்து எதையாவது புண்ணாக்கிக் கொள்வதே தொடர்ந்து வேலையாகப் போய் விட்டது.

கலைஞரிடம் வாதம் புரிந்து வெற்றி கண்டவர் யாராவது உண்டா?

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது ஒரு முறை சட்டமன்றத்தில் கலைஞர் கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் நாளை பதில் சொல்கிறேன் என்றார். அன்று திங்கட்கிழமை. அப்போது அமைச்சராக இருந்த நாஞ்சிலார் எம்.ஜி.ஆருக்கு ஜால்ரா அடிப்பதாக நினைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரை பார்த்து "நாளை செவ்வாய், நீ வெல்வாய்" என்றார்.

உடனே கலைஞர் நாஞ்சிலாரைப் பார்த்து "அப்படித்தான் நீ சொல்வாய்" என்றார். கலைஞரின் வார்த்தை விளையாட்டை எம்.ஜி.ஆர் வெகுவாக ரசிக்க நாஞ்சிலார் நொந்துப் போனார்.

அதைப் போலவே காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது ஒரு முறை முந்திரிக்கு அதிக வரி விதித்திருந்தார்கள். அதை எதிர்த்து கலைஞர் பேசிக் கொண்டிருந்தபோது அனந்தநாயகி என்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இடையிடையே குறுக்கிட்டு கலைஞரை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்.

கடுப்பான கலைஞர், "முந்திரியைப் பற்றி பேசினால் இந்த சுந்தரிக்கு ஏன் கோபம் வருகிறது?" என்று கேட்டார். அதன்பின்னர் செல்வநாயகி கலைஞர் பேச்சில் குறுக்கிட்டதாக வரலாறு இல்லை.

1989 தேர்தலின் போதும் ஜெயலலிதா இதுபோலவே பேசி வகையாக கலைஞரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

திருச்சியில் ஒரு பொதுக்கூட்டம். ஜெயலலிதா ஆணவமாகப் பேசுகிறார். "கருணாநிதிக்கு தைரியம் இருந்தால் என்னிடம் வரட்டும்"

அடுத்த வாரம் அதே இடத்தில் திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம். கலைஞர் பதிலடி கொடுக்கிறார். "அம்மையார் அவரிடம் வரும்படி எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். வயதாகி விட்டது. இதே வார்த்தையை அம்மையார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தாரேயானால்.............?" கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

இவ்வாறாக வாதப்போரில் சொற்சிலம்பம் விளையாடி எல்லோரையும் வென்ற தானைத்தலைவன் கலைஞர். அவரிடம் இனியாவது இதுபோல அற்பமாக பேசி வாங்கிக் கட்டிக் கொள்ளவேண்டாம் என்று ஜெயலலிதாவை எச்சரிக்கிறோம்.

8 comments:

said...

//கலைஞர் ப்ரூப் ரீடராக வாழ்க்கையைத் தொடங்கினால் அதில் என்ன அவமானம்? //

எந்த புரூப் ரீடருக்கு இவ்வளவு சொத்து உள்ளதாம் ?

கருணாநிதிக்கு கேவலமாக பேச சொல்லித்தர வேண்டுமா என்ன ? (தமிழின தலைவரல்லவா ?)

Anonymous said...

//எந்த புரூப் ரீடருக்கு இவ்வளவு சொத்து உள்ளதாம் ?//

அர்ச்சனைத் தட்டில் காசு போட்டால் விபூதி கொடுக்கும் அய்யர்மார்களே கோட்டீஸ்வரன்களாக இருக்கும் இந்நாட்டில் ஒரு ப்ரூப்ரீடர் வாழ்க்கையில் படிபடியாக உயர்ந்து கோடீஸ்வரன் ஆவதில் என்ன ஆச்சரியம்?

ஜெயலலிதா என்ன மைசூர் மகாராஜாவுக்கா பிறந்தார்? அவருக்கெப்படி 34 கம்பெனிகளும், ஆயிரம் கோடி சொத்தும் வந்தது?

Anonymous said...

அவா அவா மொஹத்தைக் கண்னாடிலே பாத்துண்டு பேசனும்னு சொல்ல மாட்டாளா?
இவா வாழ்ந்த வாழ்விலே பெரியவா எல்லத்தையும் கண்ணா பிண்ணானு பேசறாளே மக்கள் கீழ்ப்பாக்கம்னு சொல்லப்போறா!
யார் யோசனை சொல்றாளோ?சோ அம்பியா ?
நாளைக்கு அம்பியா ஜெயில்லே கூட வந்து இருப்பா?
பணம் பாதாளம்வரை பாயுங்கறது அந்தக் காலமோன்னா?இப்போல்லாம் சுப்ரீம் கோர்ட்தானே?அங்கே ஏதாவது செஞ்சுட்டாளா?பாவம்,அவாளை நம்பலாமோ?

Anonymous said...

எழுச்சி நோக்கி புறப்பட்ட உடன்பிறப்புகளின் சீரிய முயற்சி

ethu? alagiri aaalunga attakkaa?

said...

என்னா பண்ணுறது நண்பா இந்த மாதிரி கூறு கெட்ட குப்பன்ன்கல்லுக்கும் சுப்பன்ன்கல்லுக்கும் பதில் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் நம்ம தலைவருக்கு இருக்குறத நினைக்குரப்பதான் கொஞ்சம் அவமானமா இருக்கு ...........
எல கருமூர்த்திய் ......நாயே நாயே உனக்கு என்னடா வந்தது....சிவமூர்த்தி அண்ணா அம்மா ஆடாத ஆட்டம் ஆடி சம்பாதிச்சு வச்சுருக்காங்க அத போயி தப்பா சொல்லுரின்களே .......

said...

கலைஞர் அவர்களைப் பற்றி நான் படித்த ஒன்று

ஒரு முறை சில இலங்கைத் தமிழறிஞர்கள் கலைஞர் அவர்களைச் சந்தித்தனர்

அவரிடம் கேட்டனர் ”சேர சோழ பாண்டிய அரசர்கள் தமிழுக்கு எவ்வளவோ செய்துள்ளனர் ஆனால் முத்தமிழைக் குறிக்கும் சின்னம் எதுவும் அவர்கள் சொல்லவில்லையே”

கலைஞர் சொன்னார், “யார் சொன்னது சின்னமில்லை என்று.. சோழனின் புலி உறுமல் இயல்பானது அது இயல் தமிழ், சேரனின் வில் நாணை சுண்ட அது இசையாகும்.. பாண்டியனின் மீன் தண்ணீரில் இல்லை அது துள்ளுவதே நாட்டியம். நாடகத் தமிழ்”

என்னே அவர் புலமை..

இன்னொரு சம்பவம்.. பொங்கல் கவியரங்கம்.. கலைஞர் தலைமை.. கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது என்றால் என்ன
கலைஞர் விளக்குகிறார்.

கிணறு வெட்ட வெளியேறும் மண், காற்று, நீர், நீரில் தெரியும் ஆகாயம் ஆகிய பூதங்களே அவை

said...

கலைஞர் அவர்களைப் பற்றி நான் படித்த ஒன்று

ஒரு முறை சில இலங்கைத் தமிழறிஞர்கள் கலைஞர் அவர்களைச் சந்தித்தனர்

அவரிடம் கேட்டனர் ”சேர சோழ பாண்டிய அரசர்கள் தமிழுக்கு எவ்வளவோ செய்துள்ளனர் ஆனால் முத்தமிழைக் குறிக்கும் சின்னம் எதுவும் அவர்கள் சொல்லவில்லையே”

கலைஞர் சொன்னார், “யார் சொன்னது சின்னமில்லை என்று.. சோழனின் புலி உறுமல் இயல்பானது அது இயல் தமிழ், சேரனின் வில் நாணை சுண்ட அது இசையாகும்.. பாண்டியனின் மீன் தண்ணீரில் இல்லை அது துள்ளுவதே நாட்டியம். நாடகத் தமிழ்”

என்னே அவர் புலமை..

இன்னொரு சம்பவம்.. பொங்கல் கவியரங்கம்.. கலைஞர் தலைமை.. கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது என்றால் என்ன
கலைஞர் விளக்குகிறார்.

கிணறு வெட்ட வெளியேறும் மண், காற்று, நீர், நீரில் தெரியும் ஆகாயம் ஆகிய பூதங்களே அவை

Anonymous said...

www.tamilsangami.blogspot.com