Sunday, June 03, 2007

சோழநாட்டு சூரியன் வாழ்க! வாழ்கவே!!

அது 60 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. நீதிக்கட்சி திராவிட கழகமாய் பெயர் மாற்றம் பெற்று இன இழிவு ஒழிப்பு, சுயமரியாதை, சமூக சீர்த்திருத்தத்தை தன் களமாய் தேர்ந்தெடுத்து இயங்கிக் கொண்டிருந்த காலம்.

திராவிடர் கழகத்துக்கென தனி கொடியில்லை. கழக முன்னணியினர் கழகத்துக்கு என ஒரு கொடி வேண்டும் என முடிவு செய்து கொடியினை வடிவமைக்க கூடியிருக்கிறார்கள். தேசத்தின் இழிவை குறிக்கும் வகையில் கருப்பு நிறமும், அந்த இழிவினை ஒழிக்கும் புரட்சி நிறமாக சிகப்பினையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஒரு வெள்ளைத்தாளிலே கழகத்துக்கான கொடி வரையப்படுகிறது. கருப்பு நிற மையினால் தாள் முழுவதும் கருப்பு வண்ணம் பூசப்படுகிறது. நடுவிலே சிகப்பு வட்டம் வரவேண்டும். யாரிடமாவது சிகப்பு நிற பேனா இருக்கிறதா என்று பெரியார் கேட்கிறார். யாரிடமும் இல்லை.

"சிகப்புநிற மை எதற்கு? என் குருதி இருக்கிறதே" என்று கூறியபடி வந்த இருபது வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் தன் விரலை குண்டூசியால் துளைத்து வந்த குருதியை கொண்டு சிகப்பு வட்டத்தை பூர்த்தி செய்கிறார். கழகக் கொடி கம்பீரமாக தொண்டனின் குருதியால் உருவாகிறது.

அந்த இளைஞர் 84 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ மண்ணில் அஞ்சுகத்தம்மாளின் திருவயிற்றிலே உதித்த உதயசூரியனாம் டாக்டர் கலைஞர்.

கல்லூரியையும், கல்யாண மண்டபத்தையும் காக்க தனி கட்சி தொடங்கிய குடிகாரனெல்லாம் இன்று கலைஞரை பார்த்து எப்போது குடிவந்தாய் கழகத்துக்கு? என்று கேட்கிறான். இந்த இனமான வரலாறு எல்லாம் அந்த குடிகாரனுக்கு தெரியுமா?

இன்று திராவிடக் கட்சிகள் என்று தம்மை தாமே கூறிக்கொள்ளும் கட்சி கொடிகளில் எல்லாம் இருக்கும் சிகப்பு எங்கள் தலைவரின் ரத்தம்!

மானங்கெட்டவர்களே! மதியிழந்தவர்களே! உங்களுக்கெல்லாம் சூடு, சொரணை சிறிதேனும் இருந்தால் தலைவர் கலைஞரின் குருதியில் விளைந்த சிகப்பு நிறத்தை உங்கள் கட்சிக் கொடிகளில் இருந்து நீக்கிவிட்டு அரசியல் நடத்துங்கள். இல்லையேல் பார் போற்ற 84வது பிறந்தநாளை காணும் எங்கள் தங்கத் தலைவன், சோழ நாட்டு சூரியன் டாக்டர் கலைஞரின் பாதம் தொட்டு வணங்கி பிழைத்துப் போங்கள்.

அரசியல் தலைவர்களிலேயே அரசியல் வாழ்விலும் சரி, சொந்த வாழ்விலும் சரி முழுத்திருப்தியும், எவரெஸ்ட் உயரத்தையும் அடைந்த பரிபூரணத் தலைவர் ஒருவர் உண்டென்றால் உலக வரலாற்றிலேயே அது தலைவர் கலைஞர் மட்டும் தான்.

நடிகர் திலகம் ஒருமுறை சொன்னபடி நமது வாழ்நாளிலே சிலவற்றை யாருக்காவது தரமுடியுமேயானால் உடன்பிறப்புகள் அனைவரும் எங்கள் வாழ்நாளில் பாதியை தலைவர் கலைஞருக்கு தந்து... இன இழிவு நீங்க, தமிழனின் புகழ் தரணியெங்கும் பரவ அந்த தங்கத் தலைவனை பல நூற்றாண்டுகளுக்கு வாழவைப்போம்.

வாழும் தமிழே வாழி! நீ வாழ்ந்தால் தமிழ் வாழும், தமிழனின் புகழ் உயரும் என கூறி வாழும் வள்ளுவன் தலைவர் கலைஞரை வாழ்த்த வயதில்லாமல் உடன்பிறப்புகள் வணங்குகின்றோம்.

வாழ்க தமிழ்!!! வெல்க தமிழர் தலைவனின் நெஞ்சுரம்!!!

15 comments:

said...

முத்தமிழ் அறிஞரின் பிற்ந்த நாளுக்கு தமிழகத்தின் சார்பில் முதல் வணக்கம்

said...

அனானி ஆட்டம் இந்தப் பதிவில் வரவேற்க்கப் படவில்லை

said...

நான் மிகவும் உணர்ச்சி வய்ப்படும் நாள் இது. பொதுவா இன்னிக்கு லீவ் போட்டு விட்டு போயிடுவேன். அதுபோலவே இதோ இன்றும் போகிறேன். வாழ்க தலைவர், வாழ்க தலைவர் வாழ்க வாழ்கவே!!!

said...

சிங்க நிகர் தங்கத்தலைவன் இன்னும் பல சீமான் , சீமாட்டிகளுக்கு நினைவு மண்டபம் கட்ட இன்னும் ஒரு 84 ஆண்டுகள் வாழ எல்லாம் வல்ல இயற்கையை இறைஞ்சுகிறோம்.

said...

தலைவர் கலைஞர் பல்லாண்டு வாழ மனமார வேண்டுகிறேன்.

said...

முத்தமிழ் அறிஞரின் பிற்ந்த நாளுக்கு தமிழகத்தின் சார்பில் முதல் வணக்கம்

Anonymous said...

LONG LIVE MU.KA

HE is a modern History of TAMILs.

A CEYLON TAMIL

Anonymous said...

தலைவா!

நீ இருக்கும் காலத்தில் உன் பெருமை பலருக்கு இன்னும் புரியவில்லை.
உன் புகழ் என்றும் வாழும்.

வாழ்க

புள்ளிராஜா

said...

உங்களுக்கு பயந்து தான்
பல புரட்டுகள் பயந்து
பரணில் கிடக்கிறது
உங்கள் சுயமரியாதை
வார்த்தைகளால் தான்
மரியாதைக்கே
மரியாதை வந்தது
தமிழினம் மானம் மரியாதையோடு வாழ வேண்டுமா?
நீங்கள் வாழுங்கள் நூறாண்டு
இந்த பாரை ஆண்டு-
உளப்பூர்வமாக பிரார்த்திக்கும் -
நாகூர் இஸ்மாயில்

Anonymous said...

வெட்கத்தைவிட்டு சொல்கின்றேன் உன் அறிவில் எனக்கு பாதிகூட இல்லை.
உன் பேச்சாற்றால் பார்த்து நான் வாயடைத்துப் போனதுண்டு.
உன் அரசியல் நாகரீகம் பார்த்து என் இதயம் உன்னை ரகசியமாக வாழ்த்தும்
தமிழின், தமிழரின் அடையாளமே நீ தான் என்பதை இன்று பகிரங்கமாக ஏற்றுக்கொள்கின்றேன்.


வாழ்க உன் புகழ்.



ஜெயலலிதா

Anonymous said...

வெட்கத்தைவிட்டு சொல்கின்றேன் உன் அறிவில் எனக்கு பாதிகூட இல்லை.
உன் பேச்சாற்றால் பார்த்து நான் வாயடைத்துப் போனதுண்டு.
உன் அரசியல் நாகரீகம் பார்த்து என் இதயம் உன்னை ரகசியமாக வாழ்த்தும்
தமிழின், தமிழரின் அடையாளமே நீ தான் என்பதை இன்று பகிரங்கமாக ஏற்றுக்கொள்கின்றேன்.


வாழ்க உன் புகழ்.



ஜெயலலிதா

said...

Wish him many more returns

http://sivabalanblog.blogspot.com/
2007/06/blog-post.html

said...

தமிழக வரலாற்று நாயகரே! நீடூடி வாழ்க !!

said...

வரலாறு பல வீரர்களை காட்டியுள்ளது. அவர்கள் ஒன்று வென்றுகொண்டே வந்து வீழ்ந்து போயிருப்பார்கள் எடுத்துக்காட்டாய் அலெக்சாண்டரை சொல்லலாம். அல்லது ஒரே வெற்றியின்யின் மூலம் புகழடைந்துவிட்டு அடுத்து இம்மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட்டிருப்பார்கள் எடுத்துகாட்டாய் ஸ்பார்ட்டகஸை சொல்லலாம். ஆனால் கலைஞா நீ "ஸ்பார்ட்டகஸின்" வெற்றியைப்போல் உன் கணக்கை துவங்கினாய் கிட்டத்தட்ட70 ஆண்டுகள் எம்தமிழினத்திற்காய் உழைத்துக்கொண்டிருக்கிறாய். அலெக்சாண்டருக்கு தோல்வியின் ருசி தெரியவில்லை அந்த வகையில் அவன் பாவம்தான். நீயோ வெற்றியை எப்படி வரவேற்று மகிழ்ந்தாயோ அது போல் தோல்வியிலும் மகிழ்ந்தாய். அதன் பின் முன்னைவிட முனைப்பாய் களமாடி திராவிட இயக்கத்தேரை முன்னேற்றப்பாதையில் நடத்திசெல்கிறாய். உன் வீழ்ச்சி எவனும் கண்டதுமில்லை உன் வெற்றி எவனும் பெற்றதுமில்லை.

"என் தம்பி கருணாநிதி இருக்கும் இந்த பாளையங்கோட்டை சிறைச்சாலை திராவிட இயக்கத்திற்கு புண்ணியத்தலம்" என்று அண்ணாவால் குறிப்பிடபெற்ற தண்டனைகாலத்தில் சிறையில் இருந்த போதும் ஆட்சியில் இருந்த போதும் உன் சிந்தை "தமிழ் தமிழ் தமிழ்" என்றே சிந்தித்தது . உன்னை வாழ்த்தும் வாய்ப்புகள் இன்னும் பன்நெடுங்காலம் கிடைக்கும் என்று உளமார வாழ்த்துகிறேன்.

வாழ்க தமிழ் , வாழ்க கலைஞர்

said...

மேலும் பல பிறந்தநாள் காண கலைஞருக்கு வாழ்த்துக்கள் !