Friday, June 08, 2007

விஜயகாந்த் பயோடேட்டா

பெயர்: விஜயகாந்த்
வயது: கட்சி ஆரம்பிக்கும் வயது
முழுநேர தொழில்: சினிமா
பகுதி நேர தொழில்: அரசியல்
பொழுதுபோக்கு: தமிழ் பற்றி அவ்வப்போது பேசுவது
சிறப்புத் தகுதி: புள்ளிவிவர ராஜா
சினிமாவிற்குள் நுழைந்தது: ரஜினிகாந்த் போன்ற தோற்றம் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு அவர் பெயர் போலவே தன் பெயரையும் வைத்துக் கொண்டது
அரசியலுக்குள் நுழைந்தது: எம்.ஜி.ஆரை போல் நினைத்துக் கொண்டு அவருடைய ஆலோசகர்கள் துணை இருப்பதை நம்பி மற்றும் சினிமா மூலம் கிடைத்த ரசிகர்களையும் நம்பி
பிடித்த மொழி: இந்தி. அவர் படங்களில் தீவிரவாதிகள் பேசுவது
எரிச்சல்: விஜயகாந்துக்கு வைகோ, வைகோவுக்கு விஜயகாந்த்
பலம்: கலைஞரிடம் ஆசி பெற்று கட்சி ஆரம்பித்தது
பலவீனம்: ஆழம் தெரியாமல் காலை விடுவது
மறக்க நினைப்பது: திருமண மண்டபம்
முந்தைய அனுபவம்: சினிமாவில் நீள நீளமாக வசனம் பேசுவது
தெரியாதது: சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசுவது
சமீபத்திய சாதனை: அ.தி.மு.க. ஓட்டு வங்கியில் ஓட்டை போட்டது
நீண்டகால சாதனை: சொதப்பல் படங்களை கொடுத்தாலும் சினிமாவில் தொடர்ந்து இருப்பது

7 comments:

said...

ஆகா ஆகா

Anonymous said...

Use this blog only to write about Kalaignar and not about someone who has just joined politics.

Anonymous said...

டாக்டர் கலைஞர்
தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழ்பரப்பும் வலைப்பூ. Pls no vijaykanth post for this blog.

said...

அரசியல் பிரவேசத்தின் மூலதனம்:
தமிழ்நாட்டு மூளைகள் இன்றும் சினிமாவாலேயே சலவைசெய்யப்படுகின்றது என்ற நம்பிக்கை.

said...

//டாக்டர் கலைஞர்
தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழ்பரப்பும் வலைப்பூ. Pls no vijaykanth post for this blog.//

அனானி அவர்களே!

பதிவில் கீழ்க்குறிப்பிட்ட வரிகளை தாங்கள் வாசிக்கவில்லையா?

பலம்: கலைஞரிடம் ஆசி பெற்று கட்சி ஆரம்பித்தது

said...

//அனானி அவர்களே!

பதிவில் கீழ்க்குறிப்பிட்ட வரிகளை தாங்கள் வாசிக்கவில்லையா?

பலம்: கலைஞரிடம் ஆசி பெற்று கட்சி ஆரம்பித்தது
//

அனானி அவர்களே, உடன்பிறப்பு லக்கிலுக் சொன்னது போல் தமிழகத்தில் அரசியல் பண்ண வேண்டுமானால் அதில் கட்டாயம் கலைஞரின் பங்கு இருக்கும் என்பது தான் இந்த பதிவின் நோக்கம்

Anonymous said...

//பிடித்த மொழி: இந்தி. அவர் படங்களில் தீவிரவாதிகள் பேசுவது\\

பிடித்த பானம்: அம்மையாரைத்தான் கேக்கணும்.