Friday, June 29, 2007

கலைஞரை விமர்சிக்க இங்கு யாருக்கும் தகுதி இல்லை...

இன்று தமிழகத்தில் யார் அரசியலுக்கு வந்தாலும் உடனே கலைஞரை பற்றி விமர்சிக்க வேண்டியது. வாரிசு அரசியல், மைனாரிட்டி அரசு இப்படி பல விமர்சனங்கள், அவை அனைத்திற்கும் தலைவர் உரிய பதில் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார். அவர் இதையெல்லாம் பொருட் படுத்துவதே கிடையாது.

இந்த தி.மு.கஆட்சியை பற்றி பல்வேறு தரப்பினர் பலவாறு விமர்சிக்கின்றனர், இந்த ஆட்சியில் அதையாவது செய்ய முடிகிறதே, போன ஆட்சியில் அதை செய்ய எத்தனை பேருக்கு தைரியம் இருந்தது, அப்படியே செய்தாலும் உடனடி பரிசு கஞ்சா வழக்கு முதற்கொண்டு அனைத்து வழக்குகளும் பாயும்.

வாரிசு அரசியல் செய்கிறார் என்று முழங்கிக் கொண்டிருந்த அதி மேதாவிகளின் வாயை அடைத்தார் பாருங்கள், அது தான் கலைஞர். தன்னுடைய சொந்த பேரன் என்றும் பாராமல் மத்திய அமைச்சர் பதிவியிவிருந்து நீக்கினார், யாராவது அதை செய்வார்களா? அரசியலில் கத்துக்குட்டியான விஜயகாந்த் கலைஞர் வாரிசு அரசியல் செய்கிறார் என்று பேசுகிறார், இவர் கட்சியில் இவர் மனைவிக்கும், மச்சானுக்கும் என்ன வேலை? இது என்ன அரசியல்?

கலைஞர் அவர்கள் போட்ட ஒரு உத்தரவால் எத்தனை லட்சம் ஏழை குடும்பங்கள் வயிரார சாப்பிட முடிகிறது. பல ஆண்டுகளாக பல ஆட்சியாளர்களால் புறக்கணிகப்பட்டு வந்த தென் தமிழகத்திற்கு கணணி தொழில்நுட்ப பூங்கா, டாடா நிறுவனத்தின் மிக பெரிய தொழிற்சாலை. இவைகளால் அங்குள்ள மக்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் அவர்களின் வாழ்க்கை தரமும் உயரும். இதே போல் சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாடு மிக பெரிய அளவில் பொருளாதாரா வளர்ச்சி அடையும்.

தென் தமிழகம் தான் ஆ.தி.மு.கவின் வாக்கு வங்கி, கோட்டை என்றெல்லாம் முழங்கும் 'அம்மாவின்' ஜால்ராக்களுக்கு ஒரு கேள்வி, உங்கள் 'அம்மா' அந்த தென் தமிழகத்திற்கு என்ன செய்தார்?

இந்த 84 வயதிலும் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் ஒருவரை பற்றி பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, தயவு செய்து தூற்றாதீர்கள்.

4 comments:

said...

//அரசியலில் கத்துக்குட்டியான விஜயகாந்த் கலைஞர் வாரிசு அரசியல் செய்கிறார் என்று பேசுகிறார், இவர் கட்சியில் இவர் மனைவிக்கும், மச்சானுக்கும் என்ன வேலை? இது என்ன அரசியல்?//

உபதேசம் எல்லாம் ஊருக்கு தான். அதை தான் விஜய்காந்த் செய்து வருகிறார்

said...

நன்றாக விமரிசக்கட்டும்.ஆனால் சோமாறி மாதிரி தமிழால் உஞ்ச விருத்தி செய்து கொண்டு தமிழையும்,தமிழரையுங் கிண்டல்செய்வது போல இல்லாமல்,இன்னும் எப்படி யெப்படியெல்லாம் தமிழையும்,தமிழரையும் முன்னேற்ற வைக்கலாமென்று ஆக்க பூர்வமாகச் சொல்லட்டும்.
வாரிசு அரசியல் யாருடையக் காதலியாக இருந்தார் என்ற "தகுதி"யாக இல்லாமல் தமிழக அரசியலில் அடி பட்டவராக இருக்கட்டும்.
இந்திரா காந்தி சரி,அதற்குப் பின்னால் வந்த காந்திகள் தகுதிகள் என்ன?

said...

யாரையும் யாரும் விமர்சிக்கலாம்
இது ஜனநாயகம் , ஒரு மனிதனாயிருப்பதே போதுமான தகுதியாகும்,

நீங்கள் விஜயகாந்த்தை விமர்சிப்பதால் கருணாநிதி செய்வது சரியாகிவிடாது.

said...

செல்வமுத்துக்குமரன் மற்றும் வவ்வால் அவர்களே!

உங்கள் சொந்திகளை (சொல் வாந்திகளை) வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள். இங்கே வேண்டாம்.