Thursday, June 07, 2007

ஜெயலலிதாவை கைது செய்ய கோருவார்களா நடுநிலை வாந்திகள்?

இச்செய்தியைப் படியுங்கள்!

தினகரன் - மதுரை அசம்பாவிதம் நடந்தபோது அழகிரியை கைதுசெய்யவில்லையென்று வானுக்கும், பூமிக்கும் குதித்த நடுநிலை வாந்திகள், இப்போது நடந்த சம்பவத்துக்காக ஜெயலலிதாவை கைது செய்ய கோருவார்களா என்று தமிழ்மணத்தின் நடுநிலையாளர்கள் கேள்வி கேட்கிறார்கள்!

நாங்கள் கொஞ்சமாவது சிந்திக்க கூடியவர்கள். எவனோ ஒரு பைத்தியக்கார ஜெ. அபிமானி செய்த காரியத்துக்காக ஜெயலலிதாவை கைது செய்ய கோரமாட்டோம்.

"ரத்தத்தின் ரத்தங்களுக்கு வெட்கமில்லையா?" போன்ற பதிவுகளையும் எதிர்பார்க்கிறோம் :-)

16 comments:

Anonymous said...

நாக்கை புடுங்கற மாதிரி கேட்டிருக்கீங்க. நாட்டுலே எல்லாத்துக்கும் நடுநிலை வேஷம் தேவைப்படுது. என்னத்தை பண்ண?

-பெயர் வெளியிட விரும்பாத பிரபல பதிவர்

said...

//நாங்கள் கொஞ்சமாவது சிந்திக்க கூடியவர்கள்.அபிமானி செய்த காரியத்துக்காக ஜெயலலிதாவை கைது செய்ய கோரமாட்டோம்.//

அந்த தினகரன் சம்பவம் நடக்காம இந்திருந்தா இந்த மாதிரி சிந்திப்பீங்களா பண்ணுவீங்களா??

என்ன பண்ண அழகிரி பண்ண காரியத்து ஜெ வுக்கு எல்லாம் சப்போர்ட் பண்ணவேண்டிய நேரம் உங்களுக்கு!!! :)))))))))))

said...

நல்லா காட்றாங்கடா reactionu எதுக்கு இப்ப நடு நிலையாளர்கள் மீது பாயுறீங்க?.

said...

அப்போ தர்மபுரி மாணவர்கள் எரிப்பு கேஸ்லையும் உங்க ஸ்டாண்டு அப்படித்தானா??

அப்ப உடன்பிறப்பு சிந்திக்காம ஜெ. மேல பழிய போட்டுவிட்டீங்களே அநியாயமா??

ஐயோ! ஐயோ!!!

Anonymous said...

அடப்போங்கப்பா. முன்னல்லாம் யாராவது தொண்டர்கள் தான் தீக்குளிப்பாங்க. இப்பெல்லாம் தொண்டர்கள் மத்தவங்களுக்கு தீ வச்சிர்றாங்க. எப்படி கொள்ளி வைக்கறதுன்னு பிராக்டிஸ் பண்ணுறாங்களோ என்னவோ? நீங்க தீ வச்சீங்க. நாங்களூம் வப்போம். தமிழ்நாடு முன்னேறிடுச்சி - அவ்ளோதானேப்பா. இதுக்கும் ஒரு சிபிஐ வச்சா போச்சு. அப்பன் வீட்டு பணம் தான. செத்த உயிர் எக்கேடு கெட்டா நம்க்கென்ன. ரத்தத்தின் ரத்தத்திற்கு வெட்கமும் உண்டு, வேதனையும் உண்டுன்னு அவிங்க ஒரு பதிவு போட்டா முடிஞ்சுது வலையுலக எழுச்சி.. நல்ல கூத்துப்பா உங்களோட.

Anonymous said...

//"ரத்தத்தின் ரத்தங்களுக்கு வெட்கமில்லையா?" போன்ற பதிவுகளையும் எதிர்பார்க்கிறோம் :-) //

அந்த மாதிரியெல்லாம் பதிவுகள் வர வழியில்லாத அளவுக்குத்தான் 'அங்கே' வெட்கம் இருந்தது என்பது நோக்கு நெசமாலுமே தெரியாதா?

மகளிர் அணி கோர்ட்ன்னு யோசிச்சுப் பாரும்!

said...

//அந்த தினகரன் சம்பவம் நடக்காம இந்திருந்தா இந்த மாதிரி சிந்திப்பீங்களா பண்ணுவீங்களா??//

எப்பவுமே இந்த மாதிரி தான் சிந்திப்போம். எங்களுக்கெல்லாம் அறிவில்லையா என்ன?


//அப்போ தர்மபுரி மாணவர்கள் எரிப்பு கேஸ்லையும் உங்க ஸ்டாண்டு அப்படித்தானா??//

பைத்தியக்காரத்தனமாக ஜெயலலிதாவை கைது செய்யவேண்டுமென்று அப்போது திமுகவினர் யாரும் கோரவில்லை.

Anonymous said...

3 கல்லூரி மாணவிகளை எரித்த அம்மா வாழ்க!!

Anonymous said...

இதுவே திமுகவினர் அதிமுக கரை வேட்டியில் வந்து செய்ததுதான்....ஆனால் அங்கு இருந்த அதிமுக எம் எல் ஏவை மாட்டி விட்டுவிட்டார்கள் உடன்பிறப்புக்க்ளும் அவர்களது போலீஸும்....எல்லாம் ரவுடிக்குடும்பத்தின் உபதலைவர் அழகிரியின் மதியூகம் என்கிறேன் நான்....

said...

மதுரை சம்பவத்தின் போது திமுக தலைவர் கருணாநிதியை கைது செய்யக் கோராதவர்கள், இந்த சம்பவத்தில் அதுமுக தலைவி ஜெயலலிதாவையும் கைது செய்யக் கோரமாட்டார்கள்.

:)

said...

koda nadu maligai pattri unmayya chollan kasakirathu..... adhnal uyirai kolla myarchikka venduma... court suvatrril muttikolla vandiyadhu thane

said...

//மதுரை சம்பவத்தின் போது திமுக தலைவர் கருணாநிதியை கைது செய்யக் கோராதவர்கள், இந்த சம்பவத்தில் அதுமுக தலைவி ஜெயலலிதாவையும் கைது செய்யக் கோரமாட்டார்கள்.//

கோவியாரே!

பதிவை புரிந்துகொள்வதில் உங்களுக்கு ஏதோ சிரமம் இருக்கிறது. மதுரை சம்பவத்தின் போது அழகிரியை கைது செய்ய கோரி கும்மி அடித்தவர்களுக்காக இப்பதிவு சமர்ப்பிக்கப்படுகிறது.

தங்களை நடுநிலையாளர்களாக காட்டிக் கொள்ள அந்நேரத்தில் சிலர் கட்டிய கூத்துக்களை எல்லோரும் தான் பார்த்தோமே? :-))))))

said...

அடடே! லக்கி கைதெல்லாம் வேண்டாம். சிபிஐ விசாரணை வெச்சிரலாம். சட்டம் தன் கடமையைச் செய்யும். நாமளும் நிம்மதியா இருக்கலாம். அப்புறம் இந்த வாந்தி பேதியெல்லாம் தேவையிருக்காதுல்ல. அழகிரி செஞ்சாலும் தப்புதான். ஜெயலலிதா செஞ்சாலும் தப்புதான். கருணாநிதி, வைகோ,ராமதாஸ், நானு நீங்க..யார் செஞ்சாலும் தப்பு தப்புதான்.

Anonymous said...

சந்தோசு, ஜிராகவன், வீதிபீப்பிள் மாதிரி நடுநிலைவாந்திகள் பதிவு போட்டாச்சு தல. இன்னும் உங்க திராவிட நடுநிலைவாதிகள் தான் பதிவு போடல. சீக்கிரம் போட சொல்லுங்க.

said...

//இதில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கே தீ வைத்து பேராட்டம நடத்திக் காட்டியுள்ளார் வானூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கணபதி.//

வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம் இது. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் எரிப்பது எந்தச் சூழலிலும் சரியாகாது. எவர் செய்திருந்தாலும் இது கடுமையான தண்டனைக்கு உரியதே. ஜெ இதற்கு நிச்சயம் தார்மீகப் பொருப்பேற்க வேண்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஒரு நல்ல தலைவியாய் இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு போராட்டமும் நடை பெறாத வண்ணம் தடுத்திருக்க வேண்டிய கட்டாயம் ஜெவிற்கு உண்டு. ஆனால் அவ்வாறு செய்யாது போனது மிகப்பெறும் தவறு என்பதே என் நிலைப்பாடு.

//ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வந்தபோது தர்புரியில் பஸ்ஸோடு சேர்த்து 3 அப்பாவி மாணவிகளை எரித்துக் கொன்றனர். இப்போது இன்ஸ்பெக்டரை கொளுத்தியுள்ளனர். //

இதை எதிர்த்து நானிட்ட ஒரு பதிவு (தர்மபுரி - காலம் கடந்த நல்லதொரு தீர்ப்பு...) நல்லதொரு பதிலாய் அமையும் என நினைக்கிறேன்.

said...

//இதுவே திமுகவினர் அதிமுக கரை வேட்டியில் வந்து செய்ததுதான்....ஆனால் அங்கு இருந்த அதிமுக எம் எல் ஏவை மாட்டி விட்டுவிட்டார்கள் உடன்பிறப்புக்க்ளும் அவர்களது போலீஸும்....எல்லாம் ரவுடிக்குடும்பத்தின் உபதலைவர் அழகிரியின் மதியூகம் என்கிறேன் நான்.... //

நல்ல கற்பனை. ஆனால் இப்படியும் நடக்கலாம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.