Wednesday, June 24, 2009

இதுக்கு எத்தனை மார்க் போடுவாங்க?

இப்பெல்லாம் நாலு வரியில பதிவு போட்டு அதுக்கு சம்மந்தமே இல்லாம நச்சுன்னு ஒரு படம் போட்டாதான் மார்க் போடுவாங்களாம். இது கூட தெரியாம பல பேர் மாங்கு மாங்குன்னு எழுதறாங்களேனு நெனச்சா பாவமா இருக்கு. அதான் நமக்கும் ஒரு ஆசை நமக்கு எத்தனை மார்க் போடுவாங்கன்னு. என்ன இருந்தாலும் இந்த காலத்து யூத்துக கூட எல்லாம் போட்டி போட முடியுமா நம்மால? ஏதோ நம்ம ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி ஒரு படத்தை போட்டிருக்கேன் ஏதோ பாத்து போடுங்க பாஸு பார்டர்ல பாஸ் ஆனாலும் ஓகே தான் பாஸு.



இந்த படத்தில் ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு இருக்கா? இருந்தா படத்தை எடுத்த போட்டோகிராபருக்கு மார்க்கை குறைச்சுட்டு நமக்கு சேர வேண்டிய மார்க்கை குடுத்துடுங்க பாஸு

12 comments:

said...

மானாட மயிலாட படத்தை போட்டிருந்தா மாற்கு போட்டிருப்பாங்க .

said...

//
Suresh Kumar said...

மானாட மயிலாட படத்தை போட்டிருந்தா மாற்கு போட்டிருப்பாங்க
//

ஆனா அவுங்களே மானாட மயிலாட நிகழ்ச்சிய குறை சொல்றாங்களே, ஏதோ கலாச்சார காவலர்கள் மாதிரி. அவங்க தளத்துலே அதைவிட மோசமான படங்கள் தானே வருது

said...

//ஆனா அவுங்களே மானாட மயிலாட நிகழ்ச்சிய குறை சொல்றாங்களே, //

Cant get anything.. எவுங்க சார்?

said...

//
Karthikeyan G said...

//ஆனா அவுங்களே மானாட மயிலாட நிகழ்ச்சிய குறை சொல்றாங்களே, //

Cant get anything.. எவுங்க சார்?
//

உங்கள் கேள்வி்கான பதிலுக்கு தேவையான குறிப்புகள் பதிவிலேயே இருக்கு நண்பா. இல்லை என்றால் நீங்கள் வலையில் அதிகம் பங்கு பெறுவதில்லை என்று அர்த்தம்

Anonymous said...

good picture 100 marks

said...

Cant get anything.. எவுங்க சார்?/

அம்புட்டு நல்லவரா கார்த்திகேயன் சார் நீங்க?

said...

மே ஐ கம் இன் ?

said...

மன்னிக்கனும் உடன்பிறப்பு உங்கள் காமெடி பதிவுகள் என்னை வெகுவாய் கவர்ந்தவை இது ஏனோ சிரிப்புக்கு பதிலாய் எரிச்சல் மூட்டுவதாய் இருக்கிறது.

செந்தழல் ரவி வேலை மெனக்கெட்டு எல்லா கதைகளையும் படித்து அதற்கு தன் பார்வையில் ஒரு விமர்சனமும் தந்துகொண்டிருக்கிறார்.

அதற்கான நேரமும் உழைப்பையும் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

உரையாடல் அமைப்பை சேர்ந்தவர்களே இன்னும் அத்தனை கதையையும் படித்திருப்பார்களா தெரியாது?

அத்தனை கதையையும் படிப்பதற்கே மகா பொறுமையும் நேரமும் தேவையில்லையா..

சிந்தித்துப்பாருங்கள் நண்பரே..!

இக்கட்டுரை முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டிருந்தாலும் ஏனோ மனதுக்கு உறுத்தலாய் இருந்தது அதனால் இந்த பின்னூட்டம்.

said...

தோழர் ஆதிஷா! அடுத்தவரை கலாய்க்கும் போது எப்படி இருக்கும் என்று அவரும் தெரிந்து கொள்ளட்டுமே

said...

//
செந்தழல் ரவி said...

மே ஐ கம் இன் ?
//

வெல்கம் டூ த சோ

said...

அதிஷா, உங்களது சீரியஸ் பின்னூட்டம் சரியல்ல...

ஜாலியாக எடுத்துக்கொள்ளவேண்டும்...

அடுத்து உடன்பிறப்பு...

சிவப்பு நிறத்தில் கொட்டை எழுத்தில் அதில் எழுதியிருந்ததை நீங்கள் பார்க்கவில்லை என்றால் உங்களுக்காக இன்னொரு முறை இங்கே அளிக்க தயார்.

ஒவ்வொருவரும் ஒரு படைப்பை உருவாக்க உழைப்பை சிந்துகிறார்கள்...அதை எளிமையாக விமர்சனம் செய்திருக்கிறேன்..ஒவ்வொருவரின் படைப்பும் அவர்களை பொறுத்தவரை சிறப்பானதே...இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வை மட்டுமே...!!!

பொதுவாக பார்க்கும்போது, சிறுகதை, போட்டிக்கு எழுதுகிறோம் என்றதும் பதிவர்கள் முகத்தை ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி போல் வைத்துக்கொள்வார்கள் என்று கற்பனை செய்யத்தோன்றுகிறது,...அல்லது நல்ல நகைச்சுவைக்கு பஞ்சம்...ஒன்றிரண்டு பேரைத்தவிர, முயற்சி கூட எடுக்கமாட்டேங்குறாங்க நம்ம மக்கள்...!!!

மற்ற கதைகளை நேரம் கிடைக்கும்போது விமர்சிப்பேன்...!!!! உங்கள் ஓட்டுகள், ப்ளஸ் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க...

இது தான் அது...

ஓகே ??

said...

ரவி உங்கள் நோக்கம் உயர்வானதாக இருக்கலாம் ஆனால் இந்த பொறுப்பை உங்களிடம் யாரும் அளிக்கவில்லை நீங்களாகவே எடுத்துக் கொண்டீர்கள். அதாவது நீங்கள் உங்கள் பக்கமாக மட்டுமே சிந்திக்கிறீர்கள். அடுத்தவரை பற்றியும் யோசிக்க வேண்டும். போட்டி என்று மட்டும் அல்லாமல் பல சந்தர்ப்பங்களில் நீங்கள் பலரையும் கலாய்ப்பதை பார்த்து இருக்கிறேன். என்னையும் பல இடங்களில் கலாய்த்து இருக்கிறீர்கள். எனக்கு உங்களை பற்றி தெரியும் ஆதலால் அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை. இப்போது இந்த இடுகை எழுதியதற்கு காரணம் போட்டி என்பது மிகவும் சென்சிடிவானது. மீண்டும் சொல்கிறேன் உங்கள் நோக்கத்தில் எந்த தவறும் இல்லை ஆனால் எல்லோரும் உங்களை போல் ஜாலியாக எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது எந்த அளவுக்கு சரி என்று தோன்றவில்லை