Thursday, June 11, 2009

வீரத்தளபதியின் விவேகம்!


முதல்வன் படத்தில் முதல்வராக நடித்த ரகுவரனை டி.வி., நிருபரான அர்ஜூன் பேட்டி எடுப்பார். அப்போது பல சிக்கலான கேள்விகளை கேட்டதும், நீ ஒருநாள் முதல்வராக இருந்து பார்? என்று கேட்பார் ரகுவரன். இதையடுத்து ஒரு நாள் முதல்வராக பொறுப்பேற்கும் அர்ஜூன் பொதுமக்கள் தங்களது குறைகளை போன் மூலம் தெரிவிக்கலாம், என்ற அறிவிப்பை வெளியிடுவார். ஒருநாள் முதல்வர் அர்ஜூனிடம் ஏராளமான மக்கள் போனில் குறைகளை தெரிவிப்பார்கள். அ‌தனை பொறுமையுடன் கேட்கும் அர்ஜூன் உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுத்து மக்கள் மத்தியில் செல்வாக்கான முதல்வராக ஆகி விடுவார்.

முதல்வன் அர்ஜூன் பாணியில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நடிகர் ஜே.கே.ரித்திஷ் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். ராமநாதபுரத்தில் லோக்கல் டி.வி., சேனல் ஒன்றில் 3 மணிநேரம் லைவ்வாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். ரித்திஷிடம் போனில் பேசிய பொதுமக்கள், இலவச தொலைக்காட்சி கிடைக்கவில்லை என்பதில் தொடங்கி, மின்சார பிரச்னை, தண்ணீர் பிரச்னை, சாலை வசதி என பல பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போனார்கள். ரித்திஷூம் சளைக்காமல்அனைவருக்கும் பதில் சொன்னதுடன் நிற்காமல், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் போனில் பேசினார். ரித்திஷின் இந்த அதிரடி நடவடிக்கை ராமநாதபுரம் தொகுதி மக்களை கவர்ந்தது. இதனை பலரும் போனில் தெரிவித்தார்கள். இதையடுத்து தொடர்ந்து மாதந்தோறும் பொதுமக்களுடன் இதுபோன்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக தெரிவித்தார்.

சினிமா துறையில் இருந்து எம்.பி.,யான ஜே.கே.ரித்திஷ், சினிமா பாணியிலேயே மக்களுக்கு தேவையான வசதிகளை அதிரடியாக செய்து கொடுக்கிறார் என்பதுதான் ராமநாதபுரத்தின் ஹாட் டாக்...!

நன்றி : தினமலர்

11 comments:

said...

ஜேகேஆர் குறித்து பலர் முன்முடிவுடன் இருக்கிறார்கள். அவர் செயல்பாடுகளை பற்றி அறிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் நாள் பொறுத்து இருந்து பார்க்கலாம்

said...

உடன்பிறப்பு, உங்களுக்கு சிரிப்பே வரலையா ?

said...

தலைவா, அவர் எப்படியோ வந்துட்டாரு. கொஞ்ச அவகாசம் கொடுப்பதில் தவறில்லையே. அவர் அதை செய்வார் இதை செய்வார் என்று சொல்லவில்லை என்ன தான் செய்கிறார் என்று பார்க்கலாம் என்கிறேன்

said...

ரித்தீசுடன் போனில் ஹீரோயின் பேசினாங்களா...

உடன்பொறப்பே... அரசியல்வாதிகள் நடிகராகவும் நடிகர்கள் அரசியல்வாதியாகவும் அரிதாரம் பூசுவதில் என்ன வியப்பு இருக்கு...

ராமநாதபுரத்தில் இப்போ எத்தனை பாலாறுகளும் தேனாறுகளும் ஓடப்போகிறது...

இதைப்போல பல உடன்பிறப்புக்களுக்காகவே வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை திறந்து வைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம்.

said...

தமிழ்சினிமா, உங்கள் பெயருக்கும் பின்னூட்டத்துக்கும் பொருத்தமே இல்லை. அது மாதிரி தான் ரித்தீசும்

Anonymous said...

சூப்பர்டா. தினமலரை ஓப்பனா கோட் பண்ணற லெவலுக்கு உடான்சுபொரப்புங்க வந்தாச்சா? பேஷ் பேஷ் நன்னாருக்கு

said...

எங்க தல..தலதாம்ல.

said...

//Anonymous said...

சூப்பர்டா. தினமலரை ஓப்பனா கோட் பண்ணற லெவலுக்கு உடான்சுபொரப்புங்க வந்தாச்சா? பேஷ் பேஷ் நன்னாருக்கு//

யாரது, ரெட்ட எலைக்கு ஓப்பனா ஓட்டு கேட்ட வல்லவர் மாதிரி தெரியுது

said...

//Anonymous said...

சூப்பர்டா. தினமலரை ஓப்பனா கோட் பண்ணற லெவலுக்கு உடான்சுபொரப்புங்க வந்தாச்சா? பேஷ் பேஷ் நன்னாருக்கு//

இது எங்கேயோ கேட்ட டயலாக் மாதிரி இருக்கே. ஓ! நம்ம ஆரிய - திராவிட போராட்டமா. பேஷ் பேஷ் வாங்க வாங்க வந்து ஜோதியில ஐக்கியமகுங்க

said...

//Anonymous said...

சூப்பர்டா. தினமலரை ஓப்பனா கோட் பண்ணற லெவலுக்கு உடான்சுபொரப்புங்க வந்தாச்சா? பேஷ் பேஷ் நன்னாருக்கு//

வீரத்தளபதிய புகழ்கிற அளவுக்கு தினமலர் வந்துருச்சே அதை கவனிச்சீங்களா என் சிங்கமே

said...

//டக்ளஸ்....... said...

எங்க தல..தலதாம்ல.
//

நன்றி டக்ள்சு, தள முன்னாடி எல்லோரும் டரியல் தான்