Tuesday, June 02, 2009

தமிழ்மணம் மாற்றத்துக்கு லக்கிலுக் காரணமா?

இந்த இடுகை லக்கிலுக் புகழ்பாடுவதாக யாராவது அசெளகரியப்பட்டால் தயவுசெய்து முதலில் இந்த இடுகையை வாசித்துவிட்டு வரவும்
தமிழ்மண மகுடம் - ஜனநாயகத்துக்கு எதிரான மண்குடம்!

இன்று தமிழ்மணம் பல மாற்றங்களை அடைந்து நிஜமாகவே மணம் வீசுவதாக சிலர் மெய்சிலிர்க்கிறார்கள். இன்று தமிழ்மணம் செய்து இருக்கும் மாற்றங்களை ஆறு மாதங்களுக்கு முன்பாகவே லக்கிலுக் தன் இடுகையில் ஆலோசனைகளாக வழங்கி இருக்கிறார். தமிழ்மணம் மகுடம் பகுதியில் இடம் பெற உதவும் வாக்கெடுப்பு முறை மற்றும் சூடான இடுகைகள் குறித்த அவருடைய கருத்துக்களை வரிக்கு வரி அப்படியே பின்பற்றி இன்று புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது தமிழ்மணம்

தலைப்பை மட்டும் ஏடாகூடமாக வைத்து கொண்டு உள்ளே வாந்தி எடுக்கும் இடுகைகளை எழுதுபவர்களுக்கும், உள்ளே மேட்டரே இல்லாமல் தலைப்பில் சூ என்ற ஒற்றை எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளை வைத்து காலம் தள்ளியவர்களுக்கும் ஆப்பு பலமாக வைக்கப்படுள்ளது. அதுவும் நேற்று சோனியா காந்தி அவர்களை பற்றிய இடுகை அருவருப்பின் உச்சகட்டம். தமிழ்மணத்தின் இந்த மாற்றமாவது அவர்களை திருத்துமா என்று காலம் தான் சொல்ல வேண்டும்



இங்கே இணைக்கப்பட்டுள்ள படத்தை வைத்து தினமணி பத்திரிக்கை வக்கிரமான கமெண்டுகளை வெளியிட்டதாக நண்பட் ஒருவர் கவலை தெரிவித்து இருந்தார். செயேந்திரர் குறித்து கூட ஏடாகூடமான செய்திகள் வந்தன அப்போது தினமணி இதே மாதிரி வக்கிரமான கமெண்டுகளை வெளியிட்டு இருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்

3 comments:

said...

//இங்கே இணைக்கப்பட்டுள்ள படத்தை வைத்து தினமணி பத்திரிக்கை வக்கிரமான கமெண்டுகளை வெளியிட்டதாக நண்பட் ஒருவர் கவலை தெரிவித்து இருந்தார். செயேந்திரர் குறித்து கூட ஏடாகூடமான செய்திகள் வந்தன அப்போது தினமணி இதே மாதிரி வக்கிரமான கமெண்டுகளை வெளியிட்டு இருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்//

அதெப்படிண்ணா?

அவா அவா ஆளு அவா அவாளுக்கு ஒசத்திதானே? :-)

said...

என்னைப்போன்ற ஏதுமறியா சிறார்களுக்காக தினமணியின் திரிஷா கார்ட்டூனை வலையேற்றவும் :)

said...

//சென்ஷி said...
என்னைப்போன்ற ஏதுமறியா சிறார்களுக்காக தினமணியின் திரிஷா கார்ட்டூனை வலையேற்றவும் :)//

அது கார்ட்டூன் இல்லை இந்த படம் தான் ஏதோ கமெண்டுடன் வெளியிட்டார்களாம்