Monday, June 22, 2009

அறிமுகம்: குட்டி உடன்பிறப்பு

கழகத்தின் அடுத்த தலைமுறை களத்தில் இறங்கிவிட்டது. களப்பணி ஆற்றுவதற்கு இன்னும் வயது ஆக வேண்டும் இந்த குட்டி உடன்பிறப்புக்கு. ஆனால் இணையத்தில் கழகப்பணி ஆற்றுதவற்கு இப்போதே தயாராகிவிட்டார். நமது முந்தைய இடுகையான பஜ்ஜி பதிவுக்கு வந்த ஒரு பின்னூட்டம் மூலமாக தான் கண்டுகொண்டோம் இந்த சீறும் சிறுவயது சிங்கத்தை. அந்த பின்னூட்டத்தை வாசித்தவுடன் அனுபமிக்க ஒரு கழக தோழராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை தொடர்பு கொண்ட போது தான் தெரிந்தது அவர் இன்னும் சிறுவர் அணி தான் என்று. சிறுவர் ஆனாலும் ஆற்றலில் வியக்க வைக்கும் அறிவு நிரம்பவே இருக்கிறது. தொடர்ந்து இணையத்தில் பதிவுகளை வாசித்து வந்து கொண்டு இருக்கிறார். அவரை இணையத்தில் எழுத அழைத்த போது அவர் சற்றும் அதை எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர் சார்பாக அவரது பின்னூட்டத்தை இங்கு இணைத்து இருக்கிறோம். கூடிய விரைவில் நம் குட்டி உடன்பிறப்பு தன் சொந்த பெயரியேலேயே எழுதுவார் என்று எதிர்பார்க்கிறோம்

==================================================================
உடன்பிறப்பு பஜ்ஜி என்றவுடன் ஒரு நினைவு வருது பகிர்ந்துக்க ஆசை.

ஒரு தடவை மயிலாடுதுறையிலே 1965ம் ஆண்டு. நான் பிறக்கவில்லை. எங்க தாத்தா, கோ சி மணி ஆகியோர் ஒரு பொது கூட்டத்துக்கு ஏற்பாடு. அண்ணா,சிறப்பு பேச்சாளர். அண்ணாநடிப்பிசை புலவர் கே ஆர் ராமசாமி அவர்களிடம் காரை இரவல் வாங்கிகிட்டு ஓட்டுனர் கிடைக்காமையால் டி. என் ராஜரத்தினம் அவர்களின் ஓட்டுனரை கூட்டிகிட்டு அண்ணா காஞ்சியில் இருந்து கிளம்பியாச்சு.

நம்ம அண்ணா கொள்ளிடம் ஆற்றை தாண்டி வரும் போது ஆற்று மணல் பார்த்தவுடன் காரை நிப்பாட்டிட்டு படுக்கை போட்டுட்ட்டாரு.

இங்கயோ செம கூட்டம். எத்தனை நேரம் தான் சமாளிப்பது. அப்ப உடனே ஒரு கார் ஏற்பாடு செஞ்சு அன்னிக்கு கோவில் திருமாளம் என்ற ஊர்ல இருந்த கலைஞரை தூக்கிகிட்டு வந்தாச்சு.

கலைஞருக்கு அப்போ உடல் நிலை சரியில்லை. பேச முடியாதா நிலை. ஆனா அவருவந்து மேடையிலே உட்காந்து கிட்டு N. கிட்டப்பாவை முழங்க சொல்லிட்டூ உட்காந்து இருக்கார்.

கூட்டம் நடப்பது நகராட்சி பூங்கா. அப்ப கீழே ஒரு நடமாடும் பஜ்ஜி கடை. பஜ்ஜி வாசம் மூக்கை துளைத்ததாள் கலைஞர் கூட ஒன்னு வாங்கி சாப்பிட்டார்.

கலைஞரே சாப்பிட்ட உடனே கூட்டம் முழுக்க அண்ணாவின் வருகையை மறந்து விட்டு பஜ்ஜி கடைக்கு போயிடுச்சு. 10 நிமிஷம் எல்லா வாழைக்காய், வெங்காயம் எல்லாம்போச்சு.

இதை கலைஞரும் கவனித்து கிட்டே இருக்கார்.

ஆச்சு. அண்ணா வந்தாச்சு. அண்ணாவுக்கு பஜ்ஜி வாசம் பிடித்து போக கலைஞரை பார்த்து "ஒரு பஜ்ஜி வாங்குங்க தம்பி"

அதுக்கு கலைஞர் அண்ணாவிடம் "ஏன் அண்ணா உங்களுக்கு ஆதித்தனாரை பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால ஆதித்தனார் பஜ்ஜி சாப்பிடனுமா? என்று கேட்க அண்ணாவுக்கு புரிஞ்சு போச்சு.

மேடையில் இருந்த யாருக்கும் இது என்ன என்பது என தெரியலை.

என்ன கூத்துன்னா வாழைக்காய் எல்லாம் தீர்ந்து போன்ன பின்னே தின தந்தி பேப்பரை கட் பண்ணி மாவில் துவைத்து பஜ்ஜி வியாபாரம் நடந்து கிட்டு இருந்தது. மேடையில் இருந்தாலும் கலைஞர் அதை கவனிச்சு கிட்டு இருந்திருக்கார்.

உங்க பஜ்ஜி பதிவிலே இதை நான் ஆசை ஆசையா பதிகிறேன்!

15 comments:

said...

ஒரு உடன்பிறப்பாக இந்த பதிவை பார்த்து கண்ணீர் வடிக்கிறேன்!

said...

வரலாற்று அறிவு
எடுத்துச் சொல்லும் பாங்கு
நகைச்சுவையை இயல்பாக தருவது
கடைசியா பன்ச்,
அதே அதே.
புலிக்கு பிறந்தது பூணையாகாது.

said...

நன்றி அபிஅப்பா மற்றும் ஜோசப் பால்ராஜ்

said...

வாரிசு அரசியல் ?? ஹி ஹி....

ஆனா பஜ்ஜி பதிவு அருமையான காமெடி பதிவு...நீண்ட காலத்துக்கு பிறகு சிரிக்கவைத்தது...

said...

நன்றி செந்தழல் ரவி மற்றும் டி.வி.ஆர். அய்யா

said...

//
செந்தழல் ரவி said...

வாரிசு அரசியல் ?? ஹி ஹி....
//

தோழர்! இன்று அரசியல் இல்லாத இடம் ஏது. வலையுலகில் கூட இன்று அரசியல் செய்யவில்லை என்றால் கட்டம் கட்டி டின்னு கட்டிவிடுவார்கள் என்று நான் சொல்லி தான் தெரிய வேண்டுமா உங்களுக்கு

said...

குட்டி பதிவரை மனதாரா வாழ்த்தி வரவேற்கிறேன்!

புலிக்கு பிறந்தது பூனையாகாது!

:))

said...

:)

வாழ்த்துக்கள் வருகைக்கு :)

said...

பஜ்ஜிப் பதிவிலே குட்டி உடன்பிறப்பு அருமையாய் நினைவு கூர்ந்து ஆசை ஆசையாய் பதிந்ததைப் பகிர்ந்தமைக்கு நன்றி. நன்றாக எழுதியிருக்கிறார்கள், அவருக்கு என் வாழ்த்துக்கள்!!

said...

\\ராமலக்ஷ்மி said...
பஜ்ஜிப் பதிவிலே குட்டி உடன்பிறப்பு அருமையாய் நினைவு கூர்ந்து ஆசை ஆசையாய் பதிந்ததைப் பகிர்ந்தமைக்கு நன்றி. நன்றாக எழுதியிருக்கிறார்கள், அவருக்கு என் வாழ்த்துக்கள்!!
\\

வழிமொழிக்கிறேன்...

குட்டி உடன்பிறப்புக்கு வாழ்த்துக்கள் ;)

said...

குட்டி உடன்பிறப்புக்கு பாராட்டுக்கள் மற்றும் வளமான எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள்

said...

அருமையான காமெடி


குட்டி உட‌ன்பிற‌ப்பு ..குட்டிப்புலி என‌ நிரூபிக்கிற‌து

said...

//என்ன கூத்துன்னா வாழைக்காய் எல்லாம் தீர்ந்து போன்ன பின்னே தின தந்தி பேப்பரை கட் பண்ணி மாவில் துவைத்து பஜ்ஜி வியாபாரம் நடந்து கிட்டு இருந்தது//

உடன்பிறப்பே..’நெஞ்சுக்கு நீதியா’ இது சுடச்சுட ருசியான சேதியா இருக்கு! குட்டி..தகவலில் கெட்டி!

said...

//எம்.பி.உதயசூரியன் said... //

வாங்க உதயசூரியன், வார்த்தைகளில் விளையாடுகிறீர்கள் போங்கள்

said...

வாங்க உதயசூரியன் அய்யா! இது நெஞ்சுக்கு நீதியில் வந்தது இல்லை. குட்டி உடன்பிறப்புக்கு ஒரு குஷ்ட்டரோகி தாத்தா ((அதாவது தாத்தான்னு சொல்லுவா, நாங்க கட்சிகாரங்க மாமான்னு சொல்லுவோம்) அவரின் படிப்பினை எல்லாம்.

இப்பவும் சாமி கும்பிட மாட்டா! இரண்டாம் ரேங் வந்தா தன் தலையிலே குட்டிப்பாளே தவிர பிள்ளையாருக்கு குட்டிக்க மாட்டா!