Thursday, June 11, 2009

"பசங்க" - இன்னொரு "அஞ்சலி"

என்னாது "பசங்க" படம் வமர்சனமா அதுவும் இத்தனை நாள் கழித்தா. காந்திய சுட்டுட்டாங்க தெரியுமா அப்படின்னு கேட்காதீங்க. படம் வெளிவந்த உடனேயே அதை முதல் நாள் முதல் ஷோவிலேயே பார்த்துவிடும் அளவுக்கு மனவலிமை எல்லாம் நம்மிடம் கிடையாது. நல்ல படத்துக்காக பொறுமையாக காத்து இருந்து பார்ப்பது தான் நம்ம வழக்கம். அந்த வகையில் பார்த்தது தான் பசங்க. அப்படி ஒரு நல்ல படம் பார்த்துவிட்டால் அதை பற்றி ஒரு நாலு பேரிடமாவது சொல்வதும் ஒரு வழக்கம் அந்த வகையில் தான் இந்த இடுகை

பல வருடங்களுக்கு முன் வந்த அ ஞ்சலி திரைப்படத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட்டிருக்க முடியாது. குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட படம். மணிரதனம் என்ற பிரம்மாண்ட இயக்குநர் இயக்க இளையராஜா என்ற மற்றொரு பிரம்மாண்டமும் இணைந்து கொள்ள் அப்புறம் என்ன படம் பெரிய வெற்றி பெற்றது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அஞ்சலி படத்தில் இடம் பெற்ற கிளைமேக்ஸ் காட்சி பெரிதும் பேசப்பட்டது. இப்போது வந்திருக்கும் பசங்க படத்திலும் கிளைமேக்ஸ் அஞ்சலி படத்துக்கு இணையாகவே இருக்கிறது

அஞ்சலி படத்தில் நடித்தவர்கள் பலரும் சிறுவர்களாக இருந்தாலும் அவர்களின் பேச்சு மற்றும் செயல்கள் முற்றிய பெரிசுகளுக்கு இணையாக காட்டப்பட்டது. அதை குறை சொல்ல முடியாது. அப்போதைய காலகட்டத்தில் அப்படி பாத்திரங்களை அமைத்தால் தான் எடுபடும் என்ற நிலை இருந்தது. உதாரணத்திற்கு சிவாஜி படங்களை இன்று பார்த்தால் சிலருக்கு நாடகததனமாக் தோன்றும் அது போல. பசங்க படத்தில் வரும் சிறுவர்கள் மிகவும் இயல்பாகவே காட்டப்பட்டு இருக்கிறார்கள். பசங்க படத்தில் எந்த பிரம்மாண்டமும் இல்லை என்றாலும் கதை மற்றும் திரைக்கதையை நம்பி எடுத்து இருக்கிறார்கள்

பள்ளிப் பருவத்தில் ஏற்படும் பல நிகழ்வுகளை நம் கண்முன் மீண்டும் வந்து நிறுத்தி இருக்கிறார்கள். சிறுவயது பிரச்சினைகள் ஓவ்வொரு தலைமுறைக்கும் சுழற்சியாக் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை சொல்லி இருக்கிறார்கள். படத்தின் பிற்பகுதியில் சில இடங்களில் நாடகத் தன்மை தென்பட்டாலும் அது திரைக்கதையின் ஓட்டத்துக்கு எந்தவித ஊறும் விளைவிக்கவில்லை. ஒரு சில இடங்களில் அரசியல் கலந்த நகைச்சுவையும் தெளித்து இருக்கிறார்கள். அதை இன்னும் கொஞ்சம் செய்து இருக்கலாம்

படத்தில் நல்லவனாக வரும் அன்பரசு பாத்திரத்தை விட வில்லன் பாத்திரமாக வரும் ஜீவா அருமையாக நடித்து இருக்கிறார். இருவருமே சிறுவர்கள் தான் ஆனால் நடிப்பை பார்த்தால் அப்படி தெரியவில்லை. நல்லவனாக நடிப்பது எளிது ஆனால் வில்லனாக நடிக்கும் போது பார்ப்பவர்களுக்கு வெறுப்பு வர வேண்டும். அதை கச்சிதமாக செய்து இருக்கிறார் ஜீவா என்ற பாத்திரத்தில் நடித்த சிறுவர். மொத்தத்தில் நல்ல தரமான படம் பார்த்த திருப்தி. கண்டிப்பாக மிஸ் பண்ணக் கூடாத படம்

10 comments:

said...

பார்ப்பன அப்பார்ட்மெண்டு சிறுவர்களை வைத்து எடுத்த அஞ்சலியோடு பசங்க படத்தை ஒப்பிட்டு அந்த படத்தை கேவலப்படுத்தவேண்டாம்.

said...

ரவி உங்கள் கருத்தின் அர்த்தம் மிகவும் புரிகிறது. சிலருக்கு அவர்கள் பாஷையில் சொன்னால் தான் புரியும் அதான் இந்த கம்பேரிஸன். ஒரு நல்ல படத்தை அவர்களையும் பார்க்க வைக்க வேண்டும் என்ற அவா

said...

இந்தப் பதிவு இங்கே பதியப்பட்டதில் ஏதாவது உள்குத்து இருக்கா உடன்பிறப்பு?

said...

பணக்கார சிறுவர்களின் செயலுக்கும், கிரமத்து சிறுவர்களின் செயலுக்கும் வேறுபாடு உள்ளது. பணக்கார சிறுவர்களை வைத்து மணிரத்னம் எடுத்தது கமர்சியல். ஏழைச் சிறுவர்களின் 'பசங்க' படம் காட்சிகளில் மிகைப்பாடு என்று எதுவும் இல்லை, நம்ம கதை போல் இருந்தது.

said...

// லக்கிலுக் said...

இந்தப் பதிவு இங்கே பதியப்பட்டதில் ஏதாவது உள்குத்து இருக்கா உடன்பிறப்பு?
//

இதை பற்றி தனியாக பேசிக்கலாம் தோழர்

said...

//கோவி.கண்ணன் said...

பணக்கார சிறுவர்களின் செயலுக்கும், கிரமத்து சிறுவர்களின் செயலுக்கும் வேறுபாடு உள்ளது. பணக்கார சிறுவர்களை வைத்து மணிரத்னம் எடுத்தது கமர்சியல். ஏழைச் சிறுவர்களின் 'பசங்க' படம் காட்சிகளில் மிகைப்பாடு என்று எதுவும் இல்லை, நம்ம கதை போல் இருந்தது.
//

உண்மைதான் கோவியாரே. ஆனால் அஞ்சலி போன்ற படங்களுக்கு கிடைக்கும் மைலேஜ் பசங்க மாதிரி படங்களுக்கு கிடைப்பதில்லை

said...

இவனுங்க தர்ர மைலேஜை வெச்சா நமது வண்டி ஓடனும் ? நம்ம வண்டி நல்லா இருந்தா தன்னால ஓடாது ?

ஆ.வி 50 மார்க் கொடுத்துள்ளது. பார்த்துக்கொண்டே இருங்கள், இந்த படம் எத்தனை இண்டர்நேஷனல் அவார்டுகளை வாங்கி குவிக்கப்போகிறதென்று....

said...

//செந்தழல் ரவி said...

இவனுங்க தர்ர மைலேஜை வெச்சா நமது வண்டி ஓடனும் ? நம்ம வண்டி நல்லா இருந்தா தன்னால ஓடாது ?//

ஓடும் கண்டிப்பாக் ஓடும்

said...

//என்னாது "பசங்க" படம் வமர்சனமா அதுவும் இத்தனை நாள் கழித்தா. காந்திய சுட்டுட்டாங்க தெரியுமா அப்படின்னு கேட்காதீங்க//

:-))) இப்ப பின்னூட்டம் போடுவதால் என்னையும் யாராவது கேட்டுடாதீங்க

//அப்போதைய காலகட்டத்தில் அப்படி பாத்திரங்களை அமைத்தால் தான் எடுபடும் என்ற நிலை இருந்தது.//

உண்மை தான்

//ஒரு சில இடங்களில் அரசியல் கலந்த நகைச்சுவையும் தெளித்து இருக்கிறார்கள். அதை இன்னும் கொஞ்சம் செய்து இருக்கலாம்//

கதையின் உயிரோட்டம் மாறிவிடும் என்பதால் இருக்கலாம்

//மொத்தத்தில் நல்ல தரமான படம் பார்த்த திருப்தி. கண்டிப்பாக மிஸ் பண்ணக் கூடாத படம்//

உடன்பிறப்பு கலக்கிட்டீங்க! உங்களோட பதிவுகளில் எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு

அரசியல் பதிவு மட்டுமே எழுதும் நீங்கள் இந்த படம் விமர்சனம் எழுதியது எனக்கு உண்மையில் ரொம்ப ஆச்சர்யம் ..

ஒரு நல்ல படத்தை ஊக்குவிக்க இப்படி ஒரு பதிவு எழுதியதற்கு என் பாராட்டுக்கள்

said...

//
அரசியல் பதிவு மட்டுமே எழுதும் நீங்கள் இந்த படம் விமர்சனம் எழுதியது எனக்கு உண்மையில் ரொம்ப ஆச்சர்யம்
//

இந்த படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது அதனால் தான் பதிவு செய்தேன்