Saturday, April 11, 2009

தேர்தல் - முஸ்லிம்களுக்கு அல்வா

சில தினங்களுக்கு முன் ஒரு பதிவை பார்க்க நேரிட்டது முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்! என்றும் அதனால் இந்த தேர்தலில் தி.மு.க.வை புறக்கணிக்குமாறும் அந்த பதிவில் கேட்டுக் கொள்ளப்படிருந்தது. தி.மு.க.வுக்கு வாக்களிக்காவிட்டால் யார் வருவார்கள் என்று இவர்களுக்கு தெரியாதா?

தி.மு.க. தன் கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக்கிற்கு ஒரு இடம் கொடுத்துள்ளது ஆனால் அ.தி.மு.க.வோ ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாததோடு மட்டுமல்லாமல் முஸ்லிம் இயக்கத்தை சேர்ந்த்த எந்த ஒரு கட்சியையும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. தன் கூட்டணியில் பல காலமாக இருக்கும் இருக்கும் முஸ்லிம் கட்சியானாலும் சரி தனக்கு வேண்டிய சீட் கிடைக்காததால் முறுக்கிக் கொண்டு போன ம.ம.க.வாகட்டும் அ.தி.மு.க. அவர்களை திரும்பி கூட பார்க்கவில்லை. ஏற்கனவே முஸ்லிம்களே இல்லாத அமைச்சரவையை நடத்திய பெருமைக்குரியவர் தான் ஜெயலலிதா

தி.மு.க.விடம் முறுக்கி கொண்டு போன எல்லா கட்சிகளின் நிலைமையையும் பார்த்தோம், கம்யூனிஸ்டுகளாகட்டும் வைகோவாகட்டும் எல்லோருமே கெஞ்சி கூத்தாடி தான் சீட்டுகளை பெற்றனர் அதுவும் அவர்கள் விரும்பிய சீட்டுகள் கூட கிடையாது. இதில் இருந்து தப்பித்தவர் ராமதாஸ் மட்டுமே அதுவும் அவர் வளர்த்து வைத்து இருக்கும் ஜாதி சங்கத்தால் மட்டுமே. அது இல்லை என்றால் அவருக்கும் இதே நிலை தான்

முஸ்லிம்களாகட்டும் ஈழம் ஆகட்டும் அல்லது வேறு யாரகட்டும் தமிழகத்தில் இரண்டே நிலைகள் தான் இங்கு ஏதாவது கிடைக்கும் அங்கு எதுவுமே கிடைக்காது. இங்கே தான் முறுக்கி கொள்ள முடியும் அங்கே போனால் சுருட்டிக் கொள்ள வேண்டும்

9 comments:

said...

நமது வாக்கை சிந்தாமல் சிதறாமல்

" அதிமுக , திமுக " க்கு குத்தாமல் இருப்போம்.....!
only MMK(TMMK)

Anonymous said...

>>முஸ்லிம்களாகட்டும் ஈழம் ஆகட்டும் அல்லது வேறு யாரகட்டும் தமிழகத்தில் இரண்டே நிலைகள் தான் இங்கு ஏதாவது கிடைக்கும் அங்கு எதுவுமே கிடைக்காது. இங்கே தான் முறுக்கி கொள்ள முடியும் அங்கே போனால் சுருட்டிக் கொள்ள வேண்டும் <<

சரியாக சொல்லப் போனால் ஈழத்திற்கு கிடைத்தது தான் உலக மகா அல்வா. உங்கள் தமிழினத் தலைவர் மற்றும் பெரியாரின் உண்மை வாரிசு வீரமணி சேர்ந்து நடத்தும் இந்த கூத்து வரலாற்றில் தனி இடம் பெறும். இங்கே ஏதாவது கிடைக்கும் (அல்வா) அங்கே எதுவுமே கிடைக்காது. சரி தான் - எதுவுமே கிடைக்கவிட்டாலும் பரவில்லை, அல்வா கிடைக்காமல் இருந்தால் போதும்.

Anonymous said...

தனியாக நின்று எத்தனை ஓட்டு வாங்கினாலும் தவறில்லை. அவர்கள் தனியாகவும் நிற்பார்கள் என்பதை 'மனதில் இடம் தருபவர்களுக்கும்','ஏமாற்றுக்காரர்களுக்கும்' தெரியப்படுத்த வேண்டியது முஸ்லீம்களுக்கு தற்போதைய அவசியம்

said...

தலைவர் கருணாநிதி அவர்களுக்கு எங்கள் இதயத்தில் இடம் கொடுத்திருக்கிறோம்
ஒட்டு MMK வுக்கு

said...

தலைவர் கருணாநிதி அவர்களுக்கு எங்கள் இதயத்தில் இடம் கொடுத்திருக்கிறோம்
ஒட்டு MMK வுக்கு

said...

வாங்க ஊர்சுத்தி சாதிக்!

நேத்து ஒரு அரை பக்கம் கிட்ட தட்ட ஒரு பதிவு மாதிரியே பின்னூட்டம் போட்டேன் ஆனா கடைசியா பாருங்க டப்புன்னு நெட்டு புடுகிச்சு!

இப்ப சொல்றேன் கேட்டுகுங்க!

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் என்னும் ஒரு கட்சியே தமிழகத்திலே இல்லை இப்போது. ஆனா தமிழநாடு தவ்கீத் ஜமாத்வும்(அதுக்கு தலைவர் பி ஜே என சொல்லப்படும் பி. ஜெய்னுலாபுதூன்) தவிர தமிழநாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் (அதுக்கு தலைவர் பேராசிரியர் ஜவாகிருல்லாவும் தான்) இது ரெண்டும் போன ந்நாடாளும்ன்ற தேர்தலின் போது தஞ்சையில் ஒன்னா இருக்கும் போது கூடிய கூட்டம் இன்குளீடிங் பெண்கள் அய்யய்யோ சொல்லி மாளாது!

அப்போ ஒரு சேதி வந்துச்சு தலைவர் கலைஞ்ஜரிடம் இருந்து "நான் இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுக்க பாடுபடுவேன். ஒருவேளை நான் அதில் வெற்றி பெற இல்லை எனில் தமிழ்நாட்டில் தனி இட ஒதுக்கீடு செய்வேன்" அபடீன்னு.

உடனே மேடயில் இருந்த பேராசியர் ஜவாகிருல்லா இந்த செய்தியை படித்து காட்டி பின்னே உங்க ஆதரவோடு ஜெயிச்சோம். அது போல இஸ்லாமியருக்கு கலைஞர் தனி இட ஒதுக்கீடு செய்த போது உங்க உணர்ச்சி எங்க போனுச்சு.


ஆனா இதோ பி ஜே போய் கலைஞ்ரை பார்த்து அழகா இன்னும் கொஞ்சம் இட ஒதுக்கீடுன்னு கேட்டிருக்கார்! போகட்டும்1

ஆனா பேராசியர் டபார்ன்னு பிஜேவை கழட்டி விட்டுட்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேறேஅ கழகம் கண்டார்.

விளைவு??? அவருக்கு பிஜேவின் வாக்கு வங்கியை விட நூத்தில் ஒரு பங்கு கூட இல்லையப்பா இல்லை!

ஆனா பி ஜே தலைவர் கலைஞரை சந்தித்து விட்டார்!
தூக்கம் வருதுப்பா அப்பாலிக்கா வரேன்!

நல்லவன் said...

அபிஅப்பா வரலாறு நல்லா படிங்க
//


ஆனா பேராசியர் டபார்ன்னு பிஜேவை கழட்டி விட்டுட்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேறேஅ கழகம் கண்டார்.
//

'கழண்டு' போனது பிஜெ தான்..!!!


//
விளைவு??? அவருக்கு பிஜேவின் வாக்கு வங்கியை விட நூத்தில் ஒரு பங்கு கூட இல்லையப்பா இல்லை!
//

போனதேர்தலில் இடஒதிக்கீடு கிடைத்து வீட்டதுனு பொய் ச்சொல்லி ஜெஜெ கூட இருந்தாரு பிஜெ


இப்போ தான் சொல்லுறீங்க போனதேர்தலில் சொல்லவேண்டியதுதானே..:)


நூத்துல ஒன்னு கூட இல்லாத கட்சிக்கு தான் ஸ்டாலின் போன்மேல போன் பண்ணுகிறார் இன்னைக்கு வரைக்கும்

ராமதாஸ் வந்து சந்திக்கிறார்


உன் திமுக ஆதரவு எல்லாருக்கும் தெரியும்


வரலாறு முக்கியும வருங்கால அமைச்சரே :)

said...

வெற்றியை நோக்கி முஸ்லிம் லீக் என்று ஒரு பதிவு வந்து இருக்கிறது, முஸ்லிம்களுக்கு வெற்றியை அல்வா துண்டு போல அள்ளி கொடுத்து இருக்கிறார். எளிதான காரியத்தை அல்வா சாப்பிடுவது போல் என்று சொல்வார்களே

Anonymous said...

எது எப்படியோ மமக வுக்கு பெரிய ஆப்புவை ரெடிபண்ணிக்கிட்டு இருக்காங்க தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்.

ஒற்றுமை அப்படின்னு மமக போட்ட கோசம் எல்லாம் எடுபடவில்லை முஸ்லிம் மக்களிடம்.

சீட்டுக்காக எதுவேணாலும் செய்வாங்க இந்த மமக காரங்க என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெளிவாக மக்களிடம் கொண்டு செல்லப் போறாங்க.

அப்பத் தெரியும் மமக காரங்களின் காலியான டெபாசீட்.

திமுக விற்கு வேலை செய்யனுமுன்னா வெள்ளை அறிக்கை கேட்டிருக்காங்க இந்த தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்.