Monday, April 13, 2009

முதல்வர் பதவி முட்டாள்களுக்கு உறுத்தல்!

ஈழத்தமிழர்கள் குறித்து வெளிப்படையான தன் எண்ணத்தைச் சொல்லி அல்லது ஈழத்தமிழர்களின் நலனுக்காக கலைஞர் பதவி துறப்பாரா ? என்று அரைவேக்காட்டுத்தானமான கேள்விகள் எழுகின்றன.

ராஜிவ் காந்தி கொலையை திமுக தூண்டிவிட்டு நடத்தியதாக வாக்களர்களை நம்ப வைத்து பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்த ஜெயலலிதாவை அடுத்த தேர்தலின் போதே வாக்காளர்கள் உணர்ந்து கொண்டு வீட்டுக்கு அனுப்பினர். தன் வெற்றிக்கு இராஜிவின் மரணம் மூலதனம் என்பதை ஒப்புக் கொள்ள மறுத்த ஜெ தன் செல்வாக்கால் வெற்றி பெற்றதாக ஒரு கட்டத்தில் அறிவித்து காங்கிரசாருக்கு எரிச்சலை ஏற்படுத்தினர்.

ஜெ வின் அரசியலை நன்றாக புரிந்து கொண்ட மக்கள் அடுத்த தேர்தலில் ஆண்டிப்பட்டியில் அவரை புறமுதுகிட்டு ஓட வைத்தனர். 1996 ல் நடந்த தேர்தலில் கலைஞரின் திமுக ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சிபுரிந்து சமத்துவ புரம், ஏழைப்பெண்களுக்கு இலவச திருமணம் போன்று பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தது.

ஜெ ஆட்சியில் கிராமங்களில் கஞ்சி தொட்டி திறந்தது போன்ற அவல நிலை எதுவும் இல்லாவிட்டாலும் 'பணப் புழக்கம் இல்லை' என்ற பொய்பிரச்சாரத்தை ஆதிக்க பத்திரிக்கைகளுக்கு பேட்டியாக கொடுத்து அதைப்பற்றியே அந்த பத்திரிக்கைகளில் தலையங்கமாக எழுத / பேச வைத்து மக்கள் மனதில் அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தினார் ஜெ. இதற்காக அவரது குலக்கொழுந்துகளான சோ வகையறாக்கள் பெரிதும் உதவினர்.

அதுமட்டுமல்ல லெட்டர் பேடு கட்சிகளையெல்லாம் கூட்டணியில் சேர்ந்து கொண்டு மாபெரும் கூட்டணி என்ற மாயை ஏற்படுத்தியும், மதிமுக - திமுக கடைசி கட்ட மோதல்களில் தனித் தனியாக பிரிந்ததன் மூலம் குறைந்த வாக்கு வேறுபாட்டில் பல இடங்களிலும், மூப்பனார் தாமாக தந்த தமாகா கூட்டணி (செத்தும் கெடுத்தார் இந்த சீதக்காதி) தயவினாலும் அதிமுக வெற்றி பெற்றது.

இதையெல்லாம் அரசியல் அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும், ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு என்ற இமேஜ் அவர் ஆண்டிப்பட்டியில் யானையின் காதில் புகுந்த சிற்றெறும்பான சுகவனத்திடம் தோற்றபோதே உடைந்துவிட்டது. சென்ற தேர்தலில் கூட்டணிக்காக ஜெ எவ்வளவோ முயன்றும் காங்கிரஸ் அதிமுகவை நெருங்கும் வாய்ப்பு அமையவில்லை என்பதால் வேறு வழியின்றி தானே விலங்கு மாட்டிய வைகோவிற்கு தன் கையால் பூச்செண்டு கொடுத்து போஸ் கொடுத்தார். அரசியலில் நேர்மையோ, வெட்கமோ எதுவும் இல்லை என்பதற்கு சாட்சியாக இருவரின் புகைப்படமும் வரலாறு படைத்தது. தமிழின வரலாற்றில் எட்டப்பனுக்கு இணையான இடம் வைகோவுக்கும் கிடைத்தது.

கடைசியாக நடந்த தேர்தலில் அதிமுக இமாலய வெற்றி பெறும் என்றும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வெட்கத்தை விட்டு சோ ராமசாமி போன்றவர்கள் தங்கள் பத்திரிகைகளில் எழுதினார்கள். ஜெ. விசுவாசம் கொண்ட வடநாட்டு பத்திரிகைகள் அதிமுகவுக்கு ஏதோ பெரிய மக்கள் ஆதரவு இருப்பது போலவும், அவர் தென்னாட்டு மார்க்கெட் தாட்சர் போலவும் சித்தரித்து கட்டுரைகளையும், கருத்துக்கணிப்புகளையும் எழுதினார்கள்.

திமுக - கூட்டணி கட்சிகள் வெற்றிபெரும் என்று ஒரு சிலர் மட்டுமே சொன்னார்கள். அவர்களும் கூட திமுக தனித்து ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே சொன்னார்கள். ஏனென்றால் கூட்டணி கட்சிகளுக்கு எட்டாம் வள்ளலை போல இடங்களை வாரியிறைத்து திமுகவை பலமற்றதாக்கியிருந்தார் கலைஞர்.

என்னன்னவோ முயற்சித்தும் அதிமுக வெற்றி பெறமுடியவில்லை. போதாக்குறைக்கு விஜயகாந்த் ஒருபக்கம் அதிமுக வாக்கு வங்கி வாக்காளர்களில் உள்ள திரை ரசிகர்களை இழுக்க, திரைப்பட ஹீரோவுக்கு ஒட்டுப்போடும் வாக்காளர்களின் பெரும் பகுதியை அதிமுக இழந்தது.


********

தற்போது எந்த விதத்திலும் கலைஞர் ஆட்சியை கவிழ்க்க முடியாது என்பதால் ஈழப்பிரச்சனையில் தங்களுக்கு அக்கறை உள்ளது போல் காட்டிக் கொள்வதற்காக கலைஞரைப் பார்த்து 'ஈழத் தமிழர் நலனுக்காக பதவி விலக தயாரா?' என்று கேட்கிறார்கள், இதன் மூலம் கலைஞர் அக்கறை இல்லாதவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்துவது, ஒரு வேளை கலைஞர் கோபப்பட்டு பதவியை தூக்கி எரிந்தால் தேர்தலில் தில்லுமுல்லு செய்து, சோ ராமசாமி மூலமாக யாரையாவது வளைத்து (வைகோ எப்பவுமே அனாதைதான்) மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நப்பாசை ஜெவுக்கும், அவரை ஆதரிக்கும் மரம்வெட்டி கோமாளிகளுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.

கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக தியாகம் செய்யாதவாரா?

இராஜிவ் காந்தி கொலையில் அவருக்கு நேரடி தொடர்பு இருப்பது போல் குற்றம் சுமத்திய போது, மறுத்து எதுவும் பேசாமல் தான் செய்யாத குற்றத்திற்கு தண்டனையாக கிடைத்த தேர்தல் தோல்வியில் துவண்டுவிடாமல் இருந்தது. தன் மீது விழுந்த வீன் பழியை எந்த மேடையிலும் சொல்லிக் காட்டி அனுதாபம் தேடாதது இதெல்லாம் தியாகம் இல்லையா? தான் குற்றமற்றவர், விடுதலை போராட்ட அமைப்புகள் தான் இதற்கெல்லாம் காரணம் என்று அவர் வெளிப்படையாகவே சொல்லி இருக்க முடியும் தானே?

ஏன் சொல்லவில்லை. தானே அவ்வாறு சொன்னால் தமிழர் எவருமே ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்க முன்வரமாட்டார்கள் என்ற உயர்ந்த எண்ணமே காரணம். தான் பேசாமல் இருந்துவிட்டால் அவர் கருத்தையே அக்கறை உள்ள பலரும் ஈழத்தமிழர்கள் குறித்த கருத்தாக பேசுவார்கள் என்பதே காரணம். அவர் வெளிப்படையாக பேசினால் அதை மலின அரசியல் ஆக்கி காங்கிரசிடம் ஆதாயம் அடைய முயல்வார்கள். அது தமிழ்நாட்டு நலனுக்கும், ஈழத்தமிழர் நலனுக்கும் கேடாக போய்விடும் என்பதாலேயே மெளனமாக இருந்தார், இருக்கிறார்.

இப்போது சொல்லுங்கள். கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக தியாகம் செய்யாதவரா ?
முட்டாள்களின் எண்ணத்தில் இருப்பது ஈழத்தமிழர்களின் மீதான அக்கறையா? அல்லது கலைஞர் அமர்ந்திருக்கும் முதல்வர் நாற்காலியா?

16 comments:

Anonymous said...

தமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி குறித்து
எனக்கு இந்தியக் குடி உரிமையும் இல்லை,வாக்குரிமையும் இல்லை,ஆனால் இந்திய விவகாரங்களில் ஈடுபாடு உண்டு.உலகம் சுருங்கி விட்ட நிலையில் அமெரிக்க தேர்தலில் இந்தியருக்கு இருந்த அக்கறையை ஈடுபாடை விட எனக்கு இந்தியாவின் தேர்தலில் அதிகமான ஈடுபாடும் அக்கறை மட்டுமல்ல ,தமிழினத்தைச் சேர்ந்தவள் என்ற முறையில் உரிமையும் உண்டு.

அது மட்டுமல்ல இந்திய மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் ,ஈழத்தமிழரின் உயிர்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்தையும் அவர்களின் அரசியல் உரிமைகளையும் பாதித்து வந்திருக்கிறது.இப்போதும் பாதித்து கொண்டிருக்கிறது.

இந்திய அரசின் இந்த நடவடிக்கைகள் நான் பிறப்பதற்கு ;பல காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டன ஆனால் அதன் பின் விளைவுகளை ஈழத்தமிழர்கள் இப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய வம்சாவளி தமிழர்களின் குடி உரிமையைப் பறிப்பதற்கு இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்ததில் இருந்து கச்சை தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்ததில் தொடர்ந்து ஈழ விடுதலை இயக்கங்களுக்கு முதலில் ஆதரவு கொடுத்து பின்பு அவர்களுக்கு மத்தியில் பிரிவினையைத் தூண்டி சகோதர யுத்தத்தை ஆரம்பித்து வைத்ததில் இருந்து இந்தியாவின் பங்கு தொடர்ந்து கொண்டு போய் அதன் உச்சக் கட்டமாக இந்திய அமைதிப் படையை அனுப்பி பத்தாயிரம் ஈழத்தமிழர்களின் உயிரை எடுத்ததில் இருந்து இன்று இலங்கை அரசின் இனப்படுகொலை யுத்தத்திற்கு உதவி செய்வது வரை இந்திய அரசு ஏதோ ஒரு விதத்தில் ஈழத்தமிழரின் நவீன பின் காலனித்துவ வரலாற்றில் பின்னிப் பிணைந்து தொடர்பு கொண்டுள்ளது.

அந்த விதத்தில்தான் இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் --பெரும்பாலான இந்த நடவைக்கைகள் திரைமறைவில் நடப்பவை.- ஈழத்தமிழரை நிச்சயம் பாதிக்கும். என்பதால் இந்தியாவின் தேர்தலில் அக்கறை காட்டுகிறேன்.
அந்த விதத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

ஒரு காலத்தில் நான் திமுகவின் ஆதரவாகத்தான் இருந்தேன் ,அவர்களின் ஆரம்ப கால கொள்கைகளான தமிழ் உணர்வு,சாதி எதிர்ப்பு ,மதச்சார்பின்மை எளிய பாமர மக்களுக்காக குரல் கொடுக்கும் தன்மை என்பவற்றால் ஈர்க்கப் பட்டேன் ,சமீப காலம் வரை செல்வி.ஜெயலலிதாவுடன் ஒப்பிடும் போது திரு கருணாநிதி பரவாயில்லை என்று நினைத்திருந்தேன்.

ஆனால் திமுக இன்று கொள்கையில் சோரம் போன ,பதவி ஆசையும் பணத்தாசையும் கொண்ட குடும்ப நலனில் மட்டும் அக்கறை கொண்ட ஒரு குடும்ப இயக்கம்மாக மாறிவிட்டது.
அதை விட மோசம் ,ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்பட அதைத் தடுக்க எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் ,இலங்கை அரசுக்கு துணை புரியும் காங்கிரஸ் ஆட்சிக்கு முட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆறு மாதத்துக்கு முன்பு ஆரம்பித்த தமிழ்நாட்டு மக்களின் ஈழ ஆதரவு என்ற மக்கள் கிளர்ச்சியைத் தடுத்ததில் கருணாநிதி அவர்களின் பங்கு பெரியது .அது மட்டுமில்லை ஈழ ஆதரவாளர்களையும் ,தமிழ் உணர்வாளர்களையும் சிறையில் தள்ளி கருத்து சுதந்திரத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் திரு கருணாநிதி காலில் போட்டு மிதித்து உள்ளார் இந்த விஷயத்தில் இவரும் ஜெயலலிதாவிற்கு சளைத்தவர் இல்லை.

ஜெயலலிதா பிரபாகரனைப் பிடியுங்கள் ,போரில் சாவது தவிர்க்க முடியாதது என்று எல்லாம் திருவாய் மலர்ந்து இருக்கிறார்தான் இவை எல்லாம் வாய் மொழிகள்தான் ,அவர் செயல் ரீதியாக இன்னும் ஈழத்தமிழர்களுக்கு அநியாயம் செய்யவில்லை.
ஆனால் முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழர்களை கரிக்கட்டைகளாக ஆக்கும் சிங்கள அரசுக்கு உதவும் காங்கிரசுக்கு ஆதரவு காட்டியதின் மூலம் கடந்த பல மாதங்களாகக் கொல்லப் படும் ஒவ்வொரு தமிழர்களின் சாவுக்கும் மறைமுகமாக உதவி உள்ளார்.

எல்லோரும் சொல்கிறார்கள் ,அவரால் என்ன செய்திருக்க முடியும் என்று.
அவரால் நிறைய செய்திருக்க முடியும் ,ஆறு மாதங்களுக்கு முன்பே துணிச்சலாக நேர்மையாக இதய சுத்தியோடு ஈழத்தமிழரின் விடயத்தில் அவர் நடந்திருந்தால் இந்திய மத்திய அரசின் போக்கில் அவர் மாற்றம் கொண்டுவந்திருக்கலாம் இந்தியாவின் ஆதரவு இருந்த படியால்தான் இந்த சின்ன ஸ்ரீலங்கா இவ்வளவு திமிர்த்தனமாக நடக்கிறது. இந்தியாவும் இலங்கை போரில் சம்பத்தப்பட்டு உள்ளதால்தான் மற்றைய உலக நாடுகளும் ஐநா சபையும் இலங்கைமீது காத்திரமான நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்.
எனவே சொல்லுகிறேன் ,அதிமுக வென்றாலும் பரவயில்லை என்ற நிலைக்கு நான் வந்து விட்டேன்.

ஜெயலலிதா தமிழ் உணர்வு இல்லாதர்தான் ,ஆனால் முதியவருக்கு அது இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.
ஜெயலலிதா மதத்துவேஷக் கொள்கை உள்ளவர்களோடு கூடிக் கொஞ்சுபவர்தான் ஆனால் கருணாநிதி அவர்களும் பாஜக வுடன் கூட்டணி வைத்த்வர்தானே
ஜெயலலிதா ஈழத்தமிழருக்கு எதிரான சில கருத்துகளை சொல்லி இருக்கிறார்,
கருணாநிதி அவர்கள் செய்தே இருக்கிறார்.

ஜெயலலிதா தமிழின எதிரி என்று சொல்லப்படுபவர் ஆனால் எதிரிகளுடன் போராடுவது சுலபம் ,ஏனெனில் அவர்கள் வெளிப்படையானவர்கள்
ஆனால் துரோகிகளோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ,ஏனெனில் அவர்கள் நயவஞ்சகத்தனமாக இருந்து நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்களை அழித்து நம்பிக்கை துரோகம் செய்து முதுகில் குத்துவார்கள்.

ஒருகாலத்தில் அதிமுக வெற்றி பெற்றால் வருத்தபடுவேன் இப்போது அப்படி இல்லை.
காங்கிரஸ் தோற்றால் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்

-வானதி

sorry I have put the same comments on an other blog as well.
but as I am not sure whether that will be published I have put the same comments here,hope you don't mind .

said...

//ஏனென்றால் கூட்டணி கட்சிகளுக்கு எட்டாம் வள்ளலை போல இடங்களை வாரியிறைத்து திமுகவை பலமற்றதாக்கியிருந்தார் கலைஞர்.
//

அப்படியும் கொடுக்க முடியாதவர்களுக்கு சிபி சக்ரவர்த்தி சதையை புறாவுக்குக் கொடுத்தது போல் இதயத்தில் இடம் கொடுத்தார் கலைஞர்.

- இது விடுபட்டுவிட்டது
:)

said...

தமிழச்சிக்கும் கலைஞர் ஒரு சீட்டு கொடுத்திருக்கலாம்.

said...

//சோ ராமசாமி மூலமாக யாரையாவது வளைத்து (வைகோ எப்பவுமே அனாதைதான்) மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நப்பாசை ஜெவுக்கும், அவரை ஆதரிக்கும் மரம்வெட்டி கோமாளிகளுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.
//

யோவ்...காமடி செய்கிறேன் என்ற பேரில் சோ இராமசாமிக்கு இவ்வளவு பவர் இருப்பதாக நினைப்பதெல்லாம் டூ மச்.
:)

said...

//அப்படியும் கொடுக்க முடியாதவர்களுக்கு சிபி சக்ரவர்த்தி சதையை புறாவுக்குக் கொடுத்தது போல் இதயத்தில் இடம் கொடுத்தார் கலைஞர்.//

வாங்க கோவி சார். பார்த்து ரொம்ப நாள் ஆச்சி. மாம்பழம் பழுத்துடும்னு ரொம்ப ஆசையா இருக்கீங்க போலிருக்கு. ஒரு தொகுதி தவிர்த்து மற்ற எல்லா தொகுதிகளிலும் வெம்பிடும் போலிருக்கே?

said...

//தொண்டன் said...
//அப்படியும் கொடுக்க முடியாதவர்களுக்கு சிபி சக்ரவர்த்தி சதையை புறாவுக்குக் கொடுத்தது போல் இதயத்தில் இடம் கொடுத்தார் கலைஞர்.//

வாங்க கோவி சார். பார்த்து ரொம்ப நாள் ஆச்சி. மாம்பழம் பழுத்துடும்னு ரொம்ப ஆசையா இருக்கீங்க போலிருக்கு. ஒரு தொகுதி தவிர்த்து மற்ற எல்லா தொகுதிகளிலும் வெம்பிடும் போலிருக்கே?
//

சேலத்தில் மாம்பழம் பழுத்தா எனக்கென்ன பன்ருட்டியில் பலாப்பலம் பழுத்தா எனக்கென்ன ? பம்பரம் சுழன்றா எனக்கு என்ன ? ஒருத்தனாலும் எனக்கு ஒண்ணும் ஆகப் போறதில்லை. எனக்கு ஓட்டே கிடையாது. தலைவரே, தொண்டரே உங்கள் கொண்டை எனக்கு தெரியும் என்று கூடவா உங்களுக்கு தெரியாது ?
:)

said...

//சேலத்தில் மாம்பழம் பழுத்தா எனக்கென்ன பன்ருட்டியில் பலாப்பலம் பழுத்தா எனக்கென்ன ? பம்பரம் சுழன்றா எனக்கு என்ன ? ஒருத்தனாலும் எனக்கு ஒண்ணும் ஆகப் போறதில்லை. எனக்கு ஓட்டே கிடையாது. தலைவரே, தொண்டரே உங்கள் கொண்டை எனக்கு தெரியும் என்று கூடவா உங்களுக்கு தெரியாது ?
:)//

அதுசரி கோவியார். உங்களை யாரும் நடுநிலைபதிவர்னு எந்த காலத்திலேயும் ஏற்றுகொள்ள போவதில்லை என்றாலும் ரொம்ப மெனக்கெட்டு நடுநிலை இமேஜ் மெயிண்டெயின் பண்ணுறீங்களே. எல்லாம் விழலுக்கு இறைத்தநீர்.

நம்ம கொண்டை எல்லாருக்குமே தெரியும். அது ஒரே கொண்டை. கருப்பு சிவப்பு கொண்டை.

said...

//அதுசரி கோவியார். உங்களை யாரும் நடுநிலைபதிவர்னு எந்த காலத்திலேயும் ஏற்றுகொள்ள போவதில்லை என்றாலும் ரொம்ப மெனக்கெட்டு நடுநிலை இமேஜ் மெயிண்டெயின் பண்ணுறீங்களே. எல்லாம் விழலுக்கு இறைத்தநீர்.

நம்ம கொண்டை எல்லாருக்குமே தெரியும். அது ஒரே கொண்டை. கருப்பு சிவப்பு கொண்டை.//

:) நடுநிலை எழுத்து என்று எவரும் தன்னைத் தானே சொல்லிக் கொள்ள முடியாது. முன்பு கலைஞரை அவதூறு செய்யும் போது நானும் கூட அதை மறுத்து பதிவிட்டிருகிறேன். திராவிட உணர்வாளன் என்றாலும் பெரியாரைத் தவிர மற்றவர்களை புனிதராக நினைக்க நான் கட்சித் தொண்டன் கிடையாது.

said...

//நடுநிலை எழுத்து என்று எவரும் தன்னைத் தானே சொல்லிக் கொள்ள முடியாது. முன்பு கலைஞரை அவதூறு செய்யும் போது நானும் கூட அதை மறுத்து பதிவிட்டிருகிறேன். திராவிட உணர்வாளன் என்றாலும் பெரியாரைத் தவிர மற்றவர்களை புனிதராக நினைக்க நான் கட்சித் தொண்டன் கிடையாது.//

தொண்டன் நீங்கள் கிடையாது நான் தான். அதிருக்கட்டும் சிங்கப்பூரில் நிறைய மரங்கள் உண்டோ? :-)))

said...

//தொண்டன் நீங்கள் கிடையாது நான் தான். அதிருக்கட்டும் சிங்கப்பூரில் நிறைய மரங்கள் உண்டோ? :-)))//

கொண்டையுடன் வால் இருக்கா ? விலங்கு காட்சி சாலைகளும் உண்டு !

Anonymous said...

//தையெல்லாம் அரசியல் அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும், ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு என்ற இமேஜ் அவர் "ஆண்டிப்பட்டியில்" யானையின் காதில் புகுந்த சிற்றெறும்பான சுகவனத்திடம் தோற்றபோதே உடைந்துவிட்டது//
Sugavanam beat in Bargur, not Aandippati.
--Raja

said...

simply i said you are a stupit.

Anonymous said...

இந்த வியாக்கியானத்தை எல்லாம் அங்கு ஈழ்த்தில் செத்துகிட்டிருப்பவனிடம்
போய் உங்களால் விளக்க முடியுமா?

Anonymous said...

CUD U PLS TELL UR GRT LEADER TO STOP MILITARY ASSISTANCE TO SRI LANKA!U PEOPLE R IN POWER NOW BUT U R BRINGING ACCUSATIONS ABT THE PEOPLE WHO R OUT OF POWER!IF U R NOT HELPING SRI LANKAN TAMILS NOW...THEN WHEN?

said...

கட்டுரை மிகவும் நேர்த்தி!!

ஆனால் சிறு திருத்தம் -
ஜெயா தோற்றது ஆண்டிப்பட்டி அல்ல, அது பர்கூர்..(யானை காதில் புகுந்த எறும்பு!!)

தொடரட்டும் உங்கள் பணி!!!!

said...

//சென்ற தேர்தலில் கூட்டணிக்காக ஜெ எவ்வளவோ முயன்றும் காங்கிரஸ் அதிமுகவை நெருங்கும் வாய்ப்பு அமையவில்லை என்பதால் வேறு வழியின்றி தானே விலங்கு மாட்டிய வைகோவிற்கு தன் கையால் பூச்செண்டு கொடுத்து போஸ் கொடுத்தார். அரசியலில் நேர்மையோ, வெட்கமோ எதுவும் இல்லை என்பதற்கு சாட்சியாக இருவரின் புகைப்படமும் வரலாறு படைத்தது. தமிழின வரலாற்றில் எட்டப்பனுக்கு இணையான இடம் வைகோவுக்கும் கிடைத்தது.//

ஆம்!!அரசியலில் நேர்மையோ, வெட்கமோ எதுவும் இல்லை என்பதற்கு சாட்சியாக இருவரின் புகைப்படமும் வரலாறு படைத்தது..


ஆம்!!தமிழின வரலாற்றில் எட்டப்பனுக்கு இணையான இடம் வைகோவுக்கும் கிடைத்தது..