Friday, April 17, 2009

ம.ம.க.வுக்கு ஜெயலலிதா வைத்த செக்

கூட்டத்தோடு கூட்டமாக கலைஞரை கும்முபவர்களுடன் ம.ம.க.வும் சமீபத்தில் சேர்ந்து கொண்டது. முதலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.ம.க. தங்களுக்கு ஒரு தொகுதிக்கு அதிகமாக தரவில்லை என்பதால் முறுக்கிக் கொண்டு போனது. கலைஞராவது ஒரு தொகுதி கொடுக்க முன்வந்தார், ஆனால் அவர் ம.ம.க. வாக்கு வங்கியில் ஓட்டை போட நினைக்கவில்ல. தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்றொரு முஸ்லிம் அமைப்பான முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளார். தி.மு.க.வுக்கு முஸ்லிம் ஓட்டு தேவை இல்லை என்று எழுதிய அதே வலைப்பதிவில் வெற்றியை நோக்கி முஸ்லிம் லீக் என்று சில நாட்கள் கழித்து மற்றொரு இடுகை வந்துள்ளது. ஒரே ஒரு தொகுதியை கொடுத்தாலும் அந்த வெற்றியை மிகவும் எளிதாக்கி கொடுத்து இருக்கிறார் கலைஞர்

முறுக்கிக் கொண்டு போன ம.ம.க.வோ தன் தொகுதிகளுள் ஒன்றாக மத்திய சென்னையை தேர்ந்தெடுத்தது. முஸ்லிம்கள் கணிசமாக இருக்கும் தொகுதி என்பதால் இங்கு போட்டியிட முடிவு செய்தது. தி.மு.க.வின் வாக்கு வங்கியாக கருதப்படும் முஸ்லிம்களின் ஓட்டு இதனால் பிரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் இதனால் தி.மு.க.வின் வெற்றியை அது பாதிக்கும் என்று சொல்லிவிட முடியாது. அ.தி.மு.க.வின் வேட்பாளராக எஸ்.எஸ்.சந்திரன் அறிவிக்கப்பட கழகத்தின் வேட்பாளரான தயாநிதி மாறனுக்கு அதிகம் போட்டி இருக்காது என்று கருதப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் ஜெயலலிதா தன் கட்சி வேட்பாளரை மாற்றியதோடு அல்லாமல் புதிய வேட்பாளராக ஒரு முஸ்லிம் வேட்பாளரை அறிவித்து இருக்கிறார். ஏற்கனவே கழகத்திடம் முறுக்கிக் கொண்டு போன ம.ம.க. தன்னை அ.தி.மு.க. அரவணைக்கும் என்று எதிர்பார்த்தது. ஆனால் ஜெயலலிதாவோ அவர்களை கண்டு கொள்ளாதது மட்டும்மலாமல் அவர்களின் வாக்கு வங்கிக்கே வேட்டு வைத்து இருக்கிறார்

இந்த வேட்பாளர் தேர்வின் மூலம் தேர்தலுக்கு முன்னரே அ.தி.மு.க.வுக்கு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்திய பிரதான கட்சி என்ற பெயர் கிடைத்துள்ளது. மேலும் இந்த வேட்பாளர் தேர்வால் ம.ம.க.வுக்கு போக வேண்டிய முஸ்லிம் ஓட்டுகளும் பிரிக்கப்படும். மேலும் தயாநிதி மாறன் தொகுதி என்பதால் இந்த தொகுதியின் வெற்றியை எந்த அளவுக்கு ஜெயலலிதா எதிர்பார்த்து இருக்கிறார் என்பதும் சந்தேகம் தான். ம.ம.க.வுக்கு ஓரளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பதாலேயே ஜாதி ஓட்டுகளை மட்டுமே எண்ணி பழக்கபட்ட ராமதாஸும் ஓடோடிச் சென்று ம.ம.க.வின் ஆதரவை கேட்டு நின்றார். ஆனால் அதற்கும் வழியில்லாமல் செய்துவிட்டார் ஜெயலலிதா. அவரின் இந்த வேட்பாளர் மாற்ற முடிவால் அ.தி.மு.க.வுக்கு லாபமோ இல்லையோ கண்டிப்பாக ம.ம.க.வுக்கு பெரும் நஷ்டமே மிஞ்சும்

இன்டெல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி திரு.கிரெய்க் பாரட்டுடன் முன்னாள் மத்திய அமைச்சர் திரு.தயாநிதி மாறன்


இவரை உங்களுக்கே தெரியும்






9 comments:

Anonymous said...

புகைப்படங்கள் கலக்கல்

Anonymous said...

ம.ம.க கதை இருக்கட்டும் மைனாரிட்டி திமுக அரசு இன்னும் எத்தனை நாளைக்கு,,, மைனாரிட்டியான ஒரு அரசை மெஜாரிட்டி அரசு போல் நடத்திக் கொண்டிருக்கும் திமுக அ.தி.மு.க ஆகிவிடும் அதாவது அழிந்து கொண்டிருக்கும் தி.முக.

Anonymous said...

please watch this video before voting
கலைஞர் Thank you

said...

//சென்னை தமிழன் said...

please watch this video before voting
கலைஞர் Thank you//

நல்லா பேசுகிறார்...இதை மாதிரி பலர் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில்

said...

//சென்னை தமிழன் said...

please watch this video before voting
கலைஞர் Thank you//

தமிழருவி மணியன் எல்லா தலைவர்களையும் தானே சாடுகிறார், சிலருக்கு கலைஞர் மீது மட்டும் தான் வெறுப்பு. அவர்களையும் இந்த வீடியோவை பார்க்கச் சொல்லுங்கள்

said...

ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்திவிட்டதால் ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்கள் அதிமுகவுக்கு ஓட்டுபோடுவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் திமுக ஆளா? அதிமுக ஆளா? உங்களின் இந்த இடுகைக்கு தேர்தல் முடிந்தபின் நீங்களே பதிலிடுகை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

Anonymous said...

ஒரு தொகுதி கலாச்சாரத்தை ஒழிக்கத்தான் ம ம க ஆரம்பித்து இருக்கிறோம்
எங்களுக்கும் ஒரு தொகுதியா .தேர்தல் சரியான பாடத்தை உங்களுக்கு புகட்டும்
இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்திய தி மு க க்கு மனித நேய மக்கள் கட்சி சாவு மணி அடிக்கும்

said...

இருமேனிமுபாரக், ம.ம.க. ஓட்டுகள் அ.தி.மு.க.வால சிதறும் என்பது உறுதி

said...

//தி மு க க்கு மனித நேய மக்கள் கட்சி சாவு மணி அடிக்கும்//

அங்கே ஒருவர் ம.ம.க.வுக்கு ஆப்படித்து கொண்டு இருக்கிறார் முதலில் அதை போய் பார்க்கவும்