Monday, April 27, 2009

ரவிசங்கர் ஜெயலலிதாவுக்கு காட்டிய சி.டி




ஜெயலலிதாவின் வாயில் இருந்து ஈழம் என்ற வார்த்தையை ஒலிக்க வைத்ததற்காக ரவிசங்கருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். இத்தனை நாள் இவர் வெறும் வாழும் கலை வல்லுநர் என்று மட்டும் தான் நினைத்து வந்தேன் இப்போது தான் தெரிந்தது இவர் பல கலை வல்லுநர் என்பது. ஈழத்தமிழர் என்று யாரும் இல்லை இலங்கை தமிழர் என்று தான் சொல்ல வேண்டும், போர் என்றால் மக்கள் மரிக்க தான் செய்வார்கள் என்று பேசியும், பிரபாகரனை இலங்கையால் பிடிக்க முடியாவிட்டால் இந்திய படை சென்று பிடிக்க வேண்டும் என்று தீர்மானமும் நிறைவேற்றியவர் ஆயிற்றே ஜெயலலிதா


ஆனால் இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒரு விஷயம் இருக்கிறது. இத்தனை வருடம் ஜெயலலிதா கூடவே இருந்து வைகோ ஈழம் பற்றி பேசி வந்தார் அப்போதெல்லாம் ஜெயலலிதா காதில் போட்டுக் கொள்ளவில்லை, மகனின் ராஜ்யசபா சீட்டுக்காக ராமதாஸும் அம்மையார் பக்கம் வந்து தன் சீட்டு பேரத்தை மறைக்க ஈழ்ப் பிரச்சினையை கையில் எடுத்தார் அப்போதும் அம்மையார் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ரவிசங்கர் ஜெயலலிதாவுக்கு போட்டு காண்பித்ததாக சொல்லப்படும் வீடியோ சி.டி.க்கள் போன்ற சி.டி.க்கள் பல மாதங்களாகவே பெரியார் திராவிட கழகத்தினரால் விநியோகிக்கப்பட்டு வருகிறது அப்போதும் ஜெயலலிதா இறங்கி வரவில்லை. ஆனால் ரவிசங்கர் சொன்ன உடனேயே கேட்டுவிட்டார். ஈழம் ஆனாலும் அது அது சொல்வதற்கு கூட தராதரம் வேண்டும் போல் தெரிகிறது. நாளைக்கு ஈழம் தொடர்பாக எந்த உதவியானாலும் வைகோவோ, ராமதாஸோ அல்லது வேறு யாருமோ சொன்னால் ஜெயலலிதா கேட்பார் என்று எதை வைத்து சொல்கிறார்கள் அதற்கும் ரவிசங்கர் அல்லவா வந்து சொல்ல வேண்டும். இதோ தற்போது நடந்து வரும் பிரச்சாரக் கூட்டத்தில் கூட வைகோவை மேடையில் நிற்க வைத்தவர் தானே ஜெயலலிதா

முதலில் கலைஞரை வலைப்பக்கங்களில் வசைமாறி பொழிந்தார்கள், அப்புறம் 49ஓ என்று சொல்லி வந்தார்கள், தற்போது தேர்தல் நெருங்க நெருங்க வெளிப்படையாகவே அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லி வருகிறார்கள். ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தால் தியாகம் என்கிறார்கள் கலைஞர் இருந்தால் நாடகம் என்கிறார்கள் இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது ஏதோ உள்குத்து இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. பூனை வெளியே வந்துவிட்டது என்ற கதையாக தான் இருக்கிறது

மேலே உள்ள படத்துக்கும் இடுகைக்கும் என்ன சம்மந்தம் என்று நினைத்தவர்களுக்கு, அந்த படத்தை கிளிக்கி தெரிந்து கொள்ளவும்

3 comments:

Anonymous said...

இந்த தேர்தலில் வேறு எந்த பிரச்சினையையும் முன் வைக்க முடியாத நிலையில் ஈழம் ஒன்றே வழி என்று நன்றாக தெரிந்து கொண்டார் ஜெயலலிதா. மற்றபடி ரவ்சங்கர், சிடி எல்லாம் வெறும் நாடகமே

said...

அவசரம்.....அவசியம்.....
மலயாளிகள் நாராயனன்,சிவசன்கர மேனொன்.. விஜய் நம்பியார்(?)..அலொக் ப்ரசாத்.....இந்த 4 பேரையும்,கைது செய்து "விசாரிக்க" வேண்டும்!
இவர்கள் தமிழர்கலின் வாழ்வை அழித்தவர்கள்...
பூனைக்கு யார் மணி கட்டுவது?
ஒரு முறை "சரியாக" விசாரித்தால்,எதிர்காலத்தில்,எந்த கொம்பனும் தமிழனுக்கு எதிராக போகமாட்டான்!

Anonymous said...

அவங்கெல்லாம் தேவ பாஷையில் சொன்னா தான் கேட்பாங்க நீர் நீச பாஷையில் சொன்னா யாரு கேட்பாங்க