Monday, September 25, 2006

மந்திரிக்கு இலக்கணமும், இலக்கியமும் கலைஞரே! - கண்ணதாசன்

நிதான புத்தி நேரிய பார்வை
நின்று கண்டறிந்து நெடுவழி செல்லல்
சதாவ தானத் தனிப்பெருந் திறமை
தன்னை யறிந்து பிறர்உளம் நோக்கல்
நதியென ஓடி நாளெலாம் உழைத்தல்
நாடும் மக்களும் நலம்பெற நினைத்தல்
அதிசயச் சொற்றிறன் ஆய்வுறு கூர்மதி
அன்பர் நலத்திலும் அக்கறை செலுத்துதல்
மதியுறு மாண்தகை மந்திரிக் கிவையே
இலக்கண மென்றால் இலக்கியம் அவரே!
கருணா நிதியின் தனித்தமிழ் அரசு
பலநாள் நிலைக்கப் பக்குவம் பெற்றது
வாழிய நண்பர்! வாழிய அமைச்சர்!
வாழிய கலைஞர்! வாழிய தமிழர்!

- கவியரசர் கண்ணதாசன்

3 comments:

said...

லுக்கிலுக்!
கவிஞர் ஓர் குழந்தை போல் ;இதை மாற்றி எழுத வேண்டுமானாலும் உடனே எழுதுவார்.
யோகன் பாரிஸ்

said...

பிறரது கவிதை,கட்டுரைகளை மறு பதிவு செய்யும்பொழுது, அடிக்குறிப்பாக, எழுதப்பட்ட நாள், இதழ் (அல்லது பேசப்பட்ட நாள்,இடம்) குறிப்பிட்டால் ஆவணப்படுத்துவது எளிது;மேற்கோள் காட்டுவதும் எளிதாகும்

இது உங்களால் முடியும்,நண்பரே!

Anonymous said...

கண்ணதாசனும் க‍லைஞரும் இரு‍பெரும் சகாப்தங்கள். யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.