Wednesday, September 20, 2006

கலைஞரின் முதல் குழந்தை!

தவழ்ந்தாடும் - தத்தி நடக்கும் - தணலை மிதிக்கும் - விழும்! எழும்! ஆனாலும் எந்த நிலையிலும் கொண்ட கொள்கையை மண்டியிட வைத்ததில்லை; முன்வைத்த காலைப் பின் வைக்க நினைத்ததுமில்லை!

முரசொலி நான் பெற்ற முதல் குழந்தை!

ஆம்; அந்த முதற் பிள்ளைதான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்போல கிண்கிணி அணிந்த கால்களுடன் பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்க ``சென்று வா மகனே! செருமுனை நோக்கி!'' என அனுப்பி வைக்கப்பட்ட அன்புப் பிள்ளை!

கலைஞர் (முரசொலி - 11.3.1984)

4 comments:

said...

luckylook,
அண்ணா இறந்தபோது, கலைஞரின் இரங்கற்பா("மூன்று எழுத்து,மூன்று எழுத்து" என்று முடியுமே) கிடைத்தால் பதிவு செய்யவும். Audio link இருந்தால் இன்னும் வசதி.

நன்றி

said...

லக்கி கலக்கிறீங்க..! எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி தோணுது..?

சூப்பர் மச்சி..!

said...

கலைஞரின் உடன்பிறப்புக்கு கடிதங்கள் புகழ்பெற்றவை. அதேபோல் அண்ணாவின் தம்பிக்கு என்ற கடிதங்கள் மிகப்புகழ்பெற்றவை எனினும் நான் வாசித்ததில்லை. உங்களிடம் இருந்தால் பதிவிடுங்களேன் லக்கி.

ஆவலுடன்
தம்பி

said...

//அண்ணா இறந்தபோது, கலைஞரின் இரங்கற்பா //

நான் இரசித்த சில வரிகளை இங்கே சொல்லிவிடுகிறேன்...

1. ஆள்காட்டி விரல் காட்டி நின்றாய் அண்ணா!!
அய்யகோ அன்றே தெரியாமல் போனது நீ மறைவதற்கு இன்னும் ஓரே ஆண்டே உள்ளது என்று.

2. எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்
இதை தாங்க எமக்கேதண்ணா இதயம்