Wednesday, April 18, 2007

கலைஞர் பொன்விழாவுக்கு வர ஜனாதிபதி ஏன் மறுத்தார்?

துக்ளக் பாணியிலேயே நாமும் சிந்தித்துப் பார்த்தால் கலைஞர் பொன்விழாவுக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ள ஏன் மறுத்துவிட்டார் என்று மிக எளிதாக புரிந்துவிடும். அது வேறு ஒன்னுமில்லீங்கோ, 80 வயதான சென்னா ரெட்டியையே தனக்கு சாதமாக அரசியல் பண்ணவில்லை என்ற காரணத்திற்காக அவதூறு பரப்பிய செல்வி ஜெயலலிதா அவர்கள், அவர் வேண்டுகோளுக்கு எதிராக பொன்விழாவில் கலந்து கொண்டால் நாளை தன்னைப் பார்த்து என்ன சொல்வாரோ என்று எண்ணி தான் ஜனாதிபதி பொன்விழா அழைப்பை ஏற்று கொள்ள மறுத்துவிட்டார்

25 comments:

Anonymous said...

பின்ன?
அம்மான்னா சும்மாவா?

NERUPPU SIVA

said...

உடன்பிறப்பு!

இந்த வலைப்பூவுக்கு நீங்களும் அட்மின் தானே? செட்டிங்க்ஸ் எல்லாம் மாற்ற முடிகிறது இல்லையா? டெம்ப்ளேட்டை சூப்பராக மாற்றுங்கள்!

said...

Nanbare, valathu oorathil irukum antha Karupu nira pattaiku pathilaaga, Thalaivarin Pugaipadathai vaithaal nandraaga irukume, Ithu oru aalosanai thaan. Thavaraaga eduthukolla vendaam.

said...

ஒரு ஜனாதிபதி சட்ட சபையில் கூட பேச இயலாத நிலையில் உள்ளதால் ஆட்சியை கலைக்க சொல்லாமல் இருந்தால் சரி தான்.

Anonymous said...

அப்பாடி, நல்ல வேலை செய்தார் கலாம்.....

சரிங்க, 50 வருடங்களில் 5 வருடம் வெருமனே கை எழுத்து மட்டும்தானே போட்ட்டார். இன்னுமொரு 5 ஆண்டுகாலம் ஜெயித்தவுடன் ரிசைன் பண்ணிட்விட்டாரே. இதையெல்லாம் எப்படி கணக்கில் சரி செய்தார்கள். சபை ரெக்கார்டெல்லாம் மாத்தி எழுதிட்டாங்களா?

said...

தம்பி! நீங்க பிறக்கும் முன்னே அரசியலுக்கு வந்தவர் டாக்டர் கலைஞர், அதனால உங்களுக்கு பொன்விழா என்றால் புரியாததில் ஆச்சர்யம் இல்லை

Anonymous said...

உடன்பிறப்பண்ணே,

நான் பிறந்து 10 வருடங்கள் கழித்துத்தான் உங்காளு முதல்வரானார். நீங்க உடன்பிறப்பானதென்னமோ லேட்டாக இருக்கலாம்...

அதெல்லாம் சரி, நான் முந்தைய பதிவில் கேட்ட கேள்விக்கென்ன பதில்?

said...

உங்களுடைய மொக்கை கேள்விக்கு கழகத்தின் சார்பாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக பதில் அளிக்கப்பட்டுவிட்டது

Anonymous said...

ஆமா, தெரியாமத்தான் கேக்கறேன். பெரியார், அண்ணா, கலைஞர் பரம்பரையில் அடுத்து ஸ்டாலின் தானே வரவேண்டும்? உங்க டெம்ப்ளேட் ஏன் பேராசிரியரைக் காட்டுது? அவர் நிரந்தர நம்பர் 2 தானே? இதை கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Anonymous said...

கேள்வி மொக்கையோ, பொக்கையோ...கழக உடன்பிறப்பான நீங்க எனக்கு கொஞ்சம் தெளிவாக்குங்களேன்....நான் முரசொலி, சங்கொலி, தீக்கதிர், நமது எம்ஜியார் எல்லாம் படிக்காதவன் அதற்காகவாவது?.

said...

//நான் முரசொலி, சங்கொலி, தீக்கதிர், நமது எம்ஜியார் எல்லாம் படிக்காதவன்//

ஆனா துக்ளக் மட்டும் படிப்பீங்கன்னு தெரியுது

said...

//இதை கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்//

"அ"ந்த கழகத்தின் சார்பாக தானே

Anonymous said...

//அப்பாடி, நல்ல வேலை செய்தார் கலாம்.....

சரிங்க, 50 வருடங்களில் 5 வருடம் வெருமனே கை எழுத்து மட்டும்தானே போட்ட்டார். இன்னுமொரு 5 ஆண்டுகாலம் ஜெயித்தவுடன் ரிசைன் பண்ணிட்விட்டாரே. இதையெல்லாம் எப்படி கணக்கில் சரி செய்தார்கள். சபை ரெக்கார்டெல்லாம் மாத்தி எழுதிட்டாங்களா?

//

answer Pls

said...

//answer Pls//

பண்ணியாச்சு...

Anonymous said...

//பண்ணியாச்சு... //

எங்க? பண்ணிங்க?....இந்த பதிவிலும், பின்னூட்டங்களிலும் ஏதுமில்லை....ஆக மொத்தம் உடன்பிறப்பிடம் விடையில்லை.....

Anonymous said...

//பண்ணியாச்சு... //

பண்ணியாச்சுன்னா?...

அரசு ஆவணங்களை மாற்றி எழுதிட்டாங்களா?

said...

//பண்ணியாச்சுன்னா?...

அரசு ஆவணங்களை மாற்றி எழுதிட்டாங்களா?//

ஆமாம், சென்ற ஆட்சியிலேயே அதெல்லாம் பண்ணியாச்சு

said...

//எங்க? பண்ணிங்க?....இந்த பதிவிலும், பின்னூட்டங்களிலும் ஏதுமில்லை....ஆக மொத்தம் உடன்பிறப்பிடம் விடையில்லை.....//

ஐயா, கழக செய்திகளை தொடர்ந்து கவனித்து வந்து இருந்தால் உங்களுக்கு விடை கிடைத்திருக்கும்

said...

Hello Brother,

I would like to post my comments in tamil. But I dont know how to type in tamil in Blog spots. Can you pls help me? I am using IE 6.0 and Mozhilla 1.5.

Thank U.

said...

நண்பர் ஜெயகணபதி!

இந்த வலைதளத்தை போய் பார்க்கவும்

http://www.suratha.com/leader.htm

இந்த சேவை IEல் மட்டுமே வேலை செய்யும்

Anonymous said...

//தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர்//

இந்த தமிழினத்தில் பார்பனரும் அடக்கமா என்பதற்கு விளக்கம் தேவை.
இதற்கு முன் வந்த அனானி கேட்ட அதே கேள்விக்கும் விளக்கம் தேவை. தளபதியின்றி மற்றொருவரை முன்னிருத்தும் தங்கள் நோக்கம் என்ன?

அப்புறம், தலைவர் கடந்த 5 வருடங்களாக சட்டசபைக்கு போகாமல் இருந்ததற்குக் காரணமும் சென்னா ரெட்டி மேட்டர்தானா? (அவருக்கும் 80க்கு மேல ஆச்சில்ல?)

said...

//இந்த தமிழினத்தில் பார்பனரும் அடக்கமா என்பதற்கு விளக்கம் தேவை//

சிலர் அவர்களாகவே நம்மவா, மத்தவா என்று பிரித்துக் கொண்டால் அதற்கு கழகம் பொறுப்பாகாது கழகத்தை நிறுவிய அறிஞர் அண்ணா அவர்கள் ஒன்றே குலம் என்று தான் சொன்னார்

//தளபதியின்றி மற்றொருவரை முன்னிருத்தும் தங்கள் நோக்கம் என்ன?//

முன்னிலைப்படுத்தினாலும், பின்னிலைப்படுத்தினாலும் தளபதி என்றுமே மக்கள் பணியில் முன் நிற்பவர். உங்களுக்கு கழகத்தின் மேல் உள்ள அக்கறைக்கு மிக்க நன்றி

//அப்புறம், தலைவர் கடந்த 5 வருடங்களாக சட்டசபைக்கு போகாமல் இருந்ததற்குக் காரணமும் சென்னா ரெட்டி மேட்டர்தானா? (அவருக்கும் 80க்கு மேல ஆச்சில்ல?)
//

இது போன்று அவதூறு பரப்பும் புத்தி உடன்பிறப்புகளுக்கு கிடையாது

said...

கலைஞரின் உழைப்பு பிரமிக்கத்தக்கது. அவருடைய கொள்கைகளில் ஒத்துப் போகாவிட்டாலும், அவருடைய உழைப்பிற்கும், எடுத்த காரியத்தை முடிக்க அவர் காட்டும் துணிவுற்கும் தலை வணங்குகிறேன். இந்த பொன்விழாவிற்கு அவரை விட தகுதி வேறு யாருக்கும் கிடையாது. இதை சபை வளாகத்தில் நடத்தாமல், சபைக்கு அருகிலேயே வெளியில் நடத்தியிருந்தால் முதல் குடிமகனும் வந்திருப்பார், மற்ற கடை நிலை தொண்டனும் வந்து வாழ்த்த ஒரு வாய்ப்பாகியிருக்கும். விழாவை வெளியில் நடத்தி விட்டு, சபையில் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றி கலைஞரை கவுரவித்திருக்கலாம்.

Anonymous said...

////அப்புறம், தலைவர் கடந்த 5 வருடங்களாக சட்டசபைக்கு போகாமல் இருந்ததற்குக் காரணமும் சென்னா ரெட்டி மேட்டர்தானா? (அவருக்கும் 80க்கு மேல ஆச்சில்ல?)
//

இது போன்று அவதூறு பரப்பும் புத்தி உடன்பிறப்புகளுக்கு கிடையாது ////

உங்களோட நல்ல காமெடிங்க. இந்த பதிவே ஒரு உண்மையான மாமனிதனைப் பற்றித்தான் எழுதியிருக்கிறீர்கள். கலாமென்றால் அப்படி பயப்படுவார்;ஆனால் கலைஞருக்கு அது பொருந்தாது. 'அவ'தூறு, உடன்பிறப்பு, அது, இதுன்னு ஜல்லி அடிக்க வேண்டியது. நல்ல கொளுகைங்க.

said...

சென்னா ரெட்டி விஷயத்தை உங்கள் வசதிக்காக நீங்கள் மறந்திருக்கலாம், அதை இந்த சமயத்தில் ஞாபகப்படுத்த வேண்டியது எங்கள் கடமை. நாங்கள் இது போன்று அவதூறு செய்வதில்லை