Tuesday, May 05, 2009

தமிழர்களே யாருக்கு உங்கள் ஓட்டு?

தி .மு. க அல்லது அ .தி .மு .க அல்லது விஜயகாந்த் அணிக்கு அளிக்காத வாக்கு உபயோகம் இல்லை. டில்லியில் மத்திய ஆட்சியை அமைக்க போகும் அரசை தீர்மானிக்கும் தேர்தலில் சின்ன அணிகளுக்கு ஒட்டு போடுவது எதையும் சாதிக்காது. எனவே நன்கு சிந்தித்து நல்ல அணிக்கு ஓட்டளிக்க வேண்டும்.

காங்கிரசை கவனித்தால்.

1. இப்போதுள்ள பிரதமர் மன்மோகன் சிங் குறை சொல்ல முடியாதவர்.

2.இந்த 5 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாதவகையில் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

3. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மூலம் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

4. முன் எப்போதும் இல்லாதவகையில் நெடுஞ்சாலைகள் அகல படுத்தப்பட்டு உலகத்தரத்திற்கு போடப்பட்டு வருகின்றன .

5.பல்வேறு உலக தொழிற்சாலைகள் தமிழ் நாட்டில் அமைக்க பட்டு வருகின்றன.

6. இரயில் போக்குவரத்துக்கு மேம்பட்டுள்ளது.

7. மின்சாரம், இரயில் , பஸ் கட்டணம் ஏற்றபடவிலை.

8. புதிய மேம்பாலங்கள் பல்வேறு சாலைகளில் கட்டப்பட்டு போக்குவரத்து நெருக்கடி குறைக்கப்பட்டுள்ளது. கத்திபாரா ஜங்ஷனில் இப்போது ஒரு மணித்துளி கூடநெரிசலில் காத்து நிற்க வேண்டாம்.

9.பல்வேறு வேலை வாய்ப்பு திட்டங்கள். ( கணிப்பொறியால் )

10.அரசாங்க உழியர்களுக்கு சம்பள உயர்வு ( கணிப்போறி வேலைக்கு சமமாக) .

11. பல் வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு புதிய பஸ் விடப்பட்டுள்ளது.

12. அரசு உழியர்களுக்கு சிறப்பு மருத்துவ ஏற்பாடு


பல்வேறு மக்கள் நல பணிகள். உதாரணமாக- கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்ட உணவுக்காக நிதி உதவி, ஏழை பெண்கள் திருமண உதவி , நூறு நாள் வேலை திட்டம், இலவச டிவி, காஸ் அடுப்பு, விவசாய கடன் தள்ளுபடி, இனிமேல் விவசாய கடன்களுக்கு வட்டி கிடையாது, உழவர் சந்தை போன்ற திட்டங்கள்.

புதிய வரி இல்லாமல், கட்டணங்களை ஏற்றாமல், இவ்வளவு திட்டங்களை கொண்டு வருவதற்கு வசதியாக இரண்டு அரசுகளும் ஒத்த கூட்டணியாக இருக்கவேண்டும்.
எனவே தி. மு.க அணிக்கு வாக்களித்தல் நமக்கு நன்மை உண்டு.

இதை படிப்பவர்கள் பலர் நல்ல வேளையில் இருக்கலாம் . ஏன் இலவச திட்டங்கள் நீங்கள் என கேட்கலாம். ஏழைகளும் மக்கள் தான். நமது சாப்பாடு அவர்களின் வியர்வையில் விளைந்த முத்து என எண்ணி பார்க்க வேண்டும். அவர்களால் விவசாயத்தின் மூலம் கிடக்கும் வருவாயில் சேமிக்க முடியாது. எதுவும் வாங்க முடியாது. நம்மால் முடிந்த அளவு உதவி செய்யவேண்டும். அப்படி சேயும் உதவி கடவுள்களுக்கு சென்று சேரும்.

அப்படி இல்லாவிட்டால் ஜெயா உதவியுடன் மதிய ஆட்சி வந்தால், கலைஞரை குறை கூறவே ஜயாவிற்கு நேரம் போதாது.

எனவே நன்கு சிந்தித்து ஒட்டு போடுங்கள். கருணை உள்ள கலைஞருக்கா? அல்லது ஒரே கையெழுத்தில் ஒரு லட்சத்து எழுபத்திரெண்டாயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பி அவர்கள் குடும்பத்தை நிர் மூலமாக்கிய ஜெயாவுக்கா? எண்ணி பாருங்கள். .உங்கள் வீட்டு பெண்மணிகள், குழந்தைகள் ஆகியோரை கேளுங்கள். பின் ஒட்டு போடுங்கள்.

(நன்றி : உமா)

12 comments:

said...

கண்டிப்பாக கருணாநிதி கட்சிக்கு எனது(எங்களது)ஓட்டு இல்லை,இதற்காகவே தமிழ்நாடு வருகின்றேன்.

Anonymous said...

//ராவணன் said...
கண்டிப்பாக கருணாநிதி கட்சிக்கு எனது(எங்களது)ஓட்டு இல்லை,இதற்காகவே தமிழ்நாடு வருகின்றேன்.//

வாங்கோண்ணா. நீங்க வந்தும் பிரயோசனமில்லை. உங்களுக்கு முன்னாடியே நாங்க போட்டுருவோம்.

said...

//முன் எப்போதும் இல்லாதவகையில் நெடுஞ்சாலைகள் அகல படுத்தப்பட்டு உலகத்தரத்திற்கு போடப்பட்டு வருகின்றன .//


இது வாஜ்பாய் காலத்தில் போடப்பட்ட திட்டமாம்! என் நண்பர் சொல்கிறார்!
அதை நீங்கள் போட்டதாக சொல்லி கொள்கிறீர்களாம்.

நான் சொல்லிவிட்டேன் எனது நண்பர் லக்கி பொய்யே பேச மாட்டார், எழுத மாட்டார்ன்னு, நான் சொல்றது சரி தானே!

said...

>>>> பஸ் கட்டணம் ஏற்றபடவிலை <<<

:-)))))))))))))))

said...

லக்கி எழுதுனதுன்னு படிக்க வந்தேன். படிச்சிட்டு பயந்திட்டேன்...

said...

காங்கிரசுக்கு வோட்டு போடுங்கள் --- எனது வலைப்பதிவில் பாருங்கள் ...

http://kulambiyagam.blogspot.com/2009/05/1.html

http://kulambiyagam.blogspot.com/2009/05/2.html

-Gokul

Anonymous said...

//இது வாஜ்பாய் காலத்தில் போடப்பட்ட திட்டமாம்! என் நண்பர் சொல்கிறார்!
அதை நீங்கள் போட்டதாக சொல்லி கொள்கிறீர்களாம்//

Even though the plan was approved during Vajpayee, During BJP period they allotted money only for north India. T.R.Balu took charge for high ways department he allotted more funds to T.N than any other state and started the work in full swing.

Subu

said...

இது வாஜ்பாய் காலத்தில் போடப்பட்ட திட்டமாம்! என் நண்பர் சொல்கிறார்!
அதை நீங்கள் போட்டதாக சொல்லி கொள்கிறீர்களாம்.//

இதென்ன வம்பாப் போச்சு? சேது சமுத்திரமும் கூட வாஜ்பாய் காலத்துல போட்டதுதான். இப்ப பல்டி அடிக்கலையா?

நமிதா said...

உங்க அலும்புக்கு அளவே இல்லை !!!!

said...

muthal muraiyay ennai retta ilaikku vaakkaLikka vaiththa seyal singam pechu puli Dr.kalainjaruku nandri

said...

அண்ணா சந்திரிகா மற்றும் ஜெ படங்களை பொருத்தமாகத்தான் போட்டிருக்கிறீங்க..

ஏன்னா.. சந்திரிகாவே தற்போது சொல்லிட்டா.. கொழும்பு அரசுகள் எதுவும் தமிழர்களின் பிரச்சனையை சரியான வழியில் தீர்க்க விரும்பாததால் தமிழ்மக்கள் இயல்பாகவே புலிகள் பக்கம் போயிட்டாங்க என்றும்..

தான் உட்பட எல்லா அரச தலைவர்களுமே தவறிழைத்ததாகவும் மகிந்த தவறிழைத்துக் கொண்டிருக்கிறார் என்றும்.. அவா சொல்லியிருக்கிறா..

அதனாலேயோ என்னவோ கட்சியில் அவ இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டிருக்கிறா..

யாருக்குத் தெரியும்.. சந்திரிகாவே தனி ஈழம்தான் இனி சாத்தியம் என சொன்னாலும் சொல்வார்..

அதனால பொருத்தமாத்தான் படம் போட்டிருக்கிறீங்க..

அப்புறம். பிரபாகரன் தனது நண்பர் என சொன்னதற்கு - சிறிலங்கா என்ன சொன்னது தெரியுமா..

நமது நண்பர் அதாவது கலைஞர்.. பிரபாகரனை நண்பர் என்பது கவலையளிக்கிறது..

:)
அரோகரா...

Anonymous said...

//கொழுவி said...

அண்ணா சந்திரிகா மற்றும் ஜெ படங்களை பொருத்தமாகத்தான் போட்டிருக்கிறீங்க.//

சந்திரிகாவின் ஒற்றை கண் போனது யாரலங்க அண்ணா???