Thursday, October 09, 2008

ஓரணியில் திரளக் கூடாதோ?

சரித்திரம் படைத்த தமிழர்
சாகிறார் என்ற செய்தி
செவியினில் எட்டியவுடன்
கதவு திறந்தது - மத்தியப் பேரரசு - நம்
கதறல் கேட்டு; கண்ணீர் துடைக்க
கரமும் நீட்டியது.

நாடு கடந்து வாழ்கின்ற
நார்வே தமிழ்ச் சங்க நண்பர்களும்;
நம்பிக்கை துளிர்த்திடக் கடிதம் எழுதி
நன்றி தெரிவிக்கின்றார்! இலண்டன்
நாடாளு மன்றத் தமிழ் உறுப்பினர் குழுவின்
நற்றமிழர் சார்பில் நமது முயற்சியைப் பாராட்டி
வீரேந்திர சர்மா வெளியிடுகிறார்,
விடியல் தோன்றுமென்று!
வெந்த புண்ணுக்கு மருந்தாக வன்றோ
வெளிநாட்டில் வாழ்கின்ற இன உறவுத்
தமிழர்களின் இதயம் துடிக்கிறது!
அமெரிக்க மருத்துவர் பஞ்சாட்சரம் என்பார்
அடைந்திடும் மகிழ்ச்சிக்கு அளவு தான் ஏது?

இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் சேனாதிராஜா, எம்.பி.,
இதயம் மலர இனிய வாழ்த்துக் கூறி இன்புறுகின்றார் -
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள் -
வாழ்த்துக்களை வாரியன்றோ இறைக்கின்றார்
வற்றாத அன்பைப் பொழிந்து இலங்கையில்
பொற்றாமரை போல் அமைதி பூத்திட தவமிருக்கின்றார் -
உலகத் தமிழ்ச் சாதி ஒன்று திரண்டு ஓர் உளம் கொண்டு
உதயமாகட்டும் ஈழத்தில் அமைதியென்று இறைஞ்சி நிற்கும்போது;
இங்குள்ள தமிழரிடை ஆயிரம் அரசியல் வேறுபாடு உண்டெனினும்
மூட்டை கட்டி அவற்றையெல்லாம் வைத்து விட்டு -
ஒன்றுபட்டு இலங்கைத் தமிழர் கேட்டை நீக்கிட
ஓரணியில் தான் திரளக் கூடாதோ?

- தலைவர் கலைஞர்

7 comments:

said...

ஈழ்த் தமிழஅருக்காக தன் இளமை காலத்தை திமுகவுக்காக அர்ப்பணித்த வைகோவை நம் தமிழ் தலைவர் கலைஞர் பாராட்டிய செயல்தான் நாடு அறியாதோ.

வவுனியா மக்களின் மீது வாஞ்சையோடு இருக்கிறார் வைகோ என்பதை கண்டு மகிழ்ந்த கலைஞர் முரசொல்யில் கட்டம் கட்டி மகிழ்ந்த காட்சி வரலாறு உள்ள வரை நம் மனதிலே இனித்திடுமே.

ஓய்வு இல்லாமல் இலங்கை தமிழார் இன்னல் குறித்து ஒப்பாரி வைக்கிறார் வைகோ என்பதை கண்ட திருக்குவளையார் ஒன்பது மாவட்ட செயாலர்கல்யும் (tak lakkumanan, rathinaraj, tangapandiyan, veerapandiyar, kannappan, senji, ganesamorthi, suba thangavelan..)சேர்த்து அல்லவா பார்ரடி மகிழ்ந்தார்.

இன்னும் எத்தனயோ செய்திகள் எழுதிக்கொண்டே போகலாம்.

குப்பன்_யாஹூ

said...

//உலகத் தமிழ்ச் சாதி ஒன்று திரண்டு ஓர் உளம் கொண்டு//

ஒற்றுமையின் மூலம் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதை மறுபடியும் உணர்த்தியுள்ள கவிதை.

பதிவுக்கு நன்றி லக்கி.

said...

அம்மாவின் ஆணவத்தையும்
கலைஞர் மற்றவர்களோடு ஒத்துப்போகும்
தன்மையையும் ஒப்பிட்டுப்பார்த்தால்
பிரமிப்பாக இருக்கிறது.

கண்டிப்பாக எல்லா
அரசியல் தலைவர்களும் ஒன்று சேர்ந்து
குரல் கொடுக்க வேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றோம்

said...

பழங்கதை பேசாமல் இப்போது ஒன்று திரண்டு இருக்கும் தமிழக கட்சிகளை வாழ்த்தி பாராட்டுவோம் குப்பன்_யாஹூ, ஈழதமிழர் வாழ்வு மலர ஒன்றுபடுவோம்.

said...

//சரித்திரம் படைத்த தமிழர்
சாகிறார் என்ற செய்தி
செவியினில் எட்டியவுடன் //

லேட்டா இருந்தாலும், லேட்டஸ்டா கலைஞர் எடுக்கும் முயற்சி முழு அளவில் ஈழத்தமிழர்களுக்கு சாதகமாய் அமைந்து அவர்கள் இன்னலகன்று, உயிர்பயமின்றி, எல்லா உரிமைகளோடும் வாழ வழிசெய்ய வேண்டும் என்பதே என்போன்றோரின் ஆசை. இவரது காலத்தில் அதை செய்து முடித்தால் வரலாறு அவரை வாழ்வாங்கு வாழ்த்தும் என்பதில் எவ்வித ஐய்யமும் இல்லை.

Anonymous said...

செய்கை 1 விளம்பரம் 1000 என்றல்லவா இது இருக்கிறது.
ஈழத்தமிழருக்கு ஆதரவாக
குரல் கொடுத்த நெடுமாறனையும்,
பிறரையும் இவர் எப்படி மதித்தார்
என்பதை உலகறியும். தில்லிக்கு
சென்று மன்மோகன் சிங்கிடம்
எடுத்துத் சொல்லி இந்தக்
காலக்கெடுவிற்குள் இதை
செய்ய வேண்டும் என்று கோராமல்
தந்தி அனுப்பு, தபால் போடு என்று
நாடகமாடுகிறர்.ஈழப்பிரச்சினையில்
ஜெ.யின் கை ஒங்கி விட்டால்
தனக்கு ஆபத்து என்று என்ணி
கவிதை வடிக்கிறார்.

Anonymous said...

அய்யா குப்பன் யாஹூ அவர்களே,


\\
ஈழ்த் தமிழஅருக்காக தன் இளமை காலத்தை திமுகவுக்காக அர்ப்பணித்த வைகோவை நம் தமிழ் தலைவர் கலைஞர் பாராட்டிய செயல்தான் நாடு அறியாதோ.
\\

அன்று முதல் இன்று வரை வைகோவின் ஈழத் தமிழர் மீதான அக்ககரையைப் பாராட்டி வருபவர்தான் கலைஞர்,

சென்ற முறை பொடாவில் சிறையில் வைகோ இருந்த போது, அவரை பலமுறை சந்தித்து அவரை சிறையில் இருந்து வெளியே வர செய்தவர்தான் கலைஞர்.

தற்போது கூட ஈழத் தமிழர் போராட்டங்களில் கலந்து கொள்ள வருமாறு அழைத்ததே வைகோவிற்கு கலைஞர் செய்த மரியாதைதான்.

\\
வவுனியா மக்களின் மீது வாஞ்சையோடு இருக்கிறார் வைகோ என்பதை கண்டு மகிழ்ந்த கலைஞர் முரசொல்யில் கட்டம் கட்டி மகிழ்ந்த காட்சி வரலாறு உள்ள வரை நம் மனதிலே இனித்திடுமே.
\\

திமுகவின் தலைவரான தனக்குத் தெரியாமலேயே இலங்கை சென்று வந்தது மட்டும் இல்லாமல் அந்த செய்தியை பத்திரிகைகளில் புகைப்படத்துடன் வெளியிட்டுக் கொண்ட வைகோவை கடிந்து கொள்ளாமல் அன்று தாயுள்ளத்துடன் பாராட்டி மகிழ்ந்தவர்தான் கலைஞர்

\\

ஓய்வு இல்லாமல் இலங்கை தமிழார் இன்னல் குறித்து ஒப்பாரி வைக்கிறார் வைகோ என்பதை கண்ட திருக்குவளையார் ஒன்பது மாவட்ட செயாலர்கல்யும் (tak lakkumanan, rathinaraj, tangapandiyan, veerapandiyar, kannappan, senji, ganesamorthi, suba thangavelan..)சேர்த்து அல்லவா பார்ரடி மகிழ்ந்தார்.
\\

கலைஞரைக் கொலை செய்து விட்டு திமுக தலைவர் பதவியை அடைய திட்டமிட்டு உள்ளார் வைகோ, என்ற மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கையைப் பார்த்து அதனால் திமுகவில் இருந்து கட்சியின் சட்ட திட்டங்களின் படி நீக்கப் பட்டவர்கள்தான் வைகோவும் அவரது சகாக்களும்.

இவ்வளவுக்குப் பிறகும் வைகோவை மன்னித்து தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டவர்தான் கலைஞர்.

இப்போது ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

\\
இன்னும் எத்தனயோ செய்திகள் எழுதிக்கொண்டே போகலாம்.
\\

எழுதுங்கள், பதில் சொல்லத் தயார்...........