Friday, October 03, 2008

கலைஞரின் எண்ணி பார்க்க முடியாத சாதனைகள்


ஆயிரம் விளக்கு மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிகளில் மானிய விலையில் மளிகைப் பொருட்களை வழங்கி மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது :-

உத்தமர் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள அற்புத திட்டமான மானிய விலையில் 10 மளிகை பொருட்களை வழங்கும் விழாவில் கலந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இன்று சென்னை மாநகரில் உள்ள 14 சட்டமன்ற தொகுதிகளிலும், மேலும், தமிழகம் எங்கும் உள்ள நகரம், ஒன்றியம், கிராமம் தோறும் இந்நிகழ்ச்சி எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2006 ஆம் ஆண்டு 5 ஆம் முறையாக தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்காக எத்தனையோ திட்டங்கள், எண்ணிப்பார்க்க முடியாத சாதனைகள் இந்த ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுவருகிறது.

2006 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் அளித்த உறுதி மொழிகள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். கிலோ அரிசி ரூ. 2 க்கு வழங்குவோம் என்று தேர்தல் நேரத்தில் சொன்னோம். அப்போது, எதிர்கட்சியினர் இது முடியுமா ? நடக்குமா ? சாத்தியமா ? என்றனர், மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக நாம் சொன்னதாக விமர்சனம் செய்தனர். ஆனால், எதிர்கட்சியினர் பொய் பிரச்சாரத்தை, நீங்கள் நம்பவில்லை. தலைவர் கலைஞர் அவர்கள் அளித்த உறுதிமொழியை நம்பினீர்கள், வாக்களித்தீர்கள்.

வெற்றிபெற்ற தலைவர் கலைஞர் கோட்டைக்கு செல்லவில்லை, கோப்பை வரவழைத்து கிலோ அரிசி ரூ. 2 க்கான கையெழுத்திட்டு உத்தரவு பிறப்பித்தார். இப்போது, செப்டம்பர் 15 அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குகின்ற திட்டத்தினை கலைஞர் அவர்கள் தொடங்கியுள்ளார்கள். ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கினால் போதுமா ? சாம்பார், குழம்பு சமைக்க முடியுமா ? என்று எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா போன்றவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

தற்போது, தலைவர் கலைஞர் அவர்கள் மளிகை பொருட்களின் விலையை குறைத்து மானிய விலையில் வழங்குகின்ற சிறப்பான திட்டத்தினை தொடங்கியுள்ளார்கள். மஞ்சள் தூள் 50 கிராம் ரூ. 2 க்கும், மல்லித்தூள் 250 கிராம் ரூ.18 க்கும், மிளகாய்த்தூள் 250 கிராம் ரூ. 14 க்கும், கடலை பருப்பு 75 கிராம் ரூ. 2 க்கும், வெந்தியம் 25 கிராம் ரூ. 1 க்கும், கடுகு 25 கிராம் ரூ. 1 க்கும், சோம்பு 25 கிராம் ரூ. 1.50 க்கும், மிளகு 25 கிராம் ரூ. 3 க்கும், சீரகம் 50 கிராம் ரூ. 5.50 க்கும், பட்டை மற்றும் கிராம்பு 10 கிராம் ரூ. 2 க்கும் ஆக மொத்தம் 10 பொருட்கள் ரூ. 50 க்கு ஒரே பொட்டலமாக வழங்கப்படுகிறது.

மளிகை பொருட்கள் சிலருக்கு தனித்தனியாக தேவைப்பட்டாலும், குறிப்பிட்ட பொருட்களை குறித்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இவை மட்டும் இல்லாமல் நியாய விலைக்கடைகளில் தாய்மார்கள் குடும்பத்தை நடத்துவதற்கு வசதியாக துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.32 க்கும், உளுத்தம்பருப்பு ஒரு கிலோ ரூ. 36 க்கும், பாமாயில் ஒரு லிட்டர் ரூ.40 க்கும், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஒரு கிலோ ரூ. 11 க்கும், ரவா ஒரு கிலோ ரூ. 17 க்கும், மைதா ஒரு கிலோ ரூ.16 க்கும் மேற்கண்ட அத்தியாவசிய பொருட்களை அரசே மானியம் வழங்கி மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கிவருகிறது.

தமிழகத்தை பொறுத்த வரை 1 கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மானிய விலையில் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தில் பயன்பெறுவார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள 21 லட்சத்து 52 ஆயிரம் குடும்ப அட்டை தாரர்களில் 18 லட்சத்து 14 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள், மானிய விலையில் மளிகை பொருட்கள் திட்டத்தில் பயன்பெறுவார்கள். குறிப்பாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள 90 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களில் 72 ஆயிரத்து 168 குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைய உள்ளனர். அதேபோல் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 91 ஆயிரத்து 271 குடும்ப அட்டை தாரர்களில் 78 ஆயிரத்து 716 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்கள்.

தலைவர் கலைஞரின்அரசில் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாக திட்டங்கள் மற்றும் சாதனைகள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஏற்றம் பெற பல்வேறு திட்டங்களைஇந்த அரசு செயல்படுத்திவருகிறது. தலைவர் கலைஞர் ஆட்சியில் சொன்னதை மட்டும் அல்ல, சொல்லாததும் நடக்கிறது. ஒரு கிலோ 2 ரூபாய்க்கு அரிசி வழங்குவோம் என்றோம், ஆனால் தற்போது கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குகின்றோம்.

சத்துணவில் வாரம் 2 முட்டை வழங்குவோம் என்றோம், ஆனால் தற்போது வாரம் 3 முட்டைகள் வழங்குகின்றோம் அதுமட்டும் அல்ல முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்குகின்றோம். மகளிருக்கு திருமண உதவித்தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்குவோம் என்றோம், ஆனால் ரூ. 20 ஆயிரம் வழங்கிவருகிறோம். இப்படி பல்வேறு சாதனைகள் ! எண்ணிப்பார்க்க முடியாத சாதனைகள் ! கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குவது இந்தியாவில் மட்டும் அல்ல, உலகத்திலேயே தமிழகத்தை தவிர வேறு எங்கும் இல்லை. இப்படி, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் உன்னத ஆட்சி, இந்த நல்ல அரசிற்கு தொடர்ந்து உங்கள் நல்லாதரவினை வழங்கிட வேண்டும். என்று மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. மு.க..ஸ்டாலின் அவர்கள் பேசினார்கள்.

3 comments:

said...

me the first, rest in next
endrum anbudan
Sriram Boston USA

said...

ஏழைஇகளுக்கு உணவுத் தொகை(food stamps)அமெரிக்கா மாதா மாதம் அளிப்பதை அங்குள்ள செல்வந்தர்கள் எதிர்க்கிறார்கள்.
அரசு வசதி படைத்தவர்களுக்காக அல்ல,வாயில்லாத வசதியில்லாதவர்களுக்குத் தான் என்ற அடிப்படை மக்களாட்சித் தத்துவம் புத்தகத்தோடு சரி என்று சொல்பவர்கட்குப் பதில் தான் இவை.

தனி மனிதனுக்கு உணவில்லை யெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியைப் போற்று பவர்கள் கூடப் பச்சோந்திகளாக விமரிசப்பது வேஷமல்ல,விஷமம்!

said...

The latest addition is the Kathipara fly over. I am really very proud to be a Tamilian and that too live under the Government of Doctor Kalaignar. I bow before him and wish a long life to our leader.