
தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் அதில் குற்றம் குறை கண்டுபிடிப்பவர் நம்ம சோ ராமசாமி அவர்கள். தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தினால் அதுறகும் தி.மு.க. மீது பழி மழை பெய்தால் அதற்கும் தி.மு.க. மீது பழி என்று குறை சொல்லுபவர். இவருக்கு பத்திரிக்கை வேறு இருப்பதால் உடனே கார்ட்டூன் வேறு தீட்டிவிடுவார். கலைஞர் என்றால் காய்ச்சி எடுக்கும் அவரது கார்ட்டூன்கள் ஜெயலலிதாவோ மற்ற இந்துத்வ தலைவர்கள் என்றாலோ வெண்சாமரம் வீசும். சென்ற வாரம் குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து கிட்டத்தட்ட 150 வரை மாண்டதாக செய்தி வந்ததை பற்றி அவர் ஏதும் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. இதுவே தமிழ்நாட்டில் நடந்து இருந்தால் உருப்படியாக கருத்து எதுவும் சொல்ல தெரியாவிட்டாலும் தன்னுடைய நக்கல் பேச்சால் தமிழக அரசை காய்ச்சி எடுத்து இருப்பார். இன்னும் சில மாதங்களுக்கு இன்றே காட்டூன் வரைந்து ஓயாமல் வெளியிட்டு வருவார்.
குஜராத் கள்ளச்சாராயம் பற்றி அவர் ஏதும் கார்ட்டூன் வரைந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் சோ ஆதரவு தளம் என்று அறியப்பட்ட தளம் ஒன்றில் தான் இங்கே இணைக்கப்பட்டுள்ள படம் இடம் பெற்று இருந்தது. இந்த கார்ட்டூன் துக்ளக் இதழில் இடம் பெற்றதா என்று தெரியவில்லை ஆனால் அவர்கள் ஆதரவு கார்ட்டூன் என்பது மட்டும் கார்ட்டூனை பார்த்தாலே தெரிகிறது. இதே சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்று இத்தனை பேர் மாண்டு இருந்தால் இவர்கள் எல்லாம் மாண்டுவிட்ட அப்பாவிகளுக்கு போராடும் போராளிகளாக மாறி இருப்பார்கள். ஆனால் சம்பவம் நடைபெற்றதோ சோ ராமசாமி அவர்கள் ராம் ராஜ்ஜியமாக நினைக்கும் குஜராத்தில் அல்லவா. அதனால் 150 பேர் உயிரை குடித்த கள்ளச்சாராயத்தை குட்டி பிசாசு என்று அலட்சியமாக கருதுகிறார்கள். இங்கே இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த கள்ளச்சாராய மார்க்கெட் குஜராத்தில் கொடிகட்டி பறக்கிறதாம் அந்த மார்க்கெட்டுக்கு ஆளும் பா.ஜ.க. ஆதரவு இல்லாமல் அது இந்த அளவுக்கு வளர்ந்து இருக்க முடியாது என்று சொல்லப்படுகிறது. சோ அய்யாவுக்கு இது கூட தெரியாமல இருக்கும்
11 comments:
குஜராத்தில் காய்சியது 'சோம' பானம் அதைக் கள்ளச்சாரயம் என்று சொல்லும் உடன்பிறப்பை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாட்டிலும் மதுவிலக்கு வேண்டும் ஆனால் புதுவையில் வேண்டாம்
கோவி.கண்ணன் said...
குஜராத்தில் காய்சியது 'சோம' பானம் அதைக் கள்ளச்சாரயம் என்று சொல்லும் உடன்பிறப்பை வன்மையாக கண்டிக்கிறேன்
/\*/\
அது தான் 'சோ'ம பானமா. அப்படி என்றால் அது பெருக்கெடுத்து ஓட வேண்டியது தான்
படையாச்சி said...
தமிழ்நாட்டிலும் மதுவிலக்கு வேண்டும் ஆனால் புதுவையில் வேண்டாம்
/\*/\
ஏன் பிசினஸ் பாதிக்கப்படுமோ?
//சோ" அய்யா//
மருத்துவர் அய்யா மாதிரி இது சோ அய்யாவா?
புதுவையில் நடைபெறுவது காங்கிரஸ் ஆட்சிதானே உடன்பிறப்பு ?
உலகத்திலேயே சிறந்த முதலமைச்சர் மோடிதான். சோ அய்யா எப்படி கார்ட்டூன் போடுவார் ?
செந்தழல் ரவி said...
புதுவையில் நடைபெறுவது காங்கிரஸ் ஆட்சிதானே உடன்பிறப்பு ?
/\*/\
இங்கே மதுவிலக்கு வேண்டும் என்று சொல்லும் சிலர் புதுவையில் பெருக்கெடுத்து ஓடும் மதுவை பற்றி வாய்திறவாமல் இருக்கிறார்கள், என்ன அரசியலோ
அச்சச்..சோ....
கார்த்தி said...
அச்சச்..சோ....
/\*/\
:-)))
சரியான கேள்வி .இந்த இரட்டை நாக்கு சோவை நடுநிலையாளர்-ன்னு சொல்ல ஒரு கூட்டம் .படு தமாசு.
சோ யாருடைய ஆதரவாளர், அவருக்கு யார் மீதெல்லாம் சாஃப்ட்கார்னர் என்பதெல்லாம் உலகறிந்த இரகசியம். அவர் நடுநிலையாளர் அல்ல. முடிந்தவரையில் நடுநிலையாளராக காட்டிக்கொள்ள முயற்சித்து தோற்றுக் கொண்டிருப்பவர்.
Post a Comment