Tuesday, January 08, 2008

மா.சி.யின் கலைஞர் குறித்த அவதூறுகளுக்கு பதில்!

//போன சட்ட மன்றத் தேர்தலின் போது அதிமுகவின் ஜெயலலிதா, திமுகவின் கருணாநிதி என்று தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில் ஜெயலலிதாவே மேல் என்று எழுதியிருந்தேன். கலைஞர் ஆட்சி வருவதை விரும்பாததற்கு முக்கிய காரணம் மாறன் சகோதரர்களை எந்த வரைமுறையின்றி முன்னிலைப்படுத்தி அரசியலைக் கொச்சைப் படுத்தும் சிறுமை தலையாய காரணமாக இருந்தது.//

//நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரான தயாநிதி மாறனுக்கு வாக்களித்திருந்தேன். அதன் பிறகு அவரை மத்திய அமைச்சராக்கி, அவரும் கூச்ச நாச்சமில்லாமல் எல்லா இடங்களிலும் முண்டி அடித்துக் கொண்டு முக்கியத்துவம் தேடிக் கொண்டிருந்த அவலம் கடுப்பேற்றியிருந்தது.//

முதல் பாராவையும், இரண்டாவது பாராவையும் படித்துப் பாருங்கள் மாசி. இரண்டுமே நீங்கள் எழுதியது. மாறன் சகோதரர்களை முன்னிலைப்படுத்துவது உங்களுக்கு அரசியல் கொச்சையாகப் பட்டபோதிலும் தயாநிதிமாறனுக்கு தான் வாக்களித்திருக்கிறீர்கள். ஏன் வாக்களித்தீர்கள் என்று கேட்பது அநாகரிகமானது என்றபோதிலும் அரசியல் கொச்சைக்கு ஆதரவளித்த உங்களுக்கு எனது கண்டனங்கள்!!!

//அந்தத் தவறுக்கான விலை கலைஞரும் திமுகவும் கொடுத்து விட்டார்கள். அதே பாதையில் மதுரையில் கொலைக்கும் தயங்காத மு க அழகிரி குழுவினர், சென்னையிலிருந்து கனிமொழி நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டது என்று அந்த நாடகம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.//

கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கப்பட்டதில் உங்களுக்கு என்ன ஆட்சேபம் இருக்கும் என்று சொல்லமுடியுமா? மத, சாதிவெறியர்களெல்லாம் கூட பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் நாடாளுமன்றத்துக்கு செல்லும்போது ஒரு சிந்தனையாளர் செல்வது எப்படி உங்களுக்கு அரசியல் கொச்சையாக தெரிகிறது. ஒருவேளை நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டுமென்றால் அவர் முதல்வரின் மகளாக இருக்கக்கூடாதா?

//திராவிட இயக்கம் தோன்றி ஆட்சியைப் பிடித்த பிறகு அனைவரையும் அணைத்துச் செல்லத் தெரியாத தலைமையாக அமைந்து விட்டது. நான் பிறப்பதற்கு முன்பு நடந்தவை என்றாலும், அறிஞர் அண்ணாவும், பெரியாரும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் மதிக்கும் பெருங்குணம் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அளவுக்கு மீறிய பதவி ஆசை, தலைமைப் பொறுப்பில் குறுக்கிடும் அளவுக்கு குடும்பப் பாசம், எண்பது வயதுக்குப் பின்னும் எதிர்க்கட்சித் தலைவி பெண்மணியின் மீது வக்கிரமாக கமென்டு அடிப்பது, மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவது என்று மாநில அரசியலை இரு பிளவாகப் பிரித்த கீழ்மை அவருக்கே சேரும்.//

தமிழக அரசியல் வரலாற்றை புரட்டிப் பார்த்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அரசியல் காழ்ப்புணர்ச்சி, எதிர்க்கட்சித் தலைவர்களை எதிரிகளாக பார்ப்பது போன்ற அரசியல் கீழ்த்தர நடவடிக்கைகள் 1987க்குப் பிறகே தொடங்கியது என்பதை. ஏனோ அதை ஏற்க மறுக்கிறீர்கள். அல்லது ஏற்க முடியாமல் தவிக்கிறீர்கள். 'மத நம்பிக்கைகளை புண்படுத்துவது' என்றொரு குற்றச்சாட்டை நீங்கள் வைத்திருப்பது நகைச்சுவை. தன் மத மக்களையே மேல்சாதி, கீழ்சாதி என்று பிரித்து வைத்திருக்கும் மதத்தை போற்றவா முடியும்?

//எதிர்க்கட்சியாக இருக்கும் வரை என்னதான் அடாவடி அரசியல் செய்தாலும், ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் ஆட்சி புரிகிறோம் என்ற பெருந்தன்மை இருந்திருக்க வேண்டும். அது அவரிடம் இல்லை.//

உதாரணங்கள் ஏதும் இல்லாத அர்த்தமற்ற குற்றச்சாட்டு. கலைஞரிடம் கூட்டணியில் இருந்து பிரிந்துப் போன தலைவர்கள் கூட அரசியலுக்கு அப்பாற்பட்டு நட்பு பாராட்டும் அவரது குணத்தை போற்றியே வந்திருக்கிறார்கள்.

//ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் உருவாக்கும் அதே நேரத்தில் அதிலிருக்கும் நியாயங்களை விளக்கி அதனால் அனுபவித்து வரும் சுகங்களை இழக்கும் மக்களையும் அதை ஏற்றுக் கொள்ள செய்திருக்க வேண்டும். அது அவரிடம் இல்லை.//

ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களோ கலைஞர் இவ்விவகாரத்தில் ரொம்பவும் சமரசம் செய்துகொள்கிறார். இவ்விவகாரத்தில் அவரது வழக்கமான தீவிரம் இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். ராமதாஸ், திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றவர்களின் பேட்டிகளையும், பேச்சுக்களையும் நீங்கள் வாசிப்பதே இல்லையா? கலைஞர் மேல்சாதிக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவே பத்தாண்டுகளுக்கும் மேலாக இவர்கள் பல்வேறு இடங்களில் குற்றம் சாட்டியிருக்கிறார்கள் (சங்கராச்சாரியார் விவகாரம் வரை)

//நேற்று வரை அடக்கி ஆண்டவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க, அந்தத் தலைமையை ஏற்க பெரும்பான்மையர் முன்வந்திருப்பார்கள். அதுதான் உண்மையான வெற்றி. முப்பத்தைந்து ஆண்டு கால அரசியலுக்குப் பின்னும், அவரது பெயரைக் கேட்டாலே சலித்துக் கொள்ளும் மக்களை உருவாக்கி இருப்பது அவரது தலைமையின் தோல்வி.//

கலைஞரின் பெயரை கேட்டாலே மக்கள் சலித்துக் கொள்கிறார்கள் என்பது உங்கள் யூகமா? அல்லது உண்மையா என்பதே என் கேள்வி. அவர் பெயரை கேட்டாலே தமிழர்கள் சலித்துக் கொள்கிறார்கள் என்றால் ஐந்து முறை அவர் முதல்வர் ஆன மாயம் என்னவென்று சொல்லுங்களேன்.

//ஆரம்பத்திலிருந்தே கொள்கைகளையும் கட்சியையும், தொண்டர்களையும் தனது, தன் குடும்பத்து நலனுக்கு அவை எப்படி் உதவும் என்று கணக்கிட்டு அந்த அளவுக்கு அவற்றைக் கையாண்டு கொண்ட சராசரி அரசியல்வாதிதான் அவர் என்பது என்னுடைய புரிதல். அப்படிப்பட்ட ஒருவரை தமிழினத் தலைவர், ஒப்பற்ற அரசியல்வாதி என்று போற்றும் போது அரசியலின் தரம் தாழ்ந்து விடுகிறது.//

இந்த பாராவை வாசிக்கும்போது நிஜமாகவே நகைக்கிறேன். கலைஞர் மீதான காழ்ப்புணர்ச்சி தங்கள் எழுத்துக்களின் தரத்தை தாழ்த்திவிடக்கூடாது என்று மகரநெடுங்குழைகாதனை பிரார்த்திக்கிறேன்.

//தமிழகத்துக்கு தலைவராக இப்படிப்பட்ட ஒருவரை விடப் பல மடங்கு உயர்ந்த பலர் கிடைப்பார்கள். கிடைக்க வேண்டும். கைத்தடி முதலாளித்துவமான அரசியலையும் தொழிலையும் கலந்து தன்னை வளைப்படுத்திக் கொண்ட கீழ்த்தரமான அரசியல்தான் அவரது. ஜெயலலிதாவை விட எந்த வகையிலும் உயர்ந்தவர் கிடையாது கருணாநிதி. அவரது அரசியலால்தான் ஜெயலலிதா போன்றவர்கள் காலூன்ற முடிகிறது. அவர் எவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெறுகிறாரோ அவ்வளவு நன்மை தமிழகத்துக்கு.//

கலைஞரை ஜெயலலிதாவுடன் ஒப்பிடுவதே வடிகட்டிய அயோக்கியத்தனம் என்பது என் தாழ்மையான கருத்து. சோ போன்றவர்கள் கலைஞரை மட்டம் தட்ட பயன்படுத்தும் தந்திரம் இது. காமராஜர், பக்தவத்சலத்தில் தொடங்கி எம்.ஜி.ஆர் வரையிலான அரசியல் எதிரிகளிடம் பண்பாக அரசியல் நடத்திய கலைஞரின் தரத்தை, சென்னாரெட்டி தகாதமுறையில் நடந்துகொண்டதாக சொன்ன, ப.அருணாசலத்தை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்துக்காக விமானத்தில் இருந்து இறக்கி விட்ட, சு.சாமி - ப.சிதம்பரம் போன்றவர்களை அடியாட்களை விட்டு அடிக்கவைத்த, அரசு அதிகாரி சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசிய ஜெ.வுடன் ஒப்பிடும் அளவுக்கு உங்கள் மனதில் அரிப்பு எடுத்திருப்பது வருந்தத்தக்கது.

//ஈழ நிலைமை பற்றி மத்திய அரசு ஆலோசனை கூட்டம் கூட்டினால் இவர் போய் கருத்து சொல்வாராம். ஏன்? தமிழினத் தலைவருக்கு இவ்வளவுதான் அக்கறையோ? தயாநிதி மாறனுக்கு அமைச்சர் பதவி வாங்கிய சாணக்கியம் தமிழர்களுக்கு ஆதரவு திரட்ட ஏன் பயன்படாமல் போய் விட்டது? மருமகனுக்கு அரசு செலவில் வைத்தியம் வேண்டும் என்று இலாகா இல்லாத அமைச்சராக ஒட்டிக் கொண்டிருந்து விட்டு அவரது மறைவுக்குப் பின் வசதியாக வெளியேறிய புத்திசாலித்தனம் தமிழர் நலனில் மறைந்து விடும்.//

தலைவர் கலைஞரின் ஈழ ஆதரவு குறித்த சர்ச்சைகளை அவரை எதிர்க்க மட்டுமே பயன்படுத்துவது அவரது அரசியல் எதிரிகளின் பண்பாடு. அதற்கு தாங்களும் விதிவிலக்கல்ல போலும். இவ்வளவு பேசுபவர்கள் ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தில் கல்வி கற்க வாய்ப்பளித்தது, மற்ற ஈழத்தமிழர் ஆதரவு செயல்பாடுகளை கலைஞர் செய்யும்போது “தீவிரவாதம் பெருகுகிறது” என்று கூப்பாடு போடுவதும் வழக்கமாக நடக்கும் செயல்தான்.

//தமிழகத்துக்கு இது போன்ற தலைவர்கள்தான் தலைவிதி கிடையாது. 'திறமையைப் பயன்படுத்தி தொழில் செய்தார்கள்' என்று நியாயப்படுத்தப்படும் முதலமைச்சரின் கிளைக்குடும்பங்கள் எல்லாம் கொழிக்கும் இந்த இரண்டு நோய்களும் நம்மை விட்டு விலக வேண்டும்.

நோய்கள்தாம் நமக்கு வரங்கள் என்று கொண்டாடிக் கொண்டிருந்தால் விடிவே இல்லை. பிணி தீர முதற்படி இப்படி ஒரு பிணி இருக்கிறது என்று உணர்ந்து கொள்வதுதானே. அதையே மறுத்துக் கொண்டிருந்தால் என்றைக்கு விடிவு?//

தாங்களே ஒரு நல்ல தீர்வை முன்மொழியவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

//'திமுகவின் ஆட்சி தமிழர்களின் நலன் விளையும் ஆட்சி. அதிமுக ஆட்சி சுயநல ஆட்சி' என்று பரவலான கருத்து உண்டு. அந்தக் கருத்தில்தான் எனக்கு மாறுபாடு. ஜெயலலிதா ஆளும் போது தமிழர் நலன் பாதுகாக்கப்படவில்லை என்று விழிப்பாவது இருக்கும். திமுக ஆட்சியில் அது போய் ஒரு பொய்யான ஆறுதல் வந்து விடுகிறது.//

மறுபடியும், மறுபடியும் திமுகவை விமர்சிக்கும்போது தொட்டுக்கொள்ள உறுகாய் மாதிரி ஜெ.வை நீங்கள் பயன்படுத்துவது ஒரு மட்டரகமாக தந்திரம். 'ஜெ'வுக்கு கெட்டவர் என்ற இமேஜ் ‘நச்'சென்று விழுந்திருக்கிறது. அவருடன் கலைஞரை ஒப்பிட்டுப் பேசும்போது கலைஞரும் கெட்டவர் தான் என்ற பார்வையை வாசிக்கும் வாசிகர்கள் மனதில் ஏற்படுத்தும் என்ற வழக்கமான சோவின் தந்திரம் தான் இது.

//எதிரிகளை விட துரோகிகள் அதிக தீமை செய்பவர்கள் என்ற வகையில் திமுக அரசு தமிழர் நலனை குழி தோண்டி புதைப்பதுதான்.
ஈழத் தமிழருக்காக தமிழக முதல்வர் எதுவும் செய்ய முடியவில்லை. தனது பதவியும், குடும்ப நலனும் பெரிதாகப் போய் விட்டன. அதிமுக ஆட்சியில் வெளிப்படையான விரோதம் தெரிந்திருக்கும்.சட்ட ஒழுங்கு அடாவடி அரசியல் இன்னும் தொடர்கிறது. அதிமுக ஆட்சியில் இதைவிட மேலாக இருந்திருக்கும். சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் நடக்காமல் போயிருக்கலாம்.கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இதை நடக்க விடாமல் செய்தது இவர்கள்தான்.
மொத்தத்தில் அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் தமிழர் நலன் பொறுத்த வரை பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டு பேருமே சொந்த நலனுக்காக பெரும் ஊழல் செய்பவர்கள். ஜனநாயக மரபுகளை மதிக்காதவர்கள்.//

அதிமுக ஆட்சியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நடக்கவிடாமல் செய்தது திமுக என்பது உங்கள் யூகமா? அல்லது ஆதாரமோ, பத்திரிகைச் செய்தியோ உண்டா? எனக்குத் தெரிந்து தயாநிதிமாறன் இதற்காக முயற்சித்தும் அதிமுக அரசு பிடிகொடுக்கவில்லை என்று தான் பத்திரிகைச் செய்திகள் இருக்கிறது.

//திமுக ஆட்சியில் அப்படி இல்லை என்ற பொய் உணர்வைப் பெறுவதால் நீண்ட கால நோக்கில் அது சமூகத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கிறது என்று நம்புகிறேன். நமது சமூகத்துக்கு இதுதான் தலைவிதி என்று கிடையாது.//

உங்களது திமுக வெறுப்பினை தேர்தலுக்கு முன்பான உங்கள் பதிவுகளை படித்தவர்கள் உணர்வார்கள். எனவே நடுநிலை என்று சொல்லிக் கொள்கிறவர்கள் உங்கள் பதிவின் நோக்கத்தை புரிந்துகொள்வார்கள் என்றே நினைக்கிறோம். அதே நேரத்தில் கலைஞரை இரும்புத்தடி கொண்டு தாக்கும் உங்கள் எழுத்துக்கள் ஜெ.வை மயிலிறகு கொண்டு தாக்குவதையும் உணர்ந்துகொள்வார்கள் என்றும் நம்புகிறோம்.

ஜெ.வையும், கலைஞரையும் ஒரே தட்டில் வைத்து விமர்சித்திருக்கிறேன். ஆகையால் நான் நடுநிலையாளன் என்று உங்கள் மனதுக்குள் நீங்களே பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியது தான். பாரபட்சமான பார்வையோடு கூடிய பதிவு!!!

22 comments:

Anonymous said...

சபாஷ் லக்கி,சபாஷ்.இன மான தலைவரை இகழ்பவரை தோலுறித்து,வெளிச்சம் போட்டு காட்டி,சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

சோ, சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா, மணிசங்கர அய்யர் போன்றவர்களுக்கு அடிவருடுபவர்களுக்கும், முதலாளித்துவ மனப்பான்மையில் வாழ்பவர்களுக்கும் கருணாநிதியை பிடிக்காமல் போவதில் வியப்பில்லை.

said...

மா.சி நினைப்பது போல் ஒரு உன்னத தலைவர் கனவில் கூட சாத்தியமில்லை.நல்ல தலைவர்கள் என்றால் கோவணத்துணி கூட இல்லாமல் இருக்க வேண்டுமா என்ன?

said...

//மா.சி நினைப்பது போல் ஒரு உன்னத தலைவர் கனவில் கூட சாத்தியமில்லை.நல்ல தலைவர்கள் என்றால் கோவணத்துணி கூட இல்லாமல் இருக்க வேண்டுமா என்ன?//
இந்த பதிலை நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை,

என் பதில்
வால்பையன்

said...

ஏதாவது புத்தகம் வெளியிட வாய்ப்பு
தேடிக்கிட்டிருப்பார் என நினைக்கிறேன்.

எத்தனையோ பேர் மு.க அவர்களை திட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அதில இதுவும் ஒன்று.

said...

நான் என்னத்த சொல்ல!!!

said...

லக்கி! உங்க பதில்கள் அருமை! ஆனா மாறன் சகோதரர்களை என்னவோ கொள்ளை கூட்ட தலைவர்கள் மாதிரி காட்டியிருப்பது நல்லாவே இல்லை! காட்சிகள் மாறலாம்! மாசி தான் விபரம் இல்லாமல் போட்டுவிட்டார் பதிவு! உங்களுக்குமா புரியவில்லை உண்மை நிலவரம்! கனிமொழி எல்லாம் காற்றில் பறக்கும் காகிதபூக்கள் என்பது உங்களுக்குமா புரியவில்லை!!!

ஆனாலும் அவர் ஜெயலலிதாவை, ரொம்ப கொண்டாடுகிறார்! அதற்கு நீங்க சொன்ன பதில்கள் சூப்பர்! ஒன்றை மட்டும் மறந்து விட்டீர்கள்! சு..சு...சு...சாமிக்கு உயர்நீதி மன்றத்தில் ஆபாச நடனம் ஆடி காண்பிக்க சொன்ன செயலலிதாவை ஜொல்லிகாண்பிக்கவே இல்லியே!

Anonymous said...

//பாரபட்சமான பார்வையோடு கூடிய பதிவு!!!//

ரிப்பீட்டே..ய்!!!

இதுவும் பாரபட்சமான பதிவுதான். தர்க்க ரீதியாகப் பார்த்தால் பெரும்பாலான வாதங்கள் நகைச்சுவையாகவே இருக்கின்றன :-) விவரமாக பின்னூட்டம் போட கண்டிப்பாக நேரம் இல்லை. தேவையும் இல்லை.

விடு ஜூட்!

said...

//மாறன் சகோதரர்களை முன்னிலைப்படுத்துவது உங்களுக்கு அரசியல் கொச்சையாகப் பட்டபோதிலும் தயாநிதிமாறனுக்கு தான் வாக்களித்திருக்கிறீர்கள்.//

'தேர்தலில் போட்டியிட்டது வரை ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஒரு முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்' என்று வாக்களித்தேன். அதன் பிறகு அனுபவமே இல்லாத 'அவர்தான் காபினட் அமைச்சர், அவர்தான் தமிழகத்தின் தில்லி பிரதிநிதி' என்று தரம் தாழ்ந்ததை எப்படி நீங்கள் எல்லாம் சகித்துக் கொண்டிருந்தீர்கள்?

//கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கப்பட்டதில் உங்களுக்கு என்ன ஆட்சேபம் இருக்கும் என்று சொல்லமுடியுமா?//
தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்ததால், மற்ற தொண்டர்களை விடக் கவிஞர்களை விட அதிகமாக உழைத்து அதிகமாக மக்கள் தொண்டாற்றிய பிறகுதான் பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆரம்பமே பட்டுக் குஞ்சம் ஏன்?

(கவிஞர் வைரமுத்து ஏன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக்கப்படவில்லை?)

//அரசியல் காழ்ப்புணர்ச்சி, எதிர்க்கட்சித் தலைவர்களை எதிரிகளாக பார்ப்பது போன்ற அரசியல் கீழ்த்தர நடவடிக்கைகள் 1987க்குப் பிறகே தொடங்கியது என்பதை.//

இருக்கலாம். அதற்கு முன்பு கலைஞரின் கீழ்த்தரமான அரசியலுக்கு எதிர் செய்த தலைவர்களின் சிறப்பினால் தரம் குறையாமல் இருந்திருக்கலாம். ஜெயலலிதா அவரினும் இழிந்து செயல்பட தமிழகம் தலை தாழ்ந்தது.

//உதாரணங்கள் ஏதும் இல்லாத அர்த்தமற்ற குற்றச்சாட்டு.//
//'மத நம்பிக்கைகளை புண்படுத்துவது' என்றொரு குற்றச்சாட்டை நீங்கள் வைத்திருப்பது நகைச்சுவை. //

மதத்தைப் பற்றிய என்னுடைய, உங்களுடைய, கலைஞருடைய கருத்து என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் ஒரு மாநில முதல்வராக, தமிழரின் தலைவராக சித்தரிக்கப்படும் ஒருவர் அடுத்தவர்களின் கடவுள் நம்பிக்கைகளை எள்ளி நகையாடி புண்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

நான் கோவில்களுக்குப் போக விரும்பவில்லை என்பதற்காக அப்படிப் போகின்றவர்களைப் புண்படுத்த எனக்கு உரிமை கிடையாது.

//கலைஞர் மேல்சாதிக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவே பத்தாண்டுகளுக்கும் மேலாக இவர்கள் பல்வேறு இடங்களில் குற்றம் சாட்டியிருக்கிறார்கள் //

தனக்கு ஆதாயம் இருந்தால் கலைஞர் நரேந்திர மோடிக்குக் கூட குடை பிடிப்பார் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள், மேல் சாதியினர் அரசியல் அவருக்குக் கருவிகள். அவ்வளவுதான்.

//கலைஞரின் பெயரை கேட்டாலே மக்கள் சலித்துக் கொள்கிறார்கள் என்பது உங்கள் யூகமா? அல்லது உண்மையா என்பதே என் கேள்வி.//

உண்மை என்பது நான் உணர்ந்தது. உங்கள் அனுபவம் வேறாக இருக்கலாம்.

//கலைஞர் மீதான காழ்ப்புணர்ச்சி தங்கள் எழுத்துக்களின் தரத்தை தாழ்த்திவிடக்கூடாத//

நன்றி. கவனமாக இருப்பேன்.

//சென்னாரெட்டி தகாதமுறையில் நடந்துகொண்டதாக சொன்ன, ப.அருணாசலத்தை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்துக்காக விமானத்தில் இருந்து இறக்கி விட்ட, சு.சாமி - ப.சிதம்பரம் போன்றவர்களை அடியாட்களை விட்டு அடிக்கவைத்த, அரசு அதிகாரி சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசிய ஜெ.வுடன் ஒப்பிடும் அளவுக்கு உங்கள் மனதில் அரிப்பு எடுத்திருப்பது வருந்தத்தக்கது.//
கலைஞரின் தரம் இதை விட பெரிய அளவு மேலே இல்லை என்பது என் கருத்து. அவரை தமிழினத் தலைவர் என்று கொண்டாடிக் கொண்டிருந்தால் தமிழர்களின் கதி என்னவாகும்!

//இவ்வளவு பேசுபவர்கள் ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தில் கல்வி கற்க வாய்ப்பளித்தது, மற்ற ஈழத்தமிழர் ஆதரவு செயல்பாடுகளை கலைஞர் செய்யும்போது //

இரண்டு கை தட்டி, மகிழ்ச்சியுடன் வரவேற்பேன். முதல்வரின் முத்தான கையெழுத்துக்கள்

//தாங்களே ஒரு நல்ல தீர்வை முன்மொழியவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.//

கலைஞரைத் தாண்டியும் அரசியல் உயர வேண்டும். இதுதான் அரசியலின் தரம் என்று நாமெல்லாம் இருந்து விடாமல் அடுத்தக் கட்டம் பற்றி சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

//மறுபடியும், மறுபடியும் திமுகவை விமர்சிக்கும்போது தொட்டுக்கொள்ள உறுகாய் மாதிரி ஜெ.வை நீங்கள் பயன்படுத்துவது ஒரு மட்டரகமாக தந்திரம்.//

இல்லை. இரண்டு பேருக்கும் பெரிய அளவு வேறுபாடு இல்லை என்று நான் நினைப்பதே ஒப்பிடுவதற்கு காரணம்.

//அதிமுக ஆட்சியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நடக்கவிடாமல் செய்தது திமுக என்பது உங்கள் யூகமா?//
எனது நினைவில் எழுதியதுதான். பத்திரிகைச் செய்திகளைத் தேடித் தர முயற்சிக்கிறேன்.

//எனவே நடுநிலை என்று சொல்லிக் கொள்கிறவர்கள் உங்கள் பதிவின் நோக்கத்தை புரிந்துகொள்வார்கள் என்றே நினைக்கிறோம்.//
//ஜெ.வையும், கலைஞரையும் ஒரே தட்டில் வைத்து விமர்சித்திருக்கிறேன். ஆகையால் நான் நடுநிலையாளன் என்று உங்கள் மனதுக்குள் நீங்களே பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.//

நடுநிலை என்பதே ஒரு பம்மாத்து என்பது என் புரிதல். நாம் ஒவ்வொருவரும் நமது சார்பு நிலைகளைக் கொண்டுள்ளோம். அதைப் புரிந்து கொண்டு கருத்துக்களைப் பரிமாறினால் ஏமாற்றங்கள் இல்லை. நான் நடுநிலைவாதி இல்லை.

அன்புடன்,
மா சிவகுமார்

said...

//எத்தனையோ பேர் மு.க அவர்களை திட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அதில இதுவும் ஒன்று.//

உண்மை. தலைவர் கலைஞரின் பெயரை நல்லவிதமாகவோ அல்லது கெட்டவிதமாகவோ உச்சரிக்காமல் கடந்த அரைநூற்றாண்டு தமிழக அரசியலை எவரும் பேசமுடியாது.

//நான் என்னத்த சொல்ல!!!//

அபி அப்பா அண்ணே! அதுதான் அடுத்த பின்னூட்டத்துலே சொல்லியிருக்கீங்களே?

//மாறன் சகோதரர்களை என்னவோ கொள்ளை கூட்ட தலைவர்கள் மாதிரி காட்டியிருப்பது நல்லாவே இல்லை! காட்சிகள் மாறலாம்!//

சூரியன் - தி பாஸ்! மாறன் சகோதரர்களை நான் எதுவும் விமர்சிக்கவில்லை. மாசி விமர்சித்தது குறித்து ஒரு எதிர்வினை எள்ளாடல்... அவ்வளவு தான்!! தயாநிதி மாறன் ஒரு திறமையான அமைச்சராக செயல்பட்டார் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை!

said...

//கனிமொழி எல்லாம் காற்றில் பறக்கும் காகிதபூக்கள் என்பது உங்களுக்குமா புரியவில்லை!!!//

இதற்கு விடை சொல்ல மறந்துவிட்டேன். கனிமொழி காகிதப்பூவா இல்லை குறிஞ்சிமலரா என்பதை எதிர்கால வரலாறு தான் முடிவு செய்யும்.

அன்னை இந்திராவை காமராஜர் உலகுக்கு காட்டியபோது அவரை கூட காகிதப்பூ என்று தான் விமர்சகர்கள் விமர்சித்திருப்பார்கள். அவர் பிரதமர் பதவியேற்று பணிபுரிந்த பின்னரே அவர் காட்டு ரோஜா என்பதை அறிந்திருப்பார்கள்.

said...

அன்பு மா.சி.!

//'தேர்தலில் போட்டியிட்டது வரை ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஒரு முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்' என்று வாக்களித்தேன். அதன் பிறகு அனுபவமே இல்லாத 'அவர்தான் காபினட் அமைச்சர், அவர்தான் தமிழகத்தின் தில்லி பிரதிநிதி' என்று தரம் தாழ்ந்ததை எப்படி நீங்கள் எல்லாம் சகித்துக் கொண்டிருந்தீர்கள்?//

தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி என்பது மத்திய அமைச்சருக்கு இணையான பதவி. அப்பதவியில் தயாநிதி இருந்தது இல்லை :-)

தயாநிதி காபினட் அமைச்சராக திறம்படவே பணியாற்றினார் என்று பத்திரிகைகளும், விமர்சகர்களும் இன்றுவரை சொல்கிறார்கள். எனவே நான் சகித்துக் கொண்டிருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.


//தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்ததால், மற்ற தொண்டர்களை விடக் கவிஞர்களை விட அதிகமாக உழைத்து அதிகமாக மக்கள் தொண்டாற்றிய பிறகுதான் பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆரம்பமே பட்டுக் குஞ்சம் ஏன்?//

கனிமொழிக்கு கிட்டத்தட்ட நாற்பது வயதாகிறது. இன்னமும் நாற்பது ஆண்டுகள் தொண்டாற்றிய பின்னர் தான் பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறீர்களா? தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கருவிலேயே திமுக உறுப்பினர்களாக மாறி தான் பிறக்கிறார்கள் என்பது திமுகவின் கடைக்கோடி தொண்டனுக்கும் தெரியும்.

//கவிஞர் வைரமுத்து ஏன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக்கப்படவில்லை?)//

கவிஞருக்கு கண்டிப்பாக நல்ல வாய்ப்பை கழகம் வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஆயினும் கவிஞர் கட்சியில் இதுவரை உறுப்பினராக இல்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் கலைஞரின் நண்பர்.

//ஆனால் ஒரு மாநில முதல்வராக, தமிழரின் தலைவராக சித்தரிக்கப்படும் ஒருவர் அடுத்தவர்களின் கடவுள் நம்பிக்கைகளை எள்ளி நகையாடி புண்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. //

மாநில முதல்வருக்கு தன்னுடைய சொந்தக் கருத்தை சொல்ல உரிமை இல்லையா என்ன? சட்டத்தில் அப்படி ஏதேனும் பிரிவு இருக்கிறதா?

கலைஞர் பகுத்தறிவாளர்களின் ஆதர்ச பிம்பம். அவர் முதல்வராகி விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அவரது சிந்தனைகளையும், கருத்துக்களையும் சொல்லக்கூடாது என்று சொல்வது கருத்துச் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறை!

//தனக்கு ஆதாயம் இருந்தால் கலைஞர் நரேந்திர மோடிக்குக் கூட குடை பிடிப்பார் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள், மேல் சாதியினர் அரசியல் அவருக்குக் கருவிகள். அவ்வளவுதான்.//

இவ்வார்த்தைகள் கலைஞர் மீதான உங்கள் பார்வை என்பதை தெளிவாக காட்டுகிறது. ஆயினும் உங்கள் பதிவில் அதை பொதுப்படையாக பெரும்பாலான மக்கள் எண்ணுவதைப் போல சொல்லியிருந்ததாலேயே விளக்கங்கள் அளிக்க உடன்பிறப்புகள் கடமைப்பட்டிருந்தோம்.

//கலைஞரின் தரம் இதை விட பெரிய அளவு மேலே இல்லை என்பது என் கருத்து. அவரை தமிழினத் தலைவர் என்று கொண்டாடிக் கொண்டிருந்தால் தமிழர்களின் கதி என்னவாகும்!//

கலைஞரை தமிழினத் தலைவர் என்று நீங்கள் ஏற்றுக் கொள்ளாதாலேயே அவர் தமிழினத் தலைவர் அல்ல என்று ஆகிவிடாது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் அவரை மதிப்பதாலேயே அவர் தமிழினத் தலைவர் என்று போற்றப்படுகிறார். நீங்கள் ஜெ.வையும் தமிழினத் தலைவர் என்று அழைப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ”புரட்சி” என்பது எப்படிப்பட்ட ஒரு சொல். எம்.ஜி.ஆரையும், ஜெ.வையும் புரட்சித் தலைவராகவும், தலைவியாகவும் சொல்வதும் எனக்கும் பிடிக்காது தான். அதற்கு என்ன செய்ய?

//இரண்டு கை தட்டி, மகிழ்ச்சியுடன் வரவேற்பேன். முதல்வரின் முத்தான கையெழுத்துக்கள்//

நல்ல பதிவு இட்டிருந்தீர்கள். அதற்கு தாமதமான நன்றிகள்!! விதவைகளுக்கான பென்ஷன் தொகை உயர்வு, ஊனமுற்றோருக்கான உதவித்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை உயர்வு என்று எண்ணில்லா திட்டங்கள் கலைஞர் ஆட்சியில் மலர்ந்து வருகிறது. அத்திட்டங்களைப் பற்றிய உங்கள் பார்வையையும் பதிவு செய்ய கோருகிறேன்.

//கலைஞரைத் தாண்டியும் அரசியல் உயர வேண்டும். இதுதான் அரசியலின் தரம் என்று நாமெல்லாம் இருந்து விடாமல் அடுத்தக் கட்டம் பற்றி சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.//

இந்த கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. உண்மையை சொல்லப் போனால் கலைஞரும் இந்த நிலையை தான் விரும்புவார். தலைவர் கலைஞர் தன்னை பெரிய அரசியல் மாமேதை என்று என்றுமே சொல்லிக் கொண்டதில்லை. காமராஜர், சி.சுப்ரமணியம் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களையும் கூட தன்னுடைய ஆதர்சத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டவர் அவர்.

//எனது நினைவில் எழுதியதுதான். பத்திரிகைச் செய்திகளைத் தேடித் தர முயற்சிக்கிறேன்.//

கடல்நீரை குடிநீராக்கும் ஆயிரம் கோடி திட்டத்தை முன்வைத்து அதுகுறித்து பேச ஜெ.வை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் தயாநிதி. கடைசி வரை நேரம் கிடைக்கவே இல்லை என்பதே உண்மை. இது பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது.

//நான் நடுநிலைவாதி இல்லை. //

நானும் தான். நிறைய பேர் நீங்கள் நடுநிலை வாதி என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வார்த்தை உங்களிடம் வெளிவருவதற்காகவே இவ்வளவு பெரிய பதிவு போடவேண்டியிருந்தது :-))))

said...

//இதுவும் பாரபட்சமான பதிவுதான்.//

அன்பு அனானி

“டாக்டர் கலைஞர்” என்ற வலைப்பூவில் பாரபட்சமில்லாமல் பதிவு போட முடியுமா? :-(

அப்படி முடியுமென்றால் “டாக்டர் புரட்சித்தலைவி” என்று ஒரு வலைப்பூவை அமைத்து பாரபட்சமில்லாமல் எழுதி எங்களுக்கு சொல்லித் தாருங்கள்!

Anonymous said...

//மாநில முதல்வருக்கு தன்னுடைய சொந்தக் கருத்தை சொல்ல உரிமை இல்லையா என்ன? சட்டத்தில் அப்படி ஏதேனும் பிரிவு இருக்கிறதா?//

லக்கியாரே,

அவருக்கு தனது கருத்தை கூற முழு உரிமை உண்டு ஆனால அவருடைய ஒவ்வொரு அசைவையும், எதிரிகள் கவனித்து கொண்டு இருக்கிரற கஉலகம் கவனித்து கொண்டு இருக்கிறது. அவர் கூறிய கருத்தால் இழப்பு சேது சமுத்திர திட்டம். ஒரு கதையில் உள்ள கதாபாத்திரங்களை உண்மை என்று நம்பும் உலகில் ஒரு முதல் அமைச்சர் பதவியில் இருக்கும் தலைவர் சற்று பொருமை காத்திருக்க வேண்டும் (எதிர் கட்சிகள் அதை அரசியல் பண்னியது அது வேறு விசயம்).

- ஆனந்த

said...

லக்கி,

எனது கருத்தைச் சொல்கிறேன். மாசி சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. திமுகவில் குடும்ப அரசியலே இல்லை என்று உங்களால் சொல்ல முடியவில்லை. நான் ஸ்டாலினை குறைத்து மதிப்பிடவில்லை. அழகிரி, கனிமொழி இவர்களின் திமுக பங்களிப்பைத்தான் குறிப்பிடுகிறேன். கலைஞரின் தவறான போக்கினால் தானே அதிமுக என்ற கட்சி தோன்றி ஜெ வரை வளர்ந்திருக்கிறது. இதை திமுகவின் வெற்றி, சாதுர்யம் என்று கொள்வீர்களா ? கொண்டாடுவீர்களா ?

said...

அன்பு கோவி!

//எனது கருத்தைச் சொல்கிறேன். மாசி சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. திமுகவில் குடும்ப அரசியலே இல்லை என்று உங்களால் சொல்ல முடியவில்லை. நான் ஸ்டாலினை குறைத்து மதிப்பிடவில்லை. அழகிரி, கனிமொழி இவர்களின் திமுக பங்களிப்பைத்தான் குறிப்பிடுகிறேன். //

குடும்பமே அரசியலில் இருந்தால் குடும்ப அரசியல் இயல்பாக வரத்தானே செய்யும். இது உலக அரசியலுக்கும் பொருந்தும். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக க்ளிண்டனின் மனைவி வர வாய்ப்பிருப்பதாக செய்திகள் வருகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

திமுகவுக்கு வருபவர்கள் எல்லாம் புதியதாக வானத்தில் இருந்து குதித்து வந்துவிட முடியாது. என் அப்பா திமுகவில் இருந்தார், இப்போது நானும் திமுகவில் இருக்கிறேன். இது இயல்பானது தானே?

கலைஞர் என்ன ஏதோ வீடியோ கடை வைத்திருந்த யாரையோ கொண்டுவந்து கட்சியை அவர்களிடம் அடகா வைத்துவிட்டார்?


//கலைஞரின் தவறான போக்கினால் தானே அதிமுக என்ற கட்சி தோன்றி ஜெ வரை வளர்ந்திருக்கிறது. இதை திமுகவின் வெற்றி, சாதுர்யம் என்று கொள்வீர்களா ? கொண்டாடுவீர்களா ?//

தவறே செய்யாத அரசியல் கட்சி ஏதாவது உலகில் உண்டா? ஒவ்வொரு அரசியல் கட்சியின் செயல்பாடும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து அக்கட்சிக்கு நன்மையையோ, தீமையையோ அளிக்கிறது. எம்.ஜி.ஆரை திமுகவை விட்டு நீக்கியது தவறென்று நான் சொல்லமாட்டேன். எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெ.வை முதல்வர் ஆக்கியது மக்கள் செய்த தவறென்றே சொல்வேன்.

said...

என்னத்த சொல்ல, ரிக்கி பாண்டிங் கூடத்தான் தன் அணி னேர்மையாக விளயாடினதாக சொல்கிறார்.. அதுக்காக அத ஒத்துக்க முடியுமா சொல்லுங்க?? அது மாதிரி தான் இருக்கு ஒங்க சப்பகட்டும்..
ஒன்னு மட்டும் நிச்சயம்..
இவிங்க கிட்டயிருந்து
“ஆண்டவனே வந்தாலும் தமிழகத்தை காப்பாத்த முடியாது”

Anonymous said...

To Luckylook
Please donot support your arguments for family politics in India with other countries like america or singapore. The whole scenario is different. Who decides the candidature in those parties. Who is the leader of those parties? Bill clinton? Do you know what is his role in current american politics- he now serves as public speaker and his views are not more influential than any spectators- Dont bring your your foolishness by these comparisiions

said...

//கனிமொழி எல்லாம் காற்றில் பறக்கும் காகிதபூக்கள் என்பது உங்களுக்குமா புரியவில்லை!!!//

சூரியன் சார் உங்களின் இந்தக் கருத்துக்கு லக்கியே பதிலளித்து விட்டார்...காலம் கனிந்தால் கனிமொழி அவர்களும் கட்சியை கட்டி ஆளலாம் என்பதே என் கருத்தும்....

சமீபத்தில் திருப்பூரில் நடந்த கூட்டத்தில் தளபதியின் தடுமாற்றமான பேச்சு தலைவர் தலையிட்டு குட்டும் வரை போனதைப் பார்த்தால்... கனிமொழிக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகவே படுகிறது...

இது அரசியல்..அசந்தால்..அவ்வளவுதான்.. பாக்கலாம் நடப்பது என்னவோ?!!!!

said...

//மா சிவகுமார் said...

'தேர்தலில் போட்டியிட்டது வரை ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஒரு முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்' என்று வாக்களித்தேன். அதன் பிறகு அனுபவமே இல்லாத 'அவர்தான் காபினட் அமைச்சர், அவர்தான் தமிழகத்தின் தில்லி பிரதிநிதி' என்று தரம் தாழ்ந்ததை எப்படி நீங்கள் எல்லாம் சகித்துக் கொண்டிருந்தீர்கள்?///


தயாநிதிமாறனின் திறமை நிருபிக்கப்பட்ட ஒன்று.ஒரு டீ கடைக்காரனுக்கு இருக்கும் அரசியல் தெளிவு கூட உங்கள் குற்றச்சாட்டில் இல்லை.

ராமராசனெல்லாம் MP ஆன போது வயிறெறியாது ஆனால் கருணாநிதி யின் உறவுகள் திறமையிருந்தாலும் சொலிக்க கூடாது என்பதே பலரின் ஆதங்கம் போல!!

உங்க வீட்டு பக்கத்துல நல்ல டீ கடைக்காரரிடம் அரசியல் பாடம் படிக்கவும்.

பெரும்பாலான படித்த முட்டாள்களால்தான் தேசம் உருப்படாமல் போகிறது என்று யாரோ சொன்னார்கள்...அது உண்மைதான் போல!!!!!!

P.S தயாநிதி மாறன் பதவி பறிப்புக்கு இன்றளவும் கருணாநிதி மேல் கோபம் கொண்டுள்ள பலரில் நானும் ஒருவன், அதுக்காக செயலலிதாவையும், விசயகாந்தையும் ஆதரிக்க முடியாது...

said...

//Please donot support your arguments for family politics in India with other countries like america or singapore//

சிங்கப்பூர் வாரிசு அரசியல் எப்படி கனிமொழியிலிருந்து வேறுபடுகிறது என்பதை அறிய ஆவல்.


பொங்கலோ பொங்கல்!
------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-08)

Anonymous said...

//கனிமொழிக்கு கிட்டத்தட்ட நாற்பது வயதாகிறது. இன்னமும் நாற்பது ஆண்டுகள் தொண்டாற்றிய பின்னர் தான் பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறீர்களா? தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கருவிலேயே திமுக உறுப்பினர்களாக மாறி தான் பிறக்கிறார்கள் என்பது திமுகவின் கடைக்கோடி தொண்டனுக்கும் தெரியும்.//

Super Comedy Dialogues Sir..

said...

இந்தக் கருத்து மோதல்கள் அனைவருக்கும் நல்லது.
கடந்த தேர்தலில் மிகவும் நாணயமும்,நேர்மையும் பேசி உலகத்தையே நல்லதாக்கப் பிறந்துள்ள மும்மூர்த்திகள் சோமாரி,குருமூர்த்தி,நரசிம்ம ராம்
கும்பல் கைதாகியிருக்கும் சுப்பிரமணியுடன் ஆலோசணை நடத்திக்
கலைஞரைத் தோற்கடிக்க முழு முயற்சிகள் மேற்கொண்டனர்.
பார்ப்பனீயத்தின் முழு வண்ணமும் காட்டப்பட்டது.அவர்கள் ஆதரித்தப் பெண்மணியார் ஒரு நடிகரின் காதலியாய் இருந்தவர் என்பது தானே பெரிய பெருமை.அராஜகங்கள் அடங்க
முடியாத அளவில் இருந்தன என்பதை
அடிகள் வாங்கிக் கட்டிக் கொண்ட தலைவர்களும்,ஆசிட் பெற்றுக் கொண்ட அம்மையாரும் இன்னும் பல விதங்களில் பாதிக்கப் பட்டோரும் அவமானப் படுத்தப் பட்டவர்களும் அறிவார்களே!
கலைஞரும் மற்றவர்களும் பத்திரிக்கை
பல்ம் என்பது பார்ப்பன வெத்து வேட்டு
என்று புரிந்து கொண்டு விட்டனரே!
குடும்ப அரசியல் இந்தியாவில், ஏன்
உலக்த்தில் எங்கே இல்லை?
திராவிட சரித்திரம்,பார்ப்பனர் 90க்கும்
மேற் பட்ட விழுக்காடுகளில் பெரும்
பதவிகளில் இருந்த கொடுமை,இன்றும்
உச்ச அநீதி மன்றத்தின் பச்சைப்
பார்ப்பனத் தனம்(ஒரு தாழ்த்தப் பட்டவர் அங்கே ஒன்றும் செய்து விட முடியாது!செய்ய விடமாட்டார்கள்)
இதையெல்லாம் அறியாதவர்கள் இருக்கலாமா?
பார்ப்பானை இன்னும் ஏன் எதிர்க்கிறீர்கள் என்பதற்கு பார்ப்பனரல்லாத ந்ரேந்திர மோடியை
இந்துத்துவா என்ற பச்சைப் பார்ப்பனீயம் எப்படி ஆட்டுவிக்கிறது என்பதைப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டாமா?
சோமாரிகளின் நரித்தனம் புரியாமல்
சிரித்துக் கொண்டிருக்கலாமா?
காமராசரையே குறை சொல்லியவர்கள்
தான் தமிழர்கள்.
சினிமாவிலே மயங்கித் தவிக்கும் தலை முறையை வைத்துக் கொண்டு
இனி ஒரு காமராசருக்கு ஏங்கும்
படித்த, தமிழகம் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் தமிழர்கள் முதலில்
தங்களைத் திருத்தித் தங்கள் நண்பர்களைத் திருத்த முற்ப்டுவது நல்லது.