Friday, September 28, 2007

இதிகாசம் என்பது ஆதிக்க சக்திகளின் மீடியா வடிவமா?

இன்று நம்மில் பலர் இணையத்திற்கு அடிமையாக இருப்பதை பார்த்திருப்பீர்கள். நாள் முழுவதையும் இணையத்தை உலவியே கழிக்கும் பலர் இருக்கிறார்கள். இதை போலவே நம்மூர் இல்லத்தரசிகள் தொலைக்காட்சியில் மெகா தொடர்கள் கண்டு கழித்தே தங்கள் நாட்களை கழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இணையும் மற்றும் தொலைக்காட்சி ஆகியவை நம் வீடுகளுக்குள் ஊடுருவும் முன்னர், பலர் நாவல்களில் தங்களை மறந்து இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்ற மாதிரி நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் மீடியா மிக முக்கியமான இடத்தை பிடித்துவிடுகிறது. ஆனால் என்ன தான் காலம் மாறி நாலும் மனிதனை எப்போதுமே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அது மதம் தான். மதம் என்னும் மாயையையில் இருந்து மனிதன் என்றுமே விடுபட்டதில்லை. மனிதனை மதத்தின் பிடியில் இருந்து விடுபட்டுவிடாமல் இருக்க வைப்பதில் இதிகாசம் முதலியவை முக்கியமான பங்கு ஆற்றி வருகின்றன

BBC போன்ற முதலான ஆங்கில தொலைக்காட்சியை பார்த்து இருப்பீர்களானால் கடந்த சில வருடங்களாக இஸ்லாமிய அமைப்புகளை பற்றியே பெரும்பாலான நேரங்களில் காட்டி வருகிறார்கள். ஜிஹாத் பற்றிய நிகழ்ச்சிகள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கிட்டத்தட்ட இஸ்லாமிய சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதைப் போல் மேலை நாட்டு மீடியாக்களில் காட்டி வருகிறார்கள். இதே மேல் நாட்டு மீடியாக்கள் தான் சோவியத் ஒன்றியம் இருந்த காலத்தில் தங்கள் பனிப்போருக்காக இஸ்லாமிய அமைப்புகளை ஊட்டி வளர்த்தார்கள். ஜேம்ஸ் பாண்டு படங்களில் கூட எப்போதுமே ரஷ்யா இடம் பெற்று விடும். இப்படி எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தனது எதிரியை பற்றி தன்னிடம் உள்ள மீடியா பலத்தால் எதிர் கொள்வது ஒரு யுக்தியாகவே கையாளப்பட்டு வருகிறது. அதுவும் பெரும்பாலான சமயங்களில் மீடியா ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளது. சோ போன்ற சொத்தைகளும் தலைவர் கலைஞர் பற்றியே கார்ட்டூன் வரைந்து வருவதையும் கவனித்து இருப்பீர்கள். இதே கயவர்கள் அத்வானி, வேதாந்தி போன்ற மடையர்களை பற்றி எந்த கார்ட்டூனும் போட மாட்டார்கள்

இதே யுக்தி தான் திராவிடர்-ஆரியர்களுக்கு இடையே நடந்த போரிலும் கையாளப்பட்டுள்ளது. திராவிட இனத்தை அடிமைப்படுத்துவதோடு நின்றுவிடாமல் அந்த இனம் காலாகாலத்துக்கும் தலை தூக்கவே முடியாதபடி செய்ய வேண்டும் என்பதற்கு கையாளப்பட்ட யுக்தி தான் இதிகாசம். திராவிட மன்னனான இராவணனை மிகவும் கேவலமானவனாக காட்டி அதன் மூலம் திராவிட இனம் அடிமைப்பட்ட இனம் என்று காட்டவே இதிகாசம் பயன்பட்டுள்ளது. இராவணனும் வலிமை மிக்கவன், தான் கடத்தி வந்த சீதையை அவன் நெருங்கியது கிடையாது என்பது போன்ற விளக்கங்களால் திராவிடர்கள் எந்த அளவிற்கு வலிமை மிக்கவர்களால் இருந்திருப்பார்கள் என்பது புரியும். இத்தகைய வலிமை பொருந்திய ஒரு இனத்தை வீழ்த்த வேண்டுமானால் அது மதம் என்னும் போர்வையால் மூடாமல் முடியாது என்று தெரிந்தே இதிகாசம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய மிக நுட்பமான ஒரு யுக்தியில் இருந்து மனிதன் என்று மீண்டு வருகிறானோ அன்று தான் மனித இனம் வேற்றுமை களைந்து முன்னேற முடியும்

1 comments:

said...

//தான் கடத்தி வந்த சீதையை அவன் நெருங்கியது கிடையாது//

உடன்பிறப்பே,

முதலில் ராமாயணத்தை ஒழுங்காக படிக்கவும். கம்பர் super matterஐ எல்லாம் தன் காவியத்தில் மறைத்து விட்டார். முடிந்தால் வால்மீகியின் original ராமாயண translationஐ படிக்கவும்.

சீதாப்பிராட்டியின் கொங்கைகளை புகழ்ந்து பேசிய ராவணனுக்கு சாப்பாடு போட்டவர் சாட்சாத் சீதாவேதான். பிறகு ராவணன் அவளை இழுத்து தன் மடிமேல் அமர்த்திதான் லங்காவிற்கு கொண்டு சென்றான் என்கிறார் வால்மீகி.

அங்கே அவா இரண்டு பேருக்கு இடையில் எல்லாம் !!!! நடந்து விட்டதாக சில வரிகளில் பூடகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.