Monday, September 24, 2007

கலைஞரின் தலைக்கு விலையா?

உலகமகா கட்டுக்கதையாம் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்டிருந்ததை மேற்கோள் காட்டியதற்காக மூத்த திராவிட தலைவர் கலைஞர் தலைக்கும், நாக்குக்கும் சனாதனவாதிகள் எடைக்கு எடை தங்கம் அறிவித்திருக்கிறார்கள். கலைஞரின் தலையும், நாக்குக்கும் விலை மதிப்பிடும் முட்டாள் தனத்தை ஒரு வடநாட்டு பண்டாரம் செய்திருக்கிறது. தன் தலையும், நாக்கும் வெட்டப்படும்.. அதனால் தமிழனுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்றால் குமணனை போல தன் தலையையும் இழக்க துணிவார் தலைவர் கலைஞர். தண்டவாளத்துக்கு தலையை கொடுத்த வரலாறு அவருக்குண்டு.

கலைஞருக்கு பகுத்தறிவு ஊட்டிய தந்தை பெரியாரும், அரசியல் ஆசான் அறிஞர் அண்ணாவும் இன்று உயிருடன் இருந்திருந்தால் இதுகுறித்து மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். எப்போதெல்லாம் சனாதனவாதிகள் இதுபோல வெறியாட்டம் ஆடுகிறார்களோ, அப்போதெல்லாம் திராவிட இயக்கத்தினர் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவே பொருள்.

கருத்து சுதந்திரத்துக்கு பாடுபடுவதாக வேடம் போட்டு, பல விவகாரமான பிரச்சினைகளிலும் கருத்து சுதந்திரத்துக்கு குரல் கொடுத்ததாக கூறிக்கொண்டவர்களின் சாயம் இப்போது கலையத் தொடங்கியிருக்கிறது. ராமனை குடிகாரன் என்று கலைஞர் சொன்னது தேவையற்றதாம். பார்ப்பன நவீன வாத்தியார் ஞானி விகடன் ஏட்டில் திருவாய் மலர்ந்திருக்கிறார். ஏன்? குஷ்புவுக்கு இருந்த கருத்து சுதந்திரம் ஒரு மாநில முதல்வருக்கு இல்லையா? 'சோமபானம் அருந்தியவனை' குடிகாரன் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லி அழைப்பது? 'சோமபானம் அருந்தினான்' என்று இராமாயணத்தில் சொன்னதை திருப்பிச் சொன்னால் குடுமிகள் ஆடுவதேன்?

நல்லவேளையாக வழக்கம்போல திமுக தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு பூணூல் அறுக்கப் போகாமல் அரசியல் ரீதியாக இந்தப் பிரச்சினையை புத்திசாலித்தனமாக எதிர்கொண்டு வருகிறார்கள். பகுத்தறிவுப் பூமியாம் தமிழகத்தில் தெரிந்தோ, தெரியாமலேயோ வேர்பிடித்து வரும் மதவாத, சனாதன வெறியர்களின் ஆணிவேரை வெந்நீர் ஊற்றி அழிக்க சரியான தருணம் இதுவே.

இப்பிரச்சினை தொடர்பான மருத்துவர் அய்யாவின் அறிக்கைகளும், தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியரின் கருத்துக்களும், தோழர் தொல்.திருமா அவர்களின் போராட்டமும் பிரச்சினையை திராவிட உணர்வு கொண்டவர்கள் தந்தை பெரியார் காட்டிய பகுத்தறிவு வழியில், சரியான முறையில் அணுகுவதையே காட்டுகிறது.

இரு நாட்களாக இணையத்தை மேய்ந்து பார்த்தபோது இவ்விவகாரத்தில் தலைவர் கலைஞர் மீது ஈழத்தமிழருக்கு இருந்த பாசத்தை உணரமுடிகிறது. தமிழ்நாட்டு தமிழர்களை விட மிக அதிகமாக இந்த விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டிருப்பது ஈழத்தமிழர்களே. பல விவகாரங்களில் கலைஞரை அவர்கள் கருத்தியல் ரீதியாக எதிர்த்தாலும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் என்றதுமே அவர்களது ஆழ்மனதில் புதைந்திருந்த பாசம் வெளிப்பட்டிருக்கிறது. இவ்வாறாக தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியை சனாதானவாதிகள் தொடர்ந்து செய்துவர வேண்டும்.

8 comments:

said...

கலைஞர் தமிழக முதல்வர் மூத்த அரசியல் தலைவர் மக்கள் பிரதிநிதி மு. கருணாநிதிக்கு எதிராக கொலைவெறியை தூண்டியிருக்கும் மத பாதகர்களின் இக்காட்டுமிராண்டி போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன்.

மாசிலா.

said...

//'சோமபானம் அருந்தியவனை' குடிகாரன் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லி அழைப்பது? 'சோமபானம் அருந்தினான்' என்று இராமாயணத்தில் சொன்னதை திருப்பிச் சொன்னால் குடுமிகள் ஆடுவதேன்?//


விஜயகாண்டும் சேர்ந்து ஆடுவது ஏன்?

-----------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணயம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

said...

தமிழர்களின் முகவரியான கலைஞர் அவர்களை எதிர்த்து வார்த்தைகளால் போரிட முடியாத பயங்கரவாதிகள் தலையை துண்டிக்க விலை பேசுகிறார்கள், இவர்களுக்கு ஒரேடியாக அழிந்து போக ஆசை வந்து விட்டதா என்ன? கலைஞரின் நாக்கு இவர்கள் வெட்ட வரும் வாளை விட வலிமையானது, கூர்மையானது. வாளேந்த நினைப்பவர்களின் வால் ஒட்ட நொறுக்கப்படும், மதவாதத்தை எதிர்த்து காங்கிரசும் கம்யூனிஸ்டும் ஒன்று சேர்ந்துள்ளன - மத்தியில் ஆட்சி நடக்கின்றது - இனி தேவை தமிழர் ஒற்றுமை மட்டுமே - நாகூர் இஸ்மாயில்

said...

இதெல்லாம் கூடா நட்பின் பின்விளைவே

சேரக்கூடாத கட்சிகளுடன் முன்பு தேர்தல் கூட்டணி வைத்தார்.அப்பொழுது சனாதன கூட்டணி வெறியர்களின் கூட்டணி இனித்தது.இப்பொழுது மட்டும் கசக்கிறதா..

கலைஞர் மீதுள்ள அதீத பாசத்தால்தான் அவரிடம் நாங்கள் கோவிக்கிறோம்.

இனிவரும் காலங்களிலாவது சனாதன வெறியர்களிடம் ஓட்டுக்காக கூட்டணி வைத்துக்கொள்ளாதீர்கள்.

அன்புடன்
அரவிந்தன்

said...

லக்கியாரே,

காரம் பத்தாது. தலையின் தலைக்கு விலை வைத்த சேதி கேள்விப்பட்டு ஒன்றிரண்டு தலைகளை எடுத்து இருக்கவேண்டும்.

said...

//'சோமபானம் அருந்தியவனை' குடிகாரன் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லி அழைப்பது? 'சோமபானம் அருந்தினான்' என்று இராமாயணத்தில் சொன்னதை திருப்பிச் சொன்னால் குடுமிகள் ஆடுவதேன்?//

ராமன் சீதையை குடிகாரி என்று சொல்லி இருக்கும் போது ராமனை குடிகாரன் என்று சொல்லலாமா?

Anonymous said...

//அதனால் தமிழனுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்றால் குமணனை போல தன் தலையையும் இழக்க துணிவார் தலைவர் கலைஞர்.//

இது கலைஞருக்கு தெரியுமா?

said...

கலைஞர் கலைஞர் தான் !கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்பது போல் என்னதான் மஞ்சள் துண்டு போட்டாலும், என்.டி.ஆரே கண்டு கொள்ளாத புட்டபர்த்தி சாயிபாபாவுக்கு அதிதி பூஜை (அதாங்க ..விருந்தோம்புதல்)செய்தாலும் ராமாயணம் ஒரு கற்பனை காவியம், ராமன் ஒரு காவியத்தலைவன் என்ற தன் கருத்துக்கு இன்னும் கட்டுப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது.




அனும‌ன் ராம‌னின் க‌ணையாழியோடு, ஆகாய‌ வ‌ழிப் ப‌ய‌ண‌த்தில் உள்ளார். அப்போது அக‌ஸ்திய‌ர் அனும‌னை த‌ங்கி செல்லும்ப‌டி அழைக்கிறார். அனும‌னோ ராம‌ காரிய‌ம் என்று ம‌றுக்கிறார். அக‌ஸ்திய‌ர் அனும‌ன் கையிலிருந்த‌ க‌ணையாழியை வாங்கி த‌ம் க‌ம‌ண்ட‌ல‌த்தில் போட்டுவிட்டு "சாப்டு" போக‌ சொல்ல‌, வேறு வ‌ழியில்லாத‌ அனும‌ன் சாப்பிட்டு விட்டு க‌ணையாழியை கேட்கிறார். க‌ம‌ண்ட‌ல‌த்திலிருந்து எடுத்துக் கொள்ளும்ப‌டி கூறுகிறார் அக‌ஸ்திய‌ர்.



அனும‌ன் க‌ம‌ண்ட‌ல‌த்தில் கைவிட‌ ப‌ல்லாயிர‌ம் க‌ணையாழிக‌ள். அனும‌ன் கார‌ண‌ம் கேட்க‌..இது தொட‌ர்க‌தைய‌ப்பா..எத்த‌னை ராம‌ர்க‌ள், எத்த‌னை க‌ணையாழிக‌ள் என்று சொல்கிறார் அக‌ஸ்திய‌ர்.



இதில் இப்போது பிர‌ஸ்தாபிக்க‌ப்ப‌டும் ராம‌ர் பால‌ம் எந்த‌ ராம‌னால் எந்த‌ யுக‌த்தில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌தோ..யார் அறிவார் ப‌ராப‌ர‌மே!



தெய்வ‌ம் என்றால் அது தெய்வ‌ம்/வெறும் சிலை என்றால் அது சிலைதான் என்ப‌து க‌ண்ண‌தாச‌ன் வாக்கு. க‌ல்லைக் க‌ண்டால் நாயைக் காணோம் க‌தை தான் இதுவும். ராம‌ன் வாழ்ந்தான் என்ப‌து நிஜ‌ம் தான். இன்றும் ராம‌னின் சூட்சும‌ வ‌டிவ‌ம் வாழ்கிறது வழி காட்டுகிறது என்ப‌தும் நிஜ‌ம்தான். அத‌ற்காக‌ க‌லைஞ‌ர் தாம் உண‌ராத‌தை, த‌ன் புல‌ன்க‌ளுக்கு த‌ட்டுப் ப‌டாத‌தை எப்ப‌டி ஏற்பார். அவ‌ர் தாம் உண‌ர்ந்த‌தை உண‌ர்ந்த‌ப‌டி பேசுகிறார். அவ‌ர் கோண‌த்தில் அவ‌ர் சொல்வ‌து நிஜ‌ம்.




நாஸ்திக‌ரான‌ க‌லைஞ‌ரே ..ம‌க்க‌ள் ந‌ல‌ம் நாடி சேது கால்வாய் திட்ட‌ அம‌லுக்கு முய‌ற்சி செய்யும்போது ஆஸ்திக‌ர்க‌ள் ம‌க்க‌ள் ந‌ல‌ம் ம‌ற‌ந்து அத‌ற்கு த‌டை போடுவ‌துதான் நாஸ்திக‌ம். ஈஸ்வ‌ரோ ம‌னுஷ்ய‌ ரூப்பேணா/ மான‌வ‌ சேவா மாத‌வ‌ சேவா / இதையெல்லாம் ம‌ற‌ந்து த‌லையெடுப்போம், நாக்கை அறுப்போம் என்று பேசும் அரை,குறைக‌ள் தான் ராம‌னை அவ‌மான‌ப்ப‌டுத்துகிறார்க‌ள்