Friday, September 19, 2008

ஒருவனுக்கு ஒருத்தி எனும் டுபாக்கூர் கலாச்சாரம் !

நம்ம பசங்களுக்கு ஏதோ கொஞ்சம் படிச்சு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்த உடனேயே வெள்ளைக்கார துரை ஃபேமிலி என்ற நினைப்பு வந்துவிடுகிறது போல் இருக்கிறது. அதனால் தான் கேட்குறாங்க கேள்வி. பல தார மணம் புரிவது தான் பகுத்தறிவா என்று. இப்படி கேட்பவர்கள் தங்கள் பாட்டன் முப்பாட்டன் வரலாறு எல்லாம் தெரியாதவர்கள் அல்ல அதை குழி தோண்டு புதைத்து மூடி மறைக்க நினைப்பவர்கள். என்னமோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்துக்கு காப்பிரைட் வாங்கி வைத்து இருப்பவர்கள் போல் பீற்றிக் கொண்டு திரிவார்கள்

அவர்களுக்கு நாம் பதில் சொல்வதை விட நம்ம உண்மை திராவிடர் கோவியார் சொன்ன பதிலை சொன்னாலாவது புரியும் என்று நினைக்கிறேன். அவர் "ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் !" என்று தலைப்பு வைத்து பதிவு ஒன்றை எழுதி இருந்தார். அந்த தலைப்பில் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் இருப்பதால் இப்படி தலைப்பு வைத்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்று தலைப்பு வைத்தேன்

கோவியார் சொன்னதின் சாரம் இது தான். நம் சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது எந்த அளவு கடைப்பிடிக்கப்பட்டது என்பது பற்றி கூறி இருந்தார். ஒருவனுக்கு ஒருத்தி என்று சொன்னவர்கள் தான் தேவதாசி முறையின் கன்ஸ்யூமர்களாக இருந்தார்கள். காலையில் வீட்டில் பூஜை அறையில் நுழைந்து பல தார கடவுள்களை வரிசையாக வணங்குபவர்கள் தான் இந்த வெள்ளைக்கார துரை வீட்டு பிள்ளைகள். இந்த ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம் கிறுத்துவர்களான ஆங்கிலேயர்களிடம் இருந்து வந்தது தான் என்பது தான் அவர் பதிவின் சாரம். பூஜை முடிந்து வெளியே வந்ததும் கலைஞர் பல தார மணம் புரிந்தது சரியா என்று கரித்து கொட்ட ஆரம்பித்துவிடுவார்கள்

ஆங்கிலேயர்கள் கூட ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் திருமணத்துக்கு முன்னர் அவர்கள் எல்லாம் சில பல துணைகளையாவது டிரை செய்துவிடுகிறார்கள். அப்புறம் போதும்டா இதுக்கு மேல தாங்காது என்ற நிலை வந்தவுடன் மணம் புரிந்து கொள்கிறார்கள். மணம் புரிந்த பின்னும் அடங்காதவர்கள் மணவிலக்கு பெற்றுக் கொண்டு அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிடுகிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் சட்டத்தின் ஒட்டையை பயன்படுத்துவது மாதிரி தான் இருக்கிறது. இப்படி எல்லாம் மக்களை முட்டாளாக்கி வாழ்வதை விட நெஞ்சுரத்துடன் உண்மையாக வாழ்ந்தால் சிலருக்கு ஏனோ ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை

கோவியாரின் பதிவு இங்கே ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் !

27 comments:

said...

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? மனம் புரிந்த ஒருவரை விவாகரத்து பண்ணி விட்டு அடுத்த திருமணம் புரிபவர்களை யாரும் குறை சொல்வதில்லை,ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு,மூன்று என மனைவி வைத்து கொள்பவர்களை தான் குறை சொல்கிறார்கள்.உங்கள் தலைவர் அப்படி இருப்பதனாலேயே அது சரி என்று ஆகிவிடுமா?இதற்கு முன் யாரும் இருந்ததில்லையா என கேட்காதீர்கள், இது சரியா இல்லையா அதுதான் கேள்வி

Anonymous said...

என்னோட பெரிய தாத்தாவுக்கு மூனு பொண்டாட்டி. அதெல்லாம் அந்த காலத்துல ஜகஜம்.

நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்...

said...

//மணம் புரிந்த பின்னும் அடங்காதவர்கள் மணவிலக்கு பெற்றுக் கொண்டு அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிடுகிறார்கள்.//

மணவிலக்கு பெறுபவர்கள் எல்லாம் அடங்காமல் செய்வதில்லை. filthy comment.

said...

பாபு,

நியாயங்களும் தர்மங்களும் எப்போதும் நிலையானதொன்றாக இருப்பதில்லை.. உ-ம் (1):- பழைய காலத்தில் புருஷன் கையாலாகதவனாக இருந்தால் முனிவர்களோடு படுத்து குழந்தை பெற்றுக் கொள்வது ஒரு நியாயம் - ராமன் அப்படிப் பிறந்தவன் தான்

உ.ம்(2):- உடன்கட்டை ஏறுவது.

இன்றைக்கு ஒரு தாரம் நியாயமாக இருக்கிறது.. ஒரு வேளை உங்கள் பேரனின் காலத்தில் அது கௌவுரவக் குறைச்சலானதாக மாறிப்போகவும் வாய்ப்பிருக்கிறது.. அவன் ஒருவேளை.. “ என் தாத்தாவுக்கு “முடியாது” என்பதால் தான் பாட்டியோடு மட்டும் நிறுத்திக் கொண்டார்” என்று சொல்லலாம் அல்லவா?

காலம் மாற நியாயங்களும் மாறும்.. கலைஞரின் திருமணங்கள் நடைபெற்ற சமயங்களில் இதெல்லாம் சகஜம். அவரும் இதையெல்லாம் மறைத்து வைத்துக் கொண்டு ‘உத்தமபுத்திரன்’ வேடம் போடவில்லையே ( எம்.ஜி.ஆர் போல) அவருக்கு தன் தனிப்பட்ட வாழ்க்கைப் புத்தகத்தை திறந்து வைக்கும் தில் இருக்கிறது. அதைப் பார்த்து விட்டு கேணத்தனமாக கேள்வி கேட்பவர்களை ஒன்றும் செய்யாமல் விடும் அளவுக்கு பரந்த மனமும் இருக்கிறது..

ராமாவரம் தோட்டத்தில் ஊமையாக்கப்பட்டவர்களைப் பற்றி வெளியே விசாரித்துப் பாருங்கள்.. அப்படி ஒரு போலித்தனமான வாழ்க்கை வாழும் நிலையை அவர் எடுக்காமல் நேர்மையாக விமர்சனங்களை எதிர் கொள்வதை முடிந்தால் பாராட்டுங்கள் இல்லையானால் “சூ”வை மூடிக் கொண்டு இருக்கவும்.

பில்லி

said...

என்னுடைய விமர்சனத்தை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை,உங்கள் தலைவர் அப்படி இருப்பதாலேயே அதை ந்யாய படுத்தாதீர்கள் என்று சொன்னேனே தவிர அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை நான் விமர்சிக்கவில்லை.ஆனால் நீங்கள் பதில் சொல்லிய விதம் ஒரு நாகரீகமானவனுக்கு அழகல்ல

said...

தலைவர் மீது சேற்றை வாரி இறைப்பவர்களிடம் என்ன நாகரீகத்தை எதிர்பார்க்க முடியும். அவர்களுக்கு அவர்கள் பாணியில் சொன்னால் தான் மண்டையில் ஏறுகிறது

said...

முடிந்தால் பாராட்டுங்கள் இல்லையானால் “சூ”வை மூடிக் கொண்டு இருக்கவும்.
///

உடன்பிறப்பு,

நானும் தீவிர தி.மு.க காரன்தான்.என்ன இருந்தாலும் இதுபோன்ற வார்த்தை பிரயோகம் மிகமிக தவறு.

Anonymous said...

அப்துல்லா & பாபு,

சில நேரங்களில் அசிங்கமான வார்த்தைகள் வந்து விடுகிறது.. என்னசெய்ய? ’அசிங்கமான’ கலாச்சாரத்திலிருந்து வந்துள்ள என்னிடம் நீங்கள் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. அவரின் அரசியல் குறித்து திட்டுவீர்களா - திட்டுங்கள். அப்படி என்னிடம் கூட சில உண்டு அது வேறு விஷயம்.

ஒரு பேட்டியில் கமலிடம் அவரின் காதல் வாழ்க்கை குறித்து கேட்பார் நிருபர் ( அது சரிகாவை பிரிந்த சமயம் என்று நினைக்கிறேன் - சிம்ரன் - கமல் கிசு கிசு உச்சத்தில் இருந்த நேரம்). அதற்கு அவர் ஒரு பதில் சொல்வார் - “நான் ஒரு நடிகன். என்னை ஒரு நடிகனாகத்தான் முன்வைக்கிறேன். எனது நடிப்பில் குறையிருந்தால் பேசுங்கள்.. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேட்க உங்களுக்கு உரிமை இல்லை.”

இந்த இடத்தில் இந்த பதில் பொருத்தமாக இருப்பதாகப் படுகிறது.

ஒரு வேளை கலைஞர் ஒரு மடாதிபதியாக இருந்து நாலைந்து பெண்களோடு ஜாலி பண்ணியிருந்தால் ( ஜெயேந்திரன் போல) நீங்கள் கேட்பதில் நியாயம் உண்டு. அவர் ஒரு தலைவர், இலக்கியவாதி, பத்திரிக்கையாளர்.. இப்படி அவருக்கு இருக்கும் பண்முகங்கள் குறித்து உங்கள் விமர்சங்கள் வரவேற்க்கப்படும் ஆனால் அவர் எங்காவது ”ஏகபத்தினி விரதன்” நான் என்று பிரகடணப்படுத்தி விட்டு ஏகப்பட்ட பத்தினி விரதனாக வாழ்ந்து சமுதாயத்தை ஏமாற்றினாரா? உங்களுக்கு அதில் என்ன பிரச்சினை?

அப்துல்லா, நீங்கள் எந்தப் சூழ்நிலையில் வாழ்ந்து வந்தீர்கள் என்று தெரியவில்லை.. ஆனால் எங்க ஏரியாவில் கலைஞர் பற்றி இப்படி எவனாவது பேசினான் என்றால் முகரையை பேர்த்து விட்டுத்தான் அடுத்த வேலை. அந்த சூழலில் வளர்ந்த என்னைப் போன்றவர்கள் கட்சிக்காரர்களாக இல்லாவிட்டால் கூட கலைஞர் மேல் ஒரு அவதூறு என்றால் துடித்துப் போய் விடுவார்கள்.. இது இயல்பு தான்.

சரி சரி மேட்டர விடுங்க.. காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்

பில்லி

Anonymous said...

கலைஞரின் மூன்றாவது திருமணம்
சட்டசபையில் அனந்தநாயகி கேள்வி
கேட்ட பின்னர்தான் அவரால் ஒப்புக்கொள்ளப்பட்டது.அதற்கு முன்பு அதை அவர் அறிவிக்கவில்லை.
அறிவிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் அப்போது அமைச்சராகவும் இருந்ததால்
வேறு வழியின்றி உண்மையை
ஒப்புக்கொண்டார். கனிமொழி அப்போது பிறந்திருந்தார்.தாயார்
தர்மசம்வர்த்தினி தந்தை மு.கருணாநிதி என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.அனந்தநாயகி
கேட்ட கேள்விக்கு கலைஞர் சொன்ன
பதில் அனைவருக்கும் தெரியும்.

said...

அண்ணன் பில்லி

//அவரின் அரசியல் குறித்து திட்டுவீர்களா - திட்டுங்கள். அப்படி என்னிடம் கூட சில உண்டு அது வேறு விஷயம்.
//

என்ன திட்டுவதா? தலைவரையா? தலைவர் கலைஞரின் கண்மூடித்தனமான ஆதரவாளன் நான்.தயவு செய்து கீழ்கண்ட சுட்டியில் போய் பார்க்கவும்.
http://maraneri.blogspot.com/2008/07/blog-post_01.html#comment-form


நான் உங்களை கண்டித்தவுடன் நான் திமுக என்று பொய் சொல்லுகிறேன் என நினைத்து விட்டீர்களோ?

//காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்
//

தவறை உணர்ந்தமைக்கு மிக்க நன்றி. நம்மை குறை சொல்பவர்களின் இலட்சனத்தை நாம் நன்றாகவே அறிவோம். அறிஞர் அண்ணா வழியில் அதை கண்ணியத்தோடு எதிர்கொள்வோம் என்பதுதான் என் நிலைப்பாடு.

Anonymous said...

அந்த காலத்தில் பகுத்தறிவு வசனகர்த்தாக்கள் ,கலைஞர் உட்பட, வசனம் எழுதிய அனைத்து திரைப்படங்களிலிலும் தவறாது இடம் பெறும் வசனம் "ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழர் பண்பாடு!".அவர்கள் தமிழ்கலாச்சாரத்தை கட்டி காப்பதாக நினைத்து எழுதிய சாகாவரம் பெற்ற வசனம், டுபாக்கூர் வசனம் என்பது இப்போதுதான் தெரிகிறது.ம்ஹூம் ஊருக்கு உபதேசம்!

said...

சினிமாவில் இருக்கிறவர்கள் கடைப்பிடிக்காததில் வியப்பு ஒன்றும் இல்லை நல்லதந்தி, சாமியார்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால் கூட இந்த கலாச்சாரத்தை கடைப்பிடிக்க முடியாமல் போனது தான் பெரும் வியப்பு

Anonymous said...

//
தலைவர் கலைஞரின் கண்மூடித்தனமான ஆதரவாளன் நான்.
//
//
தலைவர் மீது சேற்றை வாரி இறைப்பவர்களிடம் என்ன நாகரீகத்தை எதிர்பார்க்க முடியும்
//
being worshippers, you guys are stooping to any levels justifying any actions of your leader.
It is true that the personal issues should not be discussed and that is absolutely true for Kamalahasan as he is not in politics. why politics is different is because personal life is a good measure to judge one's integrity. Based on that, one can decide whether that individual can be trusted with power.
Do not jump in to any argument on how about others. Let us not deviate from the focus on your leader.

said...

கண்மூடித் தனமாக ஆதரிப்பது தவறு என்று தெரிந்த உங்களுக்கு கண்மூடித் தனமாக தரம் குறைந்து விமர்சிப்பது தவறு என்று தெரியவில்லையா?

Anonymous said...

//
கண்மூடித் தனமாக ஆதரிப்பது தவறு என்று தெரிந்த உங்களுக்கு கண்மூடித் தனமாக தரம் குறைந்து விமர்சிப்பது தவறு என்று தெரியவில்லையா?
//
True. It is never acceptable that people make derogatory remarks.

However, issue is not about the integrity of the person commenting or about others.

The simple expectation is, should your leader not be leading by living like one?

said...

;))

said...

எல்லாம் அவனவன் மனசுதானன்றி வேறொன்றுமல்ல...

said...

தப்பு யார் செய்தாலும் தப்புத்தான்...

said...

நியாயங்களும் சட்டங்களும் இடத்துக்கிடம் மாறுபடுவது போல ஒருவருக்கொருவரும் மாறுபடுகிறது தானே...பிறகென்ன...

Anonymous said...

மத்த நாட்டிலெல்லாம் தான் எப்படி இருந்தாலும் தன்னை ஆள்பவன் நல்லவனா, யோக்கியனா, நேர்மையானவனா இருக்கணும் அப்படின்னு நினைப்பார்கள். நம்ம ஊரிலோ அப்படியே உல்டா.

said...

//மத்த நாட்டிலெல்லாம் தான் எப்படி இருந்தாலும் தன்னை ஆள்பவன் நல்லவனா, யோக்கியனா, நேர்மையானவனா இருக்கணும் அப்படின்னு நினைப்பார்கள்//

அப்படி ஒரு தலைவரை தான் காட்டுங்களேன் பார்க்கலாம்

Anonymous said...

//அப்படி ஒரு தலைவரை தான் காட்டுங்களேன் பார்க்கலாம்//


சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ, ஹூகோ ச்சாவேஸ்.

Anonymous said...

//அப்படி ஒரு தலைவரை தான் காட்டுங்களேன் பார்க்கலாம்//
Nelson Mandela
Lee Kuan Yew

Anonymous said...

Modi
Vajpayee
Govindacharya
L Ganesan

Anonymous said...

//Modi
Vajpayee
Govindacharya
L Ganesan//

மொதொ ரெண்டு கம்மனாட்டிகளப் பத்தி தெரியலை.. கோயிந்தாச்சாரியா- உமாபாரதி மேட்டர் ஊரே கேளு நாடே கேளுன்னு நாறுச்சே படிக்கலையாடா அம்பி?

அப்பால (எச்சி)எல கனேசன் திருச்சில ஒரு விதவை டீச்சரம்மாவை வச்சிக்கிட்டிருக்கான்றது தமிழ்நாட்டில எல்லா பி.ஜே.பிகாரனுக்கும் தெரியும் போய் விசாரிச்சிப் பாரு

அப்பால உங்க வீஈஈஈரத் தொறவி.. கோவனத்த வெளிய கட்டிக்கிட்டு அலைவானே அவனே தான். அவன் மேட்டரு சொல்ல வாய்க் கூசும் மேட்டர்..

போங்கடாங்க நீங்களும் உங்க தொறவரமும்.. அதுக்கு கலைஞர் பத்தாயிரம் மடங்கு மேலானவரு..

சே, பிடல், ஹூகோ பேரெல்லாம் சொல்லிட்டு அப்படியே கொசு பறக்கற கேப்புல கெடா வெட்டவாடா பாக்கறீங்க? ராஸ்கல்ஸ்

Anonymous said...

சே, பிடல், ஹூகோ பேரெல்லாம் சொல்லிட்டு அப்படியே கொசு பறக்கற கேப்புல கெடா வெட்டவாடா பாக்கறீங்க? ராஸ்கல்ஸ்//

DMK Punch!

Anonymous said...

தலைப்பிலேயே கிறிஸ்துவ கலாச்சாரம் என்பதை டுபாக்கூர் கலாச்சாரம் என்று மாற்றி, ஒரு மதத்தையே பழிக்கும் இந்த ‘உடன்பிறப்பு’க்களிடமும்,’கண்ணீர்த்துளி’களிடமும், ஆரோக்கியமாக எதையும் விவாதிக்கமுடியாது. ஐம்பதுகளில் கையிலெடுத்த சைக்கிள் செயின்களை அவர்கள் இன்னும் கீழே போடவில்லை! ‘அந்த’ ஒற்றைவார்த்தையில், கல்லெறியக்கூடாது. மேலே தெறிக்கும்!