Thursday, September 04, 2008

நேற்று எதற்கு விடுமுறை - ஆன்மீக பகலவன்களுக்கு பதில்

கலைஞர் தொலைக்காட்சியில் நேற்றைய சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கப்பட்ட விளம்பரம் பார்த்து பல ஆன்மீக பகலவன்களுக்கும் ஆறாவது அறிவு வேலை செய்ய தொடங்கிவிட்டது. அது என்ன விடுமுறை. வருடத்தில் ஒருமுறை தான் விடுமுறையா என்று எல்லாம் கேள்வி எழுப்பி தங்களுக்கு ஆறு அறிவு இருப்பதை கோடிட்டு காட்டிவிட்டனர். இந்த பகலவன்கள் இந்த கேள்விகளை எல்லாம் கடவுளின் பெயரை சொல்லி கொள்ளை அடிக்கும் போலிச் சாமியார்களிடம் போய் கேட்டு இருந்தால் இன்று உடன்பிறப்புகளுக்கு நிறைய வேலை மிச்சமாகி இருக்கும். அவர்கள் அப்படி கேட்க வேண்டிய கேள்விகளை கேட்க வேண்டியவர்களிடம் கேட்காததால் தான் இன்றைக்கு உடன்பிறப்புகள் இரவு பகலாக வேலை செய்ய வேண்டி இருக்கிறது


நேற்றைக்கு விநாயகர் சதூர்த்தி அதனால் அரசு விடுமுறை. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்துக்களுக்கு அது விநாயகர் சதூர்த்தி மற்ற மதத்தினருக்கும் பகுத்தறிவுவாதிகளுக்கும் அது விடுமுறை. வருடத்தில் பல விடுமுறைகள் வந்தாலும் அதை கொண்டாடுபவர்களுக்கு தான் பண்டிகை கொண்டாடாதவர்களுக்கு அது விடுமுறை தானே. இதில் என்ன சந்தேகம் வந்தது இந்த பகலவன்களுக்கு


கொண்டாடாதவர்கள் ஏன் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி கல்லா கட்ட வேண்டும் என்று இவர்களின் கேள்வி நகைப்புக்குரியது. உதாரணத்துக்கு நேற்று விடுமுறை என்பதால் பீச்சில் கூட்டம் அலைமோதி இருக்கும். பீச்சில் பல மதத்தினரும் கடை வைத்து இருக்கிறார்கள் மற்ற மதத்தினரும் இதில் உண்டு. பண்டிகை கொண்டாடவில்லை என்பதற்காக மற்ற மதத்தினர் தங்கள் கடைகளை மூடிவிட்டா சென்றுவிட்டனர். கூட்டம் அதிகம் வரும் என்று மேலும் ஆர்வத்துடன் தங்கள் கடைகளை திறந்து வைத்து இருப்பார்கள். அது போல் தான் இதுவும்

பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி என்று ஒரு பதிவர் வர்ணித்துள்ளார். பகுத்தறிவு இயக்கத்துக்கு பரிணம வளர்ச்சி உண்டு என்று ஒத்துக் கொண்டுள்ள பகலவன்களே எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் உங்களுக்கு மட்டும் வளர்ச்சியே கிடையாதா


15 comments:

said...

நல்லா சப்பை கட்டு கட்டிட்டீங்க‌ :)

said...

:)

said...

அட்ராசக்கை சரியான பதில், வாழ்த்துகள் லக்கிலுக்

said...

அடிச்சு தூள் கிளப்புறீங்க

said...

நச்! நான்கூட சப்பைக்கட்டு கட்டி இருப்பீங்களோன்னு பாத்தேன். சிறப்பான விளக்கம்.

Anonymous said...

wow! Meesayil mann ottavillai..

Anonymous said...

PremKumar,

ithu sappai kattu illa maamu.. nee pesarathu thaan sappai kattu.. engalukku vinayakar sathurthi enbathu vaara naduvil varum oru sunday.. thats all.

unakku yenda eriyuthu?

billy

said...

மிக மரியாதையாக பேசும் பில்லி அவர்களுக்கு என் நன்றிகள் :)

அப்புறம் அன்றைக்கு ஒளிப்பரப்பான 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க 'விநாயகரை' துதிக்கும் பாடல்களே எடுத்தாளப்பட்டதே. அதை யாரும் கவனிக்கவில்லையா?

said...

அதிகம் இனிப்பு சாப்பிடுவது கேடு என்று தெரிந்தாலும் அடம் செய்யும் தன் பிள்ளைக்கு தாய் இனிப்பு கொடுப்பதில்லையா

said...

Kanmoodithanamaana Thanimanidha thudhi .. matrumoru mathathirku vazhi vaguththuvida pogudhu.. paarthu :-)))))

said...

நான் என்றும் இந்து மத துவேசம் கொண்டவன் அல்ல, அனைத்து சாதி மக்களையும் என்று இந்து மதம் மரியாதையுடன் நடத்துகிறதோ அன்று எம் மதமும் சம்மதம் என்று கூறும் எனக்கு இந்து மதம் மட்டும் ஏன் கசக்க போகிறது என்று கூறியுள்ளார். இதை ஏற்று கொள்ள முடியாத சில மதிகெட்ட ஜென்மங்கள் தான் கலைஞரை பற்றி அவதூறு பரப்புகின்றன.

Anonymous said...

//கூட்டம் அதிகம் வரும் என்று மேலும் ஆர்வத்துடன் தங்கள் கடைகளை திறந்து வைத்து இருப்பார்கள். அது போல் தான் இதுவும்//

கடையை திறந்து வைக்க கலைஞர் என்ன யாவாரியா? தலைவரில்லையா?

Anonymous said...

உடன்பிறப்பே, இது இலைக்காரனுக்கு போட்டியா? ரம்ஜானுக்கு இன்னும் ஒரு மாதம்தான் இருக்கு, அப்பா தெரியும் பகுத்தறிவு!

Anonymous said...

சரிங்க கிறிஸ்துமஸ்.. அட வேணாம்... விடுங்க ; இதோ வருது ரம்ஜான். அதுவும் விடுமுறையா??
அப்புறம் மத்த கேள்விக்கெல்லாம் பதிலக் காணோம்?? ஒருவேளை கரண்ட் கட்டாயிடிச்சோ?

Anonymous said...

To this Blogger...

I accept your write up. But are you ready to quit and abondan this blog if the same pagutharivu will not be shown for Xmas or Ramzan.