Monday, September 08, 2008

சாய்பாபா காலில் விழுந்து வணங்குவது தான் பகுத்தறிவா?

ஒரு பதிவர் உன்டன்பிறப்புகளுக்கு ஒரு கேள்வி என்று ஒரு பதிவு போட்டு சில கேள்விகளை எழுப்பி இருந்தார். இத்தகைய பதிவுகளையும் விமர்சனங்களையும் வரவேற்கிறோம். கேள்வி கேட்பது தானே பகுத்தறிவின் அடிப்படை. ஆனால் நாம் முன்பே சொல்லியது போல் எல்லோரிடமும் போய் கேளுங்கள். எல்லோரிடமும் இருந்து பதில் வருமா என்பது வேறு விஷயம். கேள்வி கேட்டால் கஞ்சா வழக்கு போடுவதற்கு இங்கே சர்வாதிகார ஆட்சியும் நடக்கவில்லை, கைது செய்தால் சுனாமி வரும் என்று பயம் காட்டுவதற்கு இங்கே மடமும் நடத்தவில்லை

முதலில் சாய்பாபா பற்றிய கேள்வியை பார்ப்போம். சாய்பாபா காலில் விழுந்து வணங்குவது தான் பகுத்தறிவா? என்பது கேள்வி

இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன் கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம். ஒரு முறை இந்து முன்னணி தலைவர் திரு.இராமகோபாலன் அவர்கள் கலைஞர் அவர்களுடன் நடந்த சந்திப்பின் போது பகவத் கீதையை அன்பளிப்பாக கொடுத்தார் பதிலுக்கு கலைஞர் அவர்களோ திராவிடர் கழக தலைவர் வீரமணி அவர்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற புத்தகத்தை பரிசளித்தார். தன்னை ஒருவர் எப்படி அனுகுகிறார்களோ அதே முறையில் தான் தலைவரும் அவர்களை அனுகுவார்

சாய்பாபா கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுபவர். அவரை தரிசனம் செய்வதற்கு எல்லோரும் தவம் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி கூட சந்திரமுகி பட விழாவில் சொன்னார், என்னைப் போன்ற பக்தர்களை எல்லாம் தேடி வராத சாய்பாபா கலைஞர் அவர்களை வீடு தேடி போய் இருக்கிறார் என்று. அப்படி வீடு தேடு வந்தவரை அதுவும் கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுபவருக்கு எப்படி பதில் உபகாரம் செய்ய வேன்டும் என்பது தலைவருக்கு நன்றாகவே தெரியும். மேலே சொன்ன இராமகோபாலனும் ஆன்மீகவாதி தான் சாய்பாபாவும் ஆன்மீகவாதி தான் ஆனால் அவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் கலைஞருக்கு தெரியும். கலைஞர் எதிர்ப்பது ஆன்மீகத்தை அல்ல அதை அவர்கள் கடைபிடிக்கும் விதத்தை. இந்த விஷயத்தில் உடன்பிறப்புகளுக்கும் நிலையும் இது தான். நாங்கள் ஆன்மீகத்துக்கு எதிரி அல்ல

கலைஞர் பகுத்தறிவு வேஷம் போடுபவர் என்றால் சாய்பாபா காலை தன் மனைவியார் தொட்டு வணங்குவதை இப்படி ஊரறிய பத்திரிக்கைக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அந்த படத்தை அவர் வெளிவராமல் தடுத்து இருக்கக் கூடும். ஆனால் பதில் மரியாதை செய்வது தான் அவர் பண்பு. இங்கே தன் கூட்டணி கட்சியில் இருந்த வைக்கோவை சிறையில் அடைத்ததையும், சமயப் பெரியவர் என்று மதிக்கப்பட்ட சங்கராச்சாரியாரை ஆந்திராவரை துரத்தி சென்று சிறையில் அடைத்ததையும், கூட்டணி கட்சியின் ஜார்ஜ் பெனாண்டஸை வீட்டு வாசலிலேயே காக்க வைத்த அரிய செயல்களோடு கலைஞரின் ஒப்பற்ற பண்பை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்

கீழே உள்ள படங்களை பார்த்தால் உங்களுக்கே எது சரி எது தவறு என்று தெரியும்




மேலும் பதில்கள் தொடரும்...

15 comments:

said...

சாய்பாபா யார் என்பதைப்பற்றி இங்கே காணுங்கள் பகுத்தறிவு இருந்தால் அல்லது வேண்டாம்

http://home.no.net/anir/Sai/enigma/Murders.htm

said...

மதுரை தினகரன் பத்திரிகை எரிப்பு விஷயத்தில் அழகிரி பற்றி கேள்விகேட்ட பத்திரிகையாளரை “நீதாண்டா கொலைகாரன்” என்று பதிலளித்த பண்பு என்ன, யாராவது தன்னை எதிர்த்து பேசிவிட்டால், “நான் சூத்திரன், அதனால் அவர்கள் பேசுகிறார்கள்” என்று ஒப்பாரி வைக்கும் பண்பு என்ன, இத்தனை நாள் தானும் கம்யூனிஸ்டு என்று ஈஷிக்கொண்டு உறவாடிவிட்டு, திடீரென கம்யூனிஸ்டு தலைவர் பாப்பான் என்று நினைவுக்கு வந்து வயிற்றெரிச்சல் கவிதை இட்டதென்ன, அடேங்கப்பா எல்லாம் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சிதான். வீட்டில் சுற்றிப்போடச் சொல்லுங்கள்.

இதை நீங்கள் மட்டுறுத்தி வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கை இல்லாததால் அதை எனது ”கன்னா பின்னாவென்று ஒரு மொக்கைப் பதிவு டோண்டு ராகவனிடமிருந்து” என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். அப்பதிவில் தமிழை காட்டுமிராண்டி மொழி என பெரியார் உளறியதை கலைஞர் சாமர்த்தியமாக பகுத்தறிவு முறைப்படி சப்பைகட்டு கட்டியதை குறித்துள்ளேன்.
பார்க்க: http://dondu.blogspot.com/2008/07/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவ்ன்

said...

ஜெலலிதாவை பற்றி எழுதினால் டோண்டுவுக்கு பொத்துக் கொண்டு வருவதில் வியப்பு ஒன்றும் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் போயஸ் தோட்டம் நோக்கி தவம் இருப்பதற்கு காரணம் சாதி பாசம் தான் என்பது டோண்டுவுக்கு தெரியாதோ

said...

நீ யாருய்யா கேள்வி கேட்க என்று பத்திரிக்கைகாரரை பார்த்து ஜெயலலிதா கேட்டது டோண்டுவுக்கு தெரியாதோ

Anonymous said...

//
மதுரை தினகரன் பத்திரிகை எரிப்பு விஷயத்தில் அழகிரி பற்றி கேள்விகேட்ட பத்திரிகையாளரை “நீதாண்டா கொலைகாரன்” என்று பதிலளித்த பண்பு என்ன,
//
நீ யாருய்யா கேள்வி கேட்க என்று பத்திரிக்கைகாரரை பார்த்து ஜெயலலிதா கேட்டது டோண்டுவுக்கு தெரியாதோ
//
so you do agree that karunanidhi said that, right?

said...

கலைஞரின் பகுத்தறிவு என்பதை விட
தி.மு.க என்ற கட்சித்தலைவரின் பகுத்தறிவு தடம்மாறி பலவருடங்களாகிவிட்டது.
1.பகுத்தறிவு சிகாமணி துரைமுருகன் சாய்பாபா விடம் மோதிரம் பெற்று மகிழ்ந்ததை எதில் சேர்த்தலாம்
2.'விநாயகர் சதுர்த்தியை'முன்னிட்டு பக்தி பரவசத்தில் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் கலைஞர் டிவி யின் பகுத்தறிவு பணியை என்னவென்பது.
3.அதே டிவி மூலம் ஒரு பண்பாட்டு சீரழிவுக்கு துணை போகும் குத்தாட்டம் முதல் .... ஆட்டம் வரை நடத்துவதும் அதே பகுத்தறில்தானா?
இன்னும் நிறைய இருக்கிறது.தயவு செய்து 'பகுத்தறிவு'என்ற சொல்லை கேவலப்படுத்தாதீர்.

said...

உடன்பிறப்பு

சாய் பாபா அவர்களின் சித்து விளையாட்டுக்கள்!!!
கீழே கொடுக்கப்பட்டுள்ள‌ காட்சிகளை பார்வையிடவும். சாய் பாபாவை கடவுளாக தரிசிக்கும் அன்பர்கள் பார்வைக்கு

http://www.youtube.com/watch?v=6BSlEsrJVVs

சூப்பர் ஸ்டார் ரஜினி என்று அழைக்கும் சூப்பர் சொதப்பல் ரஜினி.

உடன்பிறப்பு கலைஞர் அவர்களின் சாய் பாபா நல்லவர் என்றஅரிய கண்டு பிடிப்பு
2008-2009 கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதயகனி பேரவை
தென் சென்னை.

:-)))))))))

said...

நான் பாப்பாத்தி தான் என்று சொன்ன ஜெயலலிதாவை பற்றி டோண்டுவின் கருத்து என்ன

said...

@உடன்பிறப்பு
உண்மையைத்தானே கூறினார்.

அன்புடன்,
டோண்டு ராகவையங்கார்

said...

@டோண்டு
கலைஞரும் உண்மைய தானே கூறினார்

said...

//நீ யாருய்யா கேள்வி கேட்க என்று பத்திரிக்கைகாரரை பார்த்து ஜெயலலிதா கேட்டது டோண்டுவுக்கு தெரியாதோ//

சரியாய் சொன்னீர்கள் உடன்பிறப்பு.. அவர்கள் மட்டும்தான் சாப்பிடுவார்களா?

said...

உண்மையில் ரொம்ப சிந்தித்து பதில் கூறி இருக்கிறிர்கள், உண்மையில் அருமையான விளக்கம்.இவர்கள் எவ்வளவு கூறினாலும் இந்துக்களுக்கு தெரியும் கலைஞரின் மனது.

said...

//சரியாய் சொன்னீர்கள் உடன்பிறப்பு.. அவர்கள் மட்டும்தான் சாப்பிடுவார்களா?//

என்ன இந்த உள்குத்து குத்துறீங்க!

Anonymous said...

Dear Sibi,

Today's scenario is totally different from the one which was in during the time of Periyar. Those times, the tamil society was totally dumb and deaf and it required some brutal attacks which periyar and his comrades carried out. Today it is completely different. You cannot expect a periyar out of Kalaignar and a kalaignar out of Stalin. The methodology changes over the period of time.. but there is no compromise on social justice front and zero tolerance towards braminism.

ok.. for your questions,

1) It is not a thumb rule to be an atheist to join DMK. on the other side, it is not mandatory that all the atheists are for tamil (dravidian) cause ( ex- kamal / gnani etc.,)

2) that was a holiday and so.. a day for business. And they perfectly did that.

3) I didn't see any thing wrong in those programs. Its just all about the way how you see things. In my view, telecasting "Ramayan" is more vulgar than telecasting shakeela film. It could be viceversa for you..

@Mr. Iyengar,

paarpangalin vayitherichal velippadugalai parkka kan kodi vendum. please do continue..

Anonymous said...

Aalikkarai,
I was wondering why Kalaigner has to host and oblige to Sai baba, before discovering the real truths on Sai baba. The Godman is after-all a pucca criminal, whom Kalaigner should support anyway being one himself.

I donno how a supporter of a criminal called in pagutharivu. Please clarify.