Friday, August 10, 2007

ஜெயா டிவியில் கலைஞர்!

மூச்சுக்கு முன்னூறு தடவை கருணாநிதி, உதவிப் பேராசிரியர் அன்பழகன், மைனாரிட்டி திமுக அரசு என்று செய்திகளில் மட்டு மரியாதையில்லாமல் உளறிக் கொட்டுவது ஜெயா டிவியின் வாடிக்கை. ஜெயா டிவி செய்திகளை நகைச்சுவைக்காக உடன்பிறப்புகளும் பார்ப்பதுண்டு.

நேற்று இரவு ஜெயா செய்திகளில் கலைஞர் என்ற வார்த்தை கேட்டது. முதன்முறையாக அந்த வார்த்தையை கேட்டதுமே பார்த்துக் கொண்டிருப்பது ராஜ் டிவியா அல்லது ஜெயா டிவியா என்று குழம்பி விட்டேன். ஜெயா டிவிதான். காண்பது கனவா என்று தலையில் குட்டி பார்த்துக் கொண்டேன் வலித்தது.

மேட்டர் ஒன்றுமில்லை. தலைவர் கலைஞரின் ராஜதந்திரம் இங்கே தான் தூள் கிளப்புகிறது. தலைவர் புதியதாக ஆரம்பிக்க இருக்கும் டிவி சேனலுக்கு "கலைஞர் டிவி" என்று பெயர் வைத்திருக்கிறார். தொலைக்காட்சியின் பெயரே கலைஞர் என்று வைத்து விட்டதால் இந்த லூசு டிவிக்கு வேறு வழியில்லாமல் போய் விட்டது. கலைஞர் டிவி தொடர்பான அவதூறு செய்திகளை சொல்லும்போது "கலைஞர்" என்ற வார்த்தையை உச்சரிக்க வேண்டியதாகிறது.

உளறலில் உலகசாதனை படைத்த ஜெயலலிதாவும் கூட வேறு வழியில்லாமல் இவ்வகையில் கலைஞர் என்ற பெயரை உச்சரிக்க வேண்டிய நிலையை தலைவர் ஏற்படுத்தியிருக்கிறார்.

பனைமரத்துலே வவ்வாலா? கலைஞருக்கே சவாலா?

12 comments:

said...

hihihihihihi

said...

நானும் ஜெயா செய்திகள் இல்லை இல்லை அ.தி.மு.க. விளம்பரச்செய்திகள் பார்ப்பதுண்டு... நல்ல நகைச்சுவையாக இருக்கும்... நம்
கலைஞர் சானல் தொடங்கட்டும் இவனுகளுக்கு ஒரு முடிவு கட்டுவோம்..

said...

ஹி..ஹி..ஹி

said...

ராஜதந்திரம் :)
ரெண்டே நாள்ல தெரிஞ்சுருச்சு. அதுதான் கலைஞர்

said...

//அந்த வார்த்தையை கேட்டதுமே பார்த்துக் கொண்டிருப்பது "ராஜ் டிவியா" அல்லது ஜெயா டிவியா என்று குழம்பி விட்டேன்.//



இதுதான் லக்கி டச்

Anonymous said...

தினமலர் எப்படி எழுதறான்னு பார்த்திங்களா லக்கி. இனி அவனும் கலைஞர் தொலைக்காட்சி என்று எழுதவேண்டுமே!

Anonymous said...

நாளைக்கே 'ஜெயா' ரீவிய 'புரச்சித்தலைவி ரீவி-ன்னு பேர் மாத்திட்டா...

அப்ப என்னா செய்வீங்க?

said...

//நாளைக்கே 'ஜெயா' ரீவிய 'புரச்சித்தலைவி ரீவி-ன்னு பேர் மாத்திட்டா...//

அப்படி செய்யக்கூடிய மெண்டல்கள் தான் அவர்கள் செந்தழலார் அவர்களே!

Anonymous said...

நானும் அந்த லூசுச் செய்திகளைப் பொழுதுபோக்கிற்காகப் பார்ப்பேன். முதலில் அம்மாவிட்டு வேலைகளைப் பற்றி சொல்லிவிட்டுதான் மற்றதைப் பேசவே செய்வார்கள். இந்தோ-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் கூட அவர்கள் செய்திகளில் கடைசியாகத் தான் சொல்லப்படும். உலகச் செய்திகள் வரிசையில் ஏதோ ஒரு நாட்டில் அ.தி.மு.க.வினரின் அண்டை வீடு தீப்படித்தால் அதை முக்கியமாகக் கூறுவர் ஆனால் ஐ.நா.வின் முக்கிய முடிவுகள் இடம் பெறாது. இவர்கள் வாயில் போய் கலைஞர் என்ற சொல் விழ வேண்டுமா? அதற்கு நான் வெட்கம் தான் படுகிறேன்

said...

//லக்கிலுக் said...
//நாளைக்கே 'ஜெயா' ரீவிய 'புரச்சித்தலைவி ரீவி-ன்னு பேர் மாத்திட்டா...//

அப்படி செய்யக்கூடிய மெண்டல்கள் தான் அவர்கள் செந்தழலார் அவர்களே!//



இதென்ன கலாட்டா

Anonymous said...

//நாளைக்கே 'ஜெயா' ரீவிய 'புரச்சித்தலைவி ரீவி-ன்னு பேர் மாத்திட்டா...//

அப்படி செய்யக்கூடிய மெண்டல்கள் தான் அவர்கள் செந்தழலார் அவர்களே!//

தனிநபர்களின் அடைமொழிப்பட்டங்களை சேனலுக்கு சூட்டுவது மெண்டல்தனம் என்று புரிந்துக்கொண்டதுக்கு நன்றிங்க..

said...

அட பன்னாடைங்களா காபி அடிக்கிறதுல கூட உங்க அறிவ யூஸ் பண்ண மாட்டிங்கல்லா