
முதல்வர் கலைஞருக்கு டெல்லி தமிழ்ச் சங்கம் சார்பில் செம்மொழிச் செம்மல் விருது வழங்கப்பட்டது. இதற்கான விழா டெல்லி ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடந்தது. இதே நிகழ்ச்சியில் திருவள்ளுவர் சிலை நாட்டுவிழா, முத்தமிழ் தோரண வாயில் கால்கோள் விழா ஆகியவையும் நடந்தன. முதல்வர் கலைஞர் திருவள்ளுவர் சிலையை நாட்டி சிறப்புரை ஆற்றுகிறார்.
இதில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, கவிஞர் வைரமுத்து ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர். சங்கத் தலைவர் கிருஷ்ணமணி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சங்கப் பொதுச் செயலாளர் முகுந்தன் வரவேற்புரை ஆற்றுகிறார், இணைச் செயலாளர் ராகவன் நாயுடு நன்றி கூறினார்.
செய்தி உதவி : கோவி கண்ணன் & தட்ஸ் தமிழ்
1 comments:
அப்படியே ஈழத் தமிழர்களுக்காக அவர் இவ்வளவு தீவிரமாக போராடிக் கொண்டிருப்பதற்காகவும் ஒரு விருது கொடுத்து விடலாம். கூடவே பெரியார் பக்தர் வீரமணி அவர்களுக்கும் ஏதாவது கொடுத்து விடலாம். உலகம் போற்றும் தமிழ் இனத் தலைவர் தமிழுக்காகவும் உலகத் தமிழர்களுக்காகவும் ஆற்றி வரும் தொண்டுகளை அப்படியே வரலாற்று ஏடுகளில் பொறித்து விடலாம் என் என்றால் இந்த தொண்டினை தமிழர்கள் என்றும் மறக்கக் கூடாது
Post a Comment