Friday, July 20, 2007

அறிவியல் விஞ்ஞானி கலாம், அரசியல் விஞ்ஞானி கலைஞர்

செல்வி ஜெயலலிதா தலைமையில் மூன்றாவது அணி ஆரம்பிக்கப்பட்ட உடன் டாக்டர் கலைஞர் அவர்களிடம் மூன்றாவது அணி பற்றி நிருபர்கள் கேட்டபோது டாகடர் கலைஞர் அவர்கள் மிகச் சிறப்பாக "ஜோக்கர் அணி" ஒரே வரியில் பதில் சொன்னார். அவர் தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் சொல்லி இருந்தாலும் தற்போது நடந்து வருவதை பார்த்தால் கலைஞர் அவர்கள் அரசியலில் ஒரு விஞ்ஞானி என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் புரியும்

அறிவியல் விஞ்ஞானியாகிய திரு.அப்துல் கலாம் அவர்களை தான் ஒரு வருடத்துக்கு முன்பு சந்தித்த போது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுவீர்களா என்று தான் கேட்டதாகவும் அதற்கு கலாம் அவர்கள் அப்படி ஒரு எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்ததாகவும் கலைஞர் அவர்கள் சொல்லி இருந்தார். இந்த காரணத்தினாலேயே தான் கலாம் அவர்களின் பெயரை ஜனாதிபதி தேர்தலில் முன்மொழியவில்லை என்றும் கலைஞர் அவர்கள் தெரிவித்தார். இதன் மூலம் கலாம் அவர்கள் இரண்டாம் முறையாக ஜனாதிபதி ஆக வேண்டும் என்ற எண்ணம் ஆரிய வாலாக்களை விட தமிழின தலைவருக்கு தான் முதலில் தோன்றி உள்ளது என்பது தெரியும். கலாம் அவர்கள் தனக்கு மிகவும் பிடித்த கல்வி சம்மந்தப் பட்ட துறைக்கே செல்ல விரும்புவதாக பல முறை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தும் இருக்கிறார்

உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க ஆரிய வாலாக்கள் தமிழன் மானம் காக்க புறப்படுகிறேன் பேர்வழி என்று வரிந்து கட்டிக் கொண்டு அவரை கேட்காமலேயே கலாம் என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டார்கள். கலாம் அவர்கள் தேர்தலில் நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக மூன்றாவது அணித் தலைவர்கள் சென்ற போது கூட அரிய வாலா செல்லவில்லை என்பதி இருந்தே அவரின் இரட்டை வேடம் வெளிப்பட்டுவிட்டது. செகாவத்தின் மதவாத பின்புலத்தை அறிந்த மூன்றாவது அணி கட்சியினர் பலரும் செகாவத்தை கண்டு பயந்து ஓட ஆரிய வாலாக்கள் அமைதி காத்து வந்தனர். ஆனால் டெல்லியில் இருந்து ஏஜெண்ட் ஜஸ்வந்த் சிங் வந்து பேரம் படிந்தவுடன் இப்போது ஆரிய வாலாக்களின் அரிதாரம் கலைந்துவிட்டது. தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பார்களே அது போல் தான் என்ன தான் சமூக நீதி காத்த வீராங்கனை என்று வேடம் போட்டாலும் உள்ளே இருக்கும் ஆரிய உணர்வு அழிந்து போகுமா என்ன

கூட்டணி கட்சிகள் எல்லாம் சொன்னபடி வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்க்க ஆரிய பாசமோ கூட்டணி தர்மத்தை குழி தோண்டி புதைத்து விட்டது. சிவசேனா போல் முதலிலேயே தங்கள் ஆதரவு இவருக்கு தான் என்று சொல்லும் துணிவு துளி அளவும் இல்லை, ஏனேன்றால் எப்போதுமே அடுத்தவர் முகத்தில் கரி பூசித்தானே பழக்கம். மொத்ததில் மூன்றாம் அணி தலைவர்கள் எல்லாம் ஜோக்கர்கள் ஆக தலைவி மட்டும் அடுத்த தேர்தலுக்கு இப்போதே அஸ்திவாரம் போட்டுவிட்டார்

3 comments:

said...

//கூட்டணி கட்சிகள் எல்லாம் சொன்னபடி வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்க்க ஆரிய பாசமோ கூட்டணி தர்மத்தை குழி தோண்டி புதைத்து விட்டது. சிவசேனா போல் முதலிலேயே தங்கள் ஆதரவு இவருக்கு தான் என்று சொல்லும் துணிவு துளி அளவும் இல்லை, ஏனேன்றால் எப்போதுமே அடுத்தவர் முகத்தில் கரி பூசித்தானே பழக்கம். மொத்ததில் மூன்றாம் அணி தலைவர்கள் எல்லாம் ஜோக்கர்கள் ஆக தலைவி மட்டும் அடுத்த தேர்தலுக்கு இப்போதே அஸ்திவாரம் போட்டுவிட்டார் //

கரெக்டான பாயிண்டை புடிச்சிட்டீங்க உடன்பிறப்பு! கலக்கல்!!!

said...

ஜோக்கர் அணி என்று கலைஞர் சொன்னதை சிரமேற் கொண்டு நிறைவேற்றிக் காட்டிய ஜெயை பாராட்ட வார்த்தைகளேயில்லை.

said...

/* ஜோக்கர் அணி என்று கலைஞர் சொன்னதை சிரமேற் கொண்டு நிறைவேற்றிக் காட்டிய ஜெயை பாராட்ட வார்த்தைகளேயில்லை. */
சிரிப்பை அடக்க முடியவில்லை போங்கள்....

அதிலும் அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்களின் செயல் பற்றி ஜெயலலிதாவின் அறிக்கையை படித்து வயிறு குலுங்க சிரித்தேன்... என்ன ஒரு நகைச்சுவையான அறிக்கை....

அய்யோ.. அய்யோ... இனிமேலாவது ஜெயலலிதாவின் சுய உருவத்தை வட இந்திய அரசியல்வாதிகளும் அண்டை மா நிலத்து அரசியல் கட்சிகளும் தெரிந்து கொண்டால் சரி...

அவரின் அந்த அறிக்கை பற்றி தலைவரின் பதில்.. "இப்படி ஒரு அறிக்கை ஜெயலலிதாவிடம் இருந்து வராமல் இருந்திருந்தால் தான் நான் ஆச்சர்யப்பட்டிருப்பேன்.."