Wednesday, July 04, 2007

கலைஞரின் மேதமை

நான் ஒரு இந்து என்று நினைத்துக் கொள்ளவோ,வெளியில் சொல்லிக்கொள்ளவோ மனதின் ஓரத்தில் உறுத்தல் இருந்தாலும் இன்னும் இந்து என்று தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.இந்த இந்து என்ற சொல்லைத் தவிர்த்து வேறு என்ன சொல்லலாம் என்று இதுவரை நினைத்துக் கூட பார்த்தது இல்லை.


ஆனால் நம் தலைவர் கலைஞர் தனது 20ஆம் வயதுகளிலேயே தன் மதம் என்ன என்பதில் எவ்வளவு தெளிவாக இருந்திருக்கிறார் என்பதை அறியும் போது அவரது அறிவுத்திறனை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.


1946இல் அவர் ஒரு வங்கியில் பங்கு வாங்குவதற்காக விண்ணப்பித்த விண்ணப்பம்.(மேலே படத்தில் உள்ளது).அதில் மதம் என்னும் இடத்தில் தமிழ் என தன் கைப்பட எழுதி இருக்கிறார்.


இந்த அரிய ஆவணம் எதிர்க்கட்சியினரால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.வெறும் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்த கலைஞர் கோடிகோடியாய் சம்பாதித்தது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


அந்த ஆயிரம் ரூபாயே இந்த 60 ஆண்டுகளில் கோடி ரூபாயாக பெருகியிருக்கும்.திரையுலகத்துக்கு நேற்று வந்த வடிவேலே கார்,பங்களா என்று வாழ்ந்து கொண்டிருக்கும் போது 60 வருடங்களாக திரைத்துறையிலும்,பத்திரிக்கைத் துறையிலும் ஈடுபட்டு வரும் கலைஞர் கோடிகோடியாய் வைத்திருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?


உடன்பிறப்புகளே மதம் என்று குறிப்பிட நேரும் இடங்களில் இனி தமிழ் என்றே தயங்காமல் சொல்லி தலைவன் வழி செல்வோம்.


7 comments:

said...

பார்த்து வியந்தேன் நண்பரே... 23 வயதில் தலைவரின் நாத்தீக கொள்கையும், தமிழ்பற்றும் கண்டு சிலிர்த்து விட்டது எனக்கு...

said...

அருமையான பதிவு ஜாலிஜம்பர். 1946ல் ஆயிரம் ரூபாய்க்கான மதிப்பு இன்றைக்கு பல லட்ச ரூபாய் பெறும்.

தமிழ் மதம் என்று தலைவர் குறிப்பிட்டிருந்ததை கண்டு மகிழ்ந்தேன்.

said...

வெகு நிச்சயமாய் இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். அந்த வயதிலேயே அவர் எவ்வளவு தீர்க்கமான முடிவுகளை, கொள்கைகளை வைத்திருந்தார் என்று நினைக்கும் போது பெருமையாய் இருக்கிறது.

Anonymous said...

அருமையான பதிவு.

said...

அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

Anonymous said...

Is this really a site to praise Kalaigar or a sarcastic site.

Anonymous said...

karunanidhi is the greatest man to uphold tamil. What will happen to tamil after karunanidhi's political retirement?