Tuesday, August 26, 2008

அவாள் நமக்கு சவால் - (சோ) ராமசாமியுடன் ஒரு பேட்டி

இங்கே பல அம்பிகள் கலைஞரிடம் பேட்டி காண்கிறார்கள் அதே மாதிரி ஒரு உடன்பிறப்பு அம்பிகளின் குருநாதரான சோ ராமசாமியிடம் பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை

உடன்பிறப்பு: கலைஞருக்கு வயது ஆகிவிட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
(சோ) ராமசாமி: அம்பி! வாஜ்பேயியை பார் ஏற்கனவே ரிடையர் ஆகி கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறார், அத்வானி பிரதமர் ஆவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார். அது போல் கலைஞரும் அத்வானி போன்ற இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்

உடன்பிறப்பு: கலைஞர் ஏதாவது சொன்னால் உடன் கார்டூன் போடும் நீங்கள் ரஜினி மன்னிப்பு விஷயம் பற்றி இன்னும் எனக்கு தெரியாது என்று சொல்கிறீர்களே
(சோ) ராமசாமி: உண்மை தான் அம்பி! நான் எப்போதும் முரசொலி மட்டும் தான் வெளிவந்த உடனேயே படித்துவிடுவேன். மற்ற தினசரிகளை எல்லாம் பழைய பேப்பர் கடையில் தான் வாங்குவேன்

உடன்பிறப்பு: ஸ்டாலின் லண்டன் போனது மற்றும் ஜெயலலிதா கொடநாடு போய் ஓய்வு எடுத்தது பற்றி உங்கள் கருத்து
(சோ) ராமசாமி: அம்பி! ஸ்டாலின் லண்டனுக்கு என்னையும் அழைத்தால் கூட போயிருக்கமாட்டேன் ஏனென்றால் எனக்கு பஸ்போர்ட் எல்லாம் கிடையாது. ஆனால் ஜெயலலிதா உள்ளூர் கொடநாட்டுக்கு கூட என்னை அழைக்காததில் கொஞ்சம் வருத்தமே. அப்படி என்ன குறை கண்டுவிட்டார் என் ஜால்ராவில் என்று தெரியவில்லை

உடன்பிறப்பு: உங்களை போன்ற ஒத்த கருத்து உடைய ஞாநி மற்றும் மதன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
(சோ) ராமசாமி: அம்பி! நீ என்ன கேட்க வருகிறாய் என்பது எனக்கு புரிகிறது. ஞாநி ஒரு பொழைக்க தெரியாத மனிதர் அவர் இப்படி குமுதத்தில் மாங்கு மாங்கு என்று எழுதுவதற்கு பதில் அம்மாவிடம் சரணடைந்தால் அவர் காலத்துக்கும் செட்டில் ஆகிவிடலாம். என்னை தொடர்பு கொண்டால் நல்ல டீலாக முடித்து கொடுப்பேன் அதில் எனக்கு ஒரு கட்டிங் கொடுத்து விட வேண்டும். மதனை பற்றி நினைக்கும் போது எனக்கு அடுத்த தலைமுறைக்கு ஒரு நல்ல அம்பி இருக்கிறான் என்று பெருமிதமாக இருக்கிறது

உடன்பிறப்பு: ஸ்டாலின் முதல்வர் ஆக வாய்ப்பு இருக்கிறதா?
(சோ) ராமசாமி: அது பற்றி கணிக்க நான் ஆருடம் சொல்பவன் அல்ல

உடன்பிறப்பு: மோடி பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறதா?
(சோ) ராமசாமி: இது ஜனநாயக நாடு அவர் பிரதமாராக வரும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது

உடன்பிறப்பு: கலைஞர் அவாள் நமக்கு சவால் என்று கவிதை பாடி இருக்கிறாரே
(சோ) ராமசாமி: பாவம் அவரால் கவிதை தான் எழுத முடியும் என்னை போல் கேணை தனமாக கார்ட்டூன் போட முடியுமா?

உடன்பிறப்பு: அப்போ அவர் செஞ்சா நீங்களும் செவீங்களா?
(சோ) ராமசாமி: வேற வழி இல்லை அம்பி, அவர் கவிதை எழுத அதை நக்கல் நையாண்டி பண்ணி தான் பொழப்பு ஓடுது அவர் முரசொலியில் எழுதவில்லை என்றால் துக்ளக்கை இழுத்து மூடிவிட்டு அம்மா சரணம் பாட போக வேண்டியது தான்

உடன்பிறப்புக்கு இப்போது லேசாக கண்ணை கட்ட ராம்ஸ் மாமியிடம் சாரி சோ ராமசாமியிடம் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிறார்

16 comments:

said...

ஊசி பட்டாசு தெரியும் இங்கே கொண்டை ஊசி பட்டாசு கொளுத்தி இருக்கிறீர்கள் !
:)

said...

நான் சிறு வயதில் இருந்தே துக்ளக் மிகவும் விரும்பி படிப்பேன். அதில் வரும் நகைச்சுவையும் கிண்டலும் அரசியல்வாதிகளை விமர்சிக்கும்விதமும் எனக்கு பிடித்த விஷயங்கள். கடந்த பத்து வருடங்களாக துக்ளக் நாற்றம் எடுக்க தொடக்கி விட்டது. தற்போது துக்ளக்கை பாஜகவின் அதிகார பூர்வ பத்திரிக்கை என்றே சொல்லலாம். சோவின் மதவெறியும் ஜாதிவெறியும் துக்ளக்கில் அப்பட்டமாக தெரியும். இருந்தாலும் சோ திருந்திவிட்டாரா என்று பார்க்க எப்போதாவது துக்ளக் வாங்கி படிப்பது வழக்கம். இன்னும் திருந்தியதுபோல் தெரியவில்லை.

said...

தமாஷா இருக்குதுங்கோவ்

said...

ஹா ஹா ஹா

கலக்கல் பதிவு

said...

உடன்பிறப்புவாள்! செம அசத்து அசத்தறேள்!!

Anonymous said...

//கடந்த பத்து வருடங்களாக துக்ளக் நாற்றம் எடுக்க தொடக்கி விட்டது//

இல்லை ராபின்.. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் என்று நினைக்கிறேன்.. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பற்றி விளக்கமாக கட்டுரைகள் போட்டு தனது வாசக அம்பிகளுக்கு பரவலாக அறிமுகப்படுத்தியது துக்ளக் தான்.. அதற்கு முன் அவ்வமைப்பை இங்கே லெட்டர் பேட் அமைப்பாகக் கூட எவரும் மதித்ததில்லை.

அது போக இந்துத்துவ தீவிரவாத இயக்கங்களை புனிதப்படுத்தும் ( வெள்ள நிவாரணப்பணி, புயல் நிவாரணப்பணி, பூகம்ப நிவாரண்பணிகள்... etc.,etc) வேலையை பல ஆண்டுகளாக செய்து வருவது இங்கே துக்ளக் தான்..

"பாம்புக்கு பல்லில் தான் விஷம் - பாப்பானுக்கோ உடம்பெல்லாம் விஷம்" - இதை நினைவில் கொள்ளுங்கள்.

-Billyjohn

Anonymous said...

உடன்பிறப்புவாள்

உடன்பிறப்பு;நமக்கு நமே திட்டம் என்றால் என்ன?
(சோ) ராமசாமி: அம்பி! நமே திட்டம் என்பது குடுப்ப அல்லது வரிசு அரசியல்.
1.மு.க. ஸ.டாலின்
2.அகிம்சா மூர்த்தி மு.க. அழகிரி
3.கனிமொழி
4.உதயநிதி
5.கயல்விழி
6.தயாநிதி
7.இராசதி அம்மாள்
தமிழ் நாட்டை வழி நடத்தி செல்ல முழு தகுதி பெற்றவர்கள்.

said...

எல்லா கேள்வி பதிலும் அருமை.

said...

//உடன்பிறப்பு;நமக்கு நமே திட்டம் என்றால் என்ன?//

ஒருவேளை இப்படி இருக்க வேண்டுமோ

1. சசிகலா
2.நடராஜன்
3.தினகரன்
4.திவாகரன்
5.சுதாகரன்
6.அகிம்சா மூர்த்தி சேகர்பாபு

நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேனா

said...

உங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி கோவியாரே

Anonymous said...

//அது போல் கலைஞரும் அத்வானி போன்ற இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்//
ராமசாமி என்றைக்கு கலைஞர் என்று விளித்து இருக்கிறார்

said...

//எல்லா கேள்வி பதிலும் அருமை//

நன்றிங்கோவ் காஞ்சனா

said...

//துக்ளக் நாற்றம் எடுக்க தொடக்கி விட்டது//

துக்ளக் என்றாலே துர்நாற்றம் தானே

said...

கலக்குறீங்கண்ணா!

said...

சோவிற்கு அவாள் மட்டும் அவல், அதனால் அடிக்கிறார் தவில்,அம்மா ஒரு கிழிபார் சோவின் செவில்.

said...

====
"பாம்புக்கு பல்லில் தான் விஷம் - பாப்பானுக்கோ உடம்பெல்லாம் விஷம்" - இதை நினைவில் கொள்ளுங்கள்.

-Billyjohn

10:27 AM, August 26, 2008
====

ஒரு சில பேர் செய்யும் தவறினால் ஒரு சமுதாயத்தையே குற்றம் சொல்வது மிகப்பெரிய தவறு.