Tuesday, May 26, 2009

சின்ன ஐயாவும் - பிரபல பதிவரும்



நம்முடைய கருத்துக்களும் வாதங்களும் எவ்வளவு தான் நேர்மையானதாகவும் நியாயமானதாகவும் இருந்தாலும் தேவையற்ற பொருத்தமற்ற வார்த்தைகளால் வலுவிழந்து வீரியமிழந்து விழலுக்கிறைத்த நீராகிவிடும் என்ற ஆதங்கத்தில் எழுதியது தான் இந்த இடுகை

எதிரணி தலைவர்கள் எல்லோரையும் விமர்சிக்கிறீர்கள் ஆனால் சின்ன ஐயாவை மட்டும் கண்டுகொள்ளாமல் சைலண்டாக இருக்கிறீர்கள் என்று கேட்ட தோழருக்காக சின்ன ஐயா ஸ்பெஷல். சின்ன ஐயா மீது எனக்கு ஓரளவு மதிப்பு இருந்தது உண்மைதான். டாக்டர் ஐயா தன் கொள்கைப்படி இந்த தேர்தலுக்கும் கூட்டணி தாவ முடிவு செய்த போது நம்ம சின்ன ஐயா நல்லா தான போயிட்டிருக்கு, இங்கேயே செட்டில் ஆகிவிடலாம் என்று டாக்டரிடம் சொன்னதாக கேள்வி. ஆனால் டாக்டர் ஐயா தன் கொள்கையில் உறுதியாக இருக்கவே கூட்டணியும் மாறியாச்சு

கூட்டணி மாறியதால் கழகத்துக்கு எதிராக பேச வேண்டுமே. அப்போது தான் பிரச்சார கூட்டம் ஒன்றில் சின்ன ஐயா தனது புகழ் பெற்ற மாமா பேச்சை பேசினார். சின்ன ஐயா அவர்களே நீங்கள் சொன்னவர்கள் எல்லோரும் ராஜ்யசபைக்கு போவதற்கு பிற கட்சிகளின் தயவை நம்பி இருக்கவில்லை ஆனால் நம்முடைய நிலைமையை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். சேலையோ வேட்டியோ துவைக்கவில்லை என்றால் (நன்றி: விஜயகாந்த்) கொல்லை புறம் அல்ல டில்லியின் எல்லைப்புறத்துக்கே போக முடியாது

சின்ன ஐயா யாரோ எழுதி கொடுத்து தான் பேசினார் என்பது தெளிவாக தெரிகிறது அவர் பிரயோகப்படுத்திய வார்த்தைகளை வைத்து பார்க்கும் போது சின்ன ஐயாவுக்கு எழுதி் கொடுத்தது ஒரு பதிவராக இருக்க வேண்டும் அதுவும் நிச்சயம் ஒரு பிரபல பதிவராக இருக்க வேண்டும் என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை

6 comments:

said...

எப்படி இப்படியெல்லாம் திங்க் பண்ணுறீங்க? உங்க மேலே பொறாமையா இருக்கு! :-)

said...

நன்றி தோழர், மோதிர கையால் குட்டுபட்டது போல் உணர்கிறேன்

Anonymous said...

I think it is karunanithi's kumbal blogger.they only use vulgar words.

said...

அன்புள்ள அனானி, தமிழ்மணம் சூடான இடுகைகளை நீங்கள் தொடர்ந்து கவனித்து வந்து இருந்தால் நான் சொல்வது யார் என்று உங்களுக்கு இப்போது புரிந்து இருக்கும்

said...

அன்புள்ள அனானி, மேலும் எங்கள் இடுகைகளில் எங்கே தவறான வார்த்தைகள் இடம் பெற்று இருக்கின்றன என்று சுட்டிக்காட்ட முடியுமா உங்களால்

Anonymous said...

வர வர எல்லோரும் போட்டோஷப்பில் புகுந்து விளையாட ஆரம்பிச்சுட்டாய்ங்க