Thursday, May 14, 2009
ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே
இயக்குநர் சீமானின் சமீபத்திய நடவடிக்கைகளை பார்த்தபோது இந்த வீடியோ தான் ஞாபகம் வந்தது. வீடியோ கொஞ்சம் நீளமாததால் முழுவதுமாக இன்னும் பார்க்கவில்லை. முதல் சில நிமிடங்கள் மட்டுமே பார்த்தேன். வார்த்தைக்கு வார்த்தை பாப்பான், பாப்பான் என்றவர் இப்போது அம்மாவை வணங்குகிறேன் என்கிறார். வைகோவுக்கு ஒரு பொடா மாதிரி இவருக்கு என்ன காத்து இருக்கிறதோ என்பது தெரியவில்லை. கலைஞர் ஆட்சி என்பதால் எளிதில் வெளியே வந்தாச்சு இல்லை என்றால் வைகோ மாதிரி ஓராண்டு உள்ளே இருக்க வேண்டியது தான்
கோவியார் எழுதிய பதிவு ஒன்றை பார்க்க நேரிட்டது. மிகவும் காமெடியாக இருந்தது அவரது பதிவு. தி.மு.க. சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்காமல் ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே என்று பயமுறுத்தி ஓட்டு கேட்பதாக குறைபட்டு இருந்தார். நடுநிலைவியாதி என்று சொல்லிக் கொள்ளும் அவர் அதற்கான காரணங்களை தேடி அலைவது தான் அந்த பதிவில் அப்பட்டமாக தெரிந்தது. சென்ற முறை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோற்று செல்வி ஜெயலலிதா முதல்வரானாரே அந்த தேர்தலில் தி.மு.க. ஆட்சி மீது எந்த புகாரும் கிடையாது, கழகம் சாதனைகளை சொல்லி தான் தேர்தலை சந்தித்தது ஆனால் நம் மக்கள் கவிழ்த்துவிட்டார்கள். அப்போது தி.மு.க. தோற்றதற்கு பணப் புழக்கம் இல்லாதது தான் காரணம் என்று சொல்லப்பட்டது. அதையே மாற்றி இந்த தேர்தலில் பணம் விளையாடுகிறது என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு வேண்டியதெல்லாம் தி.மு.க. தோற்க வேண்டும். மற்றபடி இவர்கள் சொல்வதில் எந்த முகாந்திரமும் இருப்பதாக தெரியவில்லை
தேர்தல் முடிந்ததும் செல்வி ஜெயலலிதா All options are open என்று சொன்னதை யாராவது கோவியாருக்கு அர்த்தத்துடன் விளக்கி சொன்னால் பரவாயில்லை. அவருக்கு இன்னமும் அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பற்றி எதுவும் தெரியவில்லை. ஒருவேளை அவர் நடுநிலையான அறிக்கைகளை மட்டுமே தேடிப்பிடித்து வாசிப்பார் போல் தெரிகிறது
எத்தனையோ பேர் கலைஞரை தூற்றி எழுதி வருகிறார்கள் அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அவர்கள் மீண்டும் நம் அணிக்கு வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஆனால் கோவியார் போன்ற நடுநிலைவியாதிகளுக்கு ரீச் அதிகம் என்பதால் தான் இந்த எதிர்வினை பதிவு மற்றபடி அவர் என்றுமே நம் உடன்பிறப்பு தான்
தேர்தல் நெருங்க நெருங்க தமிழ்மணம் தீவிர தி.மு.க. எதிர்ப்பாளர்களை தனது நட்சத்திரங்களாக அறிமுகப்படுத்திய அரசியலை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை அதுவும் தேர்தல் நடக்கும் இந்த வாரம் மற்றம்நம்பி என்ற மூகமூடி வாயிலாக. இந்த முகமூடி வலைப்பதிவு ஆரம்பிக்கப்பட்ட பின்னணியில் உள்ள நுண்ணரசியல் இப்போது தான் புரிகிறது. ஐந்தாண்டு காலம் கொலைகார கூட்டணியில் அங்கம் வகித்துவிட்டு தேர்தலுக்கு் முந்தைய நாள் ஈழம் சிடியை ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சிக்கும் தமிழ்மணத்துக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை. தைலாபுரத்தில் இருந்தாலும் அமெரிக்காவில் இருந்தாலும் ஒரே மனோபாவத்துடன் செயல்படும் அவர்களின் ஒற்றுமை புல்லரிக்க வைக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
//அப்போது தி.மு.க. தோற்றதற்கு பணப் புழக்கம் இல்லாதது தான் காரணம் என்று சொல்லப்பட்டது. அதையே மாற்றி இந்த தேர்தலில் பணம் விளையாடுகிறது என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு வேண்டியதெல்லாம் தி.மு.க. தோற்க வேண்டும்.//
:))
சீமான் வீடியோவிற்கு நன்றி !
//அப்போது தி.மு.க. தோற்றதற்கு பணப் புழக்கம் இல்லாதது தான் காரணம் என்று சொல்லப்பட்டது. அதையே மாற்றி இந்த தேர்தலில் பணம் விளையாடுகிறது என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு வேண்டியதெல்லாம் தி.மு.க. தோற்க வேண்டும்//
போன முறை ஸ்பெக்டரம் அதன் மூலம் 1 லட்சம் கோடி நிதி இல்லையே :)
//கோவி.கண்ணன் said...
போன முறை ஸ்பெக்டரம் அதன் மூலம் 1 லட்சம் கோடி நிதி இல்லையே :)
//
நன்றி கோவியாரே, மக்கள் பணம் மக்களுக்கே சென்று சேர்ந்துவிட்டது என்று சொல்கிறீரோ
//நன்றி கோவியாரே, மக்கள் பணம் மக்களுக்கே சென்று சேர்ந்துவிட்டது என்று சொல்கிறீரோ//
வெளிநாட்டுப் பணம் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது என்று சொல்லி இருக்கலாமே !
:)
எதுக்கு வீணா குழம்பிக்கிரீங்க சும்மா விடுங்க கலைங்கரால இனியெல்லாம் கட்சி நடத்த முடியாது . மொத்ததில கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் வித்தியாசம் இல்லை . கலைஞர் மறை முகமாக எதிர்ப்பார் . ஜெயலலிதா நேரடியாக எதிர்ப்பார் . இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் கலைஞருக்கு பார்ப்பன புத்தி
//கோவி.கண்ணன் said...
வெளிநாட்டுப் பணம் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது என்று சொல்லி இருக்கலாமே !
:)
//
இது மாதிரி எது வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். உங்களுக்கு தேவை தி.மு.க.வை எதிர்ப்பதற்கு ஒரு காரணம் அவ்வளவே
//கலைஞர் மறை முகமாக எதிர்ப்பார் . ஜெயலலிதா நேரடியாக எதிர்ப்பார்//
நேரடியாக எதிர்ப்பவர் என்று தெரிந்தும் பலர் அவருக்காக ஓட்டு கேட்பது ஏனோ?
தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர்.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் குவிந்த திமுகவினர் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர்.
அதேபோல மு.க.அழகிரி லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கும் மதுரையிலும் திமுகவினர் பெரும் உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர். அழகிரி வீடு உள்ள பகுதியில் பட்டாசுச் சத்தம் காதைப் பிளந்து வருகிறது.
இதேபோல தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment