Thursday, May 21, 2009
ஜெ தோல்வி, சோ மகிழ்ச்சி
நடந்து முடிந்த தேர்தலில் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடைந்தது குறித்து துக்ளக் ஆசிரியர் திரு.சோ ராமசாமி அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பதாக அவரது பேட்டிகள் மூலம் உணர முடிகிறது. திரு.சோ அவர்களின் இந்த மகிழ்ச்சிக்கு இரு காரணங்கள் இருக்கின்றன
முதலாவது, அவர் தேர்தலுக்கு முன்பிருந்தே சொல்லி வந்த விஷயமான, ஈழ பிரச்சினை தேர்தலில் எதிரொலிக்காது என்ற அவரது கருத்து உறுதிப்படுத்தப்பட்டது. தேர்தலுக்கு முன் ஜெயலலிதாவின் தனி ஈழ நிலைப்பாட்டுக்கு முன்னேயே தமிழக பாரதீய ஜனதாவினர் ஈழ ஆதரவு நிலையை எடுத்தனர். அது பிடிக்காத சோ அவர்கள் சென்னையில் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழக பாரதீய ஜனதாவினரை மேடையிலேயே மோடி முன்னிலையில் வறுத்து எடுத்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட திரு.டோண்டு ராகவனே இதற்கு சாட்சி. சோவின் அறிவுரைக்கு பின் தமிழக பாரதீய ஜனதாவினர் தங்களது ஈழ ஆதரவை தூக்கி கிடப்பில் போட்டனர். தமிழக பாரதீய ஜனதாவை அவர்களின் ஈழ ஆதரவுக்காக வறுத்தெடுத்த சோ செல்வி ஜெயலலிதாவின் ஈழ ஆதரவை கண்டு பெரிதாக எதுவும் விமர்சிக்கவில்லை. அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று மட்டும் சொல்லி வந்தார். இப்போது தேர்தல் முடிந்த பின் அவர் அளித்துள்ள பேட்டியில் தான் நினைத்தது போலவே நடந்துவிட்டதாக மிகவும் பெருமையுடன் கூறி இருக்கிறார்
சோ அவர்களின் மகிழ்ச்சிக்கு இரண்டாவது காரணம். காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்து இருப்பது தானாம். காங்கிரஸின் இந்த வெற்றியால் அது தி.மு.க. போன்ற கட்சிகளின் இடையூறு இல்லாமல் செயல்பட முடியுமாம். அதாவது தனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போனதே என்கிற அல்ப மகிழ்ச்சி தான் அது. என்ன இருந்தாலும் ராஜகுரு அல்லவா
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
சோவுக்கு என்ன தான் பிரச்சனை? தமிழீழமா? தம்பி பிரபாகரனா? கலைஞரா? கொஞ்சம் கேட்டு சொல்லுங்கப்பா!
சோவுக்கு ஒரே ஒரு பிரச்சினை தான், அது கலைஞர் போபியா. நிலவரம் மிகவும் முற்றிப்போய் இருக்கிறது
//சோ அவர்களின் மகிழ்ச்சிக்கு இரண்டாவது காரணம். காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்து இருப்பது தானாம். //
அது மட்டுமல்ல. உத்திர பிரதேசத்தில் காங்கிரசின் வளர்ச்சி அவருக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கும். உ.பி மற்றும் பிகாரில் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க முழு வளர்ச்சி பெற்றால் அவர் தரையில் நடக்க மாட்டார்
நன்றி சதுக்கபூதம், மேலும் ராகுல் காந்தியை வாயார புகழ்ந்து இருக்கிறார், எல்லாம் ஏதோ திட்டமிடப்பட்டு நடப்பது போல் தெரிகிறது
//மேலும் ராகுல் காந்தியை வாயார புகழ்ந்து இருக்கிறார், எல்லாம் ஏதோ திட்டமிடப்பட்டு நடப்பது போல் தெரிகிறது
//
இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களின் மன நிலையும் அறியாமல், இந்தியாவின் அடிபடையில் உள்ள சமுதாய ஏற்ற தாழ்வுகளை பற்றி அறியாமல் உயர் மட்டத்தில் வளர்ந்த ஒருவரை இந்திய தலைவராக ஆக்குவது அவருக்கு நல்லது. ஏனென்றால் ராகுலின் மன ஓட்டங்களை எளிதாக அவரை சுற்றி ஒரு பீரோகிரட்டிக் குழுவை வைத்து கட்டு படுத்த முடியும். மேலும் ஒட்டு மொத்த மீடியாவும் அவர்களது கையில் தான் உள்ளது. என்வே ராகுலுக்கு சென்றடையும் செய்தி எல்லாம் "அவர்" விரும்பும் வகையில் திருத்த பட்டு சென்றடையும். இதன் மூலம் பெரும்பான்மையான மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதை விட்டு சிறு பான்மை அறிவு ஜீவி குழுக்களின் அதிகார பசிக்கும், பேராசைக்கும் முக்கியத்துவம் கொடுக்க படும்
மிகவும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சதுக்க பூதம். அடுத்த தலைமுறை தலைவர்களுக்கு இன்றே குறி வைத்தாயிற்று. உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி
//காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்து இருப்பது தானாம். காங்கிரஸின் இந்த வெற்றியால் அது தி.மு.க. போன்ற கட்சிகளின் இடையூறு இல்லாமல் செயல்பட முடியுமாம்.//
பொச்சுக்காப்பு என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
அச்சோ , அச்சச்சோ .
சோ இராமசாமி கருப்பு நிற ஆடைகளுடன் வந்திருக்கும் படத்தைப் பார்த்துட்டு "கருணாநிதி முன்னிலையில் சோ தி.கவில் இணைந்தார்" என்ற செய்தி வந்திருக்கிறது போலும் என்று நினைத்தேன்.
நல்ல அலசல் :-)
//கோவி.கண்ணன் said...
சோ இராமசாமி கருப்பு நிற ஆடைகளுடன் வந்திருக்கும் படத்தைப் பார்த்துட்டு "கருணாநிதி முன்னிலையில் சோ தி.கவில் இணைந்தார்" என்ற செய்தி வந்திருக்கிறது போலும் என்று நினைத்தேன்//
ஆதாயம் இருந்தால் அதையும் செய்வதற்கு தயங்கமாட்டார் திரு.சோ ராமசாமி அவர்கள்
வருகைக்கு நன்றி லக்கி, உங்கள் நீடித்த ஆதரவுக்கு நன்றி திரு.கோவி அவர்களே
soo ithuvum saivar ithuku melum saivar
//ஆதாயம் இருந்தால் அதையும் செய்வதற்கு தயங்கமாட்டார் திரு.சோ ராமசாமி//
How about Jeyandrar?
திரு.சோ அவர்களுக்கு ஆசனவாயில் ஒரு பெரிய கொப்பளம் ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன். அதனை நீக்கி விட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
Post a Comment