Wednesday, May 20, 2009

அ.தி.மு.க. கூட்டணி தோற்றது எப்படி?


கவிப்பேரரசு கண்ணதாசன் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம். கவிப்பேரரசு ஒரு கல்லூரி விழாவுக்கு சென்று இருந்தார். அப்போது ஓவ்வொரு மாணவராக மேடை ஏறி தங்கள் கவிதையை வாசித்து கொண்டு இருந்தனர். தொடர்ந்து மேடை ஏறி கவிதை வாசிப்பதற்காக காத்து இருந்த ஒரு மாணவர் கவிப்பேரரசுவிடம் எப்படி உங்களால் மட்டும் அருமையக கவிதை எழுத முடிகிறது என்று கேட்டு இருக்கிறார். கவிப்பேரரசு அந்த மாணவரின் கவிதையை வாங்கி பார்த்துவிட்டு அந்த கவிதையை தான் வைத்து கொண்டு தன் கவிதையை அந்த மாணவரிடம் கொடுத்துவிட்டார். அந்த மாணவரின் முறை வந்தது. அவர் கவிப்பேரரசுவின் கவிதையை வாசித்து காட்டினார். அவ்வளவாக வரவேற்பு இல்லை

இறுதியாக கவிப்பேரரசு மேடை ஏறி அந்த மாணவரின் கவிதையை வாசித்து காட்டினார். வரிக்கு வரி கரகோஷம் அரங்கத்தை அதிரவைத்தது. இது ஒரு பத்திரிக்கை துணுக்கில் படித்தது

நம்ம மக்கள் மேட்டர் என்னன்னு மட்டும் பார்க்கமாட்டாங்க அத யாரு சொல்றாங்க என்பதையும் கண்டிப்பா பார்ப்பாங்க

1 comments:

said...

//நம்ம மக்கள் மேட்டர் என்னன்னு மட்டும் பார்க்கமாட்டாங்க அத யாரு சொல்றாங்க என்பதையும் கண்டிப்பா பார்ப்பாங்க
//

இது மேட்டரு!